மனமே நீ மயங்காதே…

உலகில் மோசமான எதிரி என்பது நமது மனம்தான். மனதை அடக்கியவர் ஞானியாகிறார். இயலாதவர் சாதாரண மனிதன். மனதை வென்றவர் உலகில் சாதனைகளை படைக்கிறார். மனதின் மாயங்களுக்கு மயங்குவோர் அதிலிருந்து மீள இயலாமல் தன்னில் தாங்களே வீழ்கின்றனர். மனதை கட்டுப்படுத்தவே பல மருத்துவமனைகள். ஆலோசகர்கள், ஆன்மீக அமைப்புகள். வேதாத்ரி, ஓஷோ, ஜென் போன்ற உலகில் கொண்டாடப்படும் பல அமைப்புகளெல்லாம் மனதை செம்மையுற வைத்துக்கொள்ள வழிகாட்டுபவைகளே. நமது இதிகாச புராணங்கள் எல்லாம் வாழ்வின் பாதிப்புகளை எதிர்கொள்ள நீதிகளை சொல்லும் அதே சமயம், அவற்றின் மூலம் அறியவரும் புகழ் பெற்ற சித்தர்களும், யோகிகளும், மகான்களும், மகரிஷிகளும் மனதை வென்று அதன் பயனாக உலகிற்கு சொல்லிய நல்ல அறிவுரைகளுக்காக கொண்டாடப்படுபவர்களே. “மன எண்ணங்களை கட்டுப்படுத்தாதே, மாறாக சாட்சியாக மட்டுமே இரு” என்கிறார் ஓஷோ. செயலைத் தூண்டுவதுதான் எண்ணங்களின் வேலை. எண்ணங்கள் செயலாகாவிட்டால் அவை அவசியமற்றவைகளாககின்றன. எண்ணங்களுக்கு எதிர்வினை ஆற்றாவிட்டால் சோர்வடைந்துவிடும். இதைத் தொடர்ந்து பயிற்சி செய்தால், தொடர்ந்து சோர்வடையும் எண்ணங்கள் ஒரு கட்டத்தில் அவசியமற்ற தங்களின் நிலை கருதி நமது மனதிலிருந்து மறையத்துவங்கும். இத்தகைய எண்ணங்களற்ற நிலையைத்தான் ஞானிகள் பரவசம் என்கிறார்கள். தொடர்ந்த தியானம் மூலம் இந்த நிலையை நாம் பெறலாம். ஆனால் மனமெனும் குரங்கை அத்தனை சுலபமாக நம்மால் கட்டுப்படுத்திவிட இயலுமா என்ன?. எண்ணங்கள் நமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் நமது ஒட்டுமொத்த வாழ்வே நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவே பொருள். அப்படியான நிலையில் நமது கர்மா, விதி, தலையெழுத்து போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுபவைகளால் நம்மை எதுவும் செய்ய இயலாது. இத்தகைய நிலையில் கர்மாவிற்கு இடமேயில்லை. நாம் அனுமதித்தால்தான் அவை செயல்படும். இந்நிலையில் நாமே நமது கர்மாவின் கடவுளாகிறோம். அனைத்து விஷயங்களிலும் நமது எண்ணங்களை கட்டுப்படுத்த இயலாவிட்டாலும் நம்மை பாதிக்கும் ஒரு சில விஷயங்களிலாவது நமது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நாம் அனைவரும் முயல்கின்றோம். இனிப்பை தவிர்த்தல், மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்று உடலை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்கள் அவற்றுள் சில. இதை ஒரு விஷயத்தில் தனது மனதை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணின் உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

துலாம் லக்ன ஜாதகம். 2 ஆமிடம் சாக்கடை என்று அழைக்கப்படும் விருட்சிக ராசியில் கேது எனும் பாவி உச்சமாகியுள்ளார். லக்னத்தில் 2 ஆமதிபதி செவ்வாய் 6 ஆமதிபதி குருவின் விசாகம்-2 ல் உச்ச சனியோடு இணைந்து நிற்கிறார். கால புருஷனுக்கு 2 ல் லக்னத்திற்கு 8 ல் சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்கும் உச்ச ராகு 7 ஆமிட சந்திரனை முதலில் தொடுவார். 7 ஆமிட சந்திரன் கடகத்தில் நிற்கும் லக்னாதிபதி சுக்கிரனின் பரணி-2 ல் நிற்கிறார். ஜாதகர் ராகு தசையில் உள்ளார். 8 ல் 10 ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் அமைந்த ராகு வெளித்தொடர்புகள், நவீன மின்னணு தொடர்புகள் மூலம் ஜாதகருக்கு வருமானத்தை கொடுப்பார். ஆனால் ஜாதகத்தில் 2 ஆமிடமும், 2 ஆம் பாவாதிபதி செவ்வாயும் பாவிகள் தொடர்பால் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆமிட பாவிகள் தொடர்பு  பொருளாதாரத்தில் பாதிப்பை தராது ஆனால் 2 ஆமிடம் குறிக்கும் குடும்ப உறவுகள், உணவு மூலம் ஜாதகரின் உடல் நிலை ஆகிய உயிர் காரகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். தசாநாதரான ராகு மனோகாரகர் சந்திரனுடன் தொடர்பாவதால் ஜாதகர் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட விருப்பம் உள்ளவர். கணினித் துறையில் பணிபுரிகிறார். ஆனால் 2 ஆமிட உயிர் காரகங்கள் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப தற்போது குடும்பத்தை விட்டு விலகி வேறு மாநிலத்தில் பணிபுரிகிறார். ராகு எனும் விஷம் சந்திரனோடு தொடர்பாவதால் ஜாதகருக்கு மதுவருந்தும் பழக்கம் உள்ளது. துலாம்  லக்னத்திற்கு 3, 6 ஆகிய பாவங்களின் அதிபதி குருவின் புக்தியில் ஜாதகர் தற்போது உள்ளார். தற்போது குடும்பத்தை பிரிந்துள்ளதால் ராகு கொடுக்கும் தனிமையைத் தவிர்க்க 3 ஆமதிபதி குரு கொடுக்கும் துணிச்சலில் ஜாதகர் மதுவருந்துகிறார். கோட்சாரத்தில் ஜனன சந்திரன் மேல் நிற்கும் ஜென்ம குரு புக்தி நடத்துகையில் உடலும், மனமும், தனது வாழ்வும் பாதிக்கப்படும் என்பதை ஜாதகர் அறிந்தே வைத்துள்ளார். இதனால் தனது தனிமையை இதர விஷயங்களில் செலுத்தி மதுப்பழக்கத்தை கைவிட ஜாதகர் முயற்சி மேற்கொண்டுள்ளார். புக்தி நாதர் குரு குறிக்கும் ஆன்மீகம், தியானம் போன்ற விஷயங்களில் கவனத்தை திருப்ப எண்ணுகிறார். அதே சமயம் ஜனனகால வக்கிர குரு விஷ ராசியான விருட்சிகத்தில் நிற்கும் கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்பதால் மதுப்பழக்கமும் ஜாதகரை வாட்டுகிறது. சந்திரனுக்கு செவ்வாய் தொடர்பு இருப்பவர்கள் மதுப்பழக்கத்தில் ஈடுபடுவர். இவ்விரு கிரகங்களுக்கும் பாவிகள் தொடர்பு ஏற்படின் அது தீவிரமான பழக்கமாக மாறும்.

ஜாதகரின் மன நிலையை இதுபோன்ற பழக்கங்களில் ஆராய பரசாரரின் சோடசாம்ச சக்கரத்தை (D16) பயன்படுத்தலாம். ஜாதகத்தில் மனநிலையை சந்திரன் குறிப்பிட்டால் பாவகங்களில் 4 மற்றும் 5 ஆகிய பாவகங்கள் ஜாதகரின் மன விருப்பங்களை குறிப்பிடும். கிரகங்களில் சுக்கிரன் மகிழ்ச்சி காரகர் என அழைக்கப்படுபவராவதால் சுக்கிரனின் நிலையும் ஒரு ஜாதகர் தனது மனம் மகிழும்படி என்ன மாதிரியான விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பார் என்பதைக் காட்டும். இவற்றை ராசிச் சக்கரத்தைவிட சோடசாம்சத்தில் ஆராய்வதே தெளிவான நிலையை காட்டும். சோடசாம்ச லக்னத்தில் மனோகாரகர் சந்திரனின் கடகமே லக்னமாக அமைந்து அதில் 2 ஆமதிபதி சூரியன் அமைந்தது ஜாதகர் தனது மன மகிழ்வுக்காக உயர்வான விஷயங்களில் ஈடுபட விரும்புவார் என்பதைக் குறிக்கிறது. 2 ல் அமைந்த 3, 12 அதிபதி புதன் 8 ஆமிட ராகு-கேதுக்களின் பார்வையை பெறுவதால் ஜாதகர் தனது குடும்பத்தை விட்டு விலகியிருக்கும்போது மதுவருந்த விரும்புவதை குறிக்கிறது. 2 ஆமிட புதனுக்கு லாபஸ்தான செவ்வாயின் 4 ஆம் பார்வையும் கிடைப்பதால் குடும்ப நிலையை மீறி 11 ஆமிடம் குறிக்கும் தனது மகிழ்ச்சிக்காக மதுவருந்தும் துணிச்சலும் உள்ளது தெரிகிறது. 2 ஆமிட புதன் இருப்பது மகிழ்ச்சிகாரகர் சுக்கிரனின் பூரம் என்பதை அறிக. லக்னாதிபதி சந்திரன் 7 ல் நின்று லக்னத்தை பார்ப்பது சிறப்பே. ஆனால் சந்திரனுக்கு இருபுறமும் பாவிகள் அமைந்து பார்கர்த்தாரி யோகம் பெற்றது தனிமையையும், மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் சூழலில் ஜாதகர் மதுவருந்துவார் என்பதைக் குறிக்கிறது. 4, 11 அதிபதி சுக்கிரன் 8 ஆமதிபதி சனியுடன் 6 ல் அமைந்து, 12 ல் அமைந்த 6 ஆமதிபதி குருவின் பார்வையை பெறுவதால் தனது சந்தோஷத்திற்காக வீண் செலவுகளை செய்து உடல் ஆரோக்கியத்தை ஜாதகர் கெடுத்துக்கொள்வதையும் குறிக்கிறது.

ஜாதகர் இப்பழக்கத்தில் இருந்து மீள வழியுண்டா? என்றால் இங்கு தசா-புக்தி கிரகங்களும்,  லக்னம், லக்னாதிபதி தொடர்புகளே பதிலை கூறும். சோடசாம்சத்தில் ராகுவும், லக்னாதிபதி சந்திரனும் 11 ஆமிட செவ்வாயின் அவிட்டத்தில் நிற்கிறார்கள் (சந்திரன்=அவிட்டம்-1, ராகு=அவிட்டம்-4) என்பதாலும் லக்னத்திற்கு சுபர்கள் தொடர்பு இல்லாததாலும் கடினமே. தசாநாதர் ராகு ராசியை போலவே  சோடசாம்சத்திலும் 8 ல் நிற்பதை கவனிக்க. 8 ஆமிட ராகுவை 6 ஆமிட சனி மூன்றாம் பார்வை பார்ப்பதையும் கவனிக்க. இதனால் ஜாதகர் 8 ஆமிடம் குறிக்கும் வேலை தொடர்பான  ஆய்வுகளில் தன்னை முழ்கடித்துக் கொள்வதாலும், மறை பொருளான ஆன்மீக விஷயங்களின் ஈடுபடுவதாலும், ஓய்விற்கு இடமளிக்காமல் பல்வேறு புதிய இடங்களையும், அனுபவங்களை பெற பயணங்களை மேற்கொள்வதாலும் ஜாதகர் இதிலிருந்து மீள வழிடுண்டு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English