கடமையைச் செய்!

பலனை எதிர்பார்த்துத்தான் இன்று நாம் அனைத்து செயல்களையும் செய்கிறோம். ஆனால் கீதையில் கிருஷ்ணர் “கடமையை செய். பலனை எதிர் பார்க்காதே” என்கிறார். ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதற்காகவே நாம் வேலைக்கு செல்கிறோம். பலன் தரா செயலை எதற்குச் செய்ய வேண்டும் என்ற கேள்வி இங்கு எழுவது இயல்பு. குழந்தைக்கு தாய்-தந்தையராக, பெற்றோர்களுக்கு குழந்தைகளாக, பணியிடத்தில் சேவகனாக பல்வேறு அவதாரங்களை நாம் எடுக்க வேண்டியுள்ளது. இந்த அனைத்து அவதாரங்களிலும் நாம் நிறைவடைகிறோமா? என்றால் பெரும்பாலோரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். காரணம் மனித மனம் எதிர்பார்ப்பில்தான் வாழ்கிறது. எனது மகன் இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எனது திறமைக்கு இன்னும் அதிக ஊதியம் தரப்பட்டிருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே நமது மனம் எண்ணுகிறது. பெற்ற மதிப்பெண்கள் குறைவு என்பதற்காக கல்வியை நாம் நிறுத்தி விடுகிறோமா?. வாழ்க்கை பல வித அனுபவங்களுக்குட்பட்டது. இந்த அனுபவங்களைத்தான் கர்ம வினைகள் என்கிறோம். இந்த வினைகளை நிறையோ, குறையோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் ஞானிகள். சாதாரண மனிதன் அப்படி ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் தான் எதிர்பார்க்கும் வெகுமதியை பெற இயலாதபோது சாதாரண மனிதன் தவிக்கிறான். அசாதாரணமான மனிதன் தனது திறமைக்குரிய வெகுமதியை நாடிப் பயணிக்கிறான். பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை முதலீடாக்கி இறுதியில் வெல்கிறான். இதற்கு அவனது பலம் அவனுக்கு மிகச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். வெல்லும்வரை அவனுக்கு பொறுமையே முதலீடு. பொறுமையாக நமக்கான காலம் வரும் வரை தொடர்ந்து நமது இலக்கை நோக்கிய பாதையில் கடமையை செய்துகொண்டே செல்கையில் நமது முயற்சிகளுக்கான பலன் ஒரு காலத்தில் கிடைத்தே தீரும் என்பதே மேற்கண்ட கீதா வாசகத்திலுள்ள மறைபொருள். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

ஜாதகத்தில் ஆராய்ச்சி பாவகம் என்பது 8 ஆமிடமாகும். விருச்சிகம் கால புருஷனின் 8 ஆவது பாவகமாகும். லக்னம் விருட்சிகமாகி அதில் அமைந்த ராகு லக்னத்திற்கு 8 ஆமதிபதி புதனின் கேட்டையில் அமைந்து, 8 ஆமிட புதன் ராகுவின் திருவாதிரையில் அமைந்து நட்சத்திரப் பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்ன கிரகம் 8 ஆமிடத்துடன் தொடர்பானால் இயல்பாகவே ஆராய்ச்சித் திறன் ஏற்படும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 10 ல் சூரியனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்து லக்னத்தை 4 ஆம் பார்வை  பார்க்கிறார். இவை ஜாதகி தனது செயல்களில் தீவிரத்தன்மை கொண்டிருப்பவர் என்பதையும், பொதுவான ஆராய்ச்சித் திறனும் நினைத்ததை அடையும் விடாப்பிடியான மனப்போக்கு உடையவர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியன் வீட்டில் திக்பலம் பெற்றதால் இவர் ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்பட தகுதியானவர் என்பதை ஜாதகம் குறிப்பிடுகிறது. ஆனால் 10 ஆமதிபதி சூரியன் 10 க்கு விரையத்தில் லக்னாதிபதி செவ்வாயின் நீச வீட்டில் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் கடகத்தில் அமைந்தது இவரது பணியில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டுகிறது.

தசாம்சத்தில் லக்னாதிபதி சந்திரன் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்துள்ளார். இதனால் இவர் ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார். ஜீவன காரகர் சனி லக்னத்திற்கு 5 ல் 3, 12 அதிபதி புதனுடன் இணைந்துள்ளார். விருட்சிகத்தில் புதனும் சனியும் நட்சத்திரப் பரிவர்த்தனையில் உள்ளனர்.(புதன்-அனுஷம், சனி-கேட்டை) இதனால் இவர் புதனும், 3 ஆமிடமும் குறிக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  6, 9 அதிபதி குருவானவர் சுக்கிரன் மற்றும் கடகத்தின் ராஜ யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்து 3 ஆமிடத்தில் இருந்து தசை நடத்துகிறார். இதனால் இவரது நிறுவனம் ஒரு வெளிநாடு சார்ந்த நிறுவனமாகும். இதில் 3 ஆமிட செவ்வாய், 5 ஆமிட புதனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளதை கவனிக்க. 3 ஆமிடம் முயற்சி, 5 ஆமிடம் சிந்தனை, அதிஷ்டம். ஆகியவற்றை குறிக்கும். விருட்சிகத்தில் புதனுடன் இணைந்துள்ள சனி ஆராய்ச்சி பாவகமான 8 ஆமிடத்தின் அதிபதியாவார். இவர் ராகு தசையில், தான் பணிபுரியும் நிறுவனத்தில் 2 தசாப்தங்களுக்கு முன்  பணியில் சேர்ந்தவர். தனது நிறுவனத்தை முன்னெடுத்துச் சென்றதில் ஜாதகியின் பங்கும் குறிப்பிடத்தக்கது என்பதால் இவர் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். குரு தசையில் சுக்கிர புக்தியின் துவக்கத்தில் இவர்களது அணியிடம் நிறுவனத்திற்கு தேவையான ஒரு புதிய மென்பொருளை உருவாக்கும் பணி கொடுக்கப்பட்டது. தசாம்சத்தில் புக்தி நாதர் சுக்கிரன் முயற்சி பாவகத்தில் நீசம் என்பதால் கடும் உழைப்பை ஜாதகி வழங்கியும் இவர்களது குழுவினரால் குறிப்பிட்ட மென்பொருளை உருவாக்க தாமதமாகிறது. தசாம்சத்தில் சுக ஸ்தானாதிபதி சுக்கிரன், 4 க்கு விரையமான 3 ஆமிடத்தில் நீசம் பெற்றது இவர்களது உழைப்பு கடினமானதே என்பதை தெரிவிக்கிறது. 3, 5 க்குரிய புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றதால் ஆய்வின் பலனை அடைய இவர்களது குழு கடும் முயற்சி செய்துள்ளதும் தெரிகிறது.. காலதாமதங்கள் தொடர்வதால் இவர்களது நிறுவனம் இவர்கள் குழு மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளது. இதனால் ஜாதகி கடும் மன உழைச்சலில் உள்ளார்.

இவர்களது முயற்சிகள் ஏன் சரியான பலனை அளிக்கவில்லை? என ஜோதிட ரீதியாக ஆராய்வோம் வாருங்கள்.

ராசிச் சக்கரத்தில் தசாநாதர் குரு வக்கிரம் பெற்று ராகு-கேதுக்களின் அச்சை விட்டு தனியாக பிரிந்து நிற்பதை காணலாம். இது  குரு தசையில் மற்றவர்களோடு இணைந்து இயங்கும்போது இவரது கண்ணோட்டங்களை குழு உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை குறிக்கிறது. ஜாதகி தனியாக இயங்கும்போது இவரது எண்ணம் இவரை மட்டுமே சார்ந்தது, மற்றவர்களோடு இணைந்து இயங்கும்போதுதான் இது தெரியவரும். குறிப்பாக குரு தசை நடக்கும்போதுதான் இது தெரியவரும். குரு,  ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி தனியாக இருப்பது மட்டுமல்ல, ஜாதகத்தில் குரு மட்டுமே வக்கிரமும் பெற்றுள்ளதுதான் இதற்கு காரணம். வக்கிர கிரக சிந்தனைகளும் நேர்கதி கிரக சிந்தனைகளும் வேறுவேறானவை என்பதால் ஜாதகிக்கும் குழு உறுப்பினர்களுக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லையென்பதை தசாநாதர் குருவின் வக்கிர நிலை குறிப்பிடுகிறது. .

பொதுவாக பராசர திரேக்காணமானது 3 ஆமிடத்தின் விரிவாக்கமான சகோதரம், முயற்சி, வீரம், வெற்றி போன்றவற்றை அறிய உதவும். செய்தொழிலில் நாம் எடுக்கும் முயற்சிகள், அதன் வெற்றி-தோல்விகள், தொழிலில் ஏற்படும் மன அழுத்தங்கள் ஆகியவற்றை அறிய பரவிருத்தி திரேக்காணம் நமக்கு உதவுகிறது. எனவே இங்கு மேற்கண்ட ஜாதகியின் முயற்சிகளின் விளைவை அறிய நாம் பரவிருத்தி திரேக்காணத்தை எடுத்துக்கொண்டு ஆராய்கிறோம். பரவிருத்தி திரேக்காணத்தில் மகர லக்னத்தில் 8 ஆமதிபதி சூரியன் அமைந்துள்ளது ஜாதகி 8 ஆமிடம் குறிக்கும் ஆய்வு முயற்சியில் தலைமை பொறுப்பில் உள்ளதை காட்டுகிறது. லக்னாதிபதி சனி கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் புதனுடன் இணைந்து லக்னத்திற்கு 11 ல் அமைத்துள்ளது லாபநோக்கை எதிர்பார்த்து இவர்களது ஆய்வு நடப்பதை குறிக்கிறது. ஆனால் கூட்டாளிகளை குறிக்கும் புதன் லக்னாதிபதி சனியுடன் லக்ன பாதகத்தில் அமைவது கூட்டாளிகளால் ஜாதகிக்கு ஏமாற்றம் ஏற்படுவதை  குறிக்கும். (புதன்-சனி தொடர்பு = ஏமாற்றம்). கூட்டாளிகளை குறிக்கும் 7 ஆமிடத்தில் சந்திரன் குருவின் புனர்பூஷம்-4 ல் அமைந்துள்ளார். தசாநாதர் குரு லக்ன விரையாதிபதியாகி ஆட்சி நடத்தும் சூழலில், ஜாதகியின் குழுவினரால் ஜாதகிக்கு பயனற்ற விரையங்களே ஏற்படும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. புக்திநாதர் சுக்கிரன் 10 ஆமிடத்தில் ஆட்சி பெற்று வலுவாக அமைந்துள்ளார். ஆனால் சுக்கிர புக்தியில்தான் ஜாதகிக்கு தொழில் ஆய்வில் மனக்காயங்களை அதிகம் அடைந்துகொண்டுள்ளார். 10 ஆமிடத்தில் பாவகர்த்தாரி யோகத்தில் அமைந்த சுக்கிரனும் துலாத்தில் விரையாதிபதி குருவின் விசாகம்-3 ல்தான் நிற்கிறார் என்பதே ஜாதகியின் தொழில் ஆய்வுகள் வெற்றிதராமல் தாமதமடையக் காரணமாகும். குழுவினர் ஜாதகியின் கண்ணோட்டத்தை உள்வாங்கிப் புரிந்துகொண்டு வேலை செய்ய மாட்டார்கள் என்பதும் அவர்களால் ஜாதகிக்கு ஏமாற்றமே ஏற்படும் என்பதையும் பரவிருத்தி திரேக்காணம் தெளிவாகக் காட்டுகிறது. ராசிச் சக்கரத்தில் புக்திநாதர் சுக்கிரன் எட்டாமிடமான மிதுனத்தில் அமைந்தது ஜாதகியிடம் ஆய்வுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை காட்டினாலும் ஆய்வின் வெற்றி என்பதை பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆமிடமே குறிப்பிடும். 8 ஆமிட கிரகத்திற்கு 9 ஆமிட தொடர்பு ஏதேனும் ஒரு வகையில் இருந்தால்தான் ஆய்வில் வெற்றி கிடைக்கும். ராசிச் சக்கரத்தில் 8 ல் அமைந்த சுக்கிரனுக்கு 9 ஆமிட தொடர்பு எந்த வகையிலும் இல்லை. என்பதால் சுக்கிர புக்தியில் ஆய்வு வெற்றியைத் தராமல் நீள்கிறது. ஆய்வு நோக்கில் செயல்படுபவர்கள் இதை ஜோதிட ரீதியாக அறிந்து செயல்படுவது கால விரையத்தையும் பொருளாதார விரையத்தையும் தவிர்க்கும்.

இன்றைய காலத்தில் R&D எனும் ஆராய்ச்சி மற்றும் மேம்டுத்துதல் பிரிவிற்கு அனைத்துத் துறைகளிலும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கப்படும் நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும், ஆய்வில் வெற்றி சதவீதம் எந்த அளவு இருக்கும் என்பதையும் அறிந்து செயல்படுவது அவசியம். இதற்கெல்லாம் ஜோதிடம் பார்க்க வேண்டுமா? என்றால் அப்படி பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட ஜாதகமே இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English