போரில் வெற்றி யாருக்கு?

கிரக யுத்தம்


சிலவகை வாழ்வியல் நிகழ்வுகளை குறிப்பிட்ட காலத்தில்தான் அனுபவித்திட வேண்டும் என இறைவன் வகுத்திருப்பான். அதற்கான காரணங்கள் சூட்சுமமானவை. ஒருவரது கர்ம வினைகளோடு தொடர்புடையவை. அது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வினை துவங்கும்போதுதான் அது தொடர்புடைய இதர வினை ஒருங்கே வந்து இணையும்.
எங்கே நமக்கான செயல்களை எவ்வளவு முயன்றும் நாம் செய்துகொள்ள இயலவில்லையோ அங்கேதான் படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என உணர வேண்டும். 
படைத்தவனின் கருணையாலேயே அந்த செயல் நடந்திட வேண்டும் என வேண்டிக்கொண்டு செயல் நோக்கிய திசையில் தனது பயணத்தை தொடர வேண்டும். உரிய நேரம் வந்ததும் அச்செயல் நிகழும். வெகு சிலருக்கு அவர்களது கடுமையான கர்மவினையின் காரணமாக அச்செயல் மிகுந்த தாமதத்தில் நிகழும் அல்லது மறுக்கப்பட்டிருக்கும் அவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.
இதை அறியாமல் புலம்புவோர் பலர். ஜோதிடத்தின் மூலம் அத்தகைய சிலவற்றை அறிந்துகொண்டு இறையோடு போட்டிபோட்டு தோல்வியுறுபவர் பலர்.       
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.

06.07.1991  மாலை  5.49 மணி. கரூர்.
மிதுன லக்ன ஜாதகிக்கு  22.06.2017 வரை சுக்கிர திசை நடக்கிறது. 25 வயதை கடந்துவிட்ட ஜாதகிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. ஜாதகி மெத்தப்படித்தவர்.
ஜாதகத்தில் மகம் – 2 ல் சுக்கிரன். மகம் – 1 ல் செவ்வாய். இருவருக்கும் இரண்டு பாகைகள் மட்டுமே இடைவெளி.
இங்கு செவ்வாய் சுக்கிரனுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராசி மண்டலத்தில் குறைவான பாகை இடைவெளியில் பின்னால் நிற்கும் கிரகம் முன்னாள் இருக்கும் கிரகத்தின் கதிர்வீச்சையும் அபகரித்துவிடும் என்பதே கிரக யுத்தத்தின் அடிப்படை.  யுத்தத்தில் வென்ற செவ்வாய் திசா நாதன் சுக்கிரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.. திருமணத்தை நடத்திட சுக்கிடனுக்கு களத்திர காரகன் என்ற வகையிலும் 12 ஆம் அதிபதி எனும் வகையிலும் முழு உரிமை உள்ளது என்றாலும் செவ்வாயுடன் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்ததால் செவ்வாயை சார்ந்தே சுக்கிரன் செயல்படும்.  
ராசிநாதன் செவ்வாயே ஜாதகிக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறார் என்பதே உண்மை.
காரணம் காம – களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு பாக்ய ஸ்தானமாகவும் (9 ஆமிடமாக) குடும்ப பாவமான 2 ஆமிடத்திற்கு 2 ஆமிடமாக பாவத் பாவம் எனும் அடிப்படையை கொண்டிருக்கும் 3 ஆம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் துணிச்சலான மனோநிலையை ஜாதகருக்கு வழங்கினாலும் குடும்ப வாழ்வை வழங்கிடும் மனோ நிலையில் இருக்காது.
எனவே லக்னத்தில் உச்ச குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்த சூரியனின் திசையில்தான் ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும். குரு செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் துலாத்தில் மேச ராசிக்கு 7 ஆமிடத்தில் 2017 பிற்பகுதியில் வரும்போது ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும்.
ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதோடு எட்டாமிடம் உடல் ரீதியான உறவை குறிப்பிடும் இடம் என்பதாலும் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் சஞ்சரிக்கும் சனி திருமணத்தை தடுத்திட உரிமையுண்டு. மேலும் ஜனன காலத்தில் எட்டில் குடும்ப பாவாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்ததால் முன்னமே திருமணம் நடைபெறாமல் தடுப்பது சனியின் வேலை.
நவாம்ச அடிப்படையிலும் பாவ அடிப்படையிலும் ஜாதகத்தை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் புரியவரும்.மேலும் ஒரு செயலை தீர்மானிப்பதில் பல காரணிகளும் ஜாதக அமைப்புக்கு தக்கபடி துணை நிற்கும். கர்ம வினைகளை அனுபவிக்க அனைத்து கிரகங்களும் துணை நிற்கும் என்றே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிரக யுத்தம் எனும் ஒரு குறிப்பிட்ட வகையில் ஜாதகத்தை ஆராய்ந்ததால் ஜாதகத்தில் இதர வகை காரணிகளை நீண்டு விளக்க விரும்பவில்லை. அப்படி ஆராய விரும்புவோர்களுக்காக நவாம்சமும் பாவமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
மற்றுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,அன்பன்,பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »
இல்லறம்

செல்வம்!

இன்றைய காலத்தில் பணி அழுத்தம் காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிபோடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தாங்கள் விரும்பியபோது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English