ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு கால்குலேட்டர்களை தட்டுவது கூட இல்லை. இரு எண்களின் கூட்டுத் தொகை என்னவென்று கேட்டால் இந்த கைபேசி சேவகர்களே பதிலளித்துவிடுகின்றனர். நாம் கூடுதலாக சோம்பேறிகளாகிவிட்டோம் என்பதைவிட, நமது தீர்மானங்களை செயற்கை நுண்ணறிவிடம் அடமானம் வைக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இது எங்கே போய் முடியுமோ?

எனது ஜோதிட ஆய்வுக்குழு நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து அழைத்தார். அவரது வாடிக்கையாளர் கொடுத்த ஜனன நேரத்தை செயலியில் பதிவிட்டால் இருவித ஜாதகங்கள் வருகின்றன. அவற்றில் நான் எதை எடுத்துக்கொண்டு பலன் கூறுவது என்பது அவரது அங்கலாய்ப்பாக இருந்தது. ஒரு செயலி கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம் நான்காம் பாதம் என்று காட்ட, மற்றோர் செயலி  சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்டம் இரண்டாம் பாதம் என்று காட்டியது. பஞ்சாங்கத்தை எடுத்துக் கணிக்கலாம் என்றால் நான் உட்பட செயலிகளுக்குப் பழகிவிட்ட பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகம் கணிப்பதையே மறந்துவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை. இந்நிலையில் நீண்ட காலமாக நான் பயன்படுத்தும் நம்பகமான கணினி ஜாதக மென்பொருளில் அவர் அளித்த ஜனன விபரங்களை பதிவிட்டபோது சிம்ம லக்னம், மகர ராசி, அவிட்டம்-2 ஆம் பாதம் என்றுதான் காட்டியது. நட்சத்திர பாதங்களுக்கிடையே 6 மணி நேர வித்தியாசம் வரும் நிலையில் முதல் செயலி அவிட்டம் நான்காம் பாதம் என்று காட்டியது மிகத் தவறு. அவிட்டம்-3 என்று காட்டிருந்தால்கூட அது நட்சத்திர சந்தியாக இருக்கலாம். ஆனால் ராசி, லக்னம், நட்சத்திர பாதம் உட்பட அனைத்தையுமே தவறாக முதல் செயலி காட்டியதால் முதல் செயலி தவறானது என்பது தெளிவாகிவிட்டது. எனவே இரண்டாவது செயலி விபரங்கள் நான் கணித்த ஜாதகத்துடன் பொருந்திப் போவதால் இரண்டாவது செயலி ஜாதகமே சரி என்று  கூறினேன். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்கையில் பிரசன்ன ஜாதகம் ஒன்றை எச்சரிக்கையாக போட்டுவைப்பது எனது இயல்பு.  புகழ் பெற்ற ஜாதக மென்பொருளான Jegannatha Hora விலும் இரண்டாவது செயலி கொடுத்த ஜாதகம் சரி என்று காட்டியதால் நண்பரிடம் தவறான முதல் செயலியை படுன்படுத்த வேண்டாம் என்று கூறினேன். எனது கணினி மென்பொருளில் கணித்த ஜாதகம் கீழே.

கடகத்தின் இறுதிப் பாகையான ஆயில்யம்-4 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்தால், நவாம்ச லக்னம் மீனமாக இருக்கும். ஆனால் இங்கு லக்னம் சந்தியில் அல்லாமல் 2.57 பாகையில் சிம்மத்தில் அமைந்துள்ளது. சிம்மத்தில் மகம்-1 ல் லக்னம் அமைந்தால்தான் நவாம்ச லக்னம் மேஷமாக வரும். சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல் நின்றால்தால் நவாம்சத்தில் கன்னியில் அமையும்.     

எனினும் நண்பர் அதையும் எப்படி நம்புவது? என்று கூறினார். இருவருக்குமே ஜாதகத்தை கணித்துப் பார்க்க பொறுமையில்லை. எனவே இரண்டு செயலிகள் காட்டிய ஜாதகங்களில் எது சரியான ஜாதகம்? என ஒரு பிரசன்னம் போட்டுப் பார்த்துவிடுவது என்று முடிவாகியது. மேற்கண்ட ஜாதகரின் ஜனன லக்னம், ராசி, நவாம்ச லக்னம் என்ன? என்ற கேள்வியுடன் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

விருட்சிகம் உதயமாக வந்துள்ளது. உள்வட்ட உதயாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமாகவும், ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்) மகரத்தில் உச்சமாகவும் அமைந்துள்ளார். ஜாமக்கோள் ஆரூடத்தில் உச்ச-நீச கிரகங்களே கேள்வியின் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும். இங்கு உதயாதிபதி செவ்வாய் உச்ச – நீசம் பெற்றதன் பொருள் ஜாதகத்தில் செவ்வாயின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. லக்னம், ராசி, நக்ஷத்திரங்களில் செவ்வாயின் ஆளுமை இருக்கும். மேலே நான் கணித்த ஜாதகத்தில், சிம்ம லக்னத்தில் செவ்வாய் அமைந்து நவாம்சத்திலும் சிம்மத்திலேயே நின்று வர்கோத்தமம் பெற்று நிற்பதுடன், நட்சத்திராதிபதியாகவும் வருவதை கவனிக்க. உதயம், ஆரூடம், கவிப்பு ஆகியவைகளே லக்னம், ராசி, நவாம்ச லக்னம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். கவிப்பு இரு சூரியன்களுடன் இணைந்திருப்பத்தைக் காண்க. இதனால் சூரியனின் வீடான சிம்மமே லக்னம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஆரூடம் மகரத்தில் அவிட்டம்-2  லும் அங்கு அமைந்த ஜாமச் செவ்வாய் அவிட்டம்-4 லும் அமைத்திருப்பதை காண்க. சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல் இருப்பதாக ஒரு செயலியும், மற்றொரு செயலியில் அவிட்டம்-4 ல் நிற்பதாகவும் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். .

ஆரூடம் அவிட்டம்-2 ல் நி ற்பது ஜாதகச்  சந்திரன் மகரத்தில் அவிட்டம்-2 ல்தான் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆரூடத்திற்கு வெளியே செவ்வாய் அவிட்டம்-4 ல் நிற்பது, ஒப்பிடப்படும் மற்றொரு ஜாதகத்தில் சந்திரன் கும்பத்தில் அவிட்டம்-4ல் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்படுவதை குறிப்பிடுகிறது. உதயம் விருட்சிகத்தில் அமைந்துள்ளதை கவனிக்க. இதனால் மீதம் உள்ள நவாம்ச லக்னம் செவ்வாயின் வீட்டில்தான் அதாவது மேஷம் அல்லது விருட்சிகத்தில்தான் அமைய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்ச லக்னம் மீனமாகவோ அல்லது மேஷமாகவோதான் அமைய வாய்ப்புள்ளது என்பதால் நவாம்ச லக்னம் மேஷத்தில்தான் உள்ளது என்பதை உதயம் அடையாளம் காட்டுகிறது.

பொதுவாக கேள்வியை துல்லியமாக கேட்டால் பிரசன்னத்தில் பதிலும் துல்லியமாகக் கிடைக்கும். ஆனால் இங்கு கேள்வி எது சரியான ஜாதகம்? என்பதுதான் என்றாலும், லக்னம், ராசி, நவாம்ச லக்னம் ஆகிய கேள்வியின் உப அமைப்புகளையும் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜாமக்கோள் பிரசன்னம் மிகத் தெளிவான பதிலைக் காட்டியது. இப்படி கேள்வியை உப அமைப்புகளுடன் இணைந்துக் கேட்பது எனக்கு இதுவே முதன் முறை என்பதால் பிரசன்னம் காட்டிய பதில்களால் பிரம்மித்துப் போனேன். இக்கலையை எனக்கு அருளிய எனது குருநாதருக்கு மனமார நன்றி கூறிக்கொண்டேன்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English