பாகைகள் காட்டும் பாதைகள்!

வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கும் காலத்தை துல்லியமாக கணிக்கத்தான் ஜோதிடர்கள் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளது. ஒருவரின் திருமண நாள் எது என்று துல்லியமாக கணித்துவிட்டால் அதனடிப்படையில் அதற்கான பொருளாதாரத்தை திரட்டவோ, திட்டமிடவோ  எளிதாக இருக்கும். மேலும் ஒரு சம்பவம் நடக்கும் காலம் தெரிந்துவிட்டால் அது நடக்குமா? என பரிதவித்த நிலை மாறி அது நடக்கும் காலம் வரை பதட்டமின்றி பொறுமை காக்கலாம். சம்பவ காலத்தை துல்லியமாக கணக்கிட ஜோதிடத்தில் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் தற்போதைய நவீன காலத்தில் திருப்பூர் GK குருஜி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாகை முறை ஜோதிடம் எளிதான மற்றும் சிறந்த ஒன்று.

பாகை முறையின் சிறப்பு.

பாகை முறையில் 3 பாகைகள் நெருக்கத்தில் கிரகங்கள் முன்பின்னாக அமைவது பாகை முறை இணைவு என்று வரையறுக்கப்படுகிறது. வேறு வேறு ராசிகளில் கிரகங்கள் நின்றாலும் அவை பாகை அடிப்படையில் 3 பாகைக்குள் நெருக்கம் பெற்றிருந்தால் அவை பாகை அடிப்படையில் இணைந்திருக்கும் கிரகங்கள் என்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக செவ்வாய் ரிஷபத்தில் 15 பாகையில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். சுக்கிரன் கும்பத்தில் 12 பாகையில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இவை இரண்டும் பாகை அடிப்படையில் இணைவு பெற்றவை என கணக்கிடப்படும். சம்பவங்களை அதனோடு தொடர்புடைய கிரகங்களின் தசா-புக்திகள் சுட்டிக்காட்டும் என்றாலும், சம்பவங்களோடு தொடர்புடைய கிரகங்களின் ஜனன கால பாகைக்கு நெருக்கமாக கோட்சாரத்தில் சம்பவத்தை நடத்தும் கிரகம் வரும்போதுதான்  அவை சம்பவங்களை தருகின்றன.  கோட்சார லக்னம் எந்த ஜனன கால கிரக பாகைக்கு நெருக்கமாக வருகிறதோ அக்கிரகம் தொடர்புடைய சம்பவங்கள் நடக்கும். இவற்றில் கோட்சார லக்ன பாகை சம்பவங்கள் நடப்பதை உறுதியாக கூறும். கோட்சார சந்திரனின் பாகை சம்பவங்களின் சூழலை துல்லியமாக சுட்டிக்காட்டும். கோட்சார சந்திரன் சுட்டிக் காட்டும் சம்பவங்களை தவிர்க்க இயலும். கோட்சார லக்னம் சுட்டிக்காட்டும் சம்பவங்களை தடுக்க இயலாது. கோட்சார லக்ன பாகையோ அல்லது கோட்சார சந்திரனின் பாகையோ ஜனன கால கிரகங்களின் பாகையை நோக்கி செல்வது நடக்கவுள்ள சம்பவங்களை கூறும். மாறாக அவை ஜனன கால கிரகங்களின் பாகையை கடந்திருப்பின் சம்பவங்கள் நடந்துவிட்டன என்பதை கூறும் என்பதுதான் பாகைமுறையின் சிறப்பு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.  

மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் விருட்சிக லக்னம் சனியின் பாகையான 13 பாகைக்கு நெருக்கமாக ஜீவன காரகர் சனி 15 பாகையில் அமைந்துள்ளார். லக்னம் சனியின் அனுஷம். இதனால் இந்த ஜாதகி சனியின் காரகமான வேலைக்கு சென்று பொருளீட்டும் நோக்கமுடையவராக இருப்பார். சனி வக்கிரமாகியுள்ளதால் வேலைக்கு செல்வதில் பிடிவாதத்தன்மையும், துறை சார்ந்த தெளிந்த அறிவும் உண்டு. ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்காது. லக்ன பாகையான 13 பாகைக்கு நெருக்கமாக சுக்கிரன் 11 பாகையில் சிம்மத்தில் அமைந்துள்ளார். நவீன மின்னணு, மென்பொருள் காரகர் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் கேதுவோடு இணைந்து சுக்கிரன் அமைந்துள்ளார். இதனால் ஜாதகி கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். லக்னாதிபதி செவ்வாய் 2 பாகையில் சிம்மத்தில் திக்பலம் பெற்று கேதுவின் 3 பாகைக்கு நெருக்கமாக நிற்கிறார். இதனால் இவரின் பதவி மதிப்பானது. சுக்கிரனின் பாகையிலே சூரியன் தன் வீட்டிற்கு பனிரெண்டில் லக்னத்திற்கு பாதகத்தில் நிற்பதால், இவரது வேலைக்கான பலனை இவரது உயரதிகாரி அறுவடை செய்வார். இவரை வளர விடாமல் தடுத்துவிடுவார். காரணம் உயரதிகாரியை குறிக்கும் சூரியன் பாதக ஸ்தானத்தில் 1௦ ஆமிடதிற்கும், ஜாதகி பெண் என்பதால் சுக்கிரனுக்கும், லக்னாதிபதியான செவ்வாய்க்கும் விரையத்தில் நிற்பதுதான்.   

லக்ன பாகையான 13 பாகைக்கு நெருக்கமாக 11 பாகையிலே 1௦ ஆமிட சுக்கிரனின் பாகையும், பாதக ஸ்தான சூரியனின் பாகையும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இதனால் சூரியனின் காரகமான கௌரவத்தை ஜாதகி அதிகம் எதிர்பார்ப்பார். உடன் லக்னாதிபதி செவ்வாய் திக்பலம் பெற்ற நிலையில் உள்ளதால் செவ்வாயின் துணிச்சலையும் பிடிவாதத்தையும் தனது வேலையில் செலுத்தி தனக்கான அங்கீகாரத்தை நிலைநாட்டுவார். தனது பணியின் பலனை அடுத்தவர் அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டார். ஆனால் இங்கு உயரதிகாரியை குறிக்கும் சூரியன் இவரது பணியின் பலனை தான் அறுவடை செய்யும் நிலையில் உள்ளார். இதனால் ஜாதகியின் பணிக்கு உயரதிகாரியால் பாதிப்பு ஏற்படும்.

ஜாதகிக்கு நடப்பது குரு தசை, சனி புக்தி. இது பொருளாதாரத்திற்கு சிறப்பான காலம். ஆனால் 8 ஆமிடத்தோடு இரு கிரகங்களும் தொடர்புகொள்வதால் வேலைபார்க்கும் இடத்தில் 8 ஆமிடம் குறிக்கும் அவமானமும் கௌரவ குறைச்சலும் ஏற்படும். புக்தி நாதன் குரு உயரதிகாரியை குறிக்கும் 9 ஆமிடத்திற்கு விரையத்தில் மிதுனத்தில் நிற்பதால் உயரதிகாரியோடு உரசல் வரும். ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்தின் கோட்சார ஜாதகம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அது நிலையை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறது.

கோட்சார லக்னம் ஜனன ஜாதகத்தில் அவமான பாவமான 8 ல் நிற்கும் குருவின் பாகையான 5 பாகையை கடந்து 6 பாகையில் நிற்கிறது. இதனால் ஜாதகி 8 ஆமிட சம்பவத்தை அடைந்துவிட்டார் என்பதை கூறுகிறது. கோட்சார சந்திரன் ஜனன லக்னத்திற்கு 12ல் ஜனன கால குருவின் பார்வையில் கோட்சார கேதுவின் மீது, கோட்சார சனியின் பார்வையில் செல்கிறார். இதனால் ஜாதகி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கணினி தொடர்பான பணியில் இருக்கிறார். (12 ஆமிடம் வெளிநாடு. கோட்சாரத்தில் ஜனன லக்னத்திற்கு 12 ல் செல்லும் கோட்சார சந்திரனை கோட்சார சனி 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதால் வெளிநாட்டு வேலை. கோட்சார 12 ஆமிட சந்திரனுடன் கோட்சார கேது இணைவதால் கணினி வேலை. ஜனன குரு 12 ஐ பார்ப்பது வெளிநாட்டு சம்பாத்தியம்). கோட்சார சந்திரன் 11 பாகையில் சென்றுகொண்டுள்ளார். அதே பாகையில் ஜனன காலத்தில் 1௦ ல் கேதுவோடு  இணைந்துள்ள சுக்கிரனின் பாகையும் அமைகிறது.  இது ஜாதகிக்கு மீண்டும் வேலை கிடைத்துவிட்டதை உறுதி செய்கிறது. கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ஆமிட ராகுவை கடந்த கோட்சார செவ்வாய், ஜாதகி அடைந்த பாதிப்பை தெரிவிக்கிறது. அதே சமயம் 7 ல் நின்று லக்னத்தையும் 1௦ ஆம் பாவகத்தையும் பார்க்கும் கோட்சார செவ்வாய்,மீண்டும் ஜாதகிக்கு கௌரவமான நிலையை தந்துள்ளதையும் அறியமுடிகிறது. கோட்சார செவ்வாய், சனி, ராகு-கேதுக்கள் ஆகியோர் பாகை அடிப்படையில் 3 பாகைக்குள் நெருங்கி நிற்பதால் மீண்டும் ஜாதகி ராகு-கேதுக்கள் குறிக்கும் கணினி மென்பொருள்துறையில்தான் பணிபுரிகிறார் என்பதை அறியமுடிகிறது. மேலும் ஜனன லக்னத்திற்கு பாதக ஸ்தானமான கடகத்திலும், கோட்சாரத்தில் கன்னியிலும் அமைந்துள்ள சூரியனின் பாகையிலே கோட்சார சந்திரனின் பாகை அமைகிறது. இது ஜாதகி தனது உயரதிகாரியால் பாதிப்பு அடையும் நிலையை துல்லியமாக கூறுகிறது. ஏனெனில் ஜனன கால சுக்கிரன் பாகைமுறையில் சூரியனிடம் அஸ்தங்கமானது போலவே கோட்சாரத்திலும் சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளார். கோட்சார சுக்கிரனின் பாகையை கோட்சார சூரியன் 7 பாகை கடந்து நிற்கிறது. இது தனது உயரதிகாரியால் ஜாதகி பாதிப்பு அடைந்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்காவில் பணிபுரிந்த இந்த ஜாதகியின் திறமையின் முன் தனது திறன் குறைவதாக உணர்ந்த இவரது  வெள்ளைக்கார உயரதிகாரி, ஜாதகி மீது இனப்பாகுபாட்டுடன் பல குற்றச்சாட்டுகள கூறி ஜாதகியை கடுமையாக நடத்தினார். அதனால் ஜாதகி வேலையை விட்டு விலகி மீண்டும் தனது திறமையால் வேறு நல்ல வேலை தேடிக்கொண்டார்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English