இனிக்கும் இல்லறம் தரும் பிருகு மங்கள யோகம்!

வாழ்வில் பொருளாதார சிறப்பை அடைந்தவர்கள் எல்லாம் மன நிறைவான வாழ்வை அனுபவிப்பவர்கள் என்று கருத இயலாது. செல்வ வளத்தில் சிறப்பாக திகழும் அனைவருக்குமே குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்துவிடுவதில்லை.  அதே போன்று குடும்ப வாழ்வில் இணக்கமான தம்பதிகள் அனைவரும் பொருளாதாரத்தில் சிறப்பாக வாழ்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஒவ்வொன்றிலும் சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் என்பது தன ஸ்தானம் எனப்படும். குடும்ப பாவகமும் அதுவேதான். இவ்விரண்டில் இரண்டாமிடத்தின் பொருட்காரகம் அதீத வலுவடைந்தால் குடும்பம் எனும் உயிர் காரகம் பாதிப்பை சந்திக்கிறது. குடும்பம் பொருளாதாரம் இரண்டிலும் சிறந்து விளங்குபவர்களை பாக்கியவான்கள் என்று அழைக்கலாம். அத்தகைய பாக்கியத்தை தருவதற்கும் ஜாதகத்தில் யோகம் இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவு, பொருளாதாரம் இரண்டிலும் சிறப்பாக வாழ்வதற்கு பிருகு-மங்கள யோகம் ஆசீர்வதிக்கிறது. இந்த யோகத்தை ஆராய்வதே இன்றைய பதிவு.

பிருகு மங்கள யோகம். 

கால புருஷ லக்னாதிபதியும், மங்களன் என்று அழைக்கப்படுவருமான செவ்வாயும், பிருகு மகரிஷியின் புத்திரரான கால புருஷ களத்திர காரகரான  சுக்கிரனும் லக்ன கேந்திரங்களில், திரிகோணங்களில், 2, 11 ல் இணையப் பெற்றிருந்தால் இந்த யோகம் அமைகிறது. இதன் பயனாவது அதி அற்புதமான விஷய ஞானம், அந்த விஷய ஞானத்திற்கேற்ற சம்பாத்தியம், இனிக்கும் இல்லறம். வீடு, வாகன வசதிகள், உறவுகளிடமும் சமூகத்திலும் கிடைக்கும் பெயர், புகழ் ஆகியவையாகும். இவை தவிர வேறென்ன வேண்டும் மனிதனுக்கு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் அமையும் சூழலைப் பொறுத்து கிரக யோகங்கள் கூடவோ, குறையவோ செய்யும். இந்த ஜாதகத்தில் ரிஷப லக்னத்திற்கு 4 ல் சுக்கிரன் திக்பலம் பெறுகிறார். அங்கு களத்திர காரகர் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து பிருகு மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார். இந்த யோகமே இல்லறச் சிறப்பை சுட்டுவதுதான். அதிலும் 1-7 ஆமதிபதிகள் கேந்திரத்தில் இணைவு பெற்றது கூடுதல் சிறப்பு. எந்த ஒரு ஜாதகத்திலும் யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க லக்னாதிபதி சிறப்பாக அமைவது முக்கியம். லக்னாதிபதி கெட்டுவிட்டால் யோகங்களை அனுபவிக்க இயலாது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி திக்பலத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளார். உடன் அமைந்த செவ்வாய் இங்கு 7 க்கு திக்பலத்தில் (7 க்கு 1௦ ல்) அமைந்துள்ளார். இது ஒரு மிகச் சிறந்த அமைப்பாகும். இவர்களை வளர் பிறைச்சந்திரன் பார்ப்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஜாதகி கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். வித்யா பாவகமான 4 ஆம் பாவகம் சிறப்புற்றுள்ளது. அதன் அதிபதி சூரியன் உச்ச புதனுடன் 5 ல் இணைந்துள்ளார். இதனால் சிறப்பாக கல்வி கற்றார். படித்து  முடித்தவுடன் திருமணம். திருமணம் முடிந்ததுடன் மென்பொருள் துறையில் பணியாற்றும்  கணவருடன் அமெரிக்கா சென்றார். திருமணம் ஆனவுடன் கணவருக்குரிய செவ்வாய் செயல்படத் துவங்குகிறார். கணவர் இங்கு மனைவிக்கு தனது தொழில் சார்ந்த தனித் திறமைகள் அனைத்தையும் கற்பிக்கிறார். இதனால் ஜாதகியின் கல்வி அவருக்கு சம்பாத்தியத்தில் உதவ கணவர் வழி அமைத்துத் தருகிறார். இதனால் ஜாதகியும் கணவருடன் இணைந்து பணிக்கு செல்கிறார். பொருளாதாரமும், வீடு, வாகன வசதிகளும்,  இரு குழந்தைகளுமாக குடும்பமும் வளர்கிறது. உறவுகளிடமும் சமூகத்திலும் மதிப்பு உயர்கிறது. நிறைவான இல்லறத்தை இருவரும் வாழ்கிறார்கள்.

சஷ்டாஷ்டக தோஷத்தை முறியடிக்கும் பிருகு மங்கள யோகம்.

ஜாதகிக்கு கும்ப ராசி. கணவர் ஜாதகியின் கும்ப ராசிக்கு 6 ஆறாவது ராசியான  கடக ராசியை சேர்ந்தவர். ஜாதகத்தில் அமைந்த பிருகு-மங்கள யோகமானது இருவருக்குமான சஷ்டாஷ்டக தோஷத்தை தவிடுபொடியாக்கிவிட்டது. ஏழரை சனி பாதிப்பை பணிச் சூழலால் சிறிதளவு உணர்வதை தவிர, தனி வாழ்வில் உணரவில்லை என்கிறார் ஜாதகி. 7 ல் திக்பலம் பெற்ற சனி,  விருட்சிக ராசி சந்தியில் ௦.49 பாகையில் இருந்து 1௦ ஆவது பார்வையாக 4 ஆவது பாவகத்தில் 16.52 பாகையில் நிற்கும் செவ்வாயை முழுமையாக பார்க்க இயலாமல் பலகீனமாக பார்ப்பதும் இதற்கு மற்றொரு காரணம். அதே சமயம் சனிக்கு திக்பலம் தரும் விதத்தில் அமைந்த செவ்வாய் தன் வீட்டை 4 ஆவது பார்வையாக பார்ப்பதால் கணவன் எனும் செவ்வாய், உழைப்பு எனும் சனிக்கு காரக அடிப்படையில் உதவுகிறார். இதனால் மனைவியை சம்பாத்திய ரீதியாக கணவர் உயர்த்துகிறார். இதே சனி 7 ஐ தவிர வேறிடத்தில் இருந்து வலுவாக செவ்வாயை பார்த்தால் யோகத்தில் பங்கம் ஏற்படும். அதன் அளவு அது நிற்கும் ஸ்தானத்திற்கு தக்கபடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகி கணவர் தனக்கு இறைவன் அளித்த வரம் என்கிறார்.  

கீழே இரண்டாவது ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண். இதுவும் ரிஷப லக்ன ஜாதகம்தான். இந்த ஜாதகத்திலும் பிருகு மங்கள யோகம் உள்ளது. முந்தைய யோகத்தைப் போல வலுவான பிருகு மங்கள யோகம் அல்ல இது. 7 ல் 8 ஆமதிபதி குரு அமைவது சிறப்பல்ல ஆனால் குருவுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு 7 ஆமதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதால் 7 ஆவது பாவகம் சிறப்படைகிறது. அதே சமயம் பரிவர்த்தனையின் காரணமாக சுக்கிரனை விட்டு செவ்வாய் பிரிகிறார். இதனால் யோகம் பங்கமடைகிறது. கூடுதலாக பரிவர்த்தனை பெற்று ஆட்சி பெறும் செவ்வாயை நோக்கி 8 ஆமிட கேது வருகிறார். இதனால் இவருக்கு களத்திர தோஷம் ஏற்படுகிறது. இதனால் இவருக்கு கைக்கு கிடைத்த பிருகு மங்கள யோகம் அனுபவிக்க இயலாததாகிவிடும். யோகத்தை தரும் கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் யோகம் பங்கமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜாதகத்தில் பிருகு மங்கள யோகம்தான் பங்கமடைகிறதே தவிர இதர சில விசேஷ அம்சங்கள் உள்ளன. இங்கும் லக்னாதிபதி சுக்கிரன்  வலுவடைந்துள்ளார். சுக்கிரன் இங்கு செவ்வாயுடன் இணைந்தாலும், குருவுடன் இணைந்தாலும் சிறப்பே. சூரியன் திக்பலம் பெறுகிறார். பாவிகள் 6 ல் அமைவது சிறப்பு என்பதற்கேற்ப சனி இங்கு 6 ல் அமைவது சிறப்பே. இந்த ஜாதரும் மனைவியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகையில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். கணவருக்கு வேலையில் உயர்வு கிடைத்து வெளிநாடு சென்றுவிட்டார். மனைவிக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை. இதனால் வாழ்வில் உயர்வுகளை, வசதி வாய்ப்புகளை இவர் அடைகிறார். ஆனால் பிருகு மங்கள யோகம் செயல்படாமல் போவதால் அதை மனைவியுடன் இணைந்து அனுபவிக்க இயலவில்லை.  

பிருகு மங்கள யோகத்தின் சிறப்பு.

என்ன தசா-புக்திகள் வந்தாலும், கோட்சாரம் பாதகமாயினும் இந்த பிருகு மங்கள யோகம் கணவன் மனைவி உறவை பிரியவிடாமல் தாங்கிப்பிடிக்கும் தூணாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுக்கிரன் செவ்வாய் தசா-புக்திகள் வந்தால் இந்த யோகம் இனிக்கும் இல்லறத்தை கண்முன்னே காட்டும். இல்லறத்தில் சொர்க்க வாழ்வு என்ன என்பதை இவற்றின் தசா-புக்திகளில் அப்போது முழுமையாக அனுபவித்து உணரலாம்.

பிருகு மங்கள யோகத்தின் குறைபாடு.

கால  புருஷனுக்கு கணவன்-மனைவியை குறிக்கும் செவ்வாயும் சுக்கிரனும் இணைவதால் இந்த யோகம் அதீத காமத்தை ஏற்படுத்தும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப இதர விஷயங்களை கோட்டை விட்டு விட்டு காமத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால் இதே யோகம் அவமானத்தையும் தரும். காரணம் செவ்வாய் கால புருஷனின் லக்னாதிபதி மட்டுமல்ல கால புருஷனுக்கு 8 ஆமதிபதியும் கூட என்பதே. 8 ஆமிடம் அவமானம்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

Survival of the Fittest

மனித இனம் நாகரீகமடைந்த காலங்களை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அதிகம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியைவிட கடந்த நூறு வருடங்களில் அடைந்த

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

தேடல்கள்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை

மேலும் படிக்க »
கல்வி

Risk Assessment

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக

மேலும் படிக்க »
Tarot

That’s All Your Honour!

ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும்

மேலும் படிக்க »
கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English