வேலையும் அங்கீகாரமும்!

திறமையும் வேலையும் ஒருங்கிணையும்போது அதில் ஒரு நேர்த்தி வெளிப்படும். அப்படி நேர்த்தியான வேலையில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களின் திறமை பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொதுவானது. அப்படி பாராட்டப்படவில்லை எனில், அது தங்களது திறமையை அவமதிப்பதாகும் என்று வேலையை விட்டு விலகி வேறிடம் செல்லும் பணியாளர்கள் ஒரு சாரார். தங்கள் திறமைக்கான வெகுமதிதான் ஊதியம். எனவே தனிப்பட்ட பாராட்டு கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டியதில்லை எனும் பணியாளர்கள்  மற்றொரு சாரார். இதில் அனைத்து நிர்வாகத்தார்களும் பணியாளர்கள் அனைவரின் திறமைகளையும் புரிந்துகொண்டு வேலை வாங்குகின்றனர் என்பது நிச்சயமில்லை. தங்கள் பணி நடந்தால் சரி என்பதே நிர்வாகத்தாரின் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும். ஜோதிடப்படி சூரியன் ஒருவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் தனது நிர்வாகியிடமிருந்து பாராட்டுக்கள் எதையும் எளிதில் பெற்றுவிட இயலாது. ஜாதகத்தில் சனி வக்கிரம் பெற்றிருப்போருக்கு தங்களது பணி பற்றிய விஷய ஞானம் பிறரைவிட அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களது விஷய ஞானம் மற்றவர்களுக்கு எளிதில் விளங்காததாக இருக்கும். பிறாரால் புரிந்துகொள்ளப்படாத அறிவு ஒருவரது முன்னேற்றத்திற்கு உதவாது. இதனால் சனி வக்கிரமானவர்கள் தங்களது பணியில் மனத்தளர்ச்சியுடனேயே ஈடுபடுவர். ஜாதகத்தில் சனி பாதிக்கப்படிருப்போரும் பணியில் தங்களுக்குரிய மதிப்பை எளிதில் பெறுவதில்லை. தங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகவும், பிறருக்கு புரியாத தொழிலறிவு உடையோரும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுவிடும் மன நிலையில் இருப்பர். தற்காலத்தில் பெரு நிறுவனங்களில் தொழிலாளர் மனநிலை (Employee Psycology)  எனும் ஒரு விஷயம் மனிதவள மேலாண்மையாளர்களால்  பேசப்படுகிறது. தொழிலாளர்களின் மனநிலையில் தளர்ச்சி இருப்பின் அது தங்களது உற்பத்தியை பாதிக்கும் என்பதை அறிந்து நிறுவனங்கள் முன்நடவடிக்கை எடுக்கின்றன. இப்படியான இன்றைய பணிச்சூழலில் பணியாளர்களின் ஜாதக அமைப்பு எப்படி அவர்களை நிர்வாகத்துடன்  பிணைக்கிறது என்பதை ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்னத்தில் சனி வக்கிரம் பெற்று அமைந்துள்ளார். சனி வக்கிரமானதால் தனது பணி சார்ந்த ஆனால் பிறரால் எளிதில் புர்ந்துகொள்ளப்படாத அறிவு ஜாதகருக்கு அதிகம் இருக்கும்.  லக்ன சனி பிறரிடம் பணிந்து பணிபுரிய வைக்கும். ஆனால் லக்னத்தை ராஜ கிரகம் சூரியன் 7 ல் இருந்து பார்க்கிறார். மேலும் சனி வக்கிரமடைந்து 12 ஆமிடத்தை நோக்கி திரும்புகிறார்.  இதனால் ஜாதகருக்கு பணியாளர் மனோபாவம் குறைந்து முதலாளி மனோபாவம் மிகும். ஆனால் லக்ன யோகாதிபதியும் ஜீவன ஸ்தானமான 1௦ ஆமதிபதியுமான சூரியன் லக்னாதிபதி செவ்வாயுடன் 1௦ ன் பாவத்பாவம் 7 ல் நிற்பதால் ஜாதகர் கௌரவமான பணி அல்லது அரசுப்பணி கிடைத்தால் மட்டுமே வேலைக்குச் செல்வார். சாதாரண பணிக்கு செல்ல மாட்டார். தசா-புக்திகள் இவரது பணியின் தன்மையை நிர்ணயிக்கும். ஜாதகர் பள்ளி இறுதியை வேலை ஸ்தனமான 6 ஆமிடத்தில் நிற்கும் புதன் தசையில் முடித்து, புதன் தசை இறுதியிலேயே அரசுப்பணிக்குச் சென்றுவிட்டார். புதன் தசையை அடுத்து வந்த கேது தசையும் 6 ஆமிடத்தை தொடர்புகொள்வதால் கேது தசையும் பணிக்கு சிறப்பை சேர்த்தது. தற்போது ஜாதகர் சுக்கிர தசையில் இருக்கிறார். சுக்கிரன் 5 ல் உச்சம் பெற்றதால் தனது வீட்டில் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயையும் சூரியனையும் வலுவூட்டுகிறார். இதனால் சுக்கிர தசையில் ஜாதகருக்கு பணியில் சிறப்புகளும் அரசு வகை கௌரவங்களும் கிடைத்தன. ஆனால் சுக்கிரன் வேலை பாவகமான 6 க்கு விரையத்தில் 5 ல் நிற்பதால் ஜாதகருக்கு கிடைத்த பொருளாதார வளங்களும், கௌரவங்களும் கிடைத்ததை எண்ணி இனி வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி வேலையை விட்டு விலக வைக்கும். இதனால் 17 ஆண்டுகள் பணிபுரிந்த ஜாதகர் வேலையை விட்டு விலகி தற்போது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழ்ந்து வருகிறார்.

தசாம்சத்தில் லக்னாதிபதி குரு, உச்ச சூரியனுடன் இணைந்து கடக சனியின் 1௦ ஆம் பார்வையை பெற்றதால் ஜாதகருக்கு அரசுப்பணி அமைந்தது. ஆனால் சனி அவமான ஸ்தானமான 8 ல், 6 ஆமதிபதியும் தசாநாதருமான சுக்கிரனுடன் இணைந்ததால் பணியில் ஜாதகர் தனக்கு கௌரவ பங்கம் ஏற்பட்டாலும், சுக்கிரன் குறிக்கும் வசதி வாய்ப்புகளையும் அடைந்த பிறகும் வேலையை உதறுவார் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.

கீழே இரண்டாவதாக மற்றுமொரு ஆணின் ஜாதகம். 

மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் சூரியனின் வீட்டில் அமர்ந்து சூரியன் புதனின் ஆயில்யத்தில் கடகத்தில் அமைந்ததால் இந்த ஜாதகர் பொதுவாக கௌரவத்தை அதிகம் எதிர்பார்ப்பார். புதன் 3 ஆமிடத்தில் கேதுவுடன் இணைந்தது ஜாதகரின்  நுண்ணறிவை குறிப்பிடுகிறது. பொதுவாக புத்திசாலிகள் பணிபுரிய விரும்ப மாட்டார்கள். ஆனால் இங்கு 2 ஆமதிபதி சந்திரன், 6 ஆமிடத்தில் புதனின் கேட்டையில் நீச்சம். 6 ஆமிட செவ்வாய் 2 ஆமிடத்தில் புதனின் ஆயில்யத்தில் நீச்சம் பெற்று சூரியனுடன் அஸ்தங்கம். பரிவர்த்தனைக்குப் பிறகும் சந்திரனும் செவ்வாயும் லக்னாதிபதி புதனின் சாரத்திலே அமர்வார்கள். இது ஜாதகர் திறமை மூலம்  வெளிநாட்டில் பணிபுரியும் அமைப்பை குறிப்பிட்டாலும், சூரியன் தொடர்பு பெற்ற ஜாதகர் தன் திறமையால் சுயமாக பொருளீட்டவே  விரும்புவர். பணி செய்யும் எண்ணத்தை இவ்வமைப்பு குறைத்துவிடும். ஜீவன காரகர் சனி நீசம். சனிக்கு வீடு கொடுத்த செவ்வாயும் நீசம். ஜீவன ஸ்தானமான 1௦ ஆமதிபதி குரு, 1௦ க்கு 8 ல் துலாத்தில் மறைவதால் ஜாதகருக்கு சுய தொழில் செய்யும் அமைப்பு இல்லை. ஆனால் 2 ம், 6 ம் நீர் ராசிகள் என்பதால் ஜாதகர் வெளிநாட்டில் பணிபுரியும் அமைப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டிற்கு சென்றால் வருமானம் உண்டு. வெளிநாடு செல்லாவிட்டால் இங்கு சந்திரன்-செவ்வாய் பரிவர்த்தனை செயல்படாது. இதனால் ஜாதகருக்கு வருமானம் இருக்காது. 2 ஆமிடமான கடகத்தில் சூரியன், செவ்வாய் ஆகிய இரு பாவிகள் அமைந்துவிட்டதால் ஜாதகர் பணிக்கு செல்லாவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும். இந்த நிலையைத்தான் ஜாதகர் தற்போது அனுபவிக்கிறார். தற்போது ஜாதகர் வெளிநாடு ஒன்றில் வேலை செய்கிறார். ஆனால் சூரியனோடு தொடர்புகொண்ட லக்னாதிபதி புதன் தன்னை பிறர் ஆதிக்கம் செய்வதை விரும்புவதில்லை. முதலாளியை குறிக்கும் சூரியன் லக்னாதிபதி புதனுக்கு 12 அமைந்துவிட்டதால் இவருக்கு வேலை கொடுக்கும் முதலாளி  இவரை மதிக்க மாட்டார். ஏற்கனவே பணி செய்யும் எண்ணமே இல்லாத ஜாதகர் வெளிநாட்டிலும் வேண்டா வெறுப்பாகத்தான்  பணி செய்வார். இதில் பணியிடத்தில் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், நிர்வாகம் தன்னை மதிக்காவிட்டாலும் ஜாதகர் தனது வேலையை உதறும் மன நிலையில் இருப்பார். தசா-புக்திகள் இவர் என்ன சூழலை அனுபவிப்பார் என்பதை கூறிவிடும்.

ஜாதகருக்கு நடப்பது ராகு தசை சுய புக்தி. லக்னத்திற்கு 9 ஆமிட ராகு ஜாதகருக்கு வெளிநாட்டு வேலையை வழங்குகிறார். ஆனால் அவர் சூரியனுக்கு 8 ல் அமர்ந்து சூரியனது வீடான சிம்மத்தை பார்க்கிறார். சூரியனுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்தும் ராகு தசை நடப்பவரை சூரியனின் அம்சமான முதலாளி அங்கீகரிக்க மாட்டார். இவரது அங்கலாய்பே கடுமையாகவும் திறமையாகவும் உழைக்கும் தனக்கு, தனது முதலாளி உரிய அங்கீகாரம் தருவதில்லை என்பதுதான். அதற்காக தனது பணியை விட்டு தாய்நாடு திரும்புவதாக கூறுகிறார்.

தசாம்சத்தில் லக்னம் வர்கோத்தமம் பெற்றது தொழில் சிந்தனையில் ஜாதகரின் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கிறது. ஆனால் தசாம்ச லக்னாதிபதி புதன் நீசமாகி மகர சனியின் மூன்றாவது பார்வையை பெறுவதால் கடுமையாக உழைத்தால்தான் ஜாதகர் உயர்வடைய முடியும். தசாம்சத்தில் சூரியன் 6 ல் மறைந்து கேது தொடர்பு பெறுவதால் இவர் தனது முதலாளியிடம் தனது வேலைக்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது வீண். லக்னாதிபதி புதன் பலவீனமடைந்து, தசநாதர் ராகு 12 ல் நின்று தசை நடத்துவது ஜாதகருக்கு உள்நாட்டில் முன்னேற்றமில்லை. வெளிநாடுதான் சிறப்பைத் தரும் என்பதை குறிப்பிடுகிறது.

கடமையை செய்! பலனை எதிர்பார்க்காதே என்பர் முன்னோர். ஆனால் நாம் இன்று பொருளாதாரப் பலனை எதிர்பார்த்துத்தான் வேலை செய்கிறோம். கடமையை அது பிடிக்காவிட்டாலும் நமது குடும்பத்திற்காக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதிலிருந்து மீண்டு தங்களுக்கு பிடித்தமான தொழிலில் ஈடுபட்டு வாழ்வில் உயரும் துணிச்சல் எல்லோருக்கும் அமைவதில்லை.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English