மருந்து வில்லை உறக்கம்!

கடக லக்னத்திற்கு 1௦ ல் சந்திரன் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கிறார். கேதுவிற்கும் சந்திரனுக்கும் இடையே கிரகங்கள் எதுவுமில்லை. கேது தந்தையை குறிக்கும் சூரியனின் உத்திரம்-4 ல் நின்று தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி குருவோடு இணைந்துள்ளார். சூரியன் லக்னத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். இதனால்  ஜாதகியின் தந்தை முதலில் மரணமடைந்தார். லக்னத்திற்கு 5 ல் செவ்வாய் இருப்பதால் தந்தையின் காலத்திற்கு பிறகே ஜாதகியின் வாழ்வு சிறப்படைய வேண்டும் என்பது விதி. கேது 9 ஆமதிபதி குருவை பாதித்த பிறகு பிறகு லக்னத்தையும் சந்திரனையும் தொடுகிறது. இதனால் ஜாதகியின் தாயும் லக்னாதிபதி என்ற அடிப்படையில் ஜாதகியும் அடுத்து கேதுவால் பாதிக்கபடுவார்கள் எனலாம்.

ஜாதகிக்கு திருமணமாகிவிட்டது. ஜாதகிக்கு தற்போது ராகு திசை நடக்கிறது. லக்னாதிபதி சந்திரன் கேது சாரம் பெற்றதால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் ராசியதிபதி செவ்வாய் தனது மற்றொரு வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றுள்ளார். இதனால் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியின் வலுவே மேலோங்கி நிற்கிறது. எனவே இந்த ஜாதகத்திற்கு பலன் கூறுகையில்  ராசியை முன்னிறுத்தி பலன் கூறுவதே சிறப்பு.  ராகு, கால புருஷனுக்கு 12 ல் ராசிக்கு 12 ல் இருந்து திசை நடத்துகிறார். 12 ஆமிடம் என்பது படுக்கை, தாம்பத்யம், தூக்கம் போன்றவற்றை குறிக்கக்கூடியது. தாயை தனித்து விட்டுவிட்டு மணமாகி வந்த ஜாதகியால் தாயின் தனிமையை நினைத்து கணவரோடு நல்ல தாம்பத்யத்தை அனுபவிக்க இயலவில்லை. உடல் ரீதியாக மன ரீதியாக ஒருவர் சுகமடைய வேண்டுமெனில் ஜாதகத்தில் உடல் & மன காரகன் சந்திரன் சந்நியாசி காரகன் கேதுவின் சாரம் பெறக்கூடாது என்பது விதி. சன்யாச தர்மத்தை ஏற்றுக்கொண்டோருக்கு வேண்டுமானால் அது நன்மை செய்யலாம். குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்மை செய்யும் அமைப்பல்ல. 

கூடுதலாக   இந்த ஜாதகத்தில் ராகு-கேதுவின் அட்சின் வெளியே சந்திரன் மட்டும் தனியாக நிற்கிறது. ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே இப்படி ஒரு கிரகம் தனித்து நின்றால் அந்த கிரகம் குறிக்கும் உறவுடன் ஜாதகர் ஒன்றிவிட இயலாத சூழல் ஏற்படும். ஜாதகியின் தாயும் மகளுடன் வந்து தங்குவது உசிதமல்ல என்ற நிலையில் தனிமையில் தனது முதுமையை கழிக்கிறார். மேலும் கேது என்பது வயதான விதவையை குறிக்கும் கிரகமாகும். இதனால் விதவையான ஜாதகியின் தாயார் தனது முதுமைக்காலத்தில் கேது குறிப்பிடும் தனிமையில் வாட நேரிடும். தாயை ஏற்றுக்கொள்ள ஜாதகி முனையும் சூழலில் தாய் அதை நிராகரிக்கிறார். தனது தாயின் இந்த நிலையால் ஏற்பட்ட மன உழைச்சலால் ஜாதகி உறக்கமின்றி தவிக்கிறார். இதனால் ஜாதகி உறக்கத்திற்காக மருந்து வில்லைகளை உட்கொள்கிறார். இத்தகையோருக்கு வழிகாட்ட முயலும்போதுதான் ஒரு ஜோதிடராக நான் திகைத்துப்போகிறேன். 

கேது – மருந்து.

உட்கொள்ளல் – சந்திரன்.

நிம்மதியான உறக்கம் – கேது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English