இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக மனிதன் மீதான நேசம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சக மனிதனை ஏமாற்றிப்பிழைக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அரசே மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் சக மக்களை ஏமாற்றுகின்றனர். அதுவும் நவீன மின்னணு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துவிட்ட இக்காலத்தில் இவற்றை சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணலாம். பல்வேறு வகையான மோசடிகள் பல்வேறு பெயர்களில் பிரபலமாகிவிட்டன. இரிடியம் மோசடி, மண்ணுள்ளிப்பாம்பு மோசடி, ஈமுக்கோழி மோசடி, இணைய வழி மோசடிகள், கைபேசி வழி மோசடிகள், முகநூல் வழி மோசடிகள் என்று இப்பட்டியல் நீளுகிறது. காலத்திற்குக்காலம் இத்தகைய மோசடிகள் புதிய அவதாரங்கள்  எடுக்கின்றன. தற்போது நடப்பில் உள்ளது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் அரசியல் ஏஜெண்டுகளின் மோசடிகள்தான். பொதுவாக வங்கியை தவிர்த்து தனி நபர்களிடம் சேமிக்கும் சேமிப்பில்தான் மோசடிகள் நடக்கும் என்றால் தற்போது வங்கியில் பணியாற்றுவோரே மோசடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாவற்றையும் பார்த்து சாதாரண மனிதன் திகைத்து நிற்கிறான். பணம் கொடுத்து  அரசு வேலைக்கு முயற்சிக்கலாமா?, இரிடியம் நபர்களிடம் பணம் கொடுக்கலாமா? என்று என்னிடமும் பலர் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். நமது இன்றைய பதிவு இவற்றை ஆராய்வதே.

இரிடியம் 

பொதுவாக மோசடிகளுக்கு முதன்மை காரக கிரகம் என்று ராகுவை சொல்லலாம். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு பிறகு இழப்பை கொடுத்து இறுதியாக உண்மையை உணர்த்துவது ராகு-கேதுக்களின் பணி. கேதுவின் மோசடியில் ஒரு தனித்துவம் இருக்கும். கேது ஆசை காட்டி இழப்பை கொடுத்து பிறகு ஜாதகரை நெறிப்படுத்தும். ஆனால் ராகு,  வகை தொகையற்ற மோசடிகளுக்கு காரக கிரகமாகும். ராகு கொடுக்கும் பாதிப்பிலிருந்து ஒருவர் விரைவில் மீளமுடியாது. சுக்கிரன் வளமையை நேசிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு  ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்படும் போது அந்த ஜாதகர் பண மோசடியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ராகு-கேதுக்கள் இருவருமே ஆசையை தூண்டி தண்டிக்கும் கிரகங்கள் என்றாலும் தொடர்புடைய திசா புக்தி வரும் வரை இவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் குறுக்கு வழியில் கொடுக்கும் தனத்தை ஒருவர் அனுபவித்து விட்டால் அதன் பிறகு அந்த ஜாதகர் அவற்றின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனலாம். அல்லது ஒரு இழப்பை ஜாதகருக்கு கொடுத்துவிட்ட பிறகு அவருக்கு முறையான மற்றும் முறையற்ற வகைகளில் உதவி புரிகிறது.  ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. ராகு-கேதுக்களுக்கு குருவின் தொடர்பு ஏற்பட்டால் அந்த ஜாதகர் ராகு-கேதுக்களின் மூலம் நேர் வழியில் சிறப்பான தனம் ஈட்டுகிறார். உதாரணமாக கைராசி மருந்துவர், மிக நேர்மையான குற்றம் கண்டுபிடிக்கும் அதிகாரி, நேர்மையான நீதிபதி ஆகியோர் இவற்றின் அம்சங்களாகும். இப்படி குரு தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களுடைய ஜாதகர்களுடன், ராகு-கேதுக்கள் ஒரு தெய்வீக சக்தியாக உடன் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த வகை ஜாதகர்கள் மற்றவர்களின் கர்மாவை அவர்களை தண்டிப்பதன் மூலம் தீர்க்க அவதாரம் எடுத்தவர்கள் எனலாம்.

கீழே ஒரு ஜாதகம்.

இந்த ஜாதகி 1964 ல் பிறந்தவர். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மாங்கல்ய பாவமான 8 ஆமிடம் பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துள்ளது.. இதனால் இந்த ஜாதகிக்கு மாங்கல்ய பலமில்லை. கேது சாரத்தில் மேஷத்தில் குரு நிற்கிறார். களத்திர பாவத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது முதலில் மாங்கல்ய, பாக்ய ஸ்தானாதிபதியான சனியையும் லக்னத்தில் நிற்கும் ராகு முதலில் 5 ஆம் பாவாதிபதியான சுக்கிரனையும் முதலில் தொடுகின்றனர். ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுக்கிரனை கடக்கும் ராகு அடுத்து தொடுவது களத்திர பாவாதிபதியான குருவைத்தான். இத்தகைய அமைப்புகளால் விதவையானவர் ஜாதகி. 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது நிற்பதால் இவரது மகள் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்துள்ளார். இந்த ஜாதகிக்கு ராகு-கேதுக்கள் தீய பலனை ராகு மற்றும் கேதுவோடு தொடர்புடைய குரு திசையில் கொடுத்துவிட்டன. தற்போது ஜாதகிக்கு பாக்ய ஸ்தானமான கும்பத்தில் மூலத்திரிகோணம் பெற்று நிற்கும் சனியின் திசை 2010 முதல் நடக்கிறது.  

மிதுனத்தில் அமைந்த லக்ன ராகு குறுக்கு வழி சிந்தனையை தூண்டுவார். கேது சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். பணத்தின் மீதான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் தன காரக கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஆத்ம அல்லது தாரா காரகர்களாக இருக்க வேண்டும் அல்லது ராகு-கேதுக்கள் தொடர்பு பெறவேண்டும். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நிற்பது கவனிக்கத்தக்கது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட வலையில் சிக்க வைத்து  ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அந்த குறிப்பிட்ட விஷத்யத்தின் மீது அவரது ஆசையை தூண்ட வேண்டும். ராகு முதலில் தொடப்போவது சுக்கிரனைத்தான். மேலும் ஆசையை தூண்டி சிக்க வைக்கும் காரக கிரகமான கேது பாதக ஸ்தானத்தில் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். எனவே ராகுவும்-கேதும்  ஜாதகிக்கு பணத்தின் மீதான ஆசையை தூண்டுவர். இந்த ஜாதகியை 9 ல் ராகு சாரம் சதையத்தில் நிற்கும் சனியின் திசையில், கேது புக்தியில் இரிடியம் மோசடியாளர்கள்  தொடர்புகொண்டனர். சனி பாக்ய ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினாலும் அவர் திடீர் அதிஷ்டத்தை குறிக்கும் 8 ஆம் பாவத்திற்கும் அதிபதி என்பதாலும் சனி ராகு சாரம் பெற்றதாலும் ஜாதகிக்கு இத்தகைய வாய்ப்பு வந்தது. ஜாதகி அவர்களிடம் பணம் கொடுக்குமுன் என்னை ஜாதகத்துடன் அணுகினார். ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் மிதுனத்தில் ஜனன கால ராகு மீது சென்றுகொண்டிருந்தது.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English