வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை என புலம்புபவர்கள் சிலர். இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தங்கள் எண்ணப்படி மேலும் வசதி கூடிய வீட்டை அமைத்துக்கொள்பவர் சிலர். இப்படி வீடு வகை சிரமங்களை இன்று பெரும்பாலோரிடையே காணமுடிகிறது. நகர்ப்புறத்தில் இன்று வீடு என்பது பல லட்சங்கள் பிடிக்கும் ஒரு சொத்தாகும். கணிசமான தொகையில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையும் மீறி கடன்பெற்று கட்டிவிட்டு அதில் வசிக்க இயலாமை விரக்தியைத்தரும். இதனை தவிர்க்க சரியான திட்டமிடல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவு கட்டிய தங்கள்  சொந்த வீட்டில் வாழ்ந்து மகிழ முடியுமா என தகுந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் அவசியம். இது தொடர்பானதே இன்றைய பதிவு.

முதலாவாதாக ஒரு ஆணின் ஜாதகம். 

ஜாதகர் 1955 ல் பிறந்தவர். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சூரியன் லக்னத்திலேயே உள்ளார். சூரியனுக்கு அஷ்டமாதித்ய தோஷம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் வலுவடையும் உத்திராயணத்தில் பிறந்து லக்னத்தில் சூரியன் உள்ளதால் ஜாதகருக்கு தந்தை வழி பாக்கியங்கள் உண்டு. லக்னாதிபதி சனி உச்சமாகி குரு பார்வை பெறுகிறார். வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்தை பூர்வீகத்தை குறிக்கும் சனி பார்த்ததால் ஜாதகருக்கு தந்தை வழி பூர்வீக வீடு கிடைத்தது. ஸ்திர லக்னமாகி உச்ச சனி லக்ன கேந்திரம் பெற்றதால் ஜாதகர் ஜனனம் முதல் இன்று வரை தனது பூர்வீக வீட்டிலேயே வசிக்கிறார். நான்காம் அதிபதி செவ்வாய் 3ல் குரு வீட்டில் பாவர் தொடர்பற்ற நிலையில் உள்ளதால் இவருக்கு வீடு தொடர்பான பாதிப்புகள் எப்போதும் இல்லை. பாக்ய ஸ்தானமான கன்னியில் அமைந்த சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் இவருக்கு செவ்வாய் வகை பாக்கியங்கள் உண்டு. செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெற்ற சனி 4 ஆம் வீட்டை உச்ச கதியில் பார்த்ததால் பழைய வீடு அவ்வளவுதான்.

இரண்டாவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.                

இந்தப்பெண்மணிக்கு 4 ஆம் அதிபதி குரு, தனது 4 ஆம் பாவத்திற்கு 8 ஆம் பாவமான கடகத்தில் பூமி காரகன் செவ்வாயுடன் இணைந்து உச்சமாகியுள்ளார். உச்ச குருவுடனான இணைவால் செவ்வாய் நீசபங்கம் பெறுகிறார். இப்படி 4 ஆமதிபதியும் பூமிகாரனும் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் அமையும் சிறப்பான அமைப்பால் ஜாதகி தனது உழைப்பால் வீடு கட்டினார். ஜாதகத்தில் சந்திரனும் குருவும் பரிவர்தனையாகியுள்ளனர். கன்னி லக்ன பாதகாதிபதி குரு சந்திரனுடன் பரிவர்தனைக்குப்பிறகு பாதக ஸ்தானம் மீனம் சென்று அங்குள்ள வக்கிர சனியோடு இணைகிறார். இதனால் ஜாதகிக்கு சனி மற்றும் குருவால் பாதகம் ஏற்பட வேண்டும். இந்த வகையில் பணிக்கு செல்லும் ஜாதகி பணி மாறுதல்களின் பொருட்டு சொந்த இருப்பிடத்தில் வாசிக்க இயலாமல் மன  உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார். (சனி-வேலை, சந்திரன்-இட மாறுதல்கள், குரு-பதவி).  இவருக்கு வீடு பாக்கியம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியம் இல்லை.  பாக்கியாதிபதி சுக்கிரன் நீசமாகியுள்ளது இதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

கீழே மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.          

ஜாதகத்தில் தனது நான்காம் பாவத்தை அதன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இதனால் இவருக்கு வீடு அமைந்தது. ஆனால் ராகு 2 ஆம் இடத்தில் நின்று லக்னத்தில் உள்ள செவ்வாயை நோக்கி வருகிறது. இதனால் செவ்வாயின் காரகங்கள் பாதிப்படையும். ராகு இரண்டாமிடத்தில் நிற்பது ஜாதகரின் வருமான வகைகள் வெளிநாடு, வெளியூர் ஆகியவற்றில் அமையும் என்பதை குறிக்கிறது. ஜாதகர் தனது வாழ்வின் பெரும் பகுதியை வெளிநாட்டில் செலவழித்தவர். தற்போது தாய்நாடு திரும்பினாலும் வெளிமாநிலத்தில் குடும்ப சூழலின் பொருட்டு வாடகைக்கு வசிக்கிறார். சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். சிம்மம் உயர்ந்த வீடுகளை குறிக்கும். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் வீடு மூன்று தளங்களைக்கொண்டது. செவ்வாய் சிம்ம லக்னத்திற்கு 4 ஆமதிபதியும், பாக்ய & பாதகாதிபதியுமாகி ராகுவால் முதலில் தீண்டப்படுவதால் ஜாதகருக்கு கட்டிய வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் குறைவு.   

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

ஜாதகர் மெத்தப்படித்தவர். நிரம்ப சம்பாதிப்பவர். கும்ப லக்னத்திற்கு 4 ல் திக்பலத்தில் அமைந்த சுக்கிரனுடன் லக்னாதிபதி சனி நட்பு பெற்று இணைந்து வக்கிர குரு பார்வை பெறுகிறார்.  உடன் புதனும் சூரியனும் உள்ளதால் ஜாதகரின் வீடு புதன், சுக்கிரன் குறிக்கும் கலை நயம் மிக்கது. சூரியன் குறிக்கும் அடுக்குமாடியில் ஒரு தளத்தில் வசிக்கிறார். எந்த கிரகமும் சூரியனால் அஸ்தங்கமடையவில்லை. பூமி, அசையா சொத்துக்களுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றாலும், 12 ல் மறைந்து ராகுவுடன் ஒரே பாகையில் நின்று ராகுவால் அஸ்தங்கப்படுத்தப்படுகிறார். இதனால் செவ்வாயை ராகு கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு போதிய தன வசதி இருந்தாலும் வீடு கட்ட விருப்பமின்றி இருக்கிறார். பாக்யாதிபதி சுக்கிரன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு. செவ்வாயின் நிலையால் வீடு கட்டும் பாக்கியம் இல்லை.  

பெரும் பொருளாதரத்தை எடுத்துக்கொள்ளும் வீடு அனைவருக்கும் அவசியமும் தேவ்வையுமான ஒன்று என்றாலும் அதை அனுபவிக்கும் சூழல் உள்ளதா என்று தெரிந்துகொண்டு வீட்டின் யோக திசை, பணிச்சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து வீடு கட்டிக்கொள்வதே சிறப்பு.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English