காலனால் அழிக்க இயலாத காவியம்.

கண்ணீர் அஞ்சலி 

 M.S.விஸ்வநாதன்                      
           1928 – 2015

கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும்  நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும் துலாம் ராசிக்குள் சென்று இணைந்ததிலிருந்து காலம் தனது கோரதாண்டவத்தை ஆடிவருகிறது. இப்போது சனியும் ராகுவும் துலாம் ராசியை விட்டு விலகிவிட்டாலும் துலாம் ராசிக்கு இருபுறமும் அவை நிற்பதால் கடுமையான பாவகர்த்தாரி யோகத்தில் துலாம் ராசி அகப்பட்டுக்கொண்டுள்ளது. தராசுத்தட்டு தடுமாரிக்கொண்டிருக்கிறது.நீதி சாமான்யனுக்கல்ல என்ற நிலை தோன்றிவிட்டது குறித்த விரக்தி அடித்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தியத் திருநாட்டில் நீதித்துறை மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தங்களது குடும்பம் மற்றும் பெண்கள் குறித்த அச்சத்திற்கு இடையே வாழ்ந்துவருகிறான் இந்தியப் பாமரன். 
துலாம் ராசி குறிக்கும் தமிழகத்து மக்களுக்கு இந்த காலகட்டத்தை கடந்து வருவது பெரிய வேதனை.நல்ல கலைகளில் மனிதன் தனது வேதனைகளை மறக்கிறான்.  திரைத்துறையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுவரும் இழப்புகள் அதீதமானவை. 
தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தாங்கள் பால்யத்தில் கேட்டு பார்த்து மகிழ்ந்த நல்லிசையை மனதில் அசைபோடுவதுதான்.  நல்ல திரைப்படங்களை, நல்ல கலைஞர்களை போற்றும் தமிழன் அத்தகைய கலைஞர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என மகிழ்கின்றான். 
இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும் என எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன்.  நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இயலாமல் சிறுவயதில் தாயுடன் உயிரை நீர்நிலையில் குதித்து மாய்த்துக்கொள்ள இருந்த நிலையில் கடைசி வினாடியில் காப்பாற்றப்பட்டனர் M.S.விஸ்வநாதனும் அவரது தாயாரும். காரணம் காலம் அவருக்கு அளித்திருந்த கடமை. 
இப்போது படைப்பின் காரணத்தை நிறைவு செய்து மீண்டும் இறைவனின் பொற்பாதங்களில் சென்று சேர இருக்கிறது M.S.V. யின் ஆன்மா. 
காலம் அவரது உயிரை பறித்துவிட்டது.
 ஆனால் அவரது இசை தமிழ் சினிமா வாழும்வரை உயிரோடிருக்கும்.அதை காலனால் அளிக்க இயலாது.
ஆம் M.S.V காலனால் அளிக்க இயலாத காவியம்.

கனத்த இதயத்துடன்,
அன்பன்,பழனியப்பன்.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English