
நமது உடல் பலவித ரசாயனங்களை நமது தேவைகேற்ப தனக்குத்தானே உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை படைத்தது. அவற்றுள் ஒன்று SEROTONIN ஆகும். இது ஒரு உணர்வுக் கடத்தியாகும். பசி, ரத்த திசுக்கள் உற்பத்தி, ரத்த ஓட்டம், உடலுறவு, தூக்கம், கழிவு வெளியேற்றம், மனநிலை போன்ற நமது உடலின் பல செயல்களில் செரோடோனின் முக்கிய பங்குவகிக்கிறது. இது நாம் வாழ்வதற்கான உந்து சக்தியை அளிக்கிறது. மனதை நேர்மறையாக வைத்துக்கொள்ளவும், தயக்கமின்றியும் & பயமின்றியும் செயல்படவும், திருப்தி, மகிழ்ச்சி ஆகிய மனநிலையோடு நம்மை வைத்துக்கொள்ள செரோடொனின் ஊக்குவிற்கிறது. எனவே செரோடோனின் எனும் உணர்வுக் கடத்தியை ஆள்வது செவ்வாயாகும். இச்சுரப்பி உடலில் குறைந்தால் மனப் பதட்டம், தாழ்வு மனப்பான்மை ஆகியன ஏற்படும். நோய்க்கான சில மருந்துகளும் செரோடொனின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. எனவே நோய்க்கு மருந்துகள் எடுக்கும்போது செரோடொனின் செயல்பாட்டை கட்டுப்படுத்தாத மருந்துகளை மருத்துவரிடன் ஆலோசித்துப் பெறுவது நன்று. மன பலம் உடல் சிரமங்களை மீட்டெடுக்கும் என்பதுதான் இதற்குக் காரணம். இந்த ரசாயனம் உடலில் அதிகமானால் அதிக கோபம், அதிகாரம், ஆக்கிரமிப்பு மனோபாவம் ஆகியன ஏற்படும்.
ஜோதிடம் இன்று அணைத்து துறைகளிலும் பறந்து, விரிந்து வருகிறது. அது வியாபிக்காத துறைகளே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. செரோடொனின் போன்ற பலவித ரசாயனங்களை தேவைகேற்ப உடல் உற்பத்தி செய்துகொண்டாலும் இவற்றை உற்பத்தி செய்ய உடலுக்கு கட்டளையிடுவது நமது மனமே ஆகும். எனவே மனதை செம்மையாக வைத்துக்கொண்டாலே பலவித உடல்நல பாதிப்புகளை தவிர்க்கலாம். இன்றைய மனித வாழ்வில் Mindfulness எனும் வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவதை கவனித்திருப்பீர்கள். மனம் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்வரைதான் அச்செயலை முழுதாக கவனிக்கிறது. அவ்விஷயத்தை கற்றுக்கொண்டு அதை தொடர்ந்து செயல்படுத்தும் நிலையில், அதை தனது கட்டுப்பாட்டிலிருந்து அனிச்சை எனும் பிரிவிற்கு மாற்றிவிட்டு மனம் ஓய்வெடுக்கிறது. அனிச்சையான செயல்களில் கவனக்குவிப்பு என்பது இராது. அனிச்சை செயல்களை மனம் மிக குறைவாகவே கட்டுப்படுத்தும் என்பதால் நமது செயல்களில் நேர்த்திக்குறைவு ஏற்படும். இதனால்தான் வாழ்வை அனிச்சையாக வாழாமல் கவனக்குவிப்புடன் வாழ வேண்டும் என்று எண்ணிய ஞானிகள் “கணத்தில் வாழ்தல்” எனும் Mindfulness ஐ அனைத்து நிலைகளிலும் பராமரிக்கக் கூறுகிரார்கள். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

ரிஷப செவ்வாய் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். செவ்வாயின் திரிகோணத்தில் உள்ள கன்னிச் சூரியன் சந்திரனின் ஹஸ்தத்தில் அமைந்துள்ளார். செவ்வாயின் மற்றொரு திரிகோணத்தில் நிற்கும் மகர ராகு, சந்திரனின் திருவோணத்தில் நிற்க, கும்பச் சந்திரன் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நின்று ராகுவோடு நட்சத்திர பரிவர்த்தனை பெறுகிறார். திரிகோண கிரகங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு செவ்வாய்க்கு சூரியன், சந்திரன் தொடர்பு நன்மையே என்றாலும் ராகு இதில் இணைந்தது பாலில் ஒரு துளி விஷம் கலந்த அமைப்பே. இது இவரது உடலில் செரோடோனின் உற்பத்தியை குறைக்கும். செரோடோனின் அளவு குறைவதால் வாழ்க்கை மீதான பிடிப்பு தளரும், பயம், நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும். இவர் திருமண வயதை கடந்துவிட்டவர் மனக்குழப்பங்களால் திருமண விஷயத்தில் முடிவெடுக்க தயக்கமும் பயமும் உள்ளது. அதுவும் சூரியன் குறிக்கும் கௌரவம் சார்ந்த பயமே அதிகம்.
கீழே மற்றொரு ஜாதகம்.

கன்னி லக்னத்திற்கு 8 ல் லக்னாதிபதி புதன் பகைவர்களுடன், 8, 12 க்குரிய பாவிகளுடன் மறைந்துள்ளார். இது கற்ற கல்வியைக்கூட தீய வழியில் செயல்படுத்தும் அமைப்பாகும். செவ்வாய்க்கு உச்ச சூரியன் தொடர்பு ஏற்படுவதால் இயல்பிலேயே ஜாதகர் குரூர வெறிகொண்ட மனோ நிலையிலேயே இருப்பார். இதனால் செரோடோனின் தேவையை விட அதிகம் சுரக்கும். செவ்வாய் – சுக்கிரன் மற்றும் ராகு-கேதுக்களின் பாகைக்கு நெருக்கமாக அமைந்துள்ளதை கவனியுங்கள். ராகு-கேதுக்களுக்கு நெருக்கமாக (பாகை முறையிலும்) செவ்வாய் அமைபவர்களுக்கு வெறிகொண்ட மனநிலையை ஏற்படுத்தும் Cortisol ஹார்மோனின் அளவு கூடும். ஜாதகர் தனது வெறிகொண்ட செயல்களால் பல லட்சம் அப்பாவி மக்களை கொன்று குவித்த ஹிட்லர். செவ்வாய் விரையாதிபதி சூரியனுடன் 8 ல் அமைந்தது ஆட்சி அதிகாரத்தை தவறாக கையாள வைக்கும். செவ்வாய் புதனுடன் கொண்ட தொடர்பு தீமையை போதிக்கும் அறிவை ஏற்றுக்கொள்ளும். அதிகாரத்தால் ஆளுமையால்தான் உலகை மாற்ற முடியும் எனும் எண்ணம்கொண்ட ஜெர்மன் தத்துவ அறிஞர் நீட்சே “The Will To Power” எனும் நூலை எழுதி வைத்திருந்தாலும் அதன் உட்கருத்து மிக குரூரமாக இருப்பதை எண்ணி பதிப்பகத்திற்கு கொடுக்காமல் தவிர்த்துவிட்டார். ஆனால் செத்தும் கெடுப்பான் தீயவன் என்பதற்கேற்ப அவரது சகோதரி நீட்சேவின் இறப்பிற்கு பிறகு அதை முழுமை செய்து ஹிட்லரிடம் கொடுக்க, ஹிட்லர் தனது குருநாதர் இவர்தான் என முடிவு செய்து அந்த குரூர பதிவுகளை செயல்படுத்தத் துவங்கினார். விளைவு நாமறிந்ததே. சுக்கிரன் மேஷத்தில் புதனுடனும் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகளுடனும் இணைந்தது ஹிட்லருடன் அவரது காதலியும் கொல்லப்படுவதை குறிக்கிறது. 8 ஆமிடம் மறைவு ஸ்தானம் என்பதால் ஹிட்லர் மற்றும் அவரது காதலியின் மரணம் வெளிப்படையானதாக இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
அதிஷ்டவசமாக நமது உடலின் பெரும்பாலான உணர்வு நிலைகளை மனத்தால் கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மனதை கட்டுப்பாட்டில் வைக்கவும், நேரிய வழியில் செலுத்தவுமே நமது ஞானிகள் பல்வேறு நுட்பங்களை நமக்கு அருளிச் சென்றுள்ளனர்
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501