பெண்

பெண்

இன்றைய காலத்தில் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆச்சார்ய கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 
இதில் குரு தன, குடும்ப காரகன் என்றால் அதை வளமையாக அனுபவிக்க சுக்கிரனே காரணமாகிரார். குரு வலுவாக இல்லாதிருந்து சுக்கிரன் வலுவாக அமைந்துவிட்டால் கூட அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.  பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பத்தில் மகாலகஷ்மி வாசம் செய்கிறாள். பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வம்சத்தில் அதற்கு காரணமானவர்களை சுக்கிரன் தண்டிக்கிறார். இதை ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை கண்டு அறியலாம்.


“எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லையோஎங்கே பெண்மைக்கு மதிப்பில்லையோஎங்கே பெண்கள் வஞ்சிக்கப்படுகிரார்களோஅது மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாகும்”
என நமது நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன.
பெண் மனித வாழ்வின் இன்றியமையாத சக்தி.
சக்தி இல்லையேல் சிவமில்லை.
பெண் இல்லாத வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்குச்சமம்.
இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தற்கொலை செய்துகொல்பவர்களை தினசரிகளில் படிக்க முடிகிறது.
இது போன்ற நிலைக்கு 80 களில் துவங்கி 90களில் புற்றீசல்களாக உருவெடுத்த பாலினத்தை அறியும் மையங்களும் தவறான மருதுவர்களுமே காரணம். அதை நாடிச்சென்று தங்கள் பெண் செல்வங்களை அழித்தவர்களின் சந்ததியினரே இன்று பெரும்பாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
பெண்களை துன்புறுத்தினால் அல்லது அழித்தால் அவர்களது சந்ததியினருக்கு பெண் வகையில் குடும்ப சந்தோஷங்களோ பெண் வாரிசுகளோ இல்லாததை அல்லது மிகத்தாமதமாக அமைவதை காண முடிகிறது. ஒருவர் பெண்களுக்கு இழைக்கும் தீங்குகள் அவரை மட்டுமின்றி அவரது வம்சத்தையும் கடுமையாகவே பாதிக்கின்றன.
பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேறும் என்பது மிகச்சரியான அனுபவ மொழியாகும்.
ஒருவர் அவருக்கு கேடு செய்யும் செயல்களை செய்யக்கூடாது என்பதுடன் அவரது சந்ததியினருக்கு செல்வங்களை சேர்த்து வைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அவரது சந்ததியினருக்கு பாவங்களை தேடிவைதுவிட்டு செல்லக்கூடாது.
இது வெறும் பயமுறுத்தல் அல்ல.
பெண்களுக்கு பாதகம் செய்தவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்களது ஜாதகங்களை பெற்று ஆய்வு செய்து பாருங்கள். சுக்கிரன் எப்படி அமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். நான் சொல்வதன் உண்மை உரைக்கும்.

பெண்களை வஞ்சிக்க துணை நின்றவர்கள், மருத்துவர்கள் அதை சார்ந்தவர்கள், கற்புடைய மங்கையரைப்பற்றி பழி சொன்னவர்கள் போன்றவர்களையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.

இது போன்ற செயல்களை செய்தவரின் சந்ததியினர் இராமேஸ்வரத்தில் மூன்றுமுறை தில ஹோமம் செய்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.
வீட்டுப்பெண்களை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி எடுப்பதில் அணுவளவும் பயனில்லை என்பதை உணருங்கள்.

முக்கியமாக தொடர்புடையவர்களை மட்டுமின்றி அவர்களின் சந்ததியினரையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.  

மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் குரு உச்சமாகி வக்கிரமான நிலையில் இருக்கிறார். ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமானால் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும். இவ்விதிப்படி குடும்ப பாவமான 2 க்கு விரயத்தில் அமைந்த குரு திசையில் ராகு புக்தியில் ஜாதகி கணவரை இழந்தார். ராகு கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கு சுகஸ்தானம் 1௦ உடனும், 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான 5 உடனும் தொடர்புகொண்டுள்ளது. (7 ஆமிடம் சர ராசியாகியதால் 7 க்கு 11 ஆன விருச்சிகம் பாதக ஸ்தானம் ஆகும்).   
கணவரை இழந்தபின் மருமகளை மாமனாரே அடைய எண்ணினார். இதற்கு தந்தை மற்றும் மாமனாரை குறிக்கும் சூரியன் காம களத்திர ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்ததே காரணமாகும். ஜாதகி கணவர் குடும்பத்தை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.
சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகமாகி அது தொடர்புகள் ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்து லக்னத்தை பார்த்ததால் ஜாதகிக்கு அரசுப்பணியையும் முன்னமே கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற குரு ஐந்தாமிடத்தை பார்த்ததாலும் ஐந்தாமதிபதி செவ்வாய் 5 க்கு விரயத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டதாலும் கணவர் வகை தொடர்புகளின் இந்த செயல் இவர்களது வம்சத்தை பாதித்தது.
எப்படி எனில்.ஜாதகியின் மகன் வேற்று ஜாதியில் மணமுடித்து தனது குல மரபுகளை விட்டு விலகிவிட்டார். எனினும் ஜீவன ரீதியாக கடினமான சூழ்நிலையிலேயே உள்ளார். ஜாதகியின் மகள் வேற்று குலத்தை சார்ந்தவரை காதலித்து மணமுடிக்க தயாராக உள்ளார்.
ஜாதகத்தில் 5, 9 மற்றும் அதன் பாவாதிபதிகளும் குருவும் கெட்டுவிட்டால் ஒருவர் தனது குலத்தை விட்டு விலகுகிறார் அல்லது தனது குல மரபுகளுக்கு மாறாக நடக்கிறார்.
கீழே வருவது ஒரு ஆணின் ஜாதகம் 

கன்னி லக்னத்திற்கு 7 ல் விரயாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமும் ஆன சூரியன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து 6 ஆமதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். தனம் மற்றும் தந்தையை குறிக்கும் 2 , ஒன்பதாம் பாவாதிபதியான சுக்கிரன் விரயாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுடன் இணைந்து குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய் தனது கடும் பகைவனும் 5, 6 ஆம் பாவாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார்.
இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகளும் பாவாதிபதிக்களுமான குருவும் சனியும் வக்கிரமாகி தங்களது இயல்பை இழந்த நிலையில் மேற்கண்ட மூவரையும் பார்வை செய்கின்றனர்.
ஜீவன காரகன் சனியும் தன காரகன் குருவும் வக்கிரகமாகி தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் நிற்பதும் லக்னாதிபதி புதன் ஆறாமதிபதி சனியுடன் பரிவர்த்தனை ஆகி 6 ல் நின்றதும் ஜீவனம் மற்றும் ஆரோக்ய ரீதியாக கடும் போராட்டங்களை ஜாதகருக்கு தந்துகொண்டிருக்கிறது.
ஜாதகரின் இந்த நிலைக்கு கீழ்வரும் தந்தையார் வகை கர்மங்களே காரணமாகும்.
ஜாதகரின் தந்தையார் அபலைப்பெண் ஒருவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கற்பவதியாக்கி கைவிட்டார். பிறந்த குழந்தை தமதில்லை என்று வாதிட்டார். நீதிமன்றத்தில் மரபுக்கூறு சோதனையில் குழந்தைக்கு தந்தை அவரே என்று நிரூபணமாகி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. 
ஜாதகரின் தாயார் ஒரு மாதம் ஜீவனாம்சம் பெற்ற பிறகு அவரது தந்தை ஜாதகியை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். இப்போது மகன் விரும்பினாலும் தாயாரை தொடர்புகொள்ள இயலாத நிலை. ஜாதகர் ஜீவனம் ஆரோக்கிய வகை போராட்டங்களால் மனம் நொந்த நிலையில்   மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 
தந்தையின் செயல்களுக்கு தமையனே இப்படி அனுபவிக்கிறார் என்றால் ஜாதகரின் தந்தையின் நிலை என்னவாகி இருக்கும்.
இவற்றிற்கு காரணமான ஜாதகரின் தந்தையையார் அவரது ஒழுக்கக்கேடான வாழ்வினால்  எய்ட்ஸ் வியாதியில் நிராதரவான நிலையில் இறந்து போனார்.
பெண்மைக்கு தீங்கு விளைவித்தால் அது காரணமானவர்களை மட்டுமல்ல அவரது வம்சத்தையே கடுமையாக பாதிக்கிறது.
பெண் பாவம் பொல்லாதது என்பது அறிவுரை மட்டுமல்ல அது அனுபவமொழி.
மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்,
வாழ்த்துக்களுடன், அன்பன்,
பழனியப்பன்,கைப்பேசி எண்: 7871244501 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English