பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது என்று உணர்ந்தேன். வாழ்வு எல்லோருக்கும் ஒன்றுபோல அமைவதில்லை. அதே போன்று சிறப்பாக வாழ்பவர்கள்கூட தங்கள் வாழ்நாள் முழுதும் ஒரே மாதிரியான வாழ்வை அனுபவிப்பதில்லை. சில வேளைகளில் எத்தகைய ஜாதகரையும் காலம் புரட்டிப்போடுவது உண்டு. அதன் மூலம் காலம் நம் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வது என்னவோ உண்மைதான். ஆனால் காலம் தரும் அனைத்து மாற்றங்களையும் நாம் மனமுவந்து ஏற்கிறோமா? என்றால் பெரும்பாலும் குறைவுதான். கால ஓட்டத்தில் அவை சரி என்று பிற்பாடு புரியவரும். சில லாபங்களுக்காக சில விட்டுக்கொடுத்தல்கள் என்ற வகையில் அவை நிகழும்போது நாம் செய்வதறியாது திகைக்கிறோம். ஆனால் முடிவை நாம் எடுத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்புவதும் நாம்தான் எனும் நிலையில் நம்மீதே நமக்கு வெறுப்பு வருவதும் இயல்புதான். இத்தகைய உணர்வை அனுபவித்திருக்கிறீர்களா? இந்த மனிநிலை பற்றியதுதான் இன்றைய பதிவு.

குடும்ப வாழ்வில் களத்திர ஸ்தானம் எனும் 7 ஆமிடமும், இல்லறத்தை குறிக்கும் 8 ஆமிடமும் மிக முக்கியம். இவற்றை அடுத்து குடும்பம், பொருளாதாரத்தை குறிக்கும் 2 ஆமிடம் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமாக நாம் பொருளாதாரத்தை சார்ந்திருந்தால் குடும்பமும், அதிகமாக குடும்பத்தை சார்ந்திருந்தால் பொருளாதாரமும் பாதிக்கப்படும். 2 ஆமிடம் சார்ந்த முடிவுகள் நாம் எடுப்பதுதான் என்பதால் இதன் சாதக, பாதகங்கள் பெரும்பாலும் நம்மைச் சார்ந்ததே. ஆனால் 7, 8 ஆமிட அமைப்புகளின்படிதான் நமது இல்லற வாழ்வு அமைகிறது. இது முழுதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை.   

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்

மீன லக்னாதிபதி குரு 6 ல் மறைவது தோஷமே என்றாலும் அவர் ஆட்சி பெற்ற சூரியனுடன் இணைவதால் மறைவு ஸ்தான தோஷம் செயல்படாது. 6 ல் குரு சூரியனுடன் இணைவதால் சூரியனின் ஆளுமையும், கௌரவமும், தயக்கமற்ற மனோபாவமும் ஜாதகியின் குணத்தில் வெளிப்படும். தந்தையை விரும்புவார். குரு புதனுடன் இணைவதால் புதனின் புத்தி சாதுர்யமும், கல்விச் சிறப்பும் ஜாதகியின் குணத்தில் வெளிப்படும்.

இப்போது இவரது ஜாதகப்படி இவரது கணவரின் இயல்பு எப்படி இருக்கும் என ஆராய்வோம்.  கணவரை குறிக்கும் 7 ஆமதிபதி புதனும் 6 ல் குரு, சூரியனுடன் இணைவதால் கணவர் படித்த பண்பாளர். அரசுத்துறை, மருத்துவம் ஆகியவற்றோடு தொடர்புடையவராக இருப்பார். கணவரும் கௌரவம், தலைமைப்பண்பு ஆகிய குணங்களை பெற்றவராக இருப்பார். லக்னாதிபதியும் 7 ஆமதிபதியும் சூரியனுடன் இணைவதால் சூரியனின் குணம் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்படும். இது தான் எனும் அகங்காரத்தை (Ego class) இருவருக்கும் ஏற்படுத்தி குடும்ப உறவை பாதிக்கலாம். இருவரின் குணமும் பொதுவாக நிரந்தரமானது. தசா-புக்தி கிரகங்கள் குணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இவ்விருவரின் குணத்தில் இருக்கும் Ego செயலில் வெளிப்படுமா? என காண்போம். அதற்கு கிரகத்தை விட்டுவிட்டு பாவகத்தை கவனிக்க வேண்டும்.

லக்னத்தை 7 ஆமிடத்திலிருந்து சனி பார்ப்பதால் ஜாதகியின் குணத்தில் உள்ள கௌரவமும் ஆளுமையும் செயலில் வெளிப்படும் வேகம் மட்டுப்படும். அதே சமயம் கணவரை குறிக்கும் 7 ஆமிடத்தில் சனியே நிற்பதால் ஜாதகியைவிட கணவரே மிக நிதானம் உள்ளவராக இருப்பார். கௌரவமும் ஆளுமையும் குணத்தில் இருந்தாலும் செயலில் கணவரின் நேர்மையும், எளிமையும், நிதானமுமே வெளிப்படும். பெண்ணுக்கு கணவரை குறிக்கும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் மறைவதால் கணவரின்  நிதானத்தையும் எளிமையையும் ஜாதகி ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் நேர்மையை மட்டும் விரும்புவார். 7 ஆமிடமான கன்னியை கணவரின் லக்னமாகக்கொண்டு மனைவியை ஆராய்ந்தால், மனைவியை குறிக்கும் காரக கிரகம் சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் கேந்திரத்தில் மறையாமல் உள்ளார். இதனால் கணவர், மனைவி தன்னை வெறுக்குமளவு, அவரை கணவர் வெறுக்கமாட்டார். எனவே இங்கு கணவர்தான் அதிகம் மனைவியை அனுசரித்துச் செல்பவராக இருப்பார். ஆனால் குணத்தில் இருவருக்குமிடையே அதிருப்தி நிலவுவது தவிர்க்க இயலாதது. 

லக்னாதிபதியும் 7 ஆமதிபதியும் இணைவு பெற்றுள்ளதால் இவர்கள் பிரியமாட்டார்கள். ஆனால் இவர்கள் இணைவது 6 ஆமிடத்தில் என்பதால் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை இன்னும் தெளிவாக நவாம்சத்தில் காண்போம்.

நவாம்சத்தில் மகர லக்னாதிபதி சனி லக்னத்தில் ஆட்சி பெற்று 7 ஆமிடத்தை பார்க்கிறார். இது ஜாதகிக்கு நன்று. ஆனால் சனி பார்க்கும் 7 ஆமிடம் பாதிக்கப்படும். அதே சமயம், 7 ஆமதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதும் 7க்கு 8 ல் மறைவதும் கணவருக்கு பாதிப்பைத் தரும். கணவரை குறிக்கும் காரக கிரகம் செவ்வாய் மகர லக்னத்திற்கு பாதக ஸ்தானமான விருட்சிகத்தில் குருவுடன் இணைவு பெறுவது, கணவர் வகையில் ஜாதகிக்கு லாபமே , ஆனால் திருப்தியில்லை. அதேபோல 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான ரிஷபத்தில் சுக்கிரன் நிற்பதும் கணவருக்கும் மனைவியால் லாபமுண்டு. ஆனால் திருப்தியில்லை. காரக கிரகங்கள் இருவருக்குமே பாதக ஸ்தானத்தில் நிற்பது, வெறுப்பை மனதில் இருத்தி வைக்கும் அமைப்பாகும். ஆனால் செவ்வாயும் சுக்கிரனும் ஆட்சி பெற்று சம சப்தமமாக நிற்பதும், அவர்களுக்கு குரு தொடர்பு ஏற்படுவதும் இருவரும் இணை பிரியாமல் இருப்பதையும் , ஆனால் திருப்தியற்ற மன வெறுப்பு இருவரிடையே நிலைப்பதையும் நவாம்சம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

7 ல் மருத்துவ கிரகம் புதன் கடகத்தில் நிற்பதாலும், 7 ஆமதிபதி சந்திரனாகி மருத்துவ கிரகம் ராகுவுடன் 2 ஆமிடத்தில் இணைந்துள்ளதாலும் ஜாதகியின் கணவர் ஒரு பல் மருத்துவர். குரு பார்வை 7 ஆமிடத்திற்கு கிடைப்பதால் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும்  பணியாற்றுகிறார். லக்ன சனியை 7 ஆமிட புதன் பார்ப்பதால் ஜாதகி பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார். மனைவிக்கு கணவரின் எளிமை சுத்தமாகப் பிடிப்பதில்லை. கணவர் ஜாதகி போல ஆடம்பர வாழ்வை விருப்புவதில்லை. ஜாதகிக்கு தற்போது புதன் தசையில் இருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். ஆனால் ஜாதகிக்கு சனி தசையில் செவ்வாய் புக்தியான 2௦14 முதல் கடந்த 1௦ வருடங்களாக இருவருக்குமிடையே சகிப்புத்தன்மை குறைவால் ஒரே வீட்டில் வசித்தாலும் பேச்சு வார்த்தை இல்லை. ஒரே மகன் மூலம் தங்கள் கருத்துக்களை இருவரும் பரிமாறிக்கொள்கிறார்கள். ஜாதக அமைப்பு பிரியவிடவில்லை. ஆனால் அதே ஜாதக அமைப்புத்தான் சகித்துச் செல்லும் மனோபாவத்தையும் கைவிட மறுக்கிறது..

பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சர்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English