ஜோதிடத்தில் நல்லுணர்வு ஹார்மோன்கள்!

நமது மன நிலையோடு தொடர்புடையவை நமது உடலில் சுரக்கும் No suggestions. நமது மனம் மகிழும்போது ஒரு ஹார்மோனும், நாம் கதறும்போது ஒரு ஹார்மோனும், நாம் காதலுறும்போது ஒரு ஹார்மோனும், நாம் பக்தியில் திளைக்கும்போது ஒரு ஹார்மோனும் நமது உடலில் சுரக்கிறது. இத்தகைய ஹார்மோன்கள் நமது மனதின் தாளங்களுக்கேற்ப நமது உடலை  நாட்டியமாட வைக்கின்றன. குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு ஆச்சரியத்தை நாம் எல்லோரும் கண்டிருப்போம். உணவுண்ண இல்லத்தில் அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட மருத்துவரின் நகைச்சுவையான செயல்களோடு ஒன்றி சிரிக்கும் வேளையில் மருத்துவர் குழந்தையின் உடலில் ஊசியை செலுத்துவார். அது குழந்தைகளுக்கு வலித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதிகம் அழாமல் குழந்தைகள் அமைதி காப்பதை காணலாம். வலியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ளக் காரணம் அதன் மனநிலை மகிழ்வாக இருப்பதுதான். இது எதைக் குறிக்கிறது எனில் நாம் மகிழ்வான மனநிலையில் வாழும்போது நமக்கு வரும் சிரமங்களை எளிதாக கடந்து வந்து விடுகிறோம். காரணம் மகிழ்வான சூழ்நிலையில் நாம் நேர்மறையாக சிந்திக்கிறோம். மனம் மகிழ்வதால் நமது உடல் வலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பக்குவத்தை அடைகிறது. இதனால் நமது ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆயுள் கூடுகிறது.   

நான்கு வகை மகிழ்ச்சி ஹார்மோன்கள்.

1.DOPAMINE

நாம் மகிழ்ச்சியாக உணரும்போது நமது உடல் Dopamine எனும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கிறது. இதனால் நமது மன இறுக்கங்கள் மறைந்து மனம் மெலிதானதாக உணர்கிறோம். நாம் நேர்மறையாக சிந்திப்பதற்கு நாம் மகிழ்வாக உணர்வது மிக முக்கியம். நல்ல இசையை ரசிக்கும்போதும், நாம் ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்கும்போதும், கொண்டாட்டங்களின்போதும், நம்மை மேம்படுத்திக்கொள்ளும் செயல்களில் ஈடுபடும்போதும் இந்த Dopamine ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது. நாம் ஒருங்கிணைந்த மனதுடன் நமது செயலின் மீது கவனத்தை குவிக்கவும் நல்ல உறக்கத்திற்கும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.  

2. OXYTOCIN

மனதிற்கினிய நண்பர்கள், உறவுகள், நபர்களுடன் நாம் ஒருங்கிணைந்து இருக்கும்போதும், செல்லப் பிராணிகளுடன் விளையாடும்போதும், நாம் விருப்ப உறவுகளுக்கு பரிசளித்து அவர்கள் ஆனந்தத்தில் மூழ்குவதை காணும் போதும், காதலில், காமத்தில் நாம் மூழ்கும்போதும்  இந்த Oxytocin எனும் ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது. நாம் உணர்வுப் பூர்வமாக வாழ, நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள இந்த ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

3. SEROTONIN

சூரிய ஒளியை நமது உடல் பெறும்போதும், ஆரோக்கியமான உணவை சுவைக்கும்போதும், நமது மனதை ஆளும் யோகா, தியானம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போதும் இந்த Serotonin ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது. அனால் 90% Serotonin நாம் சுவையான உணவை உண்ணும்போதுதான் சுரக்கிறது. நமது வயிற்றின் செரிமான சக்தி சிறப்பாக இருந்தால்தான் நமது மன நிலையும் சிறப்பானதாக இருக்கும். வைட்டமின் D உடன் நேரடித் தொடர்புகொண்டது இந்த ஹார்மோன். விருந்தாளிகள் நமது வீட்டிற்கு வந்ததும் அவர்களை முதலில் உணவுண்ணச் செய்து பிறகே குடும்ப விஷயங்களை பேசுவது மரபு. காரணம் பசியோடு இருக்கும் மனம் கோபமாக இருக்கும். வயிறு நிறைந்தவுடன் மனம் நிதானமடைகிறது. இதனால் சண்டையிட வந்த உறவுகூட சமாதானமடையும். நமது வயிற்றின் செரிமான சக்தியை செம்மைப்படுத்த, மனநிலையை நிதானப்படுத்த இந்த ஹார்மோன் முக்கியப் பங்காற்றுகிறது.

4. ENDORPHINS

நம்மை வலிமையானவர்களாக நாம் உணரும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போதும், சண்டைக்காட்சிகளை பார்க்கும்போதும், வெற்றிக்களிப்பில் திளைக்கும்போதும் இந்த Endorphin ஹார்மோன் சுரக்கிறது. வலிமையில் நமது வலிகளை வெல்கிறோம் என்பதே உண்மை. உடல் வலிகளை மட்டுமல்ல மன வலிகளையும் இந்த Endorphin போக்கிவிடுகிறது. இதனால் உடலின் தாங்கு திறன் அதிகரிக்கிறது. 

ஜோதிடத்தில் நல்லுணர்வு ஹார்மோன்கள்.

ஜோதிடத்தில் சுரப்பி காரகர் என சுக்கிரன் அழைக்கப்படுகிறார். நமது உடலில் அணைந்து ஹார்மோன்களும் சிறப்பாக சுரக்க முதலில் சுரப்பி காரகர் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருப்பது அவசியம். மேற்சொன்ன 4 வகை ஹார்மோன்களும் மனதோடு தொடர்புடையவை என்பதால் இவற்றின் இயக்கத்தில் மனோகாரகர் சந்திரன் முக்கிய பங்கு வகிக்கிறார். மனம் பாதிக்கப்பட உடலும் பாதிக்கும். மன அழுத்தங்கள் மூளையிலும் இதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. Dopamine ஹார்மோன் போதுமான அளவு சுரக்கையில் மன அழுத்தம் நீங்குகிறது. தலையையும், இதய இயக்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய காரக கிரகம் சூரியன் ஆவார். எனவே நமது உடலில் Dopamine சிறப்பாக சுரக்க வேண்டுமென்றால் நமது ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவர் நிலையும் சிறப்பாக அமைந்திருப்பது அவசியம். குறிப்பாக தலையை குறிக்கும் மேஷமும், லக்னமும் ஒருவரது ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களுடன் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். லக்னம், லக்னாதிபதி பாதிக்கப்படாமல் இருப்பின் இந்த ஹார்மோன் நன்கு சுரக்கும். லக்னத்தில் திக்பலத்தில் புதனும் குருவும் சிறப்பாக அமைவது நமது உடலில் இந்த ஹார்மோன் மிகச் சிறப்பாக சுரக்க வழி வகுக்கும்.

ஜோதிடத்தில் காதலின் காரக கிரகம் புதன் ஆவார். சுக்கிரன் புதனோடு இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   ஜோதிடத்தில் தொடு உணர்வின் காரக கிரகம் சனி ஆவார்.  எனவே Oxytocin ஹார்மோனை  ஜோதிடத்தில் புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஆளுமை செய்கின்றன. பாவகத்தில் 3, 7, 11 ஆகிய பாவகங்களும், ராசிகளில் வாயு ராசிகளான மிதுனம், துலாம், கும்பமும் Oxytocin ஹார்மோனுடன் தொடர்புடையவை. ஏனெனில் நமது காதல் மற்றும் காம எண்ணங்கள் ஜாதகத்தில் இவ்விடங்களில்தான் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

ஜோதிடத்தில் மனதை ஆளும் சந்திரனே உணவின் காரக கிரகமாக குறிப்பிடப்படுகிறார். ஆனால்  வயிற்றை  ஆளும் கிரகமாகவும் உணவை செரிக்க வைத்து சக்தியாக மாற்றும் கிரகமாகவும் சூரியன் குறிக்கப்படுகிறார். சிம்ம ராசி வயிற்றை குறிக்கும் கால புருஷனின் 5 ஆவது ராசியாகும்.  சூரியனே வைட்டமின் D ன் காரகரும் கூட. குரு கல்லீரலை ஆளும் கிரகமாகிறார். உண்ணும் உணவு நன்கு செரிக்க வேண்டும் என்றால் கல்லீரல் சிறப்பாக வேலை செய்ய வேண்டும். நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் ஜாதகத்தில்  நமது உடலில் Serotonin ஹார்மோனை கட்டுப்படுத்தும் ராசிகளாகும். பாவகங்களில் லக்னமும் 5, 9 ஆகிய பாவகங்களும் Serotonin செயல்பாட்டை சுட்டிக்காட்டுபவையாகும். நமது கவலைகளும், பயங்களும் நமது உடலில் பதிவாகுமிடம் வயிறாகும். அதனால்தான் நாம் ஒரு விஷயத்தில் அதிகமாக பயப்படும்போது வயிறு அதிகமான அமிலத்தை சுரக்கிறது. அதிக அமிலச் சுரப்பு வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும். மனதை கவலையால் நிரப்பாதீர்கள். மனப்புண் உடற்புண். கோபம் நமது கல்லீரலில் பதிவாவதால் அதிக கோபம் நமது கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும். ஜாதகத்தில் சிம்ம ராசியும், சூரியனும், குருவும் நன்கு அமையப் பெற்றவர்கள் தேவையின்றி அதிகமாக கோபப்பட மாட்டார்கள். அது அடுத்தவர்களை பாதிப்பதைவிட தன்னையே முதலில் பாதிக்கும். இதையே வள்ளுவர்

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்” என்கிறார்.  

நமது உடலின் தாங்கு திறனை அதிகரிக்கும் காரணியாகவும் வலி நிவாரணியாகவும்  Endorphin ஹார்மோன் செயல்படுகிறது.  உடலின் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்யப்படும் நடைப்பயிற்சி, உடலை வலிமையூட்டும் பயிற்சிகளும் இந்த ஹார்மோனை அதிகம் சுரக்க வைக்கின்றன. சூரிய ஒளியும் Endorphin ஹார்மோன் சிறப்பாக சுரக்க முக்கியம். பொதுவாக சிறந்த உடல் வலுக்கொண்டவர்களுக்கு எத்தகைய எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் மனோபாவம் இயல்பாகவே அமைந்திருக்கும். உடல் வலு மன வலுவையும் தருவதுதான் அதற்குக் காரணம்.  உடல் ஆரோக்கியம் நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. நல்ல நகைச்சுவைக்கு சிரிக்கும்போதும், சண்டை மற்றும் நகைச்சுவை திரைப்படங்களை பார்க்கும்போதும் உடற் பயிற்சியின்போதும், உடலுறவின்போதும்  Endorphin அதிகம் சுரப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள். நல்ல வாசனையை நுகரும்போதும் இந்த ஹார்மோன் அதிகம் தூண்டப்படுகிறது. ஜோதிடத்தில் உடற்பயிற்சியை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். உடலின் தாங்கு திறனை குறிக்கும் கிரகம் சூரியனாகும். நகைச்சுவையை குறிக்கும் கிரகம் புதனாகும். எனவே ஜோதிடத்தில் செவ்வாயும், சூரியனும், புதனும் Endorphin ஹார்மோனின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றன. பாவகங்களில் லக்னமும், துணிச்சல் பாவகம், நுகர்ச்சி பாவகம் எனும் மூன்றாமிடமும், 5 ஆமிடமும் இதன் காரக பாவகங்களாகும். ராசிகளில் மேஷமும், மிதுனமும், சிம்மமும் இதன் காரக ராசிகளாகும். அதிக நேரம் உடல் அசைவற்று ஓரிடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் Sedentary எனும் பாதிப்பை எதிர்கொள்வார்கள். அத்தகையோருக்கு இந்த ஹார்மோன் மிக குறைவாக சுரக்கும். அத்தகையோர் Endorphin ஹார்மோன் சுரப்பை தூண்டும் வகையில் தங்கள் உடல் இயக்கத்தை கூட்டிக்கொள்வதாலும், இந்த ஹார்மோன் சுரப்பை தூண்டும் உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் இதன் செயல்பாட்டை அதிகரிக்கலாம். வலி நிவாரணியாக இந்த ஹார்மோன் செயல்படுவதாலும் உடலுறவின்போது இந்த ஹார்மோன் சுரப்பதாலும் சிலருக்கு போதுமான உடலுறவின் மூலம் உடல் வலிகளை குறைக்கும் ஆலோசனைகளை சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நமது உடலில் பலவகை ஹார்மோன்கள் இருந்தாலும் மேற்கண்ட நான்கு வகை ஹார்மோன்களே  நமது மன நலத்துடன் நேரடியாக தொடர்புகொள்பவை ஆகும். எனவே இவற்றை மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்கிறார்கள்.  இந்த ஹார்மோன்கள் ஜாதகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி சில உதாரண ஜாதகங்களுடன் இப்பதிவின் தொடர்ச்சியாக மற்றொரு பதிவில் ஆராய்வோம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English