அரசுப்பணி கிடைக்குமா?

ஒவ்வொரு ஜாதகமும், ஒவ்வொரு பிரசன்னமும் தொடர்புடையவர்களின் பல்வேறு வாழ்க்கை சூழல்களை சுட்டிக்காட்டுகின்றன. ஒருவர் வாழ்க்கை போல மற்றவர் வாழ்க்கை இல்லை. நான் ஆய்வு செய்து என்னை பாதித்த ஜோதிட விஷயங்களை பகிர்ந்துகொள்வது ஜோதிடம் வளர வழிவகுக்கும் என்ற அடிப்படையில் எனது மற்றொரு ஜோதிட அனுபவம் இன்றைய பதிவாக வருகிறது. அரசுப்பணிக்கான கடும் தடைகளுக்கிடையே தேர்வு எழுதி இருக்கிறேன். தேர்வில் வென்று அரசுப்பணி அமையுமா? என்ற கேள்வியுடன் என்னை தொடர்புகொண்டார் ஒரு குடும்பத்தலைவி. கவனமாக பதிலளிக்க வேண்டிய கேள்வி. ஆனால் இக்கேள்விக்கான பதிலை ஆராய முயன்றபோது கேள்வி கேட்ட பெண்மணியின் பல்வேறு சூழ்நிலைகள் தெரிய வந்து என்னை திக்குமுக்காட வைத்தது.  

ஜாதகி சுக்கிர தசா குரு புக்தியில் சந்திரன் அந்தரத்தில் உள்ளார். சுக்கிரன் லக்னத்திற்கு 6 ல் சூரியனுடன் அமைந்துள்ளார். குருவோடு பரிவர்தனையாகும் சந்திரன் 1௦ ஆமிடத்தில் அமைந்துள்ளார். இந்த நான்கு கிரகங்களுமே கேட்டை, ரேவதி, ஆயில்யம் ஆகிய புதனின் நட்சத்திரங்களிலேயே அமைந்துள்ளனர். புதன் சனியோடு இணைந்து 1௦ ன் பாவத் பாவமான  7ல் நிற்கிறார். இவை அனைத்தும் வேலைக்கு சென்று பொருளீட்ட முயலும் ஜாதகியின் சூழலை தெளிவாக குறிக்கிறது. தசா நாதன் சுக்கிரன் சூரியனோடு இணைந்துள்ளதால் அரசு வேலைக்கு முயல்கிறார். பரிவர்த்தனை கோட்சாரத்தில்தான் வேலை செய்யும் என்பதற்கேற்ப கோட்சாரத்தில் புக்திநாதன் குரு மீனத்தில் ஆட்சி பெற்றாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுவதால் கடக கேதுவின் கேது சம்மந்தம் பெறுவது குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதையும் அதை சரி செய்ய வேண்டிய தவிப்பில் ஜாதகி உள்ளதையும் குறிக்கிறது. அந்தர நாதன் சந்திரன் வேலை மூலம் ஒரு நல்ல வருமானமும் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஜாதகிக்கு ஊட்டுகிறது. 

கோட்சார சந்திரன் ராசிக்கு 6 ல் சிம்மத்தில் நிற்பது ஜாதகியின் அரசு வேலை எண்ணத்தை தெளிவாக கூறுகிறது. கோட்சார சந்திரன் லக்னத்திற்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் லக்ன பாகையை கடந்து நிற்பது ஜாதகி ஏற்கனவே முயற்சி எடுத்துள்ளதை தெரிவிக்கிறது. கோட்சார சந்திரனை ஜனன கால 6 ஆம் அதிபதி செவ்வாய் 12 ல் நின்று பார்ப்பது வேலை தொடர்பான  விஷயத்தை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் ஜாதகி என்னை அணுகியதன் நோக்கத்தை தெளிவாக கூறுகின்றன. ஒரு ஜாதகர் ஒரு விஷயத்தில் விளக்கம் பெற வேண்டி ஜோதிடரை அணுகும்போது அந்த சூழல் ஜாதகம் மற்றும் கோட்சாரம் மூலம் ஜோதிடருக்கு புரிய வேண்டும். அப்போதுதான் பதில் கூறுவது எளிது. 

இப்போது இந்த ஜாதகிக்கு என்ன பதில் கூறுவது என்று காண்போம். புக்தி நாதனும் தன, குடும்ப காரகருமான  குரு சந்திரனுடன் பரிவர்த்தனையாகி கேது சேர்க்கை பெற்றுள்ளார். கோட்சாரத்திலும் மீனத்தில் ஆட்சி பெற்ற குருவிற்கு திரிகோணத்தில் ஜனன கால கேது அமைந்துள்ளார். இது இந்த ஜாதகிக்கு தனம், குடும்பம் இரண்டில் ஒன்று பாதிக்கப்படுவதை குறிக்கிறது. அதாவது வளமான பொருளாதாரத்தை ஜாதகி அடைந்தால் குடும்பம் பாதிக்கப்படும். குடும்பம் ஜாதகிக்கு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொருளாதார சிரமங்களை ஜாதகி ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்விரண்டில் ஒன்றில் வளமை பெற மற்றொன்றை விட்டுத்தர வேண்டும். இரண்டும் ஒரே சமயத்தில் சிறப்படைய வாய்ப்பில்லை. ஏனெனில் குரு பரிவர்த்தனை பெறுவது 1௦ ஆமிடதுடன் என்பதால் 2, 1௦ பாவ பலன்களை குரு சிறப்பாக வழங்குவார். தான் பரிவர்த்தனையாகாத 7 ஆம் பாவ பலனை முழுமையாக தர வாய்ப்பில்லை. எனவே ஜாதகிக்கு வேலை கிடைக்கும். ஆனால் துணைவர் வழியில் குடும்ப உறவு பாதிக்கப்படும். எனவே வேலைக்கு செல்ல வேண்டாம் எளிமையாக வாழுங்கள் என்று சொல்வது சரியானது. ஆனால் ஒரு வழிகாட்ட ஜோதிடரை நாடி வந்த  ஒரு குடும்ப பெண்மணிக்கு எப்படி இதை கூற முடியும்?. கூறினால் ஏற்றுக்கொள்வார்களா? என்பது போன்ற கேள்விகள் மனதில் அலைமோத இதன் பின்னணியை   ஆராய முயன்ற போது கிடைத்த  பதில்கள் மனம் கனியச் செய்தன.  

ஜாதகிக்கு நடப்பது 6 ஆமிட தசை. இது வேலைக்கு சிறப்பானாலும் 7 க்கு விரைய பாவக தசை என்பதால் வாழ்க்கைத் துணைவரை பாதிக்கும் தசையாகும். 7ல் லக்னாதிபதி புதனுடன் நிற்பது 8 ஆமதிபதி சனி . சனி 7 ல் திக்பலம் என்றாலும் குறைபாட்டை குறிக்கும் 8 ஆமதிபதி 7 ல் நிற்பது வாழ்க்கை துணைவருக்கு பாதிப்பை தரும். 7 ஆமதிபதி உச்சம் பெற்றது இந்த லக்னத்திற்கு சிறப்பல்ல என்றாலும் 7 ல் திக்பலம் பெற்று குறைபாட்டையும் தரும் சனியின் பாதகத்தை குறைத்து விடுகிறார். ஆனால் குரு 1௦ ஆமிட சந்திரனோடு பரிவர்த்தனை ஆவதால் 2, 1௦ ஆமிட பலனை வழங்குவார். ஆனால் தான் பரிவர்த்தனை ஆகாத 7 ஆமிடத்தை கண்டுகொள்ள மாட்டார். எனவே 7 ஆமிடத்திற்கு ஒரளவேனும் பாதிப்பு ஏற்படவே செய்யும். களத்திர காரகர் செவ்வாய் லக்னத்திற்கு விரையத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார். செவ்வாய் கோட்சாரத்தில் சூரியன் மற்றும் கோட்சார புதனுடன் உள்ளது கணவர் அரசுப்பணியில் உள்ளதையும் 7 க்கு 6 ல் ரிஷபத்தில் இந்த அமைப்பு உள்ளதால் தற்போது கணவர் நோயால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளதையும் இது குறிக்கும். கோட்சார செவ்வாய் கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனத்தில் பரிவர்த்தனை சந்திரனோடு இணைந்துள்ளது தற்போதைக்கு கணவருக்கு சிறப்பு என்றாலும் பரிவர்த்தனை கிரகங்களோடு கேது தொடர்பு கணவரை பாதித்துக்கொண்டுள்ளதை   தெளிவாக கூறுகிறது. மேலும் 7 ஆமதிபதியான குருவை நோக்கி கோட்சார ராகு வருகிறார். இவற்றை கவனத்தில்கொண்டு “உங்கள் கணவருக்கு தற்போது உடல்நிலை சிரமப்படுதுகிறதா?” என்று ஜாதகியிடம் கேட்டபோது… கணவர் ரயில்வேயில் பணிபுரிபவர் (7ஆமதிபதி குருவோடு ராகு-கேதுக்கள் சேர்க்கை, செவ்வாய்க்கு திரிகோணத்தில் சூரியன் சாரத்தில்  ராகு). கணவர் மனக்குழப்பங்களால் இரவில் தூங்க முடியாது தவிப்பவர். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.12 ஆமிடம் மற்றும் சந்திரன் தூக்கத்தை குறிக்கும். 7 ஆமதிபதி குரு சந்திரனின் வீட்டில் புத்தி காரகன் புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் கேதுவோடு இணைவதால் கணவருக்கு மன பயம் மற்றும்  தூக்கம் கெடுதல். இது கடுமையான அபிச்சார தோஷமாகும். ஆனால் இது ஜாதகிக்கு ஏற்படாது. 7 ஆமதிபதி தொடர்பாவதால் கணவருக்குத்தான் ஏற்படுத்தும்.  பேய், ஏவல், பில்லி, சூனியம் பற்றிய பயத்தை கணவருக்கு இது ஏற்படுத்தும். இதனால் கணவர் பல மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஜாதகிக்கு இரு குழந்தைகள் உள்ளதை கணவருக்கு பதிலாக கருணை அடிப்படையில் வேலை வழங்க இரயில்வே நிர்வாகம் முன் வந்துள்ளது. ஆனால் அதை ஏற்பதால் கணவருக்கு தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும் அது கணவரின் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்பதால் ஜாதகி ஏற்க மறுக்கிறார். 

ஜாதகி ஆசிரிய தேர்வு வாரிய தேர்வை எழுதிவிட்டு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். இவருக்கு அரசுப்பணி கிடைக்குமா என்பதே இறுதியான கேள்வி. தசா நாதன் 6 ஆமிடத்தில் சூரியனுடன் இணைந்து இணைந்து தசை நடத்துகையில் அரசுப்பணியை வழங்கிட வாய்ப்பு பிரகாசமாக உண்டு. ஆனால் முன்பே கூறியபடி குடும்பத்தில் ஒரு பாதிப்புடன் ஒரு ஆதாரம் என்பதை இது குறிக்கிறது. 2 ஆமிட பரிவர்த்தனை ஒருவருக்குப்பதில் மற்றவர் மூலம் குடும்பத்தில் வருமானம் ஏற்படுவதையும் இது குறிக்கிறது. இதனால் ஜாதகிக்கு அரசுத்தேர்வில் வென்று அரசுப்பணி அமையாது. மாறாக கணவர் வேலை ஜாதகிக்கு  கிடைக்கும் என்பதை  ஜாதக பரிவர்த்தனை தெளிவாக உணர்த்துகிறது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம். 

அதுவரை வாழ்துக்களுடன்,

ஜோதிட ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English