தனமா? குடும்பமா?

கொரானா காலத்திற்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் பலருக்கு   ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு?.  வீட்டிலிருந்தே பணிபுரியும் கணவருக்கு தேநீர், பஜ்ஜி செய்து தருவதே வேலையான பிறகு, இவர் எப்படா மீண்டும் அலுவலகம் செல்வார்? என்ற நிலை இருந்திருக்கும். இப்போது நிலைமை மாறிவிட்டது. அலுவலகம் வராவிட்டால் ஊதியம் குறைக்கப்படும் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி பணியிழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் இன்றைய நிலையில் வீட்டை விட்டு அலுவலகம் செல்வோர் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் குழந்தைகள் மனோபாவத்தில் இருப்பது இயல்பு. ஆட்குறைப்பு அபாயத்தை தவிர்க்க பணியுள்ள வேறு அலுவலகங்களுக்கு திறமையான ஊழியர்களை நிறுவனங்கள் மாறுதல் பெற்றுச் செல்லுமாறு பணிக்கின்றன. மாறுதல்கள் ஊர்விட்டு ஊர் என்ற நிலைமையை மீறி, மென்பொருள் நிறுவனங்களின் மாறுதல்கள் தேசம் விட்டு தேசம் செல்வதாகவும் இருக்கின்றன. அத்தகையோர் வேலையை விட்டால் மென்பொருள் நிறுவன ஊதியம் வேறு வேலைகளில் கிடைக்காது எனும் நிலையில் குடும்பத்தை பிரிய வேண்டிய நிலை உள்ளது. இளம் பணியாளர்களுக்கு இது பாதிப்பை தருவதில்லை. தனது 5௦களில் இருக்கும் முதுநிலைப் பணியாளர்கள் குடும்பத்தை பிரிய நேரும் நிலை பரிதாபகரமானது. இத்தகையோர் தங்கள் மனைவி, வளர்ந்த, திருமணத்திற்கு காத்துள்ள  குழந்தைகள், வயோதிக பெற்றோரை பிரிவது கடும் சோதனைதான். இதில் திருமணமானது முதல் கணவரை பிரிந்ததே இல்லை எனும் நிலையில் அவர்களது இல்லத்தரசிகள் படும் வேதனை பரிதாபத்திற்குரியது. அப்படி கணவரை பணி நிமித்தம் தனது 5௦ வயதில் பிரியும் இல்லத்தரசி ஒருவரின் குடும்பச் சூழ்நிலையும், சிந்திய கண்ணீரும் இப்பதிவை எனை எழுதத் தூண்டின.

“உயர்ந்த இடங்களில்தான் செங்குத்தான சரிவுகளும் இருக்கின்றன” எனும் பழமொழி அனைவருக்கும் நினைவிருக்கும். நல்ல ஊதியம் மிக்க வேலையை விட இயலாமல், குடும்பத்தை பிரிய வேண்டியுள்ளதே எனும் நிலையும், குடும்ப பொறுப்புகளும் இத்தகைய 5௦ களில் இருக்கும் தம்பதிகளை  வாட்டுகின்றன. இப்படி ஒரு சூழலுக்கு உள்ளாவோரின் ஜாதகத்தில் பொருளாதாரத்தை குறிக்கும் குரு பலகீனமாகிருப்பார். பொருளாதரத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும் போராட்டத்தில் குடும்பத்தை பிரியும் நிலை வரும். குருவும், இரண்டாமிடமும் பாதிக்கப்பட்டு தசா-புக்திகள் சாதகமற்ற சூழலில் ஒருவர் குடும்பத்தை பிரிகிறார். அதாவது இத்தகைய நிலையில் இருப்போர் ஒன்று குடும்பத்தை பிரிய வேண்டும், அல்லது வேலையை இழக்க வேண்டும் எனும் நிலைதான்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகம். 1-7 ல் சர்ப்ப கிரகங்கள் உள்ளன. இவரது இல்லறத்திற்கு பாதிப்பு வர வேண்டும் என்றால் ராகு-கேது தொடர்புடைய தசா-புக்திகளில்தான் அது வரும். 7 ல் சனி திக்பலம் பெற்று, சனியின் வீட்டில் குரு நிற்பதால் சனி தசா-புக்திகளில் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாது.  ஆனால் பாதிப்பிற்கு சனியின் காரகம் காரணமாக இருக்கும். அதாவது ஜீவன வகை. 2 ல் குரு நீசம் பெற்றது பாதிப்பே என்றால் 2 ல் அவர் 8 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து நிற்பது 2 ஆமிடத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். 2 ல் நிற்கும் குரு லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனின் உத்திராடம்-4ல் நிற்பதால் சம்பாத்தியத்தில் உயர்ந்த நிலையில் இருப்பார். லக்னாதிபதி குரு, தான் நின்ற பாவக வகையில் ஜாதகரை கைவிட மாட்டார். ஆனால் அவர் 1௦ ஆமிட சூரியனின் சாரத்தில் நிற்பதால் இவரது உயர்ந்த பொறுப்பே குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும்.  ஏனெனில் சூரியன் தனது நீச வீட்டை நோக்கிச் செல்கிறார் என்பதுதான் அதற்கு காரணம். அதாவது ஜாதகர் தனது பணியில் உயர்வான நிலையை அடைந்த பிறகு ஒரு வீழ்ச்சியை சந்திப்பார் என்பது இதன் பொருள். 2ல் குருவும் சந்திரனும் இணைந்ததால் குருச்சந்திர யோகம் செயல்படுகிறது. குடும்பத்திற்கு பொருள் காரகமான பணவரவிற்கு இது நல்ல நிலை. ஆனால் 2ல் நீசமான குருவுடன் இணைந்த சந்திரன் அஷ்டமாதிபதியாவதால் இரண்டாமிடத்தின் உயிர் காரகமான குடும்பம் பாதிக்கப்படும். அதாவது சந்திரன் தனது காரக அடிப்படையில் கடல் கடந்து வெளிநாடு செல்லும் நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தி, 8 ஆமதிபதி என்பதால் கண்காணாத இடத்தில் குடும்பத்தை பிரிந்து ஜாதகரை வாழ வைப்பார்.

நவாம்சத்திலும் மீனத்தில் இணைந்த குருவும் சந்திரனும் இதை நமக்கு துல்லியமாக காட்டுகின்றனர். நவாம்சத்தில் லாபாதிபதி சுக்கிரன் லக்னத்தில் நின்று மீன குரு பார்வையை பெறுவதாலும், லாபம் வேண்டும் என்றால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து தொலை தூரம் கடல் கடந்து செல்ல வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது. லக்ன சுக்கிரன்  லாபாதிபதியாகி அவரே  பாதகாதிபதியும் ஆவதால் ஏற்படும் நிலை இது. 7 ல் சனியுடன் 12 ஆமதிபதி புதனுடன் இணைந்து நிற்பதும், 12 ல் 2 ஆமதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து நிற்பதும், குரு, ராகு தொடர்புடைய தசா-புக்திகளில் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து கடல் கடந்து தொலை தூரம் செல்ல வேண்டியிருக்கும். அதற்கு 7 ல் நிற்கும் சனி குறிக்கும் வேலையும், 12 ஆமிட சூரியன் குறிக்கும் வேலையில் ஜாதகர் அடைந்த உயர்வான நிலையும் காரணமாக இருக்கும்.

ஜீவனத்திற்கான தசாம்ச சக்கரத்தில் சிம்மத்தில் நிற்கும் லக்னாதிபதி செவ்வாய், விருட்சிக சூரியனுடன் பரிவர்த்தனை ஆவது, தனது கௌரவத்தை தக்கவைத்துக்கொள்ள ஜாதகர் கடல் கடந்து செல்வதை குறிக்கிறது. பரிவர்த்தனைக்குப் பிறகு செவ்வாய் தனது சொந்த வீடான விருட்சிகத்திற்கு வந்து 9, 12 ஆமதிபதி குருவுடன் இணைவதால் வலுவடைகிறார். அதாவது விருச்சிகம் குறிக்கும் கண்காணாத இடத்திற்கு மாறுதல் பெற்றுச் சென்றுதான் தனது பணிக் கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும். செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் மறைந்து ஆட்சி பெறுவதும், வக்கிரம் பெற்றதும் ஜாதகர் குடும்பத்தை பிரிவதால் உணரும் திருப்தியற்ற நிலையை குறிப்பிடுகிறது. இவர் லக்னத்திற்கு 8 ஆமிடமான நீர் ராசி விருட்சிகத்தில் நிற்கும் தன, குடும்ப காரகர் குரு தசையில் 12 ல் நிற்கும் ராகு புக்தியில் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்றார்.  

ஜாதகர் ராசிச் சக்கரத்தில் 2 ல் நீசம் பெற்ற குரு தசையில், 2 க்கு விரையத்தில் நிற்கும் ராகு புக்தியில் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்றார். மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் நிதிப்  பிரிவில் உயர்ந்த பொறுப்பில் பணிபுரிந்தவர் இவர். கொரானா காலத்திற்குப் பிறகு பணி இழப்பை சந்தித்தவர். இவரது உயர்ந்த பொறுப்பிற்கேற்ற சம்பளத்தில் இவருக்கு இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை. வெளிநாட்டில்தான் கிடைத்தது. திருமணத்திற்கு காத்துள்ள பணிபுரியும் தனது மகள், உயர் கல்வி பயிலும் மகன் இவர்களை விட்டுவிட்டு, தனது வயோதிக பெற்றோரை கவனிக்கும் பொறுப்பை மனைவியிடம் விட்டுவிட்டு குடும்பத்தை பிரிய மனமின்றி ஆனால் அவசியம் கருதி வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவருக்கு சனி தசை, புதன் புக்தியில்தான் குடும்பத்துடன் இணைந்து இருக்கும் வேலை அமைப்பு வருகிறது. இடையில் குடும்பம் முக்கியம் என்று இந்தியா திரும்பினால், புதன் புக்திவரை நல்ல வேலை அமையாது. 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English