மணமுறிவுற்ற வாழ்க்கைத்துணை யாருக்கு வாய்க்கும்?

தற்கால திருமண சூழ்நிலைகள் கடினமாகி வரும் நிலையில் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. ஜோதிடர்களிடம் சென்று சரியான வரனை தேர்ந்தெடுத்துவிட்டோம் என யாரும் கூறிக்கொள்ள இயலாது. காரணம் இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தவன் இறைவன். அந்த விதியை ஜோதிடர்களால் மாற்றிவிட இயலாது. வாய்ப்புகளில் சிறப்பானதை ஜோதிடர்களால்  தேர்ந்தெடுத்துத்தர மட்டுமே இயலும். அவ்வளவே.
இன்று நாம் மணமுறிவுற்றவர்களை திருமணம் செய்துகொள்ளும் ஜாதக அமைப்பை பற்றி விவாதிப்போம். தங்களுடைய ஜாதகப்படி அமையக்கூடிய துணைவரின் அம்சங்களை தெரிந்துகொள்வது பொருத்தம் காண வசதியாக இருக்கும். திருமணத்தில் ஏற்படும் தாமதத்தையும் இதனால் தவிர்க்கலாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.
கீழுள்ளது ஜாதகத்தை ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

ஜனனம் 09.09.1985 – 2.21 AM – கரூர்
இவர் மணம் புரிந்தது திருமணம் முறிவுற்ற ஒரு பெண்ணை.
லக்னாதிபதி சூரியன் நீசமாகிகிவிட்டார். லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகரின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பண்பு வகிப்பவர்  ஆவார். லக்னாதிபதி நீசமானால் ஜாதகருக்கு அடிப்படையில் வலுவான தெளிவான சிந்தனைபோக்கு போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படும். குடும்ப காரகன் குரு நீசமானதால் குடும்பம் நீச வகையில் அல்லது கலங்கமுற்ற வகையில் அமையவேண்டும். ஒரு கிரகத்தின் செயல்பாட்டை அதன் வீட்டில் இருக்கும் கிரகம் பாதிக்கும். இவ்விதிப்படி சனியின் செயல்பாட்டை சனியின் வீட்டில் நீச நிலையில் அமைந்த குரு பாதிக்கிறது. இதனால் சனியும் நீச தோஷத்திற்கு உள்ளாகிறார். எனவே சனி எழாமதி எனும் வகையில் மனைவியின் அம்சம் நீசம் அல்லது கலங்கமுற்றவர் என்பதை அனுமானிக்கலாம்.
குருவால் இப்படி தோஷசப்பட்ட சனி லக்னத்தை பார்ப்பது ஜாதகரில் மேற்சொன்ன குணாதிசயத்தை உறுதிசெய்கிறது. மேலும் சுக ஸ்தானத்திலும் (விருச்சிகம்)  பாக்ய ஸ்தானத்திலும் (மேஷம்) பாவிகள் அமைந்து அதன் அதிபதி செவ்வாய் விரயாதிபதி சந்திரனுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமைந்தது ஜாதகருக்கு குடும்ப விஷயத்தில் குறைகள் உண்டு என்பதை உணர்த்துகிறது. ஜாதகர் எளிய குடும்பத்தை சார்ந்தவர் என்பதும் பொருளாதார சிரமங்களின் அடிப்படையில் மணமுறிவுற்ற வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் புரிந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் ஜாதகரின் பொருளாதார சூழலை குறிப்பிடுகின்றனர். 
ஜாதகருக்கு 09.06.2014 அன்று திருமணம் நடந்தது.

ராகு திசையில் குடும்ப பாவாதிபதி புதனின் புக்தியில் திருமணம். திருமண நாளின் கிரக நிலைகள் கீழே.

ஜாதகரின் கன்னி ராசிக்கு இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமான துலாத்தில் வக்கிர சனி. உச்சமாகி வக்கிரமான கிரகம் நீச பலனை தரவேண்டும் எனும் விதிப்படி  நீச வகையில் களங்கமான மனைவியை ஜாதகருக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது. ராகு இரண்டாமிடத்தில் நின்றது குடும்பத்திற்கு வரும் மனைவியின் அம்சத்தை அதாவது களங்கம் என்ற தனது காரக வகையில் உணர்த்துகிறது. ராசி அதிபதி புதன் தனது ஆட்சி வீட்டில் வக்கிரமானதால் விவாகரத்தான மனைவியை அடையும் மனநிலையை ராசி அதிபதி மற்றும் புத்திகாரகன் என்ற வகையில் ஜாதகருக்கு ஏற்படுத்தி உள்ளார். புதன் குடும்ப காரகன் குருவுடன் இணைத்து திருமண காலத்தில் நின்றது குறிப்பாக மேற்குறிப்பிட்ட வகையில் குடும்பம் அமையும் என்பதை உணர்த்துகிறது.
அடுத்து கீழே காணப்படும் ஜாதகமும் விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்த ஒரு ஆணின் ஜாதகம்தான்.

ஜனனம் 02.06.1977
விருச்சிக ராசி & லக்னத்தில் அமைந்த நீச கிரகம் சந்திரன் களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்தையும் குடும்ப காரகன் குருவையும் பார்வை செய்கிறது. நீசன் சந்திரனின் வீட்டில் அமைந்த சுக ஸ்தானாதிபதி சனி ஜாதகர் சுகப்படும் விதம் நீசம் எனும் வகையில் களங்கமுற்ற பெண்ணிடம்தான் என்பதை தெரிவிக்கிறது. தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்த ராகு ஜாதகரின் படுக்கைக்கு வரும் துணைவரின் அம்சம் தனது காரக அடிப்படையில் களங்கமடைந்தவர் என்பதை தெரிவிக்கிறது. குடும்ப காரகன் குருவை நீச கிரகம் சந்திரன் பார்ப்பதால் குடும்பம் கலங்கமுற்றவகையில் அமையும் என்பதை  தெளிவாக குறிப்பிடுகிறது.
மூன்றாவது ஜாதகம் கீழே.

31.08.1968 – மைசூர் 
கடக லக்னாதிபதி சந்திரன் நீசம். லக்னாதிபதி மனோகாரகன் சந்திரன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. லக்னத்தில் 5 ஆமதிபதியும் ஒரு மனிதனின் மன   ஓட்டங்களை குறிக்கும் ஐந்தாமதிபதியான நீச கிரகம் செவ்வாய் அமைந்துள்ளது போன்றவை ஜாதகரின் எண்ணங்களில் குறை அல்லது கலங்கமடைந்தவரை வாழ்க்கைத்துணைவராக  ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையை ஜாதகருக்கு தந்துள்ளது. மேலும் மனைவியை குறிக்கும் ஏழாமதிபதி சனியும் நீசமாகி வக்கிரமடைந்து நீசன் செவ்வாயின் வீட்டில் அமைந்துள்ளது ஜாதகரின் வாழ்க்கை துணை மணமுறிவுற்றவர் அல்லது கலங்கமடைந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.
செவ்வாயும் சனியும் நீச நிலையில் பரிவர்த்தனை பெற்றதால் இங்கு ஓரளவு ஜாதகருக்கு பலனையும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சமடைந்து வக்கிரமடையும் கிரகம் எப்படி நீச பலனை கொடுக்குமோ அப்படி அதேபோல் நீசமடைந்து வக்கிரமடையும் கிரகமும் உச்சத்திற்கு ஈடான நல்ல பலனையும் கொடுக்கும். இந்த ஜாதகம் இந்த விதிக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதன்படி சனி நீசமடைந்து வக்ரமானதால் சனியின் காரகம் அடிப்படையில் ஜீவனம் வலுவடைந்தது. செவ்வாயின் வீட்டில் உள்ள சனி வலுவடைந்ததால் பரிவர்தனையடைந்த செவ்வாயும் வலுவடைந்தது. சந்திரனும் சனியும் வர்கோத்தமம் பெற்றதாலும் வலுவடைந்துள்ளன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 
செவ்வாய் வேகம், கோபம், அவரசம் போன்றவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சந்திரன் விரைவுத்தன்மைக்கு உரிய கிரகமாகும். இவற்றின் அடிப்படையில் ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரிமளித்தவர்.
நீங்கள் நினைப்பது சரிதான். ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் திரு.ஜவகல் ஸ்ரீநாத் ஆவார். இவர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது திருமணமாகி மணமுறிவுற்றவரை விரும்பி மணம் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதகரின் குடும்ப ஸ்தானமும் குடும்ப காரகன் குருவும் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டதாலும் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரனும் களத்திர ஸ்தானாதிபதி சனியும் லக்னாதிபதி சந்திரன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் நீச நிலை பெற்றதாலும் ஜாதகர் விரும்பி அமைத்துக்கொண்ட அந்த முதல் திருமணம் நிலைக்கவில்லை. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாதகர் இரண்டாவதாக மறுமணம் செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  
மீண்டுமொரு பதிவில் ஆராய்வோம்,

வாழ்த்துக்களுடன்
அன்பன்,
பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English