கன்னியின் கணவன்

பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய காரகர் என செவ்வாய் போற்றப்பட்டாலும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எப்படியாயினும் சில சிரமங்களை தந்தே தீருவார். இதனால் கன்னி லக்ன பெண்களுக்கு குடும்ப வாழ்வை அனுபவிக்கும் காலத்தில் செவ்வாய் தசை வராமல் இருப்பது நன்மை. கன்னி லக்னத்தை பொறுத்தவரை 7 ஆமதிபதி குரு பாதகாதிபதியாக வருவதும், செவ்வாய் 8 ஆமதிபதியாக வருவதும் களத்திர வகையில் குரு, செவ்வாய் தொடர்பு ஜாதகத்தில் இருந்தாலும் கடுமை காட்டலாம். தொடர்புடைய தசை வந்தால்தான் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் செவ்வாய் தொடர்புடைய தசை வராத மகளீர் செவ்வாயால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணிக்கொள்ளலாம். சுபாவத்திலேயே கோபக்காரரான செவ்வாய் தொடர்புடைய தசை வந்தால் எப்படி சமாளிப்பது என்பது அடுத்த கேள்வி. அத்தகையோருக்காகவே இப்பதிவு. பிற கிரகங்களைப் போலவே செவ்வாய்க்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பல காரகங்கள் உண்டு. உதாரணமாக பெண்களைப் பொறுத்தவரை செவ்வாய் கணவரை குறிப்பதோடு மைத்துனர், சகோதரர், மருமகன், வீடு, வாகனங்கள் போன்ற பல காரகங்களை குறிக்கிறார். கன்னி லக்ன மகளீருக்கு வாழும் வயதில் ஒரு வேளை செவ்வாய் தசை வந்துவிட்டாலும் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்த பாவகம், ராசி, செவ்வாய் நின்ற ராசியதிபதியின் நிலை, செவ்வாயின் சாரநாதர், செவ்வாயோடு இணைந்த, பார்த்த மற்றும் செவ்வாயின் சாரத்தில் நிற்கும் கிரகங்களின் அமைப்பை பொறுத்து அவரின் பலன்கள் மாறுபடும். புதன் வலுவாக லக்னத்திலும் மிதுனத்திலும் செவ்வாயின் சாரத்தில் நின்றாலும் செவ்வாயின் செயல்களை புதன் கட்டுப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கன்னி லக்னத்திற்கு களத்திர காரகராக குரு கன்னி லக்னத்திலேயே அமைவது சிறப்பான அமைப்பு. திக்பலத்தில் அமையும் குரு கன்னி லக்னத்திற்கு பெரிய பாதிப்பை தரமாட்டார். ஆனால் குரு லக்னத்தில் திக்பலம் பெற்ற நிலையில் புதன் மீனத்தில் நிற்கக்கூடாது. இதனால் குருவிற்கும் புதனுக்கும் பரிவர்த்தனை ஏற்பட்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இவ்வமைப்பு இருந்தால் அது களத்திர வகையில் நம்பிக்கைத் துரோகத்தை காட்டும். இரு தார அமைப்பையும் இது குறிப்பிடும்.  

பெண்கள் ஜாதகத்தில் கன்னி லக்னத்தில் கணவரை குறிக்கும் செவ்வாய் அமைத்துவிட்டால் அத்தகைய பெண்கள் கணவர் கடுமை காட்டினாலும், அவமரியாதை செய்தாலும் கணவரை பிரிய முற்பட மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு கணவரால் அவமானங்களும் கௌரவ பங்கமும் செவ்வாய் தொடர்புடைய தசா புக்திகளில் அவசியம் ஏற்படும். இத்தகையோர் செவ்வாய் தொடர்புடைய காரகங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் செவ்வாய் தனது காரக அடிப்படையில் பாதிப்பைக் குறைத்துக்கொண்டு  ஜாதகிக்கு  உதவுவார். உதாரணமாக செவ்வாய் அறுவை சிகிச்சி மருத்துவர் என்றால், 8 ஆமிடம் ஆயுளை குறிக்கும். இத்தகைய ஜாதக அமைப்பு இருக்கும் ஒரு பெண் மருத்துவர் உயிர்காக்கும் பிரிவில் அல்லது ஆராய்ச்சி பிரிவில் இருந்தால் செவ்வாயால் உயர்வுகளை பெற முடியும். காரணம் செவ்வாய் மருத்துவர் என்பதோடு கன்னி லக்னத்திற்கு ஆயுள் மற்றும் ஆராய்ச்சி பாவமான 8 ஆமிடத்திற்கும் உரியவராகிறார். ஒரு வேளை செவ்வாய் கன்னி லக்னத்திலேயே அமைந்து செவ்வாயின் காரக செயல்பாடுகளில் ஜாதகி தீவிர முனைப்பை காட்ட இயதாத நிலையில் இருந்தால் தனது தசா-புக்திகளில் கடுமையை காட்டுவது உறுதி. செவ்வாய் கன்னி லக்னத்திற்கு சிறந்த நன்மை செய்கிறார் என்றால் அதற்கும் ஒரு பலியை பெற்றுவிட்டுத்தான் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே ஒரு கன்னி லக்ன பெண்ணின் ஜாதகம்.

கன்னி லக்ன ஜாதகத்தில் களத்திர பாவாதிபதி குருவும், களத்திர காரகர் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இதனால் இருவரும் ஜாதகிக்கு நன்மையை செய்தே தீர வேண்டும். லக்னாதிபதி புதனும் செவ்வாயும் இங்கு நட்சத்திர பரிவர்த்தனையில் உள்ளார்கள் இதனால் செவ்வாயின் கடுமையை திக்பலத்தில் அமைந்த புதன் கட்டுப்படுத்துவார். குருவும் சந்திரனும் பரிவர்த்தனை பெறுவதால் குரு களத்திர, பாதக ஸ்தானத்திற்கும் செயல்படுவார். அதே சமயம் குருவும் சனியும் சாரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள். இப்படியான ஒரு நிலையில் களத்திர பாவாதிபதி குருவும் களத்திர காரகர் செவ்வாயும் ஜாதகிக்கு கடுமையும் காட்டவேண்டும், நன்மையையும் செய்ய வேண்டும் என்ற நிலை. பொதுவாக இத்தகைய நிலை பெரும் கிரகங்கள்  உயிர் காரகத்திற்கு தீமையை கொடுத்து பொருட்காரகத்திற்கே நன்மை செய்யும். இந்த ஜாதகிக்கு நீச பங்கம் பெற்ற செவ்வாய் தனது காரக தொழிலில் அவரை ஈடுபடுத்தியது என்றால் உச்சம் பெற்ற 7 ஆமதிபதி குரு சிறந்த செல்வ வளம் மிக்க வாழ்வை தந்துகொண்டுள்ளார். ஆனால் இதற்கு செவ்வாயும் குருவும் ஜாதகிக்கு ஏற்படுத்திய வலி மிக அதிகம். ஜாதகி திருமணமாகி அடுத்த வருடத்திலேயே  கணவரை இழந்தார். குழந்தையும் ஊனமாகப் பிறந்துள்ளது. புத்திர காரகர் குறைபாட்டு பாவாதிபதி செவ்வாயுடன் இணைந்ததால் குழந்தைக்கு ஊனம். களத்திர காரகர் 8 ஆமதிபதியுடன் இணைந்ததால் கணவருக்கு ஆயள் தோஷம். தன காரகர் குரு செவ்வாயுடன் இணைந்து சனி தொடர்பு பெறுவதால் ஜீவன விஷயத்தில் செவ்வாயின் காரகப் பணி ஜாதகிக்கு அமைந்துள்ளது. கடுமை காட்ட வேண்டிய கிரகங்கள் நன்மை செய்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற விதியும் இங்கு செயல்படுகிறது.

செவ்வாயின் செயல்பாட்டை அதன் தொடர்புகள் மூலம் அதை அறியலாம் என்றாலும் தொடர்புடைய வர்க்கச் சக்கரங்களும் அதை தெளிவாகக் கூறும். ஒருவேளை செவ்வாய் தசை வாழும் வயதில் பெண்களுக்கு வந்துவிட்டால் கணவரின் அதிருப்தியை பெறாமல் மிக கவனமாக, சகிப்புத் தன்மையுடன் கடந்துவிட்டால் மீதமுள்ள காலங்களை நிம்மதியாக கழிக்கலாம்.  ஏனெனில் செவ்வாய் தசை என்பது 7 வருடங்கள்தான். ஆனால் துணைவரின் தொடர்பு ஆயுளுக்குமானது. கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

கன்னி லக்னத்திலேயே செவ்வாய் அமைந்துள்ளார். லக்னத்தில் களத்திர காரகர் அமைந்துள்ளதால் ஜாதகி அவமானங்களை சந்தித்தாலும் கணவரை பிரிய மாட்டார். ஜாதகி கணவரால் அவமானங்களை சந்திப்பதோடு களத்திர பாவாதிபதி குரு விருச்சிகத்தில் அமைந்ததால் இந்த ஜாதகிக்கு அமையும் கணவருக்கு பிரிவினை எண்ணமும் இருக்கும். காரணம் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடம் என்பதே. நவாம்சத்தில் மிதுன லக்னத்திற்கு 7 ல் சூரியன் அமைந்துள்ளார். இதனால் ஜாதகியின் துணைவர் கௌரவத்தை மிக முக்கியமாக கருதுவார். இந்த ஜாதகியின் இல்லற வாழ்வு 7 ல் நிற்கும் சூரியனை பொறுத்தே அமைகிறது. எனவே கணவரின் கௌரவத்திற்கு பங்கம் வராமலும் தனது குடும்ப வாழ்வில் சூரியனின் அம்சமான தந்தை, மாமனாரின் தலையீடு இல்லாமலும் பார்த்துக்கொள்வது அவசியம். ராசியில் செவ்வாய் லக்னத்திலிருந்து 4, 7, 8 ஆகிய பாவகங்களை பார்க்கிறார். இதனால் இவருக்கு கணவர் எனும் செவ்வாயின் காரக உறவு அமைந்ததும் சொத்து சேர்க்கும் எண்ணம் ஏற்படும். வீடு, வாகனங்களை குறிப்பவர் செவ்வாய். வீடு வாகனத்திற்கு உரிய பாவகம் 4 ஆமிடமான தனுசாகும்.  செவ்வாய் இந்த லக்னத்திற்கு 3 ஆமிடாதிபதியாவார். இது 4 ன் விரைய பாவகமாகும். 4 ஆமதிபதி குருவும் 4 க்கு விரையமான 3 ஆமிடத்திலேயே நின்று 7 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகி குருவின் பார்வைபடும் கணவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே அன்றி சொத்து விஷயத்தில் கணவரின் கருத்தை ஏற்காமல் செயல்பட்டால் பாதிப்படைவது உறுதி. ஏனெனில் அசையா சொத்தை குறிப்பிடும் 4 ஆமதிபதியும், கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கும் உரியவராக குரு ஒருவரே அமைகிறார். குரு பார்க்கும் இடம் 7 ஆமிடம் என்பதால் கணவரை மீறி சொத்து விஷயத்தில் முடிவு செய்தால் கணவராலேயே ஜாதகிக்கு பாதகம் ஏற்படும்.  

நவாம்சப்படி 7 ல் நின்ற சூரியன் ஜாதகியின் குடும்ப வாழ்வை பாதிப்பவராக இருப்பார் என்று பார்த்தோம். ஜாதகியின் தந்தை தன் மகளுக்காக மருமகனிடம் ஆலோசிக்காமல் மகளுக்காக சொத்து வாங்கிக் கொடுத்தார். இதனால் தனது கௌரவம் பாதிக்கப்பட்டதாக எண்ணிய கணவர் மனைவியை தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அடுத்த 6 ஆவது மாதம் சட்டப்படி விவாகரத்தானது. ஜாதகியினது திருமண வாழ்வு ஒன்றரை வருடத்தில் முடிவிற்கு வந்தது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க வழி.

இந்த ஜாதகிக்கு விருட்சிகத்தில் அமைந்த 7 ஆமதிபதி குருவின் மீது கோட்சார கேது சென்ற காலத்தில் திருமணம் செய்துள்ளனர். கடும் களத்திர தோஷமும் சர்ப்ப தோஷம் உள்ள இத்தகைய ஜாதகங்களுக்கு திருமணம் செய்வதற்கு முன் தேர்ந்த ஜோதிடரிடம் ஆலோசித்து பாதிப்பின் காலத்தை அளவிட்டு பிறகு திருமணத்தை முடிவு செய்வது நன்று. இந்த ஜாதகத்திற்கு  கோட்சார கேது சிம்மத்திற்கு சென்ற பிறகு திருமணம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியன் கன்னி லக்னத்திற்கு விரையாதிபதியாகிறார். இந்த ஜாதகத்தில் அவர் புதனையும், சுக்கிரனையும் அஸ்தங்கப்படுதியுள்ளார். கன்னி லக்ன பெண்கள் திருமணமான பிறகு கணவரின் அனுமதியின்றி தனது குடும்ப விஷயத்தில் பெற்றோர்களை குறிப்பாக தந்தையை அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் இவர்களது குடும்ப வாழ்வு விரையமாகும்.

இந்த ஜாதகத்தில் தந்தை மகளின் குடும்ப விஷயத்தில் மருமகனை ஆலோசிக்காமல் மகளுக்கு சொத்து வாங்கி கொடுத்ததால் மகள் குடும்ப வாழ்வை இழந்துள்ளார். கன்னி லக்ன மகள்களைப்  பெற்ற பெற்றோர் தங்களது காலத்திற்கு பிறகு சொத்துக்கள் தங்கள் புத்திரங்களுக்கு செல்லும்படி செயல்படுவதே சரியான முறை. இடையே மருமகன் உதவி கேட்டால் மட்டுமே உதவ வேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English