கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

கிழக்கும் மேற்கும் ஒரு புள்ளியில் சந்திக்குமா? 

சந்தித்தால் அங்கே என்ன நடக்கும்?

வாருங்கள் காண்போம்.

இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று தோன்றும். ஆனால் கிரகங்கள் காலச்சூழ்நிலையில் குணாதியத்தில் இரு துருவங்களான மனிதர்களை ஒரு சூழலில் ஒருங்கிணைக்கும்போது அங்கே பல வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட சூழல் சில புதிய பரிணாமங்களை அத்தகைய மனிதர்களுக்கு அவர்களது வாழ்வில் வழங்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

அது போன்று முற்றிலும் வேறுபட்ட குணங்களைக்கொண்ட இரு சகோதரர்கள் ஒரு குடும்பத்தில் பிறந்து எதிர்கொள்ளும் நகைச்சுவைகளுக்கு ஜோதிதிட ரீதியான காரணங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

கீழே அண்ணனின் ஜாதகம்.

துலாம் லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியுமான  சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்சம். இரு மறைவு ஸ்தான அதிபதிகள் பரிவர்த்தனை ஆவது பரிவர்த்தனைக்கு உட்படாத பாவத்தின் பலனை இழந்து பரிவர்த்தனை ஆன பாவத்தின் பலனை அடைதல் என்பதாம். லக்னம் பரிவர்த்தனையில் செயல்படாது. அதேபோல குருவின் வீடான 3 ஆமிடம் பரிவர்த்தனையில் செயல்படாது.

3 ஆமிடம் இளைய சகோதரத்தை குறிக்கும் இடம் 6 ஆமிடம் எதிர்ப்பு ஸ்தானம். ஜாதகனுக்கு சாதகனின் இளைய சகோதரனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். தம்பி கிழக்கு என்றால் அண்ணன் மேற்கு என்பதுபோலத்தான். மூன்றாமிடத்தில் இளைய சகோதரனை குறிக்கும் செவ்வாய் கேதுவுடன் இணைத்து கெட்டுவிட்டார

தம்பியின் ஜாதகம் கீழே

விருட்சிக லக்ன ஜாதகத்தில் மூத்த சகோதரத்தை குறிக்கும் 11 ஆமிட அதிபதி புதன் 11 க்கு 8 ல்  ஆறாமிடத்தில் மறைவு. 11 ஆமிடத்தில் கேதுவுடன் மூத்த சகோதரனை குறிக்கும் குரு இணைத்து கெட்டுவிட்டார். (ஜோதிடத்தில் சனியும் மூத்த சகோதரனை குறிக்கும் கிரகமாக மதிப்பிடப்படுகிறது). குரு வக்கிரமானது மூத்த சகோதரனின் குணம் குறிப்பிட்ட திசையில் தூண்டப்பட்டிருப்பதை  குறிக்கிறது. அண்ணன் ஜாதகத்தில் மறைவு பெற்ற சுக்கிரனை தவிர இதர சுப கிரகங்கள் பாவிகளுடன் இணைத்துள்ளதை கவனியுங்கள்.

பிருகு நந்தி நாடி விதிகளின்படி ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதியை விட குருவையே ஜாதகராக எடுத்துக்கொண்டு மதிப்பிடுகிறார்கள். அந்த வகையில் குரு சனி சேர்க்கை பெற்று  பாவ கர்த்தாரி யோகத்திலும் உள்ளது. இது ஜாதகரின் குண பாதிப்பை தெள்ளத்தெளிவாக குறிக்கிறது.

ஜாதகர் கட்டுப்பெட்டியானவர். மற்றவர்களுடன் இணைந்து பழகும் குணமின்றி தனிமை விரும்பியாக உள்ளார்.தாயை தவிர வேறு யார் கையிலும் உணவருந்த மாட்டார். உணவுக்கு பிடித்துவைக்கும் தண்ணீரில் தாயாரின் விரல் பட்டுவிட்டால்கூட வேறு குடிநீர் எடுத்துவரக்கூறுவார்.

தம்பியின் ஜாதகத்தை கவனியுங்கள்.

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் பாவிகளாகி இருவரும் கேந்திரங்களில் வலுவாக உள்ளனர். சூரியன் தனது ராசிக்கு 1௦ ல் திக்பலத்தில் உள்ளார்.  ஜாதகர் ஆளுமைத்தன்மை மிக்கவர். மற்றவர்களுடன் தயக்கமின்றி பழகுபவர். சந்திரனை நோக்கி வரும் கேது வக்கிர குருவோடு இணைந்தது ஜாதகரின் ஆன்மீக நாட்டத்தை குறிப்பிடுகிறது.

இப்படி முற்றிலும் மாறுபாடான குண இயல்புகளை கொண்ட இருவரும் அண்ணன் தம்பிகளாக ஒரே வீட்டில் இருப்பது பல நகைச்சுவையான சம்பவங்களுக்கு வழி வகுக்கிறது. பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் செயல்படுத்தும் தனது கட்டுப்பெட்டியான செயல்களை தம்பியிடம் செயல்படுத்தினால் தம்பியிடம் “நல்ல கவனிப்பு” கிடைக்கும் என்பதை பல “அனுபவங்களின்” மூலம் அறிந்தவர் அண்ணன்.

தம்பியின் ஜாதகம் ஆதிக்க ஜாதகம் என்பதால் அண்ணன் தம்பியை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட தவிர்ப்பார்.

என்னே கிரகங்களின் லீலைகள்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைப்பேசி: 7871244501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English