‘அன்னை பூமியின் அன்பு மகள்’
ராஜ் சர்மா
விருட்ச சாஸ்திரம்: பகுதி- 3

இந்த பூமியை உய்விக்க வந்த புனிதர்கள் என்று சில மகான்களை மதங்கள் அடையாளம் காட்டும். அது போன்ற ஒருவர் இந்த மனுஷி. ‘அன்னை பூமியின் அன்பு மகள்’ என்று இவரை விளிக்கலாம்.
உத்திரப்பிரதேசம் காசியாபத்தைச் சேர்ந்தவர் ராஜ்சர்மா. இந்த அறுபது வயதுப் பெண்மணி கடந்த 46 ஆண்டுகளில் ஏறக்குறைய4 லட்சம் மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிகள்,மதரஸாக்கள், ராணுவத்தினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உதவியுடன் நட்டுள்ளார்.
‘நான் மரங்களை எனது குழந்தைகளைப் போல விதைக்கிறேன்’ என்கிறார் இந்தப் புண்ணியவதி. ‘நாமும் ஏன் நமது குழந்தைகளும் கூட ஒருநாள் காலனிடம் சென்றுவிடலாம் ஆனால் நாம் நட்ட மரங்கள் நமது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்’ என்கிறார் இவர். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்!.

நமது இல்லத்தரசிகள் சமையலில் பயன்படுத்தி எறியும் காய்கறிக் கழிவுகளை சேகரித்து அவற்றை உரங்களாக மாற்றி மரங்கள் தழைத்து வளர வழிகாட்டியுள்ளார். தமது ஆயுட்காலத்திற்குள் குறைந்தது 10 லட்சம் மரங்களை நடுவதே தமது வாழ்வின் லட்சியம் என்கிறார். அதுமட்டுமல்ல தனது வாழ்நாளில் தனது இலக்கை அடையாவிட்டால் தனது குழந்தைகள் தனது லட்சியத்தை நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் அவர்கள் தனது சொத்துக்களை அடையமுடியும் என்று உயில எழுதி வைத்துள்ளார். தினசரி இருபது ரூபாயை தனது மரம் வளர்ப்பு முயற்சிக்கு செலவிடுகிறார். இது சிறிய தொகையே என்றாலும் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கேற்ப இவரது முயற்சிகள் அமைகின்றன.
இவரது வீட்டைச் சுற்றிலும் மரங்கள்தான். பல்வேறு பறவைகள், அணில்களின் உறைவிடம் அவரது இல்லம்.

படத்தைப் பாருங்கள் இயற்கையோடு ஒன்றிவிட்ட இம்மனுஷியை விலங்குகள் கூட எவ்வளவு பிரியத்துடன் அணுகுகின்றன என்பது புரியும். காலங்களைக் கடந்த அழியாப் புகழ் பெற்ற மனிதர்களான காந்தி, காமராஜர், M.G.R போன்றோர் வரிசையில் இவரும் இப்போதே இடம் பிடித்துவிட்டது கண்கூடு. ‘
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’
என்ற கண்ணதாசன் வரிகள் இவருக்கு 100 சதவீதம் பொருந்தும்.
இவரது பேட்டியைக் காணவும் மேலதிகத் தகவல்களைப் பெறவும் இங்கு சொடுக்குங்கள்.
இங்கிலாத்து போன்ற மேலை நாடுகளில் மரம் நடுதலை ஒரு இயக்கமாகச் செய்கிறார்கள். அங்கு ஒரு மரத்தை சாதாரணமாக யாரும் வெட்டிவிடமுடியாது. அது கடும் தண்டனைக்குரிய குற்றம் அந்நாடுகளில், அதுமட்டுமல்ல ஒரு மரத்தை சாலைப்பணி விரிவாக்கத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெட்டுமுன் நீதிமன்றங்களிடம் அதற்கான உத்தரவை பெறவேண்டும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் அங்கு குறிப்பிட்ட அகற்ற வேண்டிய மரத்தை வேரோடு பிடுங்கி வேறிடத்திற்கு இடமாற்றம் செய்ய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். (நமது நாட்டிலும் சாலைப்பணி விரிவாக்கம் போன்ற செயல்களுக்காக மரங்களை வெட்ட வேண்டிய ஒரு மரத்திற்கு ஈடாக 10மரங்களை நடவேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

படத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள நரையன்குலம் – ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவமணிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் – நன்றி தினமலர்.
மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை பள்ளிகளில் சொல்லித் தருவதோடு அவற்றில் ஈடுபடுத்துவதையும் பள்ளியிலிருந்தே துவங்க வேண்டும். தமிழகத்து பள்ளிகளில் நமது வளரிளம் தளிர்களின் பிஞ்சு நெஞ்சில் பேதமை எனும் விஷ விருக்ஷங்களை விதைத்து தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் கயமைத்தனத்திளிருந்து நமது குழந்தைகளை காப்பாற்றி அவர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவது நமது கடமை.
ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் துருவப்பணி உருகி தங்களது நாடுகளை காலி செய்யாமல் இருக்க இந்தியா போன்ற பல நாடுகளுக்கு நிதியை வாரி வழங்குகின்றன. அவற்றை நமது அரசு, வனத்துறை மற்றும் வேளாண அமைப்புகள் மூலமாக செயல்படுத்த முயற்சிக்கிறது. சில தவறான அதிகாரிகள் மற்றும் NGO க்களின் கூட்டுக் களவாணித்தனத்தால் அவை விழலுக்கு இறைக்கும் நீராக மாறுவதையும் கவலையுடன் கவனிக்க நேர்கிறது.
பின்வரும் இணைய முகவரிகள் மற்றும் செல்பேசிகளின் மூலம் தொடர்புகொண்டு விருக்ஷங்களை இலவசமாகப் பெற்று நீங்கள் பயனடைவதுடன் உங்கள் பங்கை இந்த உலகிற்கு ஆற்றுங்கள்.
http://www.projectgreenhands.org/get-involved/volunteer
ஜக்கி வாசுதேவ் அவர்களின் இஷா மையத்தின் சார்பில் துவங்கி நடத்தப்பட்டு வரும் முன்னணி அமைப்பு. தமிழ்நாட்டில் செயல்படும் பிரதானமான அமைப்பு இதுதான்.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் அவ்வமைப்பின் கிளைகள் உண்டு.
http://www.greencoimbatore.com/
கோவையைச் சேர்ந்த மற்றொரு அமைப்பு. கோவை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
http://www.ancienttreearchive.org/sponsor-a-tree/?gclid=COCI5PPr4LYCFUx_6wod-i8A_Q
சென்னையில் செயல்படும் அமைப்பு. சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.
http://agritech.tnau.ac.in/ta/forestry/extension_centres_ta.html
தமிழக அரசின் வேலாண்மை அலுவலகங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்டு. அவைகளைத் தொடர்புகொண்டால் அவர்கள் மரங்களை பெற ஏற்பாடு செய்வார்கள். இந்த இணைப்பில் பெரும்பாலான மாவட்டங்களின் தொடர்புடைய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம்.
9894062532 or 9962673668
இந்த செல்பேசி எங்களுக்கு மரங்கள் வேண்டி ஒரு குறுஞ்செய்தி (SMS)அனுப்புங்கள். உங்களை தொடர்புகொண்டு மரங்களை அளிப்பார்கள். சென்னைவாசிகள் மட்டும்
treebankofindia@gmail.com or sms 97898 92080இந்த மின் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது இந்த செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளவும். சென்னை வாசிகள் மட்டும்.
+91-9894062532 சென்னை வாசிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மேஷ ராசியில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதனையடுத்து வரும் அறுபது ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே இந்த வருஷாதி விருக்ஷங்களை வகுத்தளித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். குரு மற்றும் சனியின் நிலையை ஒட்டியே ஒருவரின் ஜீவன, குடும்ப & பொருளாதாரச் சூழல் அமையும். எனவே குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருக்ஷங்களை நட்டு பராமரித்து வந்தால் அவர்களின் வாழ்க்கை சூழல் நன்கமையும். பின்வருவன வருஷாதி விருக்ஷங்கள்.
வருஷாதி விருட்சங்கள்1.பிரபவ – கருங்காலி மரம்2.விபவ – அக்ரூட்மரம்3.சுக்ல – அசோக மரம்4.பிரமோதூத – அத்தி
5.பிரஜோர்பத்தி – பேயத்தி மரம்6.ஆங்கீரஸ – அரசுமரம்7.ஸ்ரீமுக – அரைநெல்லி8.பவ – அலயாத்தி9.யுவ – அழிஞ்சில் மரம்10.தாது – ஆச்சாமரம்11ஈஸ்வர – ஆலமரம்12.வெகுதான்ய – இலந்தை மரம்13.பிரமாதி – தாளைபனைமரம்14.விக்ரம – இலுப்பை மரம்15.விஷு – ருத்திராட்சம்16.சித்ரபானு – எட்டி மரம்17.சுபானு – ஒதியம்18.தாரண – கடுக்காய் மரம்19.பார்த்திப – கருங்காலி மரம்20.விய – கருவேலமரம்21.சர்வஜித் – பரம்பை மரம்22.சர்வதாரி – குல்மோகூர்மரம்23.விரோதி – கூந்தல் பனை24.விக்ருதி – சரக்கொன்றை25.கர – வாகை மரம்26.நந்தன – செண்பகம்27.விஜய – சந்தனம்28.ஜய – சிறுநாகப்பூ29.மன்மத – தூங்குமூஞசி மரம்30.துர்முகி – நஞ்சுகண்டாமரம்31.ஹேவிளம்பி – நந்தியாவட்டை32.விளம்பி – நாகலிங்கம்
33.விகாரி – நாவல்34.சார்வரி – நுணாமரம்35.பிலவ – நெல்லி மரம்36.சுபகிருது – பலா மரம்37.சோபாகிருது – பவழமல்லி மரம்38.குரோதி – புங்கம் மரம்39.விசுவாவசு – புத்திரசீவிமரம்40.பராபவ – புரசுமரம்41.பிலவங்க – புளிய மரம்42.கீலக – புன்னை மரம்43.சௌமிய – பூவரசு மரம்
44.சாதாரண – மகிழமரம்45.விரோதிகிருது – மஞ்ச கடம்பை46.பரிதாபி – மராமரம்47.பிரமாதீச – மருதமரம்48.ஆனந்த – மலைவேம்பு49.ராட்சஸ – மாமரம்50.நள – முசுக்கொட்டை மரம்51.பிங்கள – முந்திரி52.காளயுக்தி – கொழுக்கட்டை மந்தாரை53.ஸித்தார்த்தி – தேவதாரு54.ரௌத்ரி – பனை மரம்55.துன்மதி – ராமன்சீதா56.துந்துபி – மஞ்சள் கொன்றை57.ருத்ரோத்காரி- சிம்சுபா58.ரத்தாக்ஷி – ஆலசி
59.குரோதன – சிவப்புமந்தாரை60.அட்சய – வெண்தேக்கு
மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.