ஆயுள்

வாழ்க்கை வாழ்வதற்கே. அது முடியும்போது முடியட்டும் அதுவரை வாழ்வோம். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம் என்று எண்ணுவோர் புத்திசாலிகள். காரணம், எது நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதை தெரிந்துகொண்டு கவலைப்படுவது வீண் வேலை. ஆயுள் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால் வாழும் காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்வது நமது கையில் உள்ளது. ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு ஆயுள் காலம் உண்டு. ஏன் நாம் வாழும் இந்த பிரபஞ்சத்திற்கே ஒரு ஆயுட்காலம் உண்டு. எனவே இயற்கையோடு இணைந்து செல்வது நமக்கு நன்று. இயற்கை ஒவ்வொரு பருவத்திற்கும் தன்னை புதுப்பித்துக்கொள்வது போல ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்திற்குப் பின் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது, புதுப்பிறவி எடுக்கிறது என்று கீதை கூறுகிறது. ஜனனமும் மரணமும் பிரம்ம ரகசியம் என்பர். அதனை எளிதில் யாராலும் கணித்துவிட இயலாது. கண்டத்தை சொல்லும் ஜோதிட வல்லுனர்களும் மரண காலத்தை கூறுவதில் தவறியுள்ளனர். ஜோதிடத்தில் மாரக, அஷ்டம பாவகங்கள், சனி, மாந்தி இவற்றொரு தொடர்புடைய தசா-புக்திகள் நடந்து உரிய கோட்சாரம் வரும் வேளையில் மரணம் ஏற்படும். துல்லியமாக மரணத்தை தெரிந்த மனிதன் பெரும்பாலும் ஞான நிலையை அடைந்துவிடுவான். காரணம் அதில் பெருமைப்பட ஏதுமில்லை. இப்பதிவு ஆயுள் பற்றியதே. ஆனால் ஆயுளை எப்படி கணிப்பது என்பது பற்றியது அல்ல. திருமணத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு இளைஞனின் ஆயுள் பற்றி பெண் வீட்டார் சார்பாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த ஆய்வுத் தகவல்களே இன்றைய பதிவாக வருகிறது.

இளைஞனின் ஜாதகம் கீழே.

ஜோதிடத்தில் ஆயுள்.

ஆயுள் பற்றி அறிய லக்னம், லக்னாதிபதி, ஆயுள் ஸ்தானம், அதன் அதிபதி, ஆயுள் காரகர் சனி ஆகியோர் நிலை ஆராயப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட கிரகங்களும் பாவகங்களும்   ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து அவற்றிற்கு குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் லக்ன சுபர்களின் தொடர்பு இருப்பின் பொதுவாக நல்ல ஆயுள் அமையும். மாறாக ஓரிரு நிலைகள்  மட்டும் சிறப்பாக அமைந்து அவர்களுக்கு சுபர் தொடர்பும், பாவிகள் தொடர்பும் கலந்து இருப்பின் மத்திம ஆயுள் அமையும். மேற்சொன்ன கிரகங்களும் பாவகங்களுக்கும் ஜாதகத்தில் வலுவிழந்து  பாவிகள் தொடர்பும் ஏற்பட்டிருந்தால் அத்தகைய ஜாதகர்களுக்கே அற்ப ஆயுள் அமையும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று தசா-புக்திகள் நிலை. நீண்ட ஆயுள் உள்ளோருக்கு மாரக தசா-புக்திகள் நெடிய வாழ்நாட்களுக்குப் பிறகே வரும். அற்ப ஆயுள் உள்ளோருக்கு மாரக தசா-புக்திகள் குறைந்த வாழ்நாட்களிலேயே வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட இளைஞனின் ஜாதகத்தில் சூரியன், புதனைத் தவிர பிற அமைப்புகளான லக்னாதிபதி, சனி, 8  ஆமதிபதி, 8 ஆமிடம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதிலிருந்து இது அற்ப ஆயுள் ஜாதகம் என அனுமானிக்கலாம். இவருக்கு தசா-புக்திகளும் கோட்சாரமும் அனுமதித்தால் எப்போது வேண்டுமானாலும் ஆயுள் முடியும்.

ஆயுளும் தசா-புக்தியும்.

ஜாதகர் சனி தசையில் குரு புக்தியில் உள்ளார். சனி தனது நீச வீட்டில் இருந்து தசை நடத்தும் நிலையில் புக்திநாதர் குருவும் மூன்றில் மறைந்து கேதுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். தசா-புக்தி கிரகங்கள் மாரக பாவகங்களுடன் தொடர்பாகி கோட்சாரம் அனுமதித்தால் மாரகம் ஏற்படும். இந்நிலையில் கோட்சாரத்தில் சனி மீது ராகு நிற்கிறார். 8 ஆமதிபதி சந்திரன் மீது கேது நிற்கிறார். கோட்சார சனி ஜனன கேது மீது நிற்கிறார். கோட்சாரத்தில் ஆட்சி பெற்ற குருவை நோக்கி கோட்சார ராகு வருகிறார். தசா-புக்திகளும் சாதகமில்லை. கோட்சாரமும் சாதகமில்லா ஜாதகருக்கு உயிராபத்து உள்ளதையே ஜாதகம் சுட்டிக் காட்டுகிறது.

கோட்சாரம் கூறும் உண்மைகள்.

கோட்சார சந்திரன் ஜாதகரின் கடந்த கால மற்றும் தற்போதைய நிலையை கூறும். கோட்சார லக்னம் ஜாதகனுக்கு நடக்கும் சம்பவங்களை கூறும். கோட்சார சந்திரன் 5 ஆவது பாவகத்தில் ஜனன சனியையும் கோட்சார ராகுவையும் கடந்து 6 ஆமிடமான ரிஷபத்தில் நிற்கிறார். ரிஷபத்தில் ஜனன காலத்தில் எந்த கிரகமும் இல்லை என்பதால் தற்போது அவர் எந்த சம்பவங்களையும் எதிர்கொள்ளவில்லை. எனவே அவர் கடந்த சம்பவங்களை காண 5 ஆமிடமான மேஷத்தில் இருந்த போது அனுபவித்த சம்பவங்களை மேஷத்தில் கோட்சார சந்திரன் இருப்பதாக எடுத்துக்கொண்டு ஆராய்வோம். மேஷத்தில் ஆயுள் காரகர் சனி நிற்கிறார். அவர் மீது கோட்சார ராகு நிற்கிறார். மேஷத்தில் அமைந்த ஜனன சனியையும் கோட்சார ராகுவையும், கும்பத்தில் 8 ஆமிட நீச செவ்வாயின்  8 ஆவது பார்வையை பெற்ற  ஜனன கேது, வக்கிர குருவோடு இணைந்த கோட்சார சனி மூன்றாவது பார்வையாக பார்த்துள்ளார். அத்தோடு மேஷத்தை 11 ல் நின்ற சந்திரனும் மாந்தியும் நேர் பார்வை பார்த்துள்ளனர். இது ஜாதகன் அடைந்த பாதிப்புகளை தெரிவிக்கிறது. ஜாதகன் விபரீதமான பாதிப்புகளை அடைந்திருக்க வேண்டும்.

ஜாதகர் உயிருடன் உள்ளாரா?

ஜனன கால & கோட்சார மாந்தியின் நிலை மூலமே ஒரு ஜாதகர் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதை கூற இயலும். மேஷத்தை கடந்த கோட்சார சந்திரன் ஜனன கால துலா ராசி மாந்தியின் நேர் பார்வையை கடந்து வந்துள்ளார் என்பதை கவனிக்க. இது ஜாதகர் அனுபவித்த மாரகத்தை குறிப்பிடுகிறது. இதை கோட்சார கிரக நிலைகளின் மூலம் உறுதி செய்யலாம். கோட்சாரத்தில் மீனத்தில் ஆட்சி பெற்ற குரு 17.23  பாகையில் உள்ளார். கோட்சார குருவை கோட்சாரத்தில் கன்னியில் இருந்து நேர் பார்வை பார்க்கும் மாந்தி 20.36 பாகையில் உள்ளார். அதாவது கோட்சார மாந்தியின் பாகையை கோட்சார குரு கடந்துள்ளார். இது ஜாதகர் சந்தித்த மாரகத்தை குறிப்பிடுகிறது. கோட்சார லக்னம் 23.46 பாகையில் கோட்சார மாந்தியை கடந்து அமைந்துள்ளது. இது ஜாதகருக்கு ஏற்பட்ட உயிரிழப்பை உறுதி செய்கிறது. கோட்சார மாந்தியும் கோட்சார லக்னமும் இணைந்துள்ளதால் ஜாதகர் சமீபத்தில்தான்  உயிரிழந்துள்ளார் என்பது தெரிகிறது.  

மேற்சொன்னவற்றை ஆராய்ந்து இந்த இளைஞர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் கடும்  கண்டத்தை இன்னும் கடந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என கூறினேன். எதிர் முனையில் ஜாதகத்தை அனுப்பி விளக்கம் கேட்டவர் இந்த இளஞர் சமீபத்தில்தான் உயிரிழந்தார் என்று கூறினார். ஜாதகரின் மரணத்திற்கான நிலைகளை ஜோதிட ரீதியாக புரிந்துகொள்ளவே தான் அனுப்பியதாக தெரிவித்தார்.  

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி:8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English