தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த காலம் ஒன்று இருந்தது. பிறகு தொழில்களின் அடிப்படையில் சமூக கட்டமைப்புகள் ஜாதீய ரீதியாக ஏற்பட்ட பிறகு, தங்களது தொழில் மதிப்புடையதா? அல்லது திறமையானதா? என்ற கேள்வி எழுந்தபோது, அங்கு திறமை காணாமல் போய் மதிப்பும், கௌரவமும் முன்னிலையாயின. இயல்பான திறமை பெற்றவர்கள் விலகியபிறகு சில தொழில்கள் எளியோர் மீது வலியோர்களால் திணிக்கப்பட்டது. வலியோரை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தத்தால் திணிக்கப்பட்ட தொழில்களை தங்களது விதிப்பயன் என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் இன்று இல்லை. இன்று அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால் தனது முன்னோர்களின் தொழிலை தொடர்வது மறுப்பதும் தனி ஒருவரின் விருப்பம். ஆனால் ஒரு தந்தை ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் அவரது மகன் அதை நிராகரித்து தனியாக தனது விருப்பச் செயல்களில் ஈடுபடுவது மனத்திற்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால் பொருளாதார ரீதியாக தந்தை போட்டு வைத்துள்ள சாலையில் வாகனத்தை ஓட்டுவது மட்டுமே நமது வேலை என்று அனைத்து மகன்களும் முன் வருவதில்லை. பிடிக்காத தந்தையின் தொழிலை வேண்டா வெறுப்பாக ஏற்று நடத்தி தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை வீழ்த்திவிடும் மகன்களை அம்பானி குடும்பத்திலேயே இன்று நாம் காண்கிறோம். முகேஷ் அம்பானி தந்தையின் தொழிலை வளர்த்தெடுக்கிறார். அவரது தம்பி அணில் அம்பானி தந்தையின் சொத்தை தவறான தொழில்களால் இழந்தது மட்டுமின்றி, ஒரு நிதி மோசடிப் பேர்வழி என்று அரசு முத்திரை குத்தப்பட்டுவிட்டார். இது போன்ற நிலையில் யார் தந்தையின் தொழிலை செய்யலாம். யாருக்கு தந்தையின் தொழில் ஒத்துவராது என்று ஜோதிட ரீதியாக ஆராய்வதே நமது இன்றைய பதிவின் நோக்கம்.

துலாம் லக்னம் வியாபார லக்னம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது. பத்தில் உச்ச கிரகம் குரு இருப்பதால் மதிப்பாக தொழில் செய்ய ஜாதகர் விரும்புவார். ஆனால் 1௦ ஆமிட குரு வேலையை குறிப்பிடும் அதிபதியாவதால் தொழில் செய்யுமிடத்தில் ஒரு பணியாள் போலவும் செயல்பட வேண்டியிருக்கும். பத்தாமிடத்துடன் ராகு-கேதுக்கள் தொடர்பாவதால் ராகு-கேதுக்கள் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டாலன்றி ஜாதகர் தொழில் கடனால் துன்புறுவது உறுதி. ஏனெனில் கடனை குறிப்பிடும் 6 ஆமதிபதி குரு, கடனின் காரக கிரகம் கேதுவுடன் 1௦ ல் இணைவதுதான் காரணம். எப்படி தொழில் கடன் ஏற்படும் என்றால் மனோ காரகர் சந்திரன் மிதுனத்தில் நிற்பதால் மனதில் சுதந்திர மனப்பான்மை மிகுந்திருக்கும். தனுசு சனி பார்வை சந்திரனுக்கு ஏற்படுவது தொழில் ஆர்வத்துடன் சோம்பலையும் வழங்கும். நிர்வாகத்தில் ஒருவர் ஈடுபட முக்கிய காரணியான ஆளுமைத் தன்மையை சந்திரனை பார்க்கும் சனி போக்கி அடங்கிப்போகும் மனநிலையை ஏற்படுத்திவிடுவார். இதனால் நிர்வாகிக்குரிய ஆளுமையன்றி, சோம்பலுடன், சுதந்திர மனப்பான்மையுடன் செய்யப்படும் தொழில் ஜாதகரை வீழ்த்தி கடனாளியாக்கும். சந்திரனுக்கு மட்டுமல்ல ஆளுமை கிரகம் சூரியனுக்கும் சனியின் 1௦ ஆம் பார்வை விழுவதால் குறிப்பாக தொழில் விஷயத்தில் ஜாதகர் ஆளுமை குறைந்து,  விட்டுத்தரும் மனப்பான்மை உடையவராக இருப்பார். லக்னாதிபதி சுக்கிரன் தந்தையை குறிக்கும் 9 ஆமதிபதி புதனுடனும் தந்தையின் காரகர் சூரியனுடனும் இணைந்துள்ளதால் ஜாதகர் தந்தையின் தொழிலை செய்ய விருப்பம் உடையவராக இருப்பார். ஆனால் லக்ன பாதகாதிபதி சூரியன் களத்திர காரகர் சுக்கிரனை அஸ்தங்கம் செய்வதால் ஜாதகரது மனைவி ஜாதகர் தந்தையின் தொழிலை செய்வதை விரும்ப மாட்டார். களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் 8 ல் மறைவது இதை உறுதி செய்கிறது.

தொழிலுக்கான வர்க்கச் சக்கரம் தசாம்சத்தில் லக்னம் வர்கோத்தமம் பெற்று, லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்றது சிறப்பு. தசாம்சத்தில் பத்தாமிடமும் அதன் அதிபதியும், ஜீவன காரகர் சனியின் நிலையும் முக்கியமாக ஆராயப்பட வேண்டும். தசாம்சத்தில் 1௦ ஆமிடத்தை அதன் அதிபதி சனி 8, 11 ஆமதிபதி குருவுடன் இணைந்து சிம்மத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு. இவருக்கு தொழிலில் சங்கடங்கள் வருமா? என்றால் சனி 8 ஆபதிபதி குருவுடன்  இணைந்ததால் அவமானங்களும், லாபாதிபதி குருவுடன் இணைந்ததால் லாபங்களும் உண்டு. புத்திர காரகர் குருவுடன், தந்தையை குறிக்கும் சூரியன் இணைவு தந்தை தனது கடுமையான உழைப்பால் உருவாக்கிய நிறுவனத்தை மகனுக்கு கொடுக்கும் அமைப்பாகும். குருவுடன் பரிவர்த்தனைக்கு முன் ராகுவுடன் சூரியன் இணைந்திருந்ததால் கடுமையான சூழலில் கஷ்டப்பட்ட தந்தை இடம் மாறி சிம்ம ராசியை குறிக்கும் தலைநகருக்கு வந்து சனி குறிப்பிடும் உண்மை, உழைப்பு, நேர்மை மூலம் உண்மை முன்னுக்கு வந்தவராக இருப்பார். பரிவர்த்தனை குருவுடன் ஏற்படுவதால் மகன் தந்தையின் தொழிலுக்கு பொறுபேற்க வந்தவுடன்  மகனுக்கு தொழிலில் அவமானங்களும் பாதிப்புகளும் ஏற்படும். ஏனெனில் பரிவர்த்தனை மூலம் குரு ராகுவுடன் இணைவதும், துலாத்தில் குரு சாரத்தில் விசாகம்-1 ல் நிற்கும் லக்னாதிபதி சுக்கிரன் நிற்பதுவுமே காரணமாகும்.   

அதே சமயம் தனது சிரமங்களை மகனுடன் ஒப்படைத்துவிட்டு தந்தை விலகிவிடுவார். இதை மகன் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனாலும் மகனை தந்தை கைவிட மாட்டார். ஆனால் மகன் தந்தையை இதற்காக குறைகூறிக்கொண்டே இருப்பார். பரிவர்த்தனையாகி சனியுடன் சூரியன் இணைவு தந்தையும் மகனும் தொழிலில் இணைந்து செயல்படுவதை குறிப்பிட்டாலும் சூரியன், சனி ஆகிய இரு எதிரி கிரகங்கள் இணைவு தொழிலில் இருவருக்கும்  மன ஒற்றுமையை ஏற்படுத்தாது. கடுமையான தொழிலை தன்னிடம் ஒப்படைத்துவிட்டதாக மகன் தந்தையிடம் சண்டையிடுவார். ஆனால் தொழிலுக்காக ஜாதகர் தனது தந்தையை நம்பித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சூரின் தனது ஆட்சி வீட்டில் மூலத் திரிகோண வலுவுடன் உள்ளார். நல்ல பொறியியல் கல்வி பெற்ற ஜாதகர் தனது தந்தையின் நிறுவனத்தில் தந்தையின் கீழ் பணிபுரிகிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு துலாச் சுக்கிரனுக்கு பாதகத்தில், சிம்மத்தில் சூரியன் வந்தமர்வதால் ஜாதகரின் மனைவி ஒரு பணியாளாக மாமனாரிடம் தனது கணவர் பணிபுரிவதை விரும்ப மாட்டார். ஜாதகருக்கு சுய தொழில் உள்ளது என்பதை கூறித்தான் திருமணம் செய்திருக்க வேண்டும். சூரியன் – சனி இணைவு கடுமையான அல்லது சரியான தரத்திலல்லாத தொழிலை ஜாதகரது தந்தையும் ஜாதகரும் செய்வதை குறிக்கிறது. பொறியியல் பட்டம் பெற்ற தனது கணவர் தரமற்ற தந்தையின் தொழிலை செய்வதால் மனைவி பாதிக்கப்படுகிறார். இதனால் மாமனாரை விட்டு விலகி ஜாதகர் தனக்கான ஒரு அடையாளத்தை பணியிலோ அல்லது தொழிலிலோ உருவாக்கிக்கொண்டால் மட்டுமே மனைவி ஜாதகரை மதிப்பார்.

சூரியன்+சனி இணைந்து 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் தந்தையும் மகனும் தொழிலில் இணைந்து செயல்பட வைக்கிறது. சிம்மத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் சூரியன் சனியை அஸ்தங்கப்படுத்துவதால் தந்தையை விட்டு ஜாதகர் விலக இயலாத சூழல் உள்ளது. ஜாதகருக்கு சனி தசையும் தற்போது நடப்பதால் ஒரு பணியாளாக தந்தையின் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இதனால் ஜாதகருக்கு வருவாயை தந்தை உருவாக்கித் தந்துவிடுகிறார். ஆனால் பிரிந்து சென்றுவிடுவதாகக் கூறும் மனைவியை சமாளிக்க இயலாமல் ஜாதகர் திண்டாடுகிறார். ராசிச் சக்கரத்தில் 7 ஆமதிபதியும், சுக்கினும் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியின் பேச்சை கேட்காத நிலையில் மனைவி ஜாதகரை விட்டு பிரிந்து சென்றுவிடும் அமைப்பு உள்ளது. இத்தகைய ஜாதக அமைப்புடைய ஜாதகர்கள் தந்தையின் தொழிலை தொடரக்கூடாது. தந்தை தொழிலில் இருந்து ஓய்வு பெறக்கூடிய நிலையில் சில காலம் அனுபவத்துக்காக இணைந்து செயல்பட்டு பிறகு பொறுப்பை ஏற்கலாம். நீண்ட காலம் இணைந்து செயல்பட்டால் கசப்புகளும், வருத்தங்களும் ஏற்படுவது உறுதி. 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English