நில், கவனி, காதலி!

இன்றைய திருமண எதிர்பார்ப்பானது கல்வி, வசதி, அந்தஸ்து என்பனவற்றை முன்னிட்டே அமைகிறது. உண்மையான காதல் தங்களுக்கிடையேயான புரிதலைவிட இதர விஷயங்களை கண்டுகொள்ளாது. இரு மனம் இணைவில் மூன்றாவது நபர் தலையிடும்போதுதான் இதர விஷயங்கள் பேசப்பட்டு அங்கு காதல் காணாமல் போகும் நிலை உருவாகிறது. இன்னும் ஒரு தசாப்தத்தில் இந்திய காதலர்கள் தங்களுக்கிடையே மூன்றாவது நபர் தலையீட்டை அது பெற்றோர்களானாலும்  ஏற்கமாட்டார்கள் என்பது திண்ணம். வளர்ந்து வரும் தற்சார்பு பொருளாதார நிலையே அதற்குக் காரணம். இந்நிலையில் தன் காலில் நிற்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் காதலில் தோற்றுவிட்டு புலம்புவதை காண முடிகிறது. அப்படியாக காதலின் வலியை அனுபவித்தவர்களின் குடும்ப வாழ்வு பற்றிய எண்ணம் எதிர்மறையானதாகவே இருக்கும். இப்படி காதலில் கசப்பை அனுபவித்த தங்கள் பிள்ளைகள் எங்கே தேவதாஸ் ஆகிவிடுவார்களோ என்ற கவலையில் எப்படியாயினும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வித்துவிட வேண்டும் என்ற நிலையில் பெற்றோர்களின் தலையீடு தவிர்க்க இயலாததாகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொள்ளும் காதல் தோல்வியை சந்தித்த பிள்ளைகள் பழைய காதலின் ஆறாத காயங்களால், அமைந்த தங்கள் திருமண வாழ்வை பாழடித்துக்கொள்வதும் உண்டு. எனவே பெற்றோர்கள் இத்தகைய தங்கள் பிள்ளைகளின் மன நிலையை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியம். இத்தகையவர்களுக்கு ஜோதிடம் எப்படி உதவும் என்று ஆராய்வதே இன்றைய பதிவு.

கடக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் 12 ஆமிடமான மிதுனத்தில் மறைவு. ஜாதகரது வாழ்க்கை இவரது கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை இது குறிக்கும். எனினும் விரைவாக சுழலும் சந்திரன் தனது ஆட்சி வீடான லக்னத்தை நோக்கி நகருவதால் பிற்கால வாழ்க்கை இவரது கட்டுப்பாட்டில் வந்துவிடும். தற்போது திருமண காலத்தில் இருக்கிறார் எனும் நிலையில் இவரது திருமண அமைப்பை அறிய என்னிடம் கொடுக்கப்பட்ட ஜாதகம் இது.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் நவாம்சத்திலும் மிதுனத்திலேயே அமைந்து  வர்கோத்தமம் பெற்றுள்ளார். இது ஜாதகரின் எண்ணத்தில் உள்ள உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கும். களத்திர காரகர் சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் புதனுடன் பரிவர்த்தனையாகி துலாத்திற்கு வந்து அவர் ஆட்சி பெறுகிறார். அதனால் துலாத்தில் நீசமான குடும்ப ஸ்தானாதிபதி சூரியனை நீச பங்கப்படுத்துகிறார். ஆனால் பரிவர்த்தனைக்குப் பிறகு சுக்கிரன் சூரியனிடம் அஸ்தங்கமடைகிறார். புதன் கன்னிக்கு சென்று உச்சமடைந்தாலும் ராகுவோடு இணைகிறார். பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் புதனும் சுக்கிரனும் பாதிப்பான நிலையையே அடைகிறார்கள். ஜாதகர் சனி தசையை கடந்து, புதன் தசையில் கேது புக்தியில் இருக்கிறார். புக்திநாதர் கேது கோட்சாரத்தில் கன்னியில் ஜனன கால சுக்கிரன் மீதும், பரிவர்த்தனையாகி கன்னிக்கு வரும் புதன் மீதும் நிற்கிறார். இது காதலால் ஏற்பட்ட கசப்பில் இருந்து இன்னும் ஜாதகர் மீழாமல் இருப்பதையும் , திருமணத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது. இதை ஜாதகத்தை அளித்தவர்களிடம் தெரிவித்த பிறகு அவர்கள் கூறியதாவது. பையன் பள்ளிக்காலத்திலேயே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலை ஏற்காததால் வேறொருவரை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டதால் மனமுடைந்த பையன் திருமணத்திற்கு நீங்கள் கூறுவதுபோல ஒப்புக்கொள்லாமல் இருக்கிறான் என்றனர். இத்தகைய இளைஞருக்கு வற்புறுத்தி திருமணம் செய்விப்பது அவரது வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கக்கூடும். எனவே பையன் திருமணத்திற்கு ஒப்புதல் கூறியபிறகு திருமண முயற்சிகளை துவக்குங்கள் என்றேன்.

இவ்விளைஞனின் கடந்த கால காதல் விஷயங்களை அவர் கடந்து வந்த தசா-புக்திகளை ஆராய்ந்தால் தெரியும். கடந்த தசாநாதர் சனி 9 ஆமிடமான மீனத்தில் வக்கிரமாகி தசை நடத்தியுள்ளார். 9 ஆமிடம் என்பது காதல் பாவகமான 5 ன் பாவத்பாவமாகும். மீனச் சனியை சிம்மத்தில் அமைந்த 5, 10 ஆமதிபதி செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்க்கிறார். தசாநாதருக்கு 5 ஆமதிபதி தொடர்பு ஏற்பட்டால் ஜாதகர் காதலிப்பார். ஆனால் செவ்வாயின் 8 ஆம் பார்வை அதில் பிரிவினையையும் ஏற்படுத்தும். சனி தசை 19 வருடங்கள் உடைய நீண்ட தசை என்பதால் ஜாதகர் பள்ளிக் காலத்திலிருந்தே குறிப்பிட்ட பெண்ணை காதலித்துள்ளார். ஜாதகருக்கு சனியை அடுத்து திருமண வயதில் வந்த தற்போதய காதல் காரகர் புதன் காதல் பாவகமான 5 க்கு 12 ல் இருந்து தசை நடத்துகிறார். இதனால் புதன் தசையில் ஜாதகர் காதல் தோல்வியை சந்திப்பார் என்பது தெளிவாகிறது. ஜாதகத்தில் பரிவர்த்தனையடையும் புதனும் சுக்கிரனும் ராகுவோடு தொடர்புகொள்வது கடும் தோஷமாகும். புதனும் சுக்கிரனும் தந்தையை குறிக்கும் சூரியனில் அஸ்தங்கமடைவதும் காதலி மனைவியாகும் சூழலில் காதலியின் தந்தை அவரை கட்டுப்படுத்துவார் என்பது புரிகிறது.

காதலிக்கும் முன் செய்யும் தேர்வு முக்கியமானது. காதலித்த பிறகு யாருக்காகவும் பின்  வாங்காத நிலை இருவருக்கும் இருக்க வேண்டும். காதல் திருமண நிலையை அடையும் காலத்தில் தசை நடத்தும் கிரகங்களும் காதல், களத்திர கிரகங்கள் பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் இருந்து தசை நடத்தினால் அவர்களது காதல் நிறைவேறும். எனவே காதலிக்கும் முன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்து தனது காதல் எப்படி என கேட்டுக்கொண்டு பிறகு காதலிக்கலாம். ஆனால் அதை

“யார் கேட்பார்கள்?”

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English