
ஆத்ம நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்தார். வக்கீலுக்கு படிக்கவிருக்கிறேன். தனது உறவினர் ஒருவர் படிக்கவுள்ளார். அதனால் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது படிப்பது பலன் தருமா? என்று கேட்டார். நீதி கிடைக்க மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இத்துறையை தேர்வு செய்து படிப்பவர்கள் அருகிவிட்டனர். காரணம் இத்துறை தவறான அரசியல்வாதிகளால் இன்று களங்கப்பட்டுவிட்டது என்று உச்ச நீதிமன்றமே புலம்பியிருக்கிறது. தற்போதெல்லாம், அரசியல்வாதிகளின் அடியாள் கூட்டமே நீதித்துறையை தேர்வு செய்து படிக்கிறது. நண்பரின் ஆர்வம் மற்றவரால் தூண்டப்படிருக்கிறது. கையில் வைத்திருந்த டாரட்தில் ஒரு அட்டையை எடுத்து நண்பருக்கு பலன் கூறினேன்.

கேள்வியை நண்பர்தான் கேட்டார். அவரது உறவினர் கேட்கவில்லை. எனவே இங்கு கையில் கோலை தாங்கி இருப்பவர் நண்பர் என்று எடுத்துக்கொள்ளலாம். தலையில் தொப்பி. கேள்வி எழுப்பிய நபர் தலைமைப் பொறுப்பை விரும்புபவர். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர். தனது வீட்டின் முன் நிற்கிறார். குடும்பம் உடையவர் தனது அடுத்த முயற்சிக்கான வாய்ப்புகளை தேடுகிறார். கையில் ஒரு கம்பு. கேள்வியாளர் முன்னாள் ஒரு சவால் (படிக்க வேண்டும் என்ற சவால்) உள்ளது. உடன் மற்றொரு கோல் பின்னால் சுற்றுச் சுவரோடு இணைந்து உள்ளது. கேள்வியாளரது குடும்ப தொடர்புடைய உறவினரும் படிக்க விரும்புகிறார். படத்திலுள்ள ஆண் கம்பை கையில் ஏந்தியுள்ளார். கையில் உலக உருண்டை. கேள்வியாளர் உலக ஞானத்திற்காகவும், தனது தகுதியை உயர்த்திக்கொள்ளவும் படிக்க விரும்புகிறார்.
பின்னால் சுவருடன் இணைந்த கம்பு இவரது உறவினரை குறிப்பிடுகிறது. அவர் அது சுவரோடு சாய்ந்துள்ளதால் உறவினர் மற்றவரை சார்ந்துதான் செயல்படுவார். கேள்வியாளர் போல தனித்து செயல்படும் இயல்பினர் அல்லர். அவரால் பிறர் உதவியின்றி செயல்பட இயலாது என்பதைக் குறிப்பிடுகிறது. நிற்கும் நபர் மஞ்சள் நிறப் பின்னணியில் நிற்கிறார். மலையின் மேற்பகுதியில் உள்ள வீட்டிலிருந்து கீழ்பகுதிகளை பார்க்கிறார். இது கேள்வியாளர் பொதுவான மனிதர்களைவிட ஓரளவு வசதியான பின்னணியை உடையவர் என்பதை குறிப்பிடுகிறது. நிற்பவர் நேர்கொண்ட பார்வையில் நதியையும் மலையையும் பூந்தோட்டங்களையும் பார்க்கிறார். இது கேள்வியாளர் தான் படிக்கும் கல்வியால் வாழ்வில் மனமகிழ்வும், உயர்வும் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்க முயல்வதைக் குறிப்பிடுகிறது. 2 ஆவது கம்பு பின்னால் உள்ளது. இது இவரது உறவினர் கேள்வியாளரைப் போல பெரிய திட்டங்களற்றவர் என்பதை குறிப்பிடுகிறது. அவருக்கு சிக்கல்கள் எழுந்தால் அவர் கேள்வியாளரை நாடுவார் என்பதை குறிப்பிடுகிறது. தன் வீட்டில் தனக்குப் பின்னால் இரண்டாவது கம்பு உள்ளதால் உறவினருக்காக கேள்வியாளர் உதவவும் செய்வார் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது.
படத்திலுள்ள நபருக்கு பின்னால் உள்ள உறவினரை குறிப்பிடும் கம்பு வலுவான அமைப்பில் உள்ள கேள்வியாளரின் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது உறவினரின் கல்வியறிவை அரசியல் போன்ற பெரிய பின்புலம் உள்ள நபர்கள் பயன்படுத்திக்கொள்வர் என்பதை குறிப்பிடுகிறது. கேள்வியாளரை குறிப்பிடும் நபர் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்பதையும், தனது கண்ணியத்திற்கு பாதிப்பு வராவண்ணம் வழக்குகளை தெரிவு செய்து பிற்காலத்தில் நடத்துவார் என்பதையும் குறிப்பிடுகிறது. இதனால் இவரது வழக்கு வெற்றி சதவீதம் அதிகம். இரண்டாவது கம்பு சுவற்றோடு கட்டப்பட்டுள்ளது உறவினர் சுதந்திரமற்ற வகையில் அரசியல் தொடர்புகளை சார்ந்துதான் செயல்பட வேண்டியிருக்கும் என்பதும் புரிகிறது. இதனால் அவரது வழக்கின் வெற்றி சதவீதம் குறைவு. காரணம் கேள்வியாளர் உலக அறிவை, சட்டம் சொல்வதை, சாதுர்யத்தை பயன்படுத்துவார். உறவினர் உண்மையறியாமல் செயல்பட்டு வாடிக்கையாளரின் கைப்பாவையாக இருப்பார். இதனால் அவரது வெற்றி சதவீதம் குறைவு.
மேற்கண்ட டாரட் அட்டைத் தகவல்களை நண்பரிடம் கூறினேன். பிரசன்னத்தில் கூறும் தகவல்களை டாரட் மூலம் கூறியது புதிய அனுபவமாக இருந்தது. கேள்வியாளர் தனது உறவினர் அரசியல் கட்சி ஒன்றை சார்ந்து இருப்பவர்தான் என்று கூறினார். டாரட் அட்டை கூறிய தகவல்கள் நண்பரது உறவினரின் குணாதிசயத்தை பிரதிபலிப்பதாக இருகிறது என்றார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501