தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்கின்றன. இன்று உலக பொருளாதாரம் தடுமாறுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் காரணம் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் நாம் அனைவரையும் ஆட்டுவிப்பது கிரகங்களே. உலக பொருளாதாரச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த கிரகங்கள் அமெரிக்க அதிபரை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்பதே உண்மையாக இருக்கும்.  மாற்றங்களுக்கு அஞ்சுபவர் தங்கள் வளர்ச்சிக்கே அஞ்சுபவராகிறார். அதிலும் இன்றைய உலகில் மாற்றங்கள் அசுர வேகத்தில் நடக்கின்றன. அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்துச் செல்ல அனைவராலும் இயலாது. ஏனெனில் மிகச் சிலரைத் தவிர பெரும்பாலோனோர் எதையும் ஆராய்ந்து செயல்படுபவர்களாகவே இருப்பதுதான் இதற்குக் காரணம். எப்பொழுதுமே பொருளாதார வகையிலான மாற்றங்கள்தான் பெரும்பாலும் விரும்பப்படுகிறது. மாற்றங்கள் வசதி வாய்ப்புகளை வழங்கும்போதுதான் வளர்ச்சியும், அதனை முன்னிட்ட மனித மனங்களில் மலர்ச்சியும் ஏற்படுகிறது. சில சமயம் போர்ச்சூழலும், இயற்கை சீற்றங்களும் மாற்றத்தை கொண்டுவருவதுண்டு. ஆனால் உறவுப் பிணைப்பால் ஏற்படும் மாற்றங்கள் நமது உணர்வுகளுடன் தொடர்பானவை. மகிழ்ச்சியானாலும், கசப்பானாலும் இத்தகைய மாற்றங்களை சில சமயம் தவிர்க்க இயலாமல் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் உறவுகளை முன்னிட்டு ஏற்படுத்திக்கொள்ளும் இத்தகைய உணர்வுப் பூர்வமான மாற்றங்கள் தனி ஒருவருக்கு மகிழ்வை தராவிட்டால் நாளடைவில்  கசப்பாகி விடுகின்றன. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கடல் கடந்து வெளிநாடு செல்வதற்கு கடலை குறிக்கும் கடக லக்னம் இயல்பான வாய்ப்புகளை வழங்கும் லக்னமாகும். லக்னாதிபதி சந்திரன் நீர் ராசிகளுடன் தொடர்பானாலும், 8, 9, 12 பாவகங்களுடன் தொடர்பானாலும், குருவுடன் தொடர்பானாலும் ஒருவர் வெளிநாடு செல்ல பொருத்தமான தசா புக்திகளில் வாய்ப்புகள் வரும். ஜாதகர் வீட்டை குறிக்கும் 4 ஆமிடத்தில் நிற்கும் ராகு தசையில் செவ்வாயின் அவிட்டம்-3 ல் செவ்வாயின் பார்வை பெற்று நிற்கும் சந்திர புக்தியில் கட்டுமானப் பொறியியல் (BE Civil) படித்தார். அதன் பிறகு நீர் ராசியான விருட்சிகத்தில் நிற்கும் குரு தசை துவங்கியது. இதனால் இவர் வெளிநாடு தொடர்பாக வாய்ப்புள்ளது. குரு 6, 9 ஆமதிபதியாகி 5 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று வித்யா காரகரும் 12 ஆமதிபதியுமான புதனின் கேட்டையில் நின்று 9 ஆமிடத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகர் இந்தியாவில் கட்டுமானப் பொறியியலில் இளங்கலை முடித்தவர் அதே துறையில் உயர் கல்வி படிக்க UK சென்றார். 9 ஆமதிபதி குருவையும், 9 ஆமிடத்தையும் செவ்வாய் முறையே 4, 8 பார்வையாக பார்ப்பதால் வெளிநாட்டிலும் கட்டுமானப் பொறியியலிலேயே உயர் கல்வியையும் படித்தார். குரு வேலையை குறிப்பிடும் 6 ஆமதிபதியுமாவதால் ஜாதகர் தான் உயர்கல்வி படித்த நாட்டிலேயே படிப்பிற்கேற்ற வேலையையும் தேடிக்கொண்டார்.

ஜாதகத்தில் 9 ஆமதிபதி குரு லாப ஸ்தானத்தில் புதனுடன் இணைந்து நிற்கும் தந்தையை குறிக்கும் சூரியனை பார்க்கிறார். இதனால் தந்தை பொருளாத ரீதியாக சிறப்புற்றவர். அதனால்தான் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார். ஆனால் 6, 9 ஆமதிபதி குரு சூரியனை பார்ப்பதால் தந்தைக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பும் குரு தசையில் நிச்சயம் வரும். சூரியன் கால புருஷனுக்கு ரோகாதிபதி (6 ஆமதிபதி) புதனுடன்  இணைந்து நிற்பதையும் அறிக. இதனால் ஜாதகரின் தந்தைக்கு கொரானா காலத்தில் ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டது. தந்தை தனது ஊரில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு ஏற்படுத்தித்தரும் (Cable TV) தொழில் செய்து வருபவர். தந்தை நன்கு வேரூன்றிய தொழிலை தன்னுடன் இணைந்து பார்த்துக்கொண்டு உள்ளூரிலேயே படிப்பிற்கேற்ற கட்டுமானப் பணியையும் செய்யலாம் என்று வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக ஜாதகர் இந்தியா திரும்பினார். ஜாதகருக்கு கடந்த ஆண்டு தந்தை திருமணமும் செய்து வைத்தார்.

நல்ல வருமானம்  வரக்கூடிய தொழிலானாலும் ஒருவர் தான் கற்ற கல்வி அறிவின் மூலமே சம்பாதிக்க விரும்புவார். இதனால் ஜாதகர் தனது காலி நிலத்தில் வீடு கட்டி விற்பனைக்கு தயார் செய்தார். ஆனால் ஜாதகர் கட்டிய வீடு விற்பனையாகாமல் முதலீடு முடங்கியுள்ளது. ஜாதகத்தில் ஜனன கால செவ்வாயின் மீது ராகுவின் நிழல் விழுகிறது. மேலும் செவ்வாயை ராகு முதலில் தொடுகிறார். இதனால் செவ்வாயின் காரக தொழில்களுக்கு நிச்சயம் பாதிப்பு வரும். ஆனால் இதே ராகுதான் தனது தசையில் தான் நின்ற நான்காம் பாவக ரீதியான கட்டுமானக் கல்வியை படிக்க வைத்துள்ளார். கோட்சார ராகு-கேதுக்கள் தற்போது சிம்மத்தில் ஜனன காலத்தில் நிற்கும் செவ்வாயை தொடர்புகொள்கின்றன. இதனால் ஜாதகர் தான் கட்டிய வீட்டை விற்பனை செய்ய இயலாமல் தவிக்கிறார். செலவு செய்த தொகைக்கேற்ற நல்ல விலை வரவில்லை. தசாநாதர் குரு கடனை குறிக்கும் 6 ஆமதிபதி என்பதால் வீடு கட்ட வாங்கிய கடனையும் அடைக்க இயலவில்லை. இதனால் ஜாதகர் தான் கட்டிய வீட்டை தற்போது வாடகைக்கு விட்டுள்ளார்.

கும்பத்தில் நிற்கும் சனி மீதுதான் கோட்சார ராகு வந்து ஜனன கால செவ்வாயை பார்க்கிறார். ஜனன கால செவ்வாய் மீது கேது நிற்கிறார். இதனால் வீடு மட்டுமல்ல இவர் எந்த தொழில் செய்தாலும் தொழிலுக்கு பாதிப்பு வர வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஜனன சனி மீது ராகு செல்வது சனியின் காரகங்களான தொழில், ஆயுளுக்கு பாதிப்பை தர வேண்டும். ஆனால் இவர் கவனித்துவரும் தந்தையின் தொழில் எவ்வித பாதிப்புமின்றி நடக்கிறது. காரணம் செவ்வாய் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் நிற்கிறார். மின்சாரம் போன்ற கம்பி வழி தொடர்புகளுக்கு செவ்வாயும், கேதுவும் காரகராகிறார்கள். வீடுகளுக்கு தொலைகாட்சி இணைப்பு தரும் தொழில் கம்பி வழி இணைப்பு என்பதால் ஜாதகர் தந்தையுடன் இணைந்து நிர்வகித்து வரும் அத்தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் வரவில்லை. கோட்சார ராகு ஜீவன காரகர் சனி மீது சென்றாலும் தொலைகாட்சி போன்றவை ராகுவின் காரகத்துவத்தில் வருவதால் அதற்கு பாதிப்பு வரவில்லை. வீடு ராகு-கேதுக்களின் காரகத்தின் வராது என்பதால் கட்டிய வீட்டை விற்க முடியவில்லை. கோட்சார ராகு-கேதுக்கள் அடுத்த 2௦26 ஆம் ஆண்டு இறுதியில் இடம் பெயர்ந்தால் அதன் பிறகு ஜாதகர் தான் கட்டிய வீட்டை விற்க வாய்ப்பு வரும். தசாநாதர் குரு வக்கிரம் பெற்று ராகுவை நோக்கி வருகிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டில் இருந்து கட்டுமானப் பணிகளை செய்தால் பாதிப்பு வராது. காரணம் குருவும், ராகுவும் வெள்நாட்டுத் தொடர்புகளுக்கு நன்மை செய்வர். ஆனால் 5 ல் நிற்கும் தசாநாதர் குருவிற்கு 11 ஆமிட சூரியனின் பார்வை படுவதாலும் ஜாதகருக்கு தற்போது தந்தையின் தொழில்தான் கைகொடுக்கும். தந்தையின் தொழிலால் ஜாதகருக்கு வருமானம் சிறப்பாக வந்தாலும், தான் கற்ற கல்வி பயனற்றுப் போவதால் தந்தையின் தொழிலை கசப்புடனேயே செய்துவருகிறார்.

ஜாதக அமைப்புகளும், கோட்சாரங்களும் ஒருவரின் தனிப்பட்ட திறமையையும், தொழிலையும் மடைமாற்றிவிடும் வல்லமை படைத்தவை. எனவே தொழில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளுமுன் ஜாதக ரீதியான அமைப்புகளை ஆராய்ந்து முடிவு செய்வது நலம். இல்லையேல் உணர்ச்சிவசப்பட்டு உறவுகளுக்காக ஏற்படுத்திக்கொள்ளும் தொழில் மாற்றங்களால் கசப்புகள் நிச்சயம் வரும் என்பதற்கு மேற்கண்ட ஜாதகம் ஒரு உதாரணம்.

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English