எண்ணங்களை ஆளும் வண்ணங்கள்!

ஜோதிடம் கிரக கதிர் வீச்சுகளை ஆதாரமாகக் கொண்டது.  ஜோதி என்ற வார்த்தை இதைக் கூறும். கிரக கதிர் வீச்சுகளின் நிறங்கள் ஜீவ ராசிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராயும் கலையே ஜோதிடமாகும். உதாரணமாக அமைதிக்கு வெண்மையை குறிப்பிட்டால், ஆக்ரோசத்திற்கு சிவப்பை குறிப்பிடலாம். வெண்மை தியானத்தின் போது உடையாக அணிவது மிகுந்த பலன் தரும். சிவப்பு போட்டி பந்தயங்களின்போது பயன்படுத்த வெற்றி தரும். வர்ணங்கள் மன உணர்வுகளோடு தொடர்புடையவை என்பதால் இவற்றை தேவைக்குத் தக்கபடி பயன்படுத்துகிறார்கள். அனைத்து துறைகளிலும் நிறங்களின் தாக்கத்தை நீங்கள் இன்று காணலாம். உதாரணமாக Airtel ஏன் சிவப்பு நிறத்தை பயன்படுத்துகிறது? Oppo Mobile ஏன் பச்சை வண்ணத்தை பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் யோசித்ததுண்டா? வர்ணங்களை உளவியல் சிகிச்சையிலும் பயன்படுத்துகிறார்கள். இப்படி நிறங்களை பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சைக்கு Color Therapy அல்லது Chromotherapy என்று பெயர். ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு வர்ணத்தைக்கொண்டுள்ளன. மேற்சொன்ன வெண்மை சந்திரனுக்கு உரியது. சிவப்பு செவ்வாய்க்கு உரியது. ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகத்தின் தாக்கம் அதிகம் உள்ளதோ அந்த வர்ணத்தை ஜாதகர் அதிகம் பயன்படுத்திக்கொண்டிருப்பதை காணலாம். கிரகங்களின் தசா-புக்திக்கேற்ப இவை மாறும். அதனால்தான் ஒரு வர்ணத்தை நேசித்து ஆடையாக அணிந்த நாம் மற்றொரு சமயம் அதை “எப்படி இந்தக்கலரை நாம் அணிந்தோம்”  என்று கேட்டுக்கொள்வோம். ஜோதிடத்தில் இதற்குப் பதில் உண்டு. எண் கணிதப்படி ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது. அந்த கிரகத்தின் நிறம் அந்த நிறத்தை ஆளுமை செய்யும். எனவே ஜோதிட ரீதியாக வர்ணங்களை பயன்படுத்துவதோடு எண் கணித ரீதியாக நிறங்களை பயன்படுத்துவதே சரி என்றும் இன்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Feng Shui சாஸ்திரத்தில் வர்ணங்களின் பயன்பாடு மிக அதிகம். நிறங்களை பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கும் மித அடர்த்தி வர்ணங்கள்:

பொதுவாக கண்களை உறுத்தாத மிதமான அடர்த்திகொண்ட பளீரென்ற வர்ணங்கள் நமது நேர்மறை ஆற்றலை ஊக்கப்படுத்தி நம்மை புத்துணர்ச்சியோடு செயல்பட வைப்பவை. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்றவை இப்பிரிவில் வரும். இத்தகைய வர்ணங்களை வரவேற்பறையில் பயன்படுத்த சிறப்பாகப் பலனளிக்கும்.

நம்பிக்கையளிக்கும் குறை அடர்த்தி வர்ணங்கள்:

குறைவான அடர்த்திகொண்ட வர்ணங்கள் மேற்கூறியபடி நம்மை நேர்மறையான உணரச் செய்வதோடு இணைந்து செயல்படவும் தூண்டக்கூடியவையாகும். குறிப்பாக இளம் பச்சை நமது மனச்சோர்வை நீக்கி நம்பிக்கையோடு செயல்படுமாறு தூண்டக்கூடியது. இளம் நீலம், இளம் சிவப்பு ஆகியவற்றிக்கும் இத்தன்மை ஓரளவு உண்டு. நமது மன நிலையை மேம்படுத்த இவற்றை பயன்படுத்தலாம். வீட்டின் நுழைவாயில் முன் பகுதியிலமைந்த தோட்டத்தில்  இவ்வர்ணங்கள் உள்ள செடி, கொடி, மரங்கள் மற்றும் மலர்களை வளர்ப்பது, வீட்டிற்கு வருபவர்களை நம்பிக்கைகொள்ளச் செய்வதோடு, அவர்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றலை குறைத்துவிடும்.

மன அமைதி தரும் வர்ணங்கள்:

நீலம் (Blue) பச்சை, ஊதா (Purple) ஆகிய வர்ணங்கள் மன அமைதி தருபவை. அதிக மனப் போராட்டம் உள்ளவர்களை ஆற்றுப்படுத்த இவற்றை உளவியல் சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள். இவ்வர்ணங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிகமாக செயலற்ற அமைதியில் இருப்பது, சோர்வு, தனிமை உணர்வையும் ஏற்படுத்தும் என்பதால் தேவைகேற்ப பயன்படுத்துவதே சிறப்பு. உறங்கும் போது நமது உடலும் உள்ளமும் நிம்மதியை நாடும் என்பதால், படுக்கை அறையில் இத்தகைய வர்ணங்களை பயன்படுத்தினால் அமைதியையும் உறக்கத்தையும் தரும்.

அடர் வர்ணங்களின் குணங்கள்:

அடர்த்த வர்ணங்களை பொதுவாக தேவையின் பொருட்டு குறைவாக பயன்படுத்துவதே சிறப்பு. உதாரணமாக எங்கள் வீட்டில் Fridge ஐ Maroon வர்ணத்தில்தான் வாங்கினோம். இதை தவிர வேறு வர்ணத்தை Fridge க்கு எண்ணிப்பார்ப்பது சரியாக இல்லை. மேசை போன்றவை உறுதியானவையாக இருப்பது சிறப்பு. இவற்றிற்கு அடர் Brown தவிர வேறு வர்ணங்கள் சிறப்பாகத் தோன்றவில்லை. பொதுவாக அடர் வர்ணங்கள் உறுதி மற்றும் நெடுநாள் நீடிக்கக்கூடிய விஷயங்களை குறிக்கும். ஆனால் இவற்றின் அதிக பயன்பாடு துக்கத்தை தரக்கூடியது. கருப்பு, சாம்பல் ஆகியவையும் சோகத்தை தருவதில் முன்னிலை வகிக்கின்ற வர்ணங்களாகும். சிவப்பு, வெண்மை நிறம்கொண்டோர் ஆடையாக அணிவதில் இத்தகைய அடர் வர்ணங்களை பயன்படுத்துவது விரும்பப்படுகிறது. ஆனால் இவற்றின் பயன்பாட்டை வீட்டில் தேவைப்படும் இடங்களில் அளவோடு பயன்படுத்துவதுதான் சிறப்பு. அடர் வர்ணங்களில் அடர் பச்சை மட்டும் புத்துணர்ச்சியோடு ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளவும், ஆய்வுகளில் ஈடுபடவும் சிறப்பாகும்.  

செயல் ஊக்கத்திற்கு சிவப்பு:

சிவப்பு வர்ணத்திற்கு ஒரு சிறப்பான குணம் உண்டு. போட்டி, போராட்டம், விடா முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கக்கூடியது சிவப்பு. சோர்வாக உணரும் நபர்களிடம் சிவப்பு வர்ணத்தை பயன்படுத்த அறிவுறுதிய பிறகு அதன் பயனாக  அவர்களிடம் போராட்ட குணமும், விடா முயற்சியும் அறியப்பட்டது. பசியையும் தூண்டக்கூடியது சிவப்பு. ஆனால் இதன் அதிகப்படியான பயன்பாடு அமைதியற்ற மனநிலையை தூண்டக்கூடியது. எனவே சண்டை (War), விளையாட்டு, பந்தயங்கள் போன்ற தீவிர முயற்சிகள் தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரத்தில் மட்டும் சிவப்பு வர்ணத்தை பயன்படுத்துவது சிறப்பு. ஒரு வரியில் சொல்வதென்றால் நமது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குவது சிவப்பின் குணம். சிவப்பின் குறை அடர்த்திகொண்ட ஆராஞ்சு வர்ணத்தை சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.  

மஞ்சள் வர்ணத்தின் மகிமை:

மஞ்சள் நேர்மறை ஆற்றலை தூண்டக்கூடியது என்பதோடு அதிக அடர்த்திகொண்ட வர்ணங்களின் தாக்கத்தை குறைத்துவிடும் வல்லமை பெற்றது. உதாரணமாக முன்சொன்ன சிவப்பு வர்ணத்தின் தீவிர நிலையை மஞ்சள் சமப்படுதக்கூடியது. எனவே சிவப்புடன் மஞ்சளை இணைந்துப் பயன்படுத்தலாம். மஞ்சள் உடலை தூய்மை செய்வது. தமிழ்ப் பண்பாட்டில் நமது பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கும் வழக்கம் உள்ளது. ஆயுர் வேதத்தில் மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. Paralysis ஆல் பாதிக்கப்படவர்களின் நரம்பு மண்டலத்தை தூண்டி செயல்பட வைக்க இன்று மஞ்சள் வர்ணத்தை பயன்படுத்துகிறார்கள்.    

நீலத்தின் சிறப்பு:

நீலத்தை நமது உடலில் Endorphin ஹார்மோனை தூண்டி வலி நீக்கியாக பயன்படுத்தும் முயற்சிகளில் சில வெற்றிகளை மேலை நாடுகளில் அடைந்துள்ளனர். அடர் நீலத்தை (Indigo Blue) தோல் வறட்சி பாதிப்புகளை சரிசெய்ய பயன்படுத்துகிறார்கள்.

இந்திய வேத ஜோதிடத்தில் கிரகங்களும் வர்ணங்களும்:

சூரியன்: ஆரஞ்சு

சந்திரன்: வெண்மை

செவ்வாய் – சிவப்பு

புதன் – பச்சை

குரு – மஞ்சள், ஆகாய நீலம்

சுக்கிரன் – பளீர் வெண்மை, மின்னும் வர்ணங்கள்

சனி – நீலம், கருப்பு

ராகு-கேதுக்கள் – கருமை

ஜாதகமும் வர்ணங்களும்:

ராசிச் சக்கரத்தில் லக்னம், லக்னாதிபதி இவற்றோடு தொடர்புடைய கிரக வர்ணங்கள் ஜாதகரை ஈர்க்கும். ஜாதகத்தில் வலுப்பெற்ற கிரக வர்ணமும் ஜாதகரை ஈர்க்கும். தசா-புக்தி கிரகங்களின் வர்ணங்கள் ஜாதகரை கவர்ந்தாலும் அது தற்காலிகமானதே. அவயோகி கிரக வர்ணம் ஜாதகரை மிக அதிகமாக ஈர்க்கும். அது போலவே குறைந்த பாகை பெற்ற கிரக வர்ணமும் ஜாதகரை அதிகம் ஈர்க்கும். ஜாதகருக்கு அவயோகி கிரக வர்ணமும், குறைந்த பாகை பெற்ற கிரக வர்ணமும் சிரமங்களை கொடுக்கும். ஆனால் மன நிம்மதி தரும். மாறாக ஜாதகத்தில் வலுவாக நல்ல நிலை பெற்ற கிரக வர்ணத்தை பயன்படுத்த ஜாதகர் வாழ்வில் உயர்வார். அது லக்னம் அல்லது லக்னாதிபதியோடு தொடர்புடையதாக இருக்க மிகுந்த யோகத்தை செய்யும். நடை முறையில் அவயோகி கிரக வர்ணத்தையும், குறைந்த பாகை பெற்ற கிரக வர்ணங்களையே பொதுவாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

வர்க்கச் சக்கரங்களில் வர்ணங்களின் தாக்கம்:

வர்க்கச் சக்கரங்களில் அந்த வர்க்கம் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெற குறிப்பிட்ட வர்க்கச் சக்கரத்தில் வலுப்பெற்ற கிரக வர்ணத்தை தசா-புக்தியை அனுசரித்து பயன்படுத்துவது மிகுந்த பயன் தரும்.

நவரத்தினங்களும் நிறங்களும்:

ஜாதகத்தில் வலுக்குறைந்த கிரகத்தை தூண்டவும் எண்ணிய காரியங்களில் வெற்றி பெறவும் குறிப்பிட்ட வர்ணத்தை ஈர்த்துத் தரும் ரத்தினங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ரத்தினங்களை ஜாதக அடிப்படையில் தேர்வு செய்வதை விட, பிறந்த தேதியின் அடிப்படையில் தேர்வு செய்வதே சிறப்பு. மேலும் ஒரு விஷயத்தின் பலனை அடைய பயன்படுத்தும் ரத்தினம் மற்றொரு வகையில் பாதிப்பை தருவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். சரியான அளவில் இல்லாத ரத்தினங்களும், தவறாக அணியப்படும் ஒவ்வாத ரத்தினங்களும் ஜாதகரை வீழ்த்தும் என்பதால் தேர்ந்த அறிஞர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே  ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English