தனித்துவமான துறைகள்!  

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவான சில குண நலன்கள் உண்டு என்றாலும் மற்றவர்களிடம் இருந்து தங்களது தனித்துவமான நிலைகளால் வேறுபடுபவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். கவனிக்கப்படுபவர்கள் அனைவரும் புகழ் பெறுகிறார்களா? என்றால் அவர்கள் தனித்துவம் உலகை வசீகரிப்பதாக, மக்களுக்கு நன்மை தருபவையாக இருக்கும் பட்சத்தில் கவனிக்கப்படுகிறார்கள். அல்லாதவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இத்தகையவர்கள் தங்கள் தனிச் சிறப்பாலேயே உலகின் உன்னத நிலைக்கு உயர்கிறார்கள். இத்தகையவர்களின் செயல் விசித்திரமானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதனை செயல்படுத்தும் விதம் மற்றவர்களைவிட வித்தியாசப்படுகிறது. 2௦ ஆண்டுகளுக்கு முன் பொறியியலும், மருத்துவமும்  படித்தால் உலகில் பொருளாதார ரீதியாக நல்ல நிலை பெறலாம் என்று ஒரு நிலைப்பாடு இருந்தது. அதில் உண்மையும் இருந்தது என்றாலும், பொறியியலில் கணினிப் பொறியியல் படித்தவர்களுக்கு மற்றவர்களைவிட காலம் சாதகமானதாக இருந்தது என்பதே உண்மை. இன்று வீட்டிற்கு ஓரிருவர் பொறியியல் படித்தவர்களாக உள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் மருத்துவர்களும் பெருகிவிடுவர். இதனால் இத்துறைகளில் போட்டி அதிகரிப்பதான் விளைவாக லாபம் குறையும் என்பது கண்கூடு. இதனை ஈடுகட்ட இத்துறைகளின் தேவை இருக்கும் நாடுகளை நோக்கி இவர்கள் செல்வர் என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று தனிச்சிறப்பான திறமைகளை உடையவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். அத்தகைய வளர்ந்து வரும் தனித்துவமான துறை ஒன்றை இன்று ஆராய இருக்கிறோம்.

கணினி உலகம் அதன் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டுள்ளது. குவாண்டம் கணினிகள் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ சாதகமான நிலைகளை ஆராயும் சமன்பாடுகளில் விஞ்ஞானிகளுக்கு குறிப்பிடத்தக்க விதத்தில் உதவி வருகின்றன. மருத்துவத்திலும் சாதனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவத் துறை விரிவடைந்துகொண்டே செல்கிறது. அதன் ஒரு அங்கமாக Medical Coding எனும் பிரிவு வளர்ந்து வருகிறது. இதில் ஒருவரது மருத்துவத் தகவல்களை குறியீடுகளாக பதிவு செய்கிறார்கள். மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் இதில் முன்னேறிய நாடுகளில் தங்கள் மக்களின் மருத்துவத் தகவல்களை நமது ஆதார் தகவல்களைப்போல சேமிக்கத் துவங்கிவிட்டனர். மக்களின் ஆரோக்கியம், மருத்துவக் காப்பீடு, பிறப்பு-இறப்பு சமநிலை, உழைக்கும் மக்களின் சதவீதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இவற்றை பயன்படுத்தலாம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

ரிஷப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சமாகி, உடன் இணைந்த புதனை நீச பங்கப்படுதுகிறார். புதனுடன் இணைந்ததால் லக்னாதிபதி சுக்கிரன் புதனது காரகங்களால் ஈர்க்கப்படுவார். சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடம் கன்னியில் நின்ற சந்திரனை, சுக்கிரனும் புதனும் இணைந்து பார்ப்பதால் ஜாதகியின் மனமும் புதன் சுக்கிரனது காரகங்களை விரும்பும். சந்திரன் நிற்பது புதனது உச்ச வீடு என்பதால் ஜாதகி மனதை மருத்துவம் சார்ந்த எண்ணங்கள் ஆக்கிரமிக்கும். ஜாதகத்தில் வலுப்பெற்ற கிரகங்களே ஒரு ஜாதகரை வழி நடத்தும். இங்கு லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில், மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று நிற்க, உடன் செவ்வாய் ஆட்சி பெற்று நிற்கிறார். லக்னத்திற்கு 12 ல் உச்ச, ஆட்சி கிரகங்கள் இருப்பதால் மறைவு ஸ்தான தோஷம் இங்கு அடிபடுகிறது. 1௦ ஆமதிபதி சனி மேஷத்தில் உச்ச சூரியனுடனும், ஆட்சி செவ்வாயாலும் நீச பங்கப்படுகிறார். இதனால் ஜாதகியின் ஜீவன வகையில் இவ்விரு கிரகங்களின் தொடர்பு நிச்சயம் இருக்கும். நெருப்பு ராசியான மேஷத்தில்  சூரியன்-செவ்வாய் தொடர்பு மருத்துவ வகையை குறிக்கும் என அறிக. 1௦ ஆமிடம் கும்பத்தில்  மருத்துவ காரக கிரகங்களான ராகு-கேதுக்களுடன் குரு தொடர்பு மருத்துவ விஷயங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வது, போதிப்பது என்ற வகையில் அமையும்.

மருத்துவம் தொடர்புடைய கணினி நிரல்களை எழுதுவதற்கு வாய்ப்பான கிரக தசா-புக்திகள் ஜாதகி கல்லூரி செல்லும் காலத்தில் நடக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமிடம் எழுதுவதை குறிப்பிடும் பாவகமாகும். கால புருஷனுக்கு மூன்றாமிடமான மிதுனம் தகவல்களை கையால் எழுதி பிறருக்கு அறிவிப்பதை குறிப்பிடும் ராசியாகும். தகவல் தொடர்பு ராசியான மிதுனத்தின் அதிபதி புதனே கையெழுத்தின் காரகருமாவார். புதன் இங்கு லக்னத்தை குருவோடு இணைந்து பார்ப்பதால் இந்த வர்க்கத்தில் வித்யா காரகர் புதன் மற்றும் உயர் கல்வி காரகர் குருவின் காரகங்கள் ஜாதகரை உயர் கல்வியில் ஈர்க்கும். துலாத்திலமைந்த உச்ச சனியின் பார்வை பெற்ற செவ்வாய் 8 ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதால், செவ்வாயின் காரகமும் உயர் கல்வியில் ஜாதகருக்கு ஆர்வத்தை தூண்டும். ஆனால் அப்போதைய தசா-புக்தி கிரகங்களே ஜாதகி என்ன படிக்க வேண்டும் என்பதை   முடிவு செய்யும். கல்லூரி செல்லும் காலத்தில் ஜாதகி மிதுனத்தின் நிற்கும் ராகு தசையில் சுக்கிர புக்தியில் இருந்தார். ராகு நவீன மின்னணு வகைகளை குறிப்பிடும். மிதுனம் தகவல் தொடர்புகளை குறிப்பிடும். மேஷத்தில் செவ்வாயுடன் இணைந்துள்ள சுக்கிரன் கணினிப் பொறியியலை குறிப்பிடும். இதனால் இவர் கல்லூரியில் கணினிப் பொறியியல் பயின்றார்.

கல்வியின் பயன் அதை பயன்படுத்தி வாழ்வில் வளமை சேர்ப்பதே. வாழ்க்கைக்கு உதவாத வெற்று அறிவு ஜாதகருக்கு பயன்படாது பிறருக்கே பயன்படும். ஜீவனத்தை அறியப்பயன்படும். தசாம்சத்தில் கும்ப லக்னத்திற்கு 7 ல் புதன் நிற்பதால், ஜாதகி புதன் குறிக்கும் தகவல் தொடர்புடைய பணியில் இருப்பார் எனக்கூறலாம். கணினி நிரல்களை எழுத தகவல் தொடர்பு மற்றும் எழுத்தின் காரக கிரகம் புதன் ராகு-கேதுக்களுடன் தொடர்பாக வேண்டும். தசாம்சத்தில் சிம்ம புதன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் நிற்கிறார். மிதுன கேதுவின் நிழல் புதனின் மீது படிக்கிறது. இதனால் ஜாதகி புகழ் பெற்ற மருந்து நிறுவனமொன்றில் மருந்து நிரல்களை (Medical Coding) எழுதுகிறார்.   கால புருஷனுக்கு 5 ஆமிடமான சிம்மம் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் ராசியாகும். அங்கு கால புருஷ ரோகாதிபதி புதன் நிற்பதால் ஆரோக்கிய விஷயங்களுக்கு தான் கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டியிருக்கும். 7 ஆமிடம் பத்தாமிடத்தின் பாவத் பாவம் என்பதால், அதையே தொழிலாகச் செய்யும் நிலையுமுண்டு.   மேஷத்தில் நிற்கும் ஜீவன காரகர் சனியின் திரிகோணங்களில் மருத்துவம் தொடர்புடைய புதனும், சூரியன், செவ்வாய், ராகுவும் நிற்பதால் ஜாதகி மருத்துவம் தொடர்புடைய துறையில் பணிபுரிவார். விருட்சிக குருவும், தனுசு செவ்வாயும் பரிவர்த்தனைக்குப் பிறகு ஆட்சி பெறுவர். சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெறுவதாலும், பரிவர்த்தனையான பிறகு குரு சனியை பார்ப்பதாலும் மேஷச்சனி நீச பங்கப்படுகிறார். இதனால் இவரது தனிச் சிறப்பான பணியால் ஜீவனம் சிறப்படையும். உச்சம் பெற்ற சுக ஸ்தானாதிபதி சுக்கிரனையும், சுக ஸ்தானத்தையும் 10 ஆமிட குரு பார்ப்பதால், ஜாதகி உடல் உழைப்பற்ற நிலையில் சொகுசாகப் பணிபுரிவார். குளிரூட்டப்பட்ட அறையில் ஜாதகி மருத்துவ நிரல்களை எழுதுவதை இவ்வமைப்பு குறிக்கிறது. ராகு தசையின் இறுதியில்  கல்லூரிக் கல்வியை முடித்தவருக்கு அடுத்து துவங்கிய தற்போதைய குரு தசை வளமையான வாய்ப்புகளை வழங்கிக்கொண்டுள்ளது. குரு பரிவர்தனையாவதால் இங்கு சுக்கிரனுக்கும் நான்காமிடத்திற்கும் குரு பார்வையில்லை என எடுத்துக்கொள்ள இயலாது. பரிவர்த்தனையில் இடம் மாறினாலும், கிரகங்கள் பரிவர்த்தனைக்கு முன் நின்ற இடத்திலிருந்த பார்வையோடுதான் செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்காலத்திலும் தனிச் சிறப்பான மனிதர்களே கவனிக்கப்படுகிறார்கள். தங்கள் தனிச் சிறப்பை அடையாளம் கண்டு, அதனடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்களே வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English