மொட்டுக்களை மலர விடுங்கள்!

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகை எதிர்கொள்ள கால மாற்றத்திற்கு தக்கவாறு நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நவீன விஷயங்களை வாரி வழங்கும் நுட்பக் கல்வி அறிவில்  தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் வாழ்க்கை ஏட்டுக் கல்வியை விட மிகப் பெரிய உண்மைகளை நம் கண் முன்னே காட்டும் ஒரு பேரதிசயம். நமது கல்வி அறிவு நமக்கு பயன்படாத சூழல்களில்  நம்மை திணற அடிக்கும் போது இந்த உண்மை நமக்கு விளங்கும். மிகக் குறைந்த கல்வியறிவு பெற்ற காமராஜர், MGR ஆகியோர் மிகச் சிறந்த நிர்வாகிகளாகவும், மக்களால்  காலங்கடந்தும் வணங்கத்தக்கவர்களாகவும் உள்ளனர். இன்று அதிக கல்வி அறிவு பெற்ற தலைவர்கள் தங்களது பொறுப்புகளில் தவறிழைத்து வீழ்வதை காணும் போது வாழ்க்கையில் போற்றுதலுக்கு உரிய விஷயங்களை அடைய கல்வி அறிவு மட்டும் போதாது என்பது புரிகிறது. மிகப்பெரிய இந்த வாழ்க்கையில் ஏட்டுக்கல்வி என்பது ஒரு சிறிய கற்பாறை என்றால் வாழ்க்கை கற்றுத்தரும் அனுபவம் இமயமலை அளவு உயர்ந்து நம்மை திகைக்க வைக்கிறது. எனவே வாழ்வை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள். அடுத்தவர் என்ன சொல்லுகிறார்கள், அடுத்தவர்கள் எப்படி வாழ்வில் வென்றார்கள் என்பதை கவனியுங்கள் ஆனால் அதே போன்று நீங்கள் ஆக முயற்சி செய்யாதீர்கள். காரணம் இந்த உலகில் ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்களே. ஒருவரது வாழ்வு போன்றுதான் மற்றவர் வாழ்வும் அமைய வேண்டும் என்றால், அந்த மற்றவர் படைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை உணருங்கள். உங்களது தனித்துவமான விருப்பங்களை, திறமைகளை அளவிட்டு அதனடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொள்வதே சிறப்பு. வாழ்க்கையைப் பொறுத்தவரை ஏட்டுக்கல்வியே வாழ்வில் ஒரு சிறு அளவே எனும் போது, இங்கு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் பயில்வதன் தாக்கம் அதைவிட குறைவானதே என்பதை உணருங்கள். பெரிய கல்வி நிறுவனங்களின் இயந்திரத்னனமான கட்டுப்பாடுகளால் மன உழைச்சலுக்கு ஆளாகி வாழ்வை தவறாக புரிந்துகொண்டு விபரீத முடிவுகளை எடுக்கும் மாணவர்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். வளரிளம் தலைமுறையினர் நமது தேசத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல காத்திருக்கும் போராளிகள். அவர்களை பயிற்சியிலேயே அழித்துவிடாதீர்கள். புகழ் பெற்ற இரு கல்வி நிறுவனங்களில் ஒன்றை தேர்வு செய்து தனது மகளின் உயர் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு எனது நண்பர் கேட்டுக்கொண்டதற்கினங்க நான் பிரசன்ன ரீதியாக ஆராய்ந்து கூறிய விஷயங்களே இன்றைய பதிவாக வருகிறது.

கேள்விக்கான ஜாமக்கோள் பிரசன்னம் நீங்கள் மேலே  காண்பது. கேள்வி குறிப்பிட்ட இரு கல்வி நிறுவனங்களில் எதை தேர்வு செய்வது என்பதுதான். இங்கு உதயம் முதல் கல்வி நிறுவனத்தை குறிப்பிட்டால், உதயத்திற்கு 7 ஆமிடம் இரண்டாவது கல்வி நிறுவனத்தை குறிப்பிடும். ரிஷப உதயம் பொருளாதார நிலைகளை குறிப்பிடக்கூடியது. அங்கு வித்யா ஸ்தானம் எனும் உதயத்தின் 4 ஆம் அதிபதி சூரியன் அமைந்துள்ளதால் மதிப்பான கல்வி நிறுவனத்தில் கல்வி பயில வைக்க தந்தை எண்ணுவதை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 4  ல் ஆரூடம் அமைந்தது கல்வி தொடர்பான விஷயம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆம் பாவகத்தில் கவிப்பு அமைந்தது தனது மகளின் உயர் கல்வியை தந்தை திட்டமிடுவதை தெளிவாக்குகிறது.. கவிப்பு அதில் ஏற்படவுள்ள பாதிப்புகளை  குறிப்பிடும்.

உதயம் மேஷ குரு, ராகு, புதன், சனி, சூரியனை கடந்து வந்து ரிஷபத்தில் செவ்வாயின் மிருக சீரிஷத்தில் அமைந்துள்ளது. மேஷத்தையும் உதயத்தையும் கேதுவுடன் இணைந்த துலாச் செவ்வாய் பார்த்துள்ளதில் இருந்து தந்தை மகளை மருத்துவம் பயில வைக்க  எண்ணியுள்ளது புரிகிறது. தனது எண்ணம் நிறைவேற முதன்மையான கல்வி நிறுவனத்தில் மகளை சேர்க்க தந்தை எண்ணுகிறார். உதயத்திற்கு 2 ஆமிடத்தில் இரு சுக்கிரனும் அமைந்துள்ளதால் மகளின் கல்விக்கு செலவழிக்க தகுந்த பொருளாதாரத்தையும் தந்தை தயாராக வைத்துள்ளது புரிகிறது. உதயம் 2 ஆமிடத்தை நோக்கி நகர்வதாலும் உதயாதிபதியான ஜாம சுக்கிரன் உதயத்திற்கு வந்து அங்கு சூரியனுடன் இணைவதால் மகள் தந்தையின் எண்ணப்படி கல்வி பயில்வது உறுதி என்பது புலனாகிறது.

இப்போது பதிலுக்காக இரு கல்வி நிறுவனங்களின் சூழலை ஆராய்வோம். முன்பு குறிப்பிட்டபடி முதலாவது கல்வி நிறுவனத்தை உதயமும் இரண்டாவதான கல்வி நிறுவனத்தை உதயத்திற்கு 7 ஆமிடமான விருட்சிகமும் குறிப்பிடும். உதயத்தில் சூரியன் நிற்பதால் கௌரவமும் வசதியும் மதிப்புமிக்க நிறுவனமாக முதல் கல்வி நிறுவனம் திகழும். உதயம் ரிஷபத்தில் அமைந்துள்ளதால் ஊரின் முதன்மை பகுதியை அடுத்த சம வெளியில் அது அமைத்திருக்கும். 4 ஆம் அதிபதியே உதயத்தில் அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து தரும் நிறுவனமாக அது இருக்கும். மேலும் சுக்கிரன் உதயத்தை நோக்கி வருவதால் சிறந்த வாகன வசதிகளை கொண்டிருக்கும். உதயத்திற்கு சூரியனின் தொடர்பு இருப்பதால் முதல் நிறுவனத்திற்கு அரசு வகை அங்கீகாரமும், அரசியல்வாதிகள் பின்புலமும் இருக்கும். இரண்டாவது கல்வி நிறுவனத்தைப் பொருத்தவரை விருச்சிகம் நீர் ராசியாக அமைவதாலும் உள்வட்ட செவ்வாய் கடகத்தில் அமைந்துள்ளதாலும் நீர் நிலை அருகே அமைந்திருக்கும். இரு செவ்வாயும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் இரண்டாவது கல்வி நிறுவனத்தை பொறுத்தவரை வலு குறைந்த நிறுவனமாகவும் வங்கிக் கடன் பெற்று இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனமாகவும் இருக்கும். ஒரு காலத்தில் நீர் நிலையாக இருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக வழக்குகள் இருக்க வாய்ப்புண்டு.  ஏனெனில் செவ்வாய் புதன் மற்றும் கேதுவுடன் தொடர்பு ஆகிறது. 2 ஆவது நிறுவனத்தின் வாகனங்கள் பழையதாகவும் இருக்கும். ஏனெனில் கும்ப சனியை கடக செவ்வாய் 8  ஆம் பார்வையாக பார்க்கிறார்.  

இரு நிறுவனங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் முதலாவது கல்வி நிறுவனத்தை  தேர்வு செய்வதே சிறப்பு. ஆனால் முதலாவது கல்வி நிறுவனத்தை பொருத்தவரை உதயத்தில் அமைந்த சூரியனே உதயத்திற்கு 8 ஆமிடதிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். மேலும் அங்கு சூரியன் மாந்தியுடன் இணைந்துள்ளார். உதயத்தை கேதுவுடன் இணைந்த துலாச் செவ்வாய் பார்க்கிறார். இவை முதலாவது நிறுவனம் மிகுந்த கட்டுப்பாடுகளால் இயங்கும் நிறுவனமாக இருக்கும். உதயத்திற்கு 12 ஆமிடம் பள்ளி விடுதியை குறிக்கும். அங்கு அமைந்த கிரகச் சேர்க்கைகள் சிறப்பானதாக இல்லை. உதய கிரகமே 8 ல் மாந்தியுடன் இணைந்து நிற்பதால் கடும் கட்டுப்பாடுகளால் அவமானமடையும் மாணவர்கள் விபரீதமான முடிவுகளை நாட வாய்ப்புள்ளது. உதயத்திற்கு பாதகத்தில் அமைந்த கவிப்பு உதயத்தில் நிற்கும் சூரியனின் சாரத்திலே இருப்பது இதை உறுதியாக்குகிறது. இதனால் முதலாவது நிறுவனத்தை தேர்வு செய்வது சிறப்பல்ல. அதே சமயம் இரண்டாவது கல்வி நிறுவனத்திற்கு நிர்வாக மற்றும் கடன், வழக்கு பாதிப்புகள் இருக்குமே தவிர முதலாவது நிறுவனம் அளவு கடும் பாதிப்புகளை தரக்கூடியதல்ல. எனவே முதலாவது கல்வி நிறுவனத்தை தவிர்ப்பது சிறப்பு. இரண்டாவது கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ய மனமில்லாவிட்டால் வேறு கல்வி நிறுவனத்தை ஆலோசிக்கலாம் என்று அறிவுரை கூறப்பட்டது. நண்பர் நீங்கள் கூறுவது உண்மையே. முதலாவது கல்வி நிறுவனம் கடும் கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்றது என்றார்.

மாணவர்கள் புதிதாக மலரக் காத்திருக்கும் மொட்டுக்களுக்கு ஒப்பானவர்கள். மொட்டுக்களை கட்டளையிட்டு மலர வைக்க இயலாது. மலர்கள் தங்களுக்கான நேரத்தில் தாமாக மலர்பவை. மனிதர்களும் அப்படித்தான் தமக்கான தருணங்களில் மலரக்கூடியவர்கள். எனவே மாணவர்களை மலர விடுங்கள். அவர்களை பெற்றோர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்காக கருக விட்டுவிடாதீர்கள்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English