கடல் பறவைகள்…

“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்றார் கவியரசர் கண்ணதாசன். எந்தச் சூழலும் பறவைகளுக்கு நிரந்தரமில்லை. உணவு கிடைக்கா இடங்களை விட்டு நீரும் உணவும் வேண்டி, தங்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு பருவ மாற்றக் காலங்களில் பறவைகள் வெகுதூரம் பயணிக்கின்றன. நமது வேடந்தாங்கலுக்கு வரும் பல்வேறு தேச பறவைகளை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். பறவைகள் வசிப்பதற்கு சாதகமான இடங்களுக்கு அருகிலேயே கூடு கட்டி வாழும் இயல்புடையன. பருவங்கள் மாறியவுடன் மீண்டும் தங்களது பூர்வீக இடங்களுக்கு திரும்புகின்றன. மனிதனையும் வாழ்க்கை பல்வேறு திசைகளுக்கு அனுப்புகிறது. சிலர் அதை ஏற்றுக்கொண்டு தங்கள் சூழலை அனுபவிக்கிறார்கள். மாற்றங்களை விரும்பாத சிலர் இருக்கும் இடங்களில் தங்களது சிரமங்களை பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். பொறுத்துக்கொள்வது பருவ மாற்றங்களாயின் அது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் வாழ்வில் முன்னேற தங்களது திறமைகளுக்கேற்ற வாய்ப்புள்ள இடங்களை நாடிச் செல்வது இன்றைய காலத்தில் கட்டாயமானது. அப்படி செல்லாவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்வையே இழந்துவிடும் சூழல் இன்று உள்ளது. புதிய இடங்களையும் சூழலையும் தங்களது வாழிடமாக்கிக்கொண்டு நிரந்தரமாகத் தங்கிவிடுவோர் ஒரு வகை. தங்களது உழைப்பு காலத்திற்கு பிறகு தங்களது பூர்வீக இடம் தேடி வந்து இணைவோர் ஒருவகை. பறவைகள் போல பறந்துகொண்டே இருந்து சம்பாதிக்கும் ஒரு வகையினர் உண்டு. உதாரணமாக கப்பல் மற்றும் விமானப் பணியாளர்கள் இந்த வகையினர். இத்தகையோர் தங்கள் தொழில் சூழலால் எந்த ஒரு இடத்திலும் நிலையாக தங்க இயலாது எனும் சூழலில் நிரந்தரமாக தங்கள் குடும்பத்தை ஒருடத்தில் விட்டுவிட்டு இவர்கள் மட்டும் பணிகளுக்கிடையே அவ்வப்போது வந்து தங்கள் குடும்பத்தில் இணைவர். இவர்களில் பெரும்பாலோர் நன்கு சம்பாதிப்பவராயினும் இத்தகையோருக்கு குடும்ப வாழ்வு திருப்திகரமானதாக இருக்கும் வாய்ப்பு குறைவே. இப்படிப்பட்டவர்களின் தலைவிதிதான் என்ன? என ஜாதக ரீதியாக அறிய முயன்றதன் விளைவே இப்பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கடல் பறவைகளாக வாழ வைக்கும் ஜாதக அமைப்பு.

ஒருவர் தனது வாழ்வில் அடிக்கடி இடம் பெயர்ந்துகொண்டே இருக்க வேண்டுமெனில் அவர் உபய லக்னத்தில் பிறந்திருக்க வேண்டும். நிறைய பயணங்கள் செய்வதற்கு பயண காரகர் சந்திரன் லக்னத்துடன் அல்லது லக்னாதிபதியுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அதிக கடல் சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள குரு லக்னத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். புதிய சூழலில் புதிய மனிதர்களையும், புதிய அனுபவங்களையும் பெற இவற்றின் காரக கிரகங்களான ராகு கேதுக்கள் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒரு ஜாதகரது தொழிலே இவை சார்ந்த தொடர்பில் அமைய வேண்டுமெனில் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சனி தொடர்பில் இருக்க வேண்டும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் உபயமாகவும் வாயு ராசியாகவும் அமைந்தது, ஜாதகர் தனது வாழ்வில் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் அடிக்கடி இடம் பெயர்வதை குறிக்கிறது. லக்னம்  குருவின் புனர்பூஷத்தில் அமைந்தது அதில் பயண காரகரும் நீர் கிரகமுமான சந்திரன் அமைந்தது, ஜாதகர் நிறைய கடல் சார்ந்த பயணங்கள் செய்வதை குறிக்கிறது. லக்னத்தில் சனி அமைந்திருப்பது இவரது சம்பாத்தியமே நிறைய பயணங்கள் செய்துதான் பெறக்கிடைக்கும் என்பதை தெரிவிக்கிறது. லக்னத்தில் அமைந்த ராகு-கேதுக்கள் இவரது வாழ்வில் தனது சொந்த கலாச்சாரத்தை தாண்டி புதிய கலாச்சார மனிதர்களையும், புதிய அனுபவங்களையும்  பெறுவதைக்  குறிக்கிறது. குடும்ப பாவகமான 2 ஆமிடத்திற்கு விரைய பாவகமான லக்னத்திலமைந்த கிரகங்கள் மேற்சொன்னவற்றிற்காக ஜாதகர் தனது குடும்பத்தை பிரிந்து செல்வதை குறிக்கிறது. ஆனால் லக்னப் புள்ளி, லக்னத்திலமைந்த கிரகம், லக்னாதிபதி இவர்களில் ஒருவர், 7 ஆமதிபதி,  7 ல் நின்றோன் அல்லது களத்திர காரக கிரகத்துடன் தொடர்பானால் ஒரு ஜாதகர் தனது குடும்பத்தை விட்டு தற்காலிகமாக விலகினாலும் நிரந்தரமாக பிரிய விடாது. இந்த ஜாதகத்தில் லக்ன லக்னப் புள்ளி 7 ஆமதிபதி குருவின் புனர்பூஷம்-2 ல்  அமைந்துள்ளது. கும்ப புதன், மிதுன சனியுடன் பரிவர்த்தனையில் அமைந்திருப்பதை கவனிக்க. இது ஜாதகர் தொழிலை முன்னிட்டு தனது சொந்த வாழிடத்தை விட்டு நீண்ட தூரம் பயணிப்பதை குறிக்கிறது.

ஆத்ம காரகரும் தாரா காரகரும்

ஜாதகத்தில் குடும்ப காரகரும் 7 ஆமதிபதியுமான குரு நீசமடைந்தாலும் அவர் சூரியனைவிட்டு 8 பாகைகள் விலகி இருப்பதால் அஸ்தங்கம் பெரிய பாதிப்பை தராது. ஆனால் அவர் 8 ல் மறைந்து, தன ஸ்தானமான தனது உச்ச வீடு கடகத்தை பார்ப்பதால் பொருளாதார வளம் வேண்டி ஜாதகர் குடும்பத்தை விட்டு விலகியிருப்பதற்கு குடும்பம் அனுமதிப்பதை தெரிவிக்கிறது. குருவே ஜாதகத்தில் அதிக பாகைகள் பெற்ற ஆத்ம காரகராக அமைவதால் இப்படி குடும்பத்தை விட்டு விலகுவதால் அதிக பாகை பெற்ற கிரகம் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு பொருளாதார வகையில் உதவும் என்ற அடிப்படையில் பொருளாதார வளம் குடும்பத்திற்கு சிறப்பாகவே கிடைக்கும். சுக்கிரன் 8 ல் மறைந்தாலும் அஸ்தங்கமடையவில்லை. 7 ஆமதிபதி குருவும், களத்திர காரகர் சுக்கிரனும் 8 ல் மறைவது மனைவி ஜாதகரின் தொடர்பை விட்டு விலகி இருப்பவர் என்பதை குறிபிடும் அமைப்பாகும். 8 ல் மறைந்த குருவும் சுக்கிரனும் இணைந்து 2 ஆமிடத்தை பார்ப்பதால் குடும்பத்தை ஜாதகர் பிரிந்தாலும் குடும்பத்திற்கு செல்வ வளத்தை கொண்டு சேர்க்கும் அமைப்பாகும். 3 ஆமதிபதி சூரியன் 8 ல் மறைந்ததும் ஒருவகையில் விபரீத ராஜ யோகமாகவே செயல்படும். ஜாதகத்தில் நீர்க் கிரகமான சந்திரன் குறைந்த பாகை பெற்ற தாரா காரகராக அமைந்திருப்பது ஒரு ஜாதகருக்கு கடல் பயணங்களின் மீது இயல்பாகவே நாட்டம் ஏற்படுத்தும் அமைப்பாகும். சந்திரன் லக்னத்தில் அமைவதால் கடல் பயண வாய்ப்புகள் ஜாதகரை தேடி வரும் அதே சமயம் குடும்ப பாவகாதிபதி லக்னத்தில் அமைவது இதற்காக ஜாதகர் குடும்பத்தை அடிக்கடி பிரிய வேண்டியிருக்கும் என்பதையும் தெரிவிக்கிறது.

ஜாதகரின் தொழிலே கடலில் உலகம் சுற்றுவது என அமைவதற்கு ஜாதகரின் தசாம்சம் ஒத்துழைக்க வேண்டும். தசாம்சத்தில் லக்னத்தில் ராகுவும், 7 ல் கேதுவும் அமைந்த நிலையில் லக்னாதிபதி சனியும் 7 ல் நீர் ராசியான கடகத்தில் அமைந்தது ஜாதகருக்கு ஜீவிதம் கடல் சார்ந்த வகையில் அமைவதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடமான துலாத்தில் மற்றொரு நீர் கிரகமான சுக்கிரன் அமைந்தது இதை உறுதிப்படுத்துகிறது. 7 ஆமதிபதி சந்திரன் வேலை பாவகமான 6 ஆமிடத்தில் 12 ஆமதிபதி குருவோடு இணைந்த நிலையில் குரு பார்வை ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தையும், நீண்ட பயணங்களை குறிக்கும் 12 ஆமிடத்தையும் பார்ப்பது ஜாதகரின் வேலை நீர் சார்ந்த வகையில் நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் அமையும் என்பதை குறிப்பிடுகிறது.

மேற்சொன்ன அமைப்புகளால் ஜாதகர் கப்பலில் பணிபுரிகிறார். தசாம்சத்தில் லக்னத்திலும் 7 லிலும் ராகு-கேதுக்கள் அமைந்து, இவர்களோடு சனியும் அமைந்ததால் இவர் கப்பலில் பெட்ரோலியப் பொருட்களை கையாளும் பணி செய்கிறார். குடும்பத்தை விட்டு அடிக்கடி விலகி இருப்பதனால் ஏற்படும் பாதிப்புகளால் ஜாதகர் பாதிக்கப்பட்டாலும், இவரது குடும்பத்தின் வளமைக்கு அது மிக அவசியம் என்பதை தெளிவாக உணர்ந்திருப்பதால் குடும்ப பிரிவை ஏற்றுக்கொண்டு தனது பணியை குடும்பத்திற்காக நேசித்துச் செய்கிறார்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம், 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English