மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு உள்ளது. எனவே மாறுதலுக்காக பயப்படாதீர்கள், அதே சமயம் தற்காலிகமாக வேலை இழப்புகளுக்குப் பிறகு ஒரு சில மாதங்களில் மறு வேலையும் அமைந்துவிடும் என்று பலன் கூறியிருந்தேன். நான் கூறியது போலவே 5 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தவர் 2௦22 க்குப் பிறகு அடிக்கடி பணிமாறுதல்களை சந்தித்து வருபவர். முன்பே கூறியிருந்தபடி பணியிழப்புகளால் பதட்டப்படாமல் இருந்தார். ஆனால்  தற்போது பணிபுரிந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு காரணமாக நல்ல சம்பாதியமுள்ள வேலையை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டுவிட்டது. தற்போது வேலை போய்விட்டதை வீட்டில் கூறினால் மனைவியிடம் அறைகுறையாக கிடைக்கும் மரியாதையும் போய்விடும் என்ற பயம் அவருக்கு. இதனால் பணியிழப்பை மனைவியிடம் கூறாமல் பெங்களூரில் குடும்பத்தைவிட்டு தொலைவான ஓரிடத்தில் தனியானதொரு வீட்டில் மனைவிக்கு தெரியாமல் வசித்துக்கொண்டு வேறு வேலை தேடிக்கொண்டிருப்பவர். பழைய “கல்யாணப்பரிசு” தங்கவேலு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. உங்களுக்காகத்தான்  சமீபத்தில் “குடும்பஸ்தன்” என்றொரு படம் கூட வந்தது என்றேன். நீங்கள்தான் வேலை நிலவரம் இப்படித்தான் இருக்கும் என்றீர்கள் அதனால்தான் தைரியமாக இருக்கிறேன். இப்போது நீங்களே இப்படி கிண்டல் செய்தால் என்ன செய்வது என்று பரிதாபமாக கேட்டார். சரி என்ன விஷயம்? என்றேன். தற்போதைய வேலையும் போய்விட்டது. ஆனால் இரு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டுள்ளேன். இரண்டிலும் நம்பிக்கை உள்ளது. எதை தேர்வு செய்வது என்று கேட்டார். இதற்கு என்ன ஜோதிடம் ,எது நல்ல நிறுவனமோ, நல்ல சம்பாத்தியமுள்ள வேலையோ அதை தேர்வு செய்ய வேண்டியதுதானே? என்றேன். அதில்தான் பிரச்னை. இரு நிறுவனங்களில் சிறப்பானது என நான் கருதும்  நிறுவனத்திலிருந்து அழைப்பு இன்னும் வரவில்லை. ஆனால் மற்றொரு நிறுவனத்தில் அழைக்கிறார்கள். ஒரு வேலைக்கு தாமதித்தால் அழைக்கும் மற்றொரு நிறுவன வேலையையும் இழந்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது என்றார். இதற்கு ஜாதகத்தைவிட பிரசன்னமே துல்லியமாக பதிலளிக்கும் என்பதால் அதற்காக ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு “தற்போது அழைப்பு வந்துள்ள நிறுவன வேலையை ஏற்றுக்கொள்வதா? அல்லது மற்றொரு நிறுவனத்தின் அழைப்புக்காக காத்திருப்பதா?” என்ற கேள்வியுடன் பார்க்கப்பட்ட பிரசன்னம் கீழே பதிவிடப்பட்டுள்ளது.

பிரசன்னத்தில் கால புருஷனுக்கு பத்தாமிடமான மகரமே உதயமாக வந்தது வேலை விஷயம் என்பதை உறுதி செய்கிறது. ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் கால புருஷ தத்துவம் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை அறிக. உதயாதிபதி சனி உள்வட்டத்திலும் வெளி வட்டத்திலும் உதயத்திற்கு மூன்றாமிடத்தில் நிற்கிறார்கள். இது கேள்வியாளர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர் என்பதையும் வேலை விஷயத்தில் தற்போது கிடைத்தே ஆக வேண்டும் என்று முனைப்பில் உள்ளதும் புரிகிறது. இரு உதயாதிபதிகளும் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தில் இருப்பதால் கேள்வியாளர் வேலை கிடைக்க கடும் முயற்சியில் உள்ளதையும் இது தெரிவிக்கிறது. உதயத்தில் நிற்கும் சந்திரனே 6 ஆமிடத்திலும் நிற்பதால் வேலை கேள்வியாளருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. உதயத்தில் சந்திரன் நின்றாலே கேள்வியாளர் சாதகமான பலனை அடைவார் என்பது திண்ணம். ஆனால் உதயத்தை நோக்கி வரும் ராகு கேள்வியாளருக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால் வேலை ராகு காரகத்துவம் சார்ந்தது என்பதால் தடுமாற்றம் தடையாக மாறாது. உதயாதிபதி சனி உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் ராகுவை கடந்து நிற்பதும் இதை தெளிவாக்குகிறது.

ஜாமக்கோளில் இரு விஷயங்களை ஒப்பிட்டு பதிலளிக்க வேண்டுமெனில் உதயத்தை முதலாவது என்றும் உதயத்திற்கு ஏழாமிடத்தை இரண்டாவது என்றும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி. பணி அழைப்பு வந்துள்ள முதல் நிறுவனத்தை உதயமாகவும், கேள்வியாளர் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிறுவனத்தை உதயத்தில் 7 ஆமிடமாகவும் இங்கு அவதானிக்கிறோம். உதயத்தில் உடனடியாக பலனளிக்கும் சந்திரன் அமைந்துள்ளார். இது கேள்வியாளர் முதலாவது நிறுவன அழைப்பை பெற்றிருப்பதை குறிப்பிடுகிறது. இரண்டாவது நிறுவனத்தை குறிக்கும் 7 ஆமிடத்தில் சூரியன், புதன் ஆகியோருடன் உச்ச குரு அமைந்துள்ளார். 7 ல் தனகாரகர் குரு உச்சம் பெற்று நிற்பதால் இரண்டாவது நிறுவனம் பொருளாதார வலுக் கூடியது. முதன்மை என்ற வார்த்தையின் காரக கிரகமான சூரியன் 7 ல் நிற்பதால் அந்நிறுவனம் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும். இதை கூறியபோது கேள்வியாளர் நிறுவனத்தின் பெயரை கூறினார். அதுதான் இந்தியாவில் மென்பொருள்துறை வளர்ச்சிக்கு பாதையமைத்துத் தந்த முதன்மையான நிறுவனமாகும். அதனை அடியொற்றியே இன்று பல நிறுவனங்கள் கடை திறந்துள்ளன என்றால் மிகையல்ல.  இதை 1௦ ஆமிடத்தில் 7 ல் நிற்கும் சூரியன் திக்பலத்தில் நிற்பதை கவனித்து உறுதி செய்துகொள்ளலாம். இதனால்தான் கேள்வியாளர் அந்த இரண்டாவது நிறுவனத்தின் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளார்.

7 ல் அமைந்த 6, 9 ஆமதிபதி புதன் அந்த 2 ஆவது நிறுவனம் தற்போது தனது வியாபாரத்திலும் பொருளாதாரச் சிக்கல்களிலும் உள்ளதை குறிப்பிடுகிறது. 7 ல் நிற்கும் சூரியன் உதயத்தின் 8 ஆமதிபதி என்பதை கவனிக்க. 8 ஆமதிபதி பாதிப்பை தரக்கூடியவர் என்பதால் 2 ஆவது நிறுவனம் அழைப்பானை அனுப்பும் என்று எதிர்பார்த்திக் காத்திருந்தால் பாதிப்பு நிச்சயம்.  மேலும் 7 ல் நின்ற சூரியன் உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்றாலும் அங்கு நீசம் பெற்றுத்தான் அமைந்துள்ளார். கேள்வியாளரின் தீவிர மனநிலையை குறிப்பிடும் 1௦ ஆமிடத்தில் சூரியன் திக்பலம் பெற்று அமைந்தது கேள்வியாளர் 2 ஆவது நிறுவன வேலைக்காக தீவிர முனைப்புடன் இருப்பதை குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு சூரியனின் நீசம் இந்தியாவின் முதன்மையான நிறுவனமான அது தற்போது பலவீனமான நிலையில்  இருப்பதை குறிப்பிடுகிறது. 1௦ ல் பலவீன சூரியனுடன் கவிப்பு நிற்பது அந்த இரண்டாவது நிறுவனத்திற்காக காத்திருந்தால் பாதிப்பை கேள்வியாளர் எதிர்கொள்வது உறுதி என்பதை  தெரிவிக்கிறது.

மேற்கண்ட அமைப்புகளை குறிப்பிட்டு கேள்வியாளரிடம் இன்றைய நிலையில் கையில் கிடைத்த முதல் நிறுவன வேலையை ஒப்புக்கொள்ளுங்கள். இரண்டாவது நிறுவன பணி அமைய வாய்ப்பு சாதகமாக இல்லை. தற்போது மென்பொருள்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கிய பிறகு நல்ல நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் என்றேன். ஒவ்வொரு குழப்பத்திலிருந்தும் என்னை காப்பாற்றுகிறீர்கள் என்றார் கேள்வியாளர்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English