வெளிநாட்டில் தொழில் செய்யும் ஜாதக அமைப்பு.

கடந்த பதிவில் வெளி நாட்டில் அரசுப்பணி அமையும் அமைப்புகளை விளக்கியிருந்தேன். அதன் விளைவாக நண்பர்கள் சிலர் வெளிநாட்டில் சுய தொழிலில் சாதிக்கும் ஜாதக அமைப்புகளை பற்றி எழுதுமாறு கோரிக்கை விடுத்ததன் விளைவாக இந்தப் பதிவு வருகிறது.

கர்ம பாவகம் என்பது 10 ஆம் பாவகமே. கர்மா என்று இங்கு குறிப்பிடுவது ஒருவரின் செயலை குறிக்கும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 6  ஆம் பாவகம் ஒருவர் பிறரிடம் வேலை செய்து சம்பாதிப்பதையும் , 10 ஆம் பாவகம் என்பது ஜாதகரே தொழில் செய்து சம்பாதிப்பதையும் குறிப்பிடும். தொழில் என்று வரும் போது கால புருஷனுக்கு 10 ஆமிடமான மகரத்தை கவனியுங்கள். முதலையை மகரத்திற்கு அடையாளமாக குறிப்பிட்டிருப்பர். அதாவது முதலீடு செய்துவிட்டு உரிய காலம் வரும் வரை தொழிலில் சம்பாதிக்க பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பது அதன் பொருள். இதில் வியாபாரம் செய்யுமிடத்தில் வசிப்போருக்கு  தேவையான பொருட்களை அறிந்து, அவை எங்கு தரமானதாக, மலிவாக கிடைக்கும் என்பதை இனங்கண்டு கொள்முதல் செய்து அறிந்த இடத்தில் வியாபரம் செய்வது அனைவருக்கும் வாய்க்கும் கலையல்ல. இதனால் இதில் பல்வேறு பின்னணித் தொடர்புகள் உண்டு. 7 ஆமிடம் வாடிக்கையாளரை குறிப்பிடும் பாவகமாகும். 7 ஆமிடம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த ஜாதகர் தொழிலில் சிறப்படைய மாட்டார். காரணம் 7 ஆமிடம் கெட்டவர்களுக்கு வாடிக்கையாளரை கையாளும் குணம் இருக்காது. “நாவில் தேனை வைத்திருப்பவன் வேப்ப எண்ணையையும் விலை கூறி விற்பான்” என்று கூறுவர்.  சுய தொழிலில் ஜாதகர் வாடிக்கையாளரை நேரடியாக அணுகுவார் என்பதால் சுய தொழிலுக்கு 7 ஆமிடம் மிக முக்கியம்.  7 ஆமிடம் 10 ன் பாவத் பாவகமாகும். கால புருஷனுக்கு 10 ஆமதிபதி சனி கால புருஷ 7 ஆமிடமான துலாத்தில் உச்சமாவதன் காரணமும் இதுதான். சுய தொழில் அல்லாத பல உப அமைப்புகள் இணைந்து செய்யும் பெரிய தொழில்களுக்கு ஒருவருக்கு 7 ஆமிடம் பாதிக்கப்படிருந்தால் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் தகுதியான நபரை நியமித்துவிட்டு,   ஜாதகர் உற்பத்தி, தரம், கொள்முதல், விளம்பரம் போன்ற இதர பிரிவுகளை கவனம் செலுத்தலாம். இக்கருத்துக்களை மனதில்கொண்டு இனி வெளி நாட்டில் தொழில் செய்து சம்பாதிக்கும் அமைப்புகளைப் பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மிதுனம் சந்தைப்படுத்துதலை (Marketing) குறிப்பிடும் லக்னமாகும். வியாபாரியை குறிப்பிடும் சந்திரன் 2 ஆமிடத்தில் ஆட்சி பெற்று அமைந்துள்ளார். லக்னாதிபதி புதனை தந்தையை குறிக்கும் சூரியன் அஸ்தங்கம் செய்துள்ளார். புதனும் சூரியனும் நட்புக்கிரகங்கள் என்றாலும் இங்கு தந்தையின் ஆதிக்கத்தில் தமையன் இருப்பார். “சந்தோஷ் சுப்பிரமணியம்” திரைப்படத்தை நினைவில் கொள்ளுங்கள். தாயை குறிக்கும் சந்திரன் லக்னாதிபதி புதனின் ஆயில்யத்திலேயே நிற்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு  பெற்றோரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதே. நீச சூரியனைவிட ஆட்சி சந்திரன் வலுவாக இருப்பதால் இவரது குடும்பம் மற்றும் சம்பாத்தியத்தில் சந்திரனின் ஆதிக்கம் மிகுந்திருக்கும். அதாவது தந்தையைவிட தாயின் ஆதிக்கம் இவருக்கு அதிகம். சூரியன் துலாத்தில் பரம நீசமாகும் 10 பாகையை தாண்டி 27.57 பாகையில் நிற்கிறார். ராசி லக்னமான மிதுனத்தில் நவாம்ச சூரியன் நிற்பதால் தந்தை இவரது வாழ்வின் அசைக்க முடியாத ஆதார சக்தியாக இருப்பார். ஜாதகர் நிர்வாகியாக விளங்குவதையும் நவாம்ச சூரியனின் நிலை குறிப்பிடுகிறது. ராகு சூரியனை 26 பாகைகள் கடந்து துலா ராசி விளிம்பில் நிற்கிறார். இது தந்தை பாதிப்புகளை கடந்து செயல்படுவதை குறிக்கிறது. சூரியன் 7, 10 ஆமதிபதி குருவின் விசாகத்தில் நிற்பதால் தந்தை குரு சார்ந்த, வெளிநாடு சார்ந்த தொழில் தொடர்புகளில் இருப்பார். சந்திரன் 2 ல் ஆட்சியில் இருப்பதால் ஜாதகரது தாயார் வீட்டு நிர்வாகம், மற்றும் குடும்ப சேமிப்பில் கவனம் செலுத்துபவராக இருப்பார். இவை மேலோட்டமாக ஜாதகர் பற்றிய தகவல்களை தெரிவிப்பவை. உண்மையில் தொழில் ரீதியாக ஜாதகரின் நிலையை அதற்குரிய வர்க்கமான தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

லக்னத்தில் நிர்வாகத்தை குறிக்கும் சூரியன் நிற்பதால் ஜாதகர் பணிக்கு செல்ல மாட்டார். நிர்வாகம் செய்பவராக இருப்பார். உணவு காரகரான சந்திரனின் கடக லக்னத்தில், உணவு பாவகமான 2 ஆமதிபதி சூரியன் நிற்பதால் ஜாதகர் வெளிநாடு, உணவு சார்ந்த துறைகளில்  ஈடுபடுவார். சூரியன் லக்னத்தில் நிற்க, தாயை குறிக்கும் 4 ஆமதிபதி சுக்கிரன் 7 ல் நின்று லக்னத்தை பார்க்கிரார். இது இவரது நிர்வாகம் பெற்றோர் அமைத்துத் தந்தது என்பதை குறிக்கிறது. 7 ஆமிடமான மகரத்தில் சந்திரனின் திருவோணத்தில் நிற்கும் சுக்கிரன் 4 ஆமிட சனியுடன் பரிவர்த்தனை ஆகிறார். இதனால் இவர் மேலே குறிப்பிட்டபடி உணவு சார்ந்த துறைகளில் ஈடுபடுவார். லக்னத்தை ராகுவோடு இணைந்த சனி தனது 10 ஆம் பார்வையாக பார்க்கிறார். இது ராகு குறிக்கும் வெளிநாடு, வெளி மனிதர்கள் சார்ந்த வகையில் இவரது ஜீவனம் அமைவது குறிக்கிறது. லக்னத்தை 10 ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்த 9 ஆமிடாதிபதி குருவும் 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இவரது தொழிலில் குருவின் ஆதிக்கமான தங்கம் போன்ற மதிப்பானவைகள் இருக்கும். சந்திரனின் பார்வையை பெற்ற குருவே லக்னத்தை பார்க்கிறார் என்பதால் ஜாதகரின் தொழிலில் சந்திரன் மற்றும் குருவின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். அது வெளிநாடு சார்ந்த வகைப்பட்டதாக இருக்கும். மேலும் பெற்றோர் அமைத்துத் தந்ததாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

ஜாதகரது தந்தை தங்கத்தை மொத்தமாக கொள்முதல் செய்பவர். உணவு வணிகமும் உள்ளது. இந்தியாவிலிருந்து நகைகளையும் உணவுப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள். தாயார் நிர்வாகத்தையும், தந்தை விற்பனையையும் கவனிக்கிறார்கள். கடக லக்னத்திற்கு 10 ஆமிடமான மேஷ அதிபதி செவ்வாய், 9 ஆமதிபதியும் நீர் ராசி அதிபதியுமான குருவுடன் மீனத்தில் தர்ம கர்மாதிபதி யோகத்தில் இணைந்துள்ளதால் வளர்ந்த ஐரோப்பிய தேசமொன்றில் இவர்களது கிளையை நிறுவி வெற்றிகரமாக தொழில் செய்கிறார்கள். மகன் அந்த வெளிநாட்டு கிளையை நிர்வகிக்கிறார். மகனுடன் ஐரோப்பாவில் குடியேறிவிட்ட பெற்றோர், தங்களது சொந்த இந்திய தயாரிப்புகளுடன் பிற தேச தயாரிப்புகளையும் இறக்குமதி செய்து ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள்.

இத்தகைய ஜாதகர்களே தந்தையும் தாயும் தங்கள் கடின உழைப்பால் கட்டமைத்த ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை சிரமமின்றி அனுபவிப்பர். அதாவது “கஷ்டப்பட்டு ரோடு போட்டவன் ஒருவன், இவர்கள் சுகமாக வண்டி ஓட்டுபவர்கள்”. கஷ்டப்பட்டு மரமேறி நுங்கு பறித்தது பெற்றோர் என்றால், இவர்கள் நோகாமல் அதை உண்பவர்கள். சூரியன் அரசன் என்பதால் போர் செய்து ராஜ்ஜியத்தை உருவாக்கும். புதன் இளவரசனை குறிப்பவர் என்பதால் அடுத்த பட்டத்திற்கு உரிய கிரகமாக புதன் ஜாதக அரசவையில் குறிப்பிடப்படுகிறார். ஜாதகர் ராசிச்சக்கரத்தில் புதனின் மிதுன லக்னம் என்பதும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள புதனின் தொடர்புகள் இந்த ஜாதகர் இப்படிப்பட்ட பெற்றோர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அனுபவிக்கும் கொடுப்பிணை பெற்றவர் என்பதையும் குறிப்பிடுகிறது.

மீண்டும் விரைவில் மற்றோர் பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English