திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில் பிறந்தவர்கள் என்பதால்  நல்ல, கல்வி, நல்ல குடும்பம் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். வேலை சிறப்பானதாக இருப்பது குறிப்பாக அரசு உத்தியோகம் இருந்தால் நன்று என்ற மனநிலையில் சில விட்டுக்கொடுத்தல்களுடன் தங்கள் குடும்ப வாழ்வை அவர்கள்  அமைத்துக்கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் ஓரளவு வளர்ச்சியின் சுவையை ருசித்தவர்கள் என்பதால், தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு குண நலத்துடன், சம்பாத்தியம், ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக் அம்சம் என்னவென்றால் கடந்த தலைமுறையினர் ஜாதீயத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் இன்றைய தலைமுறையினரிடையே குறைந்துவருகிறது.  

இப்படியான தற்போதைய நிலையில் எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் தனது உறவுக்கார வாலிபரின் திருமணம் நீண்ட நாட்களாக தடைபடுகிறது எனவும், நல்ல கல்வியும், நேர்த்தியான வேலை இருந்தும்  திருமணம் தடைபடுகிறது என்றார். பலரிடம் ஜாதகம் பார்த்து அலுத்துவிட்டது என்றும், துல்லியமாக இதுதான் திருமணத்தடைக்கு காரணம் என்று கண்டு அதற்கான பரிகாரத்தையும் பரிந்துரைக்க கூறினார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

மகர உதயம். உதயத்தின் வெளிவட்டத்தில் குரு நீசம் பெற்று நிற்பது குடும்பம் அமைவது தடைபடுவதை காட்டுகிறது. உதயாதிபதி சனி 2 ல் வக்கிரமடைந்து கவிப்புடன் அமைந்தது ஜாதகருக்கு குடும்பம் அமைவது தடைபடுவதை அதாவது கேள்வியை தெளிவாகக் குறிப்பிடுகிறது. உதயாதிபதியும் 2 ஆமதியுமான சனி வெளிவட்டத்தில் உதயத்திற்கு 9 ல் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் காலபுருஷனுக்கு 6 ல் கேதுவுடன் இணைந்திருப்பது ஜாதகருக்கு ராகு-கேதுக்களுடன் தொடர்புடைய அதாவது நவீன மின்னணு மென்பொருள் தொடர்புடைய துறையில் ஈடுபட்டிருப்பதை குறிப்பிடுகிறது. உள்வட்ட சனியும் ராகுவின் சதயத்தில் நிற்பது இதை உறுதி செய்கிறது. ஆனால் உதயாதிபதி கவிப்புடன் தொடர்பாகி ராகு-கேதுக்கள் தொடர்பில் இருப்பது திருமணத்தை பொறுத்தவரை சிறப்பான அமைப்பல்ல. திருமணத் தடை தொடர்வதை இவ்வமைப்பு குறிப்பிடும்.

உதயத்திற்கு 7 ஆமிடத்தில் பாதகாதிபதி செவ்வாய் நீசமடைந்து 7 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து நீச பங்கம் பெறுவது ஒருவகையில் நன்மையே என்றாலும் பாதகாதிபதி 7 ல் வலுப்பெறுவது திருமணத் தடையை கடுமையாக்கும் அமைப்பே. உள்வட்டத்தில் களத்திர காரகர் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் புதனுடன் இணைவு பெற்று நிற்பது கேள்விளருக்கு பெண்கள் வகையில் பாதகமான அமைப்பையே சுட்டிக்காட்டுகிறது. வெளிவட்ட சுக்கிரன் 1௦ ஆமிடமான துலாத்தில் நீசமான 8 ஆமதிபதி சூரியனை நீச பங்கப்படுத்தினாலும் களத்திர காரகர் சுக்கிரன் 8 ஆமதிபதி தொடர்பு பெறுவது களத்திரம் அமைவதை பாதிக்கும். கேள்வியின் நோக்கத்தை உறுதி செய்யும் 1௦ ஆமிடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் அஷ்டமாதிபதி இணைவு பெற்று நீசபங்கமடைவதால் 8 ஆமதிபதி வலுவடைவார். ஆனால் காரக கிரகமான சுக்கிரன் வலுக்குன்றுகிறார். குறைபாட்டை குறிக்கும் 8 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைவதால் கேள்வியாளருக்கு உள்ள ஏதோ ஒருவகை குறை அவருக்கு திருமணம் அமைவதை தடுக்கும். மேலும் இது குறைபாட்டுக் களத்திரம் அமைவதையும் குறிப்பிடும். ஆனால் 1௦ ல் சூரியன் திக்பலம் பெறுவது கேள்வியாளருக்கு பணியிடத்தில் தலைமை தாங்கும் தகுதியைத் தரும். கேள்வியாளர் மென்பொருள் துறையில் தலைமை பொறுப்பில் இருப்பவர்.  

ஆரூடம் கேள்வியாளருக்கு திருமணத்தடை எதனால் ஏற்படுகிறது எனும்  காரணத்தை கூறிவிடும். மேஷ ஆரூடத்தில் உச்சம் பெற்ற ஜாம (வெளிவட்ட) அஷ்டமாதிபதி சூரியன் நிற்பது 4 ஆமிடம் குறிப்பிடும் விசயங்களில் கேள்வியளருக்கு உள்ள குறைபாட்டால் திருமணம் தடைபடுகிறது என்பதை குறிப்பிடும். 4 ஆமிடம் ஒருவரது உடலின் கட்டமைப்பை குறிப்பிடும். அங்கு குறைப்பாட்டை குறிக்கும் 8 ஆமதிபதி உச்சம் பெறுவதால் இவருக்கு உடல் ரீதியான குறை அதிகம் என்பது புரிகிறது. அதுவே இவரது திருமணத் தடைக்கு காரணமென்பதை ஆரூடம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

கால புருஷனுக்கு உடலின் கட்டமைப்பை குறிப்பிடும் 4 ஆமதிபதியான சந்திரன் உதயத்தை கடந்து சென்று உதயத்தின் 6 ஆமதிபதியான புதனுடன் உதயத்திற்கு 12 ல் நிற்கிறார். இது இவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. இவரது உடலியல் பாதிப்பிற்கு இவரது உணவுப் பழக்கமும் காரணமாக இருக்கும் என்றாலும் 12 ஆமிடம் சாபத்தை குறிப்பிடுவதால் அங்கு சந்திரன் புதனுடன் அமைந்தது நோயுற்ற வயதான பெண்ணின் சாபமும் காரணமாக இருக்கும். ஏனெனின் 12 ல் அமைந்த சந்திரனே 7 ஆமிடத்தில் வெளிவட்டத்தில் நிற்கிறார்.  12 ஆமிடம் குருவின் வீடாகி அங்கு சந்திரன் கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்பதால் அவர் ஆத்சார அனுஷ்டானங்களை முறையாக கடைபிடித்த பிராமண பெண்மணியாக இருப்பார். கேள்வி கேட்டவர் பிராமண வர்க்கத்தை சேர்ந்தவர்.

உச்ச நீச்ச கிரகங்களே கேள்வியின் பின்னணியில் இயக்கிக் கொண்டிருக்கும் என்பதால் இங்கு சூரியன் உச்சத்திலும் நீச்சத்திலும் அமைந்துள்ளார். செவ்வாயும் குருவும் நீசம் பெற்று அமைந்துள்ளார். எனவே இவரது திருமணத் தடைக்கு சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரக காரகங்களும், இவர்கள் உதயத்திற்கு தொடர்பாகி நின்ற பாவகங்களும் காரணமாக இருக்கும். உதயத்தில் நின்ற குரு 3 ஆமதிபதியாவார். இது கேள்வியாளரே தனது திருமண விஷயத்தில் போதுமான முனைப்பு காட்டாததை குறிப்பிடுகிறது. உடம்பை குறிப்பிடும் 4 ஆமிடத்திலமைந்த சூரியனும், 7 ஆமிட செவ்வாயும் கேள்வியாளருக்கு பாரம்பரியமான ரத்தவகை உடலியல் குறைபாடே இவரது திருமணத்தடைக்கு காரணம் என்பதை தெளிவாக்குகிறது. உச்ச சூரியன் பணியில் கேள்வியாளருக்கு தலைமை தாங்கும் தகுதியை தந்து, திருமண விஷயத்தில் கௌரவம், வசதி வாய்ப்புகள் என்ற வகையில் நல்ல குணமான பெண்களைக்கூட எளிமையானவர்கள் என்ற வகையில் துவக்கத்தில் மறுக்க வைத்திருக்கும். பாதகாதிபதியான நீச செவ்வாய் 7 ல் நிற்பது, ரத்த வகை உடலியல் பாதிப்பால் பாதகம் திருமணத் தடை என்ற வகையில் செயல்படுவதை குறிப்பிடுகிறது.

மேற்கண்டவற்றை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளருக்கு உள்ள உடலியல் குறையும், கௌரவம், பொருளாசை கருதி நல்ல எளிமையான பெண்களை துவக்க காலத்தில் நிராகரித்ததும், இவருக்கு உள்ள பெண் சாபமும் திருமணத் தடைக்கு காரணம் என்று கூறினேன். பரிகாரமாக முதலில் இவரது உடலியல் குறைபாட்டை ஆராய்ந்து தீர்த்துக்கொள்ள தக்க மருத்துவரை நாடவும், சாபத்திற்கு பரிகாரமும் கூறப்பட்டது. கேள்வியாளர் தனது உடலியல் குறையான 1௦௦ கிலோ எடையை குறைக்க முயற்சி செய்வதாகவும், சாபத்திற்கு பரிகாரம் செய்வதாகவும் கூறினார்.  

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English