உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு யாருக்கு?

ன்றைய இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். பணிபுரியும் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். தங்களது வேலையும் மதிப்பானதாக இருக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும். வேலைக்கேற்ற திறமைமையை வளர்த்துக்கொண்டு அதை நோக்கி சரியான திட்டமிடலோடு முயல்பவர்கள் ஒரு வகை. ஆசை மட்டும் அளப்பரியதாக இருந்து திறமையை வளர்த்துக்கொள்ளாமல் கனவு காண்பவர்கள் இரண்டாம் ரகம். திறமையும் தகுதியும் இருந்தும் பல முயற்சிகளில் தனது எண்ணத்திற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என முதலாவது ரகத்தில் புலம்புபவர்களும் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் வேறு கவனமே இல்லாமல், வேறு வேலைக்கும் செல்லாமல் அதனால் திருமணமும் செய்துகொள்ள இயலாமல் பல ஆண்டுகள் அரசு வேலைக்காக தேர்வு  ஏழுதிக்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட சிலரை நாம் அனைவரும் அறிவோம்.  பல முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு இறுதியாக ஒரு தேர்ந்த ஜோதிடர் மூலம் தனக்கு குறிப்பிட்ட வேலை கிடைக்க வாய்ப்பில்லை என தெரிந்துகொண்ட பிறகு வேறு வேலைக்கு செல்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அன்பர் ஒருவர் மென்பொருள் துறையில் தற்போது பணிபுரிந்துகொண்டுள்ளவர். அவர் பணிபுரியும் நிறுவனம் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனமில்லை என்பதால் தனது சம்பாத்தியத்தையும் மதிப்பையும் கூட்டிக்கொள்ள அத்தகைய புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் பணிக்கு தற்போது பணிபுரியும் நிறுவன வேலையை விட்டு மாற முயன்றுகொண்டுள்ளார். இந்நிலையில் கணினி மென்பொருள் வல்லுனரான அவர் தனது அலுவலகத்தில் நிதித்துறையில் பணிபுரியும் நண்பரிடம் இவரது முயற்சிகளை பகிர்ந்துகொள்ள, நண்பர் இவர் முயலும் பெரிய நிறுவனத்தின் நிதிப் பிரிவில் தனக்கும் வாய்ப்பு இருப்பதை அறிந்துகொண்டு முயன்றுள்ளார். நண்பரின் திறமைக்கு உடனே அங்கு பணி கிடைத்துவிட்டது. ஆனால் இவரது துறையில் தற்போது அங்கு பணி வாய்ப்பு இல்லை. இதனால் காத்திருக்க வேண்டியதுதான். இந்நிலையில் நீண்ட காலமாக அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் முயலும் தனக்கு  பணி கிடைக்காமல் நண்பருக்கு மட்டும் முயன்ற உடனே எப்படி பணி கிடைத்தது என்பது அவரது கேள்வி. அவரது ஜாதகப்படி புகழ் பெற்ற பனாட்டு நிறுவனத்தில் பணிபுரியுமளவு கிரகங்கள் வலுவாக இல்லை என்பதை விளக்கினேன். அப்படியானால் தான் முயல்வது போன்ற உலகின் முதன்மையான பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஜாதக அமைப்புதான் என்ன? என்று வினவினார். இதற்கு அப்படிப்பட்ட நிறுவனத்தில் தற்போது இணைந்திருக்கும் அவரது நண்பரின் ஜாதகம் மூலமே விளக்கம் அளித்தேன். இது போல உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை எதிர்பார்க்கும் பல அன்பர்களுக்கும் இப்பதிவு பலனளிக்கும் என்ற அடிப்படையில் நான் கூறிய விளக்கங்களே இன்றைய பதிவாக வருகிறது.       

தற்போது புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் நிதிப் பிரிவில் பணிக்கு சேர்ந்துள்ள நண்பரின் ஜாதகம் கீழே.

ரிஷப லக்னம் கால புருஷனுக்கு தனத்தை குறிக்கும் 2 ஆமிடமாகும். அங்கு கணக்கன் என்றழைக்கப்படும் புதன் சூரியனுடன் இணைந்து அமைந்தது ஜாதகர் நிதி சார்ந்த துறையில் பணிபுரிய சிறப்பான அமைப்பாகும். லக்னத்தில் புதன் திக்பலம் பெறுகிறார் என்பதை கவனிக்க. லக்னத்தில் அமைந்த திக்பல புதன் 4 ஆமிடாதிபதியும் நண்பருமான சூரியனுடன் லக்னத்தில் இணைந்து புத-ஆதித்ய யோகத்தில் நிற்பது மிகச் சிறந்த அமைப்பாகும். தன ஸ்தானமான 2 ல் அமைந்த சுக்கிரன் லக்ன புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். இது ஜாதகருக்கு  நிதி சார்ந்த துறையில் ஈடுபடும் அமைப்பை தெரிவிக்கிறது. 9 ல் அமைந்த குரு 11 ஆமிட சனியுடன் பரிவர்த்தனை பெறுகிறார். பரிவர்த்தனை குருவிற்கு நீச பங்கத்தை அளித்தாலும் குருவின் நிலை மற்றொரு உண்மையையும் புலப்படுத்துகிறது. 9 ஆமிடம் உயர்வு, கௌரவம், அங்கீகாரம் ஆகியவற்றை தெரிவிப்பதாகும். அங்கு அமைந்த குரு லாப ஸ்தானமான 11 ஆமிடத்துடன் பரிவர்த்தனை ஆவதால் ஜாதகர் பொருளாதார உயர்வு மற்றும் லாபம் கருதி பணியில் இடம் மாறும் சூழ்நிலையை குறிக்கிறது. சனி இங்கு தொடர்பாகும் 9 ஆமிடம் உயர்வை குறிப்பிட்டால், 1௦ ஆமிடமும் சனியும் ஜீவனத்தை குறிப்பிடும், சனியின் 11 ஆமிட தொடர்பு லாபத்தை குறிப்பிடும். கால புருஷ 9 ஆமதிபதியான குரு லக்னத்திற்கு 9 ஆமிட தொடர்பு  மதிப்பு, உயர்வு ஆகியவற்றை குறிபிட்டால், 11 ஆமிட தொடர்பு தனலாபத்தை குறிப்பிடும்.

முயற்சி ஸ்தானமான 3 ல் ஆட்சி பெற்ற மாற்றத்தின் காரகர் சந்திரன் ஜீவன காரகர் சனியின் பூசம்-2 ல் நிற்கிறார். இது முயற்சி எடுத்தால் ஜாதகருக்கு பணியில் மாற்றம் கிடைக்கும் என்பதை குறிப்பிடுகிறது. 5 ல் அமைந்த ராகுவும் செவ்வாயும் குற்றத்தை ஆராயும் மன  நிலையை ஜாதகருக்கு வழங்கும். 5 ஆமிடம் கன்னி என்பது கால புருஷனுக்கு 2 ஆமிடமான ரிஷபத்தின் திரிகோணமாக வருவதால் இவர் நிதி சார்ந்த துறையில் குற்றத்தை ஆராயும் ஆடிட்டராக செயல்படுவதை குறிப்பிடுகிறது. 5 ஆமிட கிரகங்களுக்கு குரு பார்ப்பை கிடைப்பது இதை ஜாதகர் திறம்பட கையாள்வதை குறிப்பிடுகிறது. நண்பரை குறிக்கும் லக்னத்திலமைந்த புதன் தன ஸ்தானமான 2 ஆமிட சுக்கிரனோடு பரிவர்தனையாவது தனச் சிறப்பு வேண்டி நண்பரை ஜாதகர் பிரிவதை குறிப்பிடுகிறது. உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் ஒருவர் சிறந்த நிலையில் பணிபுரிய சூரியனே காரக கிரகமாக வருகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் பெற்று சிறப்பான நிலையில் அமைபவர்களுக்குத்தான் உலகின் முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு வாய்க்கும். மாறாக ஒரு ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பின் அளவுகேற்ற தகுதியுடைய நிறுவனத்தில்தான் வேலை கிடைக்கும். இந்த ஜாதகத்தில் சூரியன் ரிஷப லக்னத்திற்கு சுக ஸ்தானாதிபதி என்பதுடன் அவர் லக்னத்தில் புத-ஆதித்ய யோகத்தில் நிற்பது ஜாதகருக்கு அத்தகைய பணிச் சிறப்பை வழங்குகிறது.  

ஒருவரது பணிச்சூழல் மாறுதல்களை தசாம்சம் மேலும் துல்லியமாக காட்டும் என்பதால் கீழே ஜாதகரின் தசாம்சமும் ஆராயப்படுகிறது.

தசாம்சம் சிம்ம லக்னமாக அமைத்தது முதன்மையான பன்னாட்டு மதிப்பு மிக்க நிறுவன வேலைக்கான அமைப்பைத்தரும். 2, 6, 1௦ ஆகிய பொருளாதார திரிகோணங்கள் ஒருவரது சம்பாத்தியம் எப்படி வரும் என்பதை குறிப்பிடும். தன ஸ்தானமான 2 ல் புதனின் வீட்டில் 8 ஆமிட புதனின் பார்வையில் அமைந்த சூரியன் ஜாதகருக்கு நிதி சார்ந்த பிரிவிலிருந்து சம்பாத்தியம் வரும் அமைப்புள்ளதை குறிப்பிடுகிறது. 1௦ ல் உச்ச சந்திரனுடனும் திக்பல செவ்வாயுடனும் அமைந்த ராகு, ஜாதகருக்கு நிதித் துறையில் பொருளாதார குற்றங்களை கண்டு சரி செய்யும் பணியில் உயர்ந்த பொறுப்பில் பணிபுரியும் தகுதி இருப்பதை குறிப்பிடுகிறது. 11 ல் அமைந்த குரு 8 ஆமிட புதனுடன் பரிவர்த்தனையாகி புதனுக்கு நீச பங்கத்தை ஏற்படுத்துகிறார். ஜாதகத்தில் அமையும் பரிவர்த்தனை இட மாற்றத்தை குறிப்பிடும். தசாம்சத்தில் உள்ள பரிவர்த்தனை ஜீவன வகையில் ஏற்படும் மாற்றத்தை அது தொடர்புடைய தசா-புக்தி காலங்களில் துல்லியமாகக் காட்டிவிடும். அந்த வகையில் இங்கு புதன், குரு தொடர்புடைய தசா-புக்திகளில் ஜாதகர் பொருளாதார லாபத்திற்காக இடம் மாறுவதை குறிப்பிடுகிறது.

இந்த ஜாதகர் புதன் தசையில் சனி புக்தியில் மாற்றத்தின் காரகர் சந்திரனின் வீட்டில் நிற்கும் சனியின் புக்தியில் உலகின் முன்னணி கைபேசி நிறுவனத்தில் தனது பழைய நிறுவனத்திலிருந்து பிரிந்து பணியில் சேர்ந்தார். நண்பரை குறிக்கும் புதன் கால புருஷனுக்கு தகவல் தொடர்பை குறிக்கும் 3 ஆமிடமான மிதுனத்தின் அதிபதியாகி பரிவர்த்தனை பெறுவதால் கைபேசி நிறுவனத்திற்கு வேலை மாறினார். புக்திநாதன் சனி பரிவர்த்தனையாகும் குருவின் புனர்பூஷம்-4 ல் நிற்பதால் பணியில் இடமாற்றம் ஏற்பட்டது. உலகின் முன்னணி நிறுவனத்தில் வேலை கிடைக்க 1௦ ல் அமைந்த திக்பல செவ்வாயும் முக்கிய காரணமாகும். சனி புக்தியின் செவ்வாய் அந்தரத்தில்தான் ஜாதகருக்கு பன்னாட்டு நிறுவன பணி கிடைத்தது. திக்பலம் மதிப்பில் உயர்ந்த நிலையை ஏற்படுத்தித் தருகிறது. உச்ச சந்திரனுடன் இணைந்து சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்திலேயே அந்தர நாதன் செவ்வாய் இருந்ததால் பணியில் மாறுதலுடன் உயர்ந்த இடத்தில் ஜாதகரை செவ்வாய் அமர்த்தியுள்ளார். புதனின் வீட்டில் 10 ஆமிடத்திற்கு திரிகோணத்தில் கன்னியில் நின்று 8 ஆமிடத்தில் நிற்கும் தசாநாதர் புதனின் நேர்பார்வையை பெறும் சூரியன் முதன்மையான பன்னாட்டு நிறுவன பணி கிடைக்க முக்கிய காரணமென்றால் ஆடிட்டரை குறிக்கும் புதனே தகவல் தொடர்பு கிரகமும் ஆவதால் கைபேசி நிறுவனத்தில் மதிப்பான வேலை கிடைத்தது.

யாரை எங்கே, எப்போது  வைக்க வேண்டுமென்று யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ கிரகங்களுக்கு தெரியும்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சர்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English