பாஸ்போர்ட் பரிதாபங்கள்…

வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்கு செல்வோர் இன்று பலதரப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாதமும் கடத்தலும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒருவரது பாஸ்போர்ட்டை கவனமாக பாதுகாப்பது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாஸ்போர்ட் என்பது வெளிநாடு செல்ல ஒருவருக்கு அனுமதி வழங்கும் உரிம ஏடு என்று கூறலாம். பாஸ்போர்ட்டிலும் இன்று முதல் தரம், இரண்டாம் தரம் என்று பலவகைகள் வந்துவிட்டது. சில நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுக்கு உலக அரங்கில் மதிப்பே இல்லை என்று கூறலாம். உலகிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தான், மோசடி செய்தே சம்பாதிக்க முயலும் நைஜீரியா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் அதில் அடக்கம். மதிப்பான நாடுகளின் பாஸ்போர்ட்டை போலியாக தயார் செய்து உலக அரங்கில் பயணிப்போரும் உண்டு. பெரும்பாலும் வறுமை  நாடுகளில் வசிப்போர், வாழ்க்கை வளமை வேண்டி போலி பாஸ்போர்ட்டில் வேறு நாடுகளுக்கு செல்கின்றனர் அல்லது கள்ளத்தோணி மூலம் பயணிக்கின்றனர். போர் காரணமாக சொந்த தேசத்தை துறந்து, சொந்த மக்களை பிரிந்து, சொந்த இனத்தாலேயே வஞ்சிக்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கு நமது இலங்கைத் தமிழர்கள் சென்று குடியேறியது நாம் அறிந்ததே. முறையான பாஸ்போர்ட் அனுமதியன்றி  கள்ளத்தோணி மூலம் அகதிகளாக குடியேறுபவர்கள் பற்றி முன்பே ஒரு பதிவு  எழுதியுள்ளேன். இப்பதிவில் பாஸ்போர்ட் குளறுபடிகளுக்கான காரணத்தை மட்டும் ஜோதிட ரீதியாக ஒரு பிரசன்ன உதாரணம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

பாஸ்போர்ட்டும் ஜோதிடமும்.

பாஸ்போர்ட் என்பது ஒரு உரிமை ஏடு என்று பார்த்தோம். ஏடு, பதிவுகள், தரவுகள் என்றாலே அவை புதனின் காரகத்தில் வரும். இதனடிப்படையில் பாஸ்போர்ட்டை குறிக்கும் கிரகம் புதனாகும். பாவகத்தில் பாஸ்போர்ட் நான்காம் பாவகத்தை குறிக்கும். ராசிகளில் பாஸ்போர்ட் நீர் ராசிகளையும், நீர் ராசிகளில் அமைந்த புதனின் நட்சதிரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவைகளும் பாஸ்போர்ட்டின் காரக நட்சத்திரங்களாகும்.  புதன்-ராகு தொடர்பு போலிப் பாஸ்போட்டை குறிக்கிறது. புதன்-செவ்வாய் தொடர்பு பாஸ்போர்ட்டின் அனுமதி, தடை, தாமதங்களுக்கு வகை செய்கிறது.   பாஸ்போர்ட் பாதிப்புகளுக்கு புதனுடன் தொடர்பாகும் ராகு, செவ்வாய் இவற்றோடு 4, 8 பாவக தொடர்பும் காரணமாகிறது.

பாஸ்போர்ட் பாதிப்பிற்காக பார்க்கப்பட்ட ஒரு ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

ஜாதகர் ஒரு ஆண். இவரது பாஸ்போர்ட்டில் ஒரு பாதிப்பு. இதனால் இவர் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புகையில் ஒரு எச்சரிக்கையை எதிர்கொண்டார். மீண்டும் வெளிநாடு செல்கையில் பாதிப்பு வருமா? என்பது இவரது கேள்வி. ஏனெனில் தொழில் நிமித்தம் தான் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக ஜாதகர் தெரிவித்தார்.

கால புருஷனுக்கு 10 ஆமிடமான மகர உதயம் தொழில் விஷயத்தின் தாக்கத்தால் கேள்வியாளர் பிரசன்னம் பார்க்க கேட்டுக்கொண்டதை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 7 ல் கால புருஷனுக்கு நான்கில் கடகத்தில் ஆரூடம் அமைந்துள்ளது. இது இவரது தொழில் விஷயத்திற்காக கடல் கடந்து வெளிநாடு செல்கையில் ஏற்படும் சூழலை எதிர்கொள்வது தொடர்பானது என்பதை குறிப்பிடுகிறது. பாதிப்புகளை சொல்லும் கவிப்பு நீர் ராசியான விருட்சிகத்தில் கால புருஷனுக்கு 8  ஆமிடத்தில் விழுந்துள்ளது. கவிப்பும் நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்தது கேள்வியாளர் வெளிநாடு செல்கையில்தான் சாதக, பாதக சூழல்களை எதிர்கொள்வார் என்பதை குறிப்பிடுகிறது. கவிப்பு உதயத்திற்கு 11 ல் அமைந்தது ஒரு லாபகரமான அமைப்பு. உதயத்திற்கு வெளிவட்டத்தில் பாம்பு 4, 11 அதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் அமைந்துள்ளது. இது 4 ஆமிடம் குறிக்கும் பாஸ்போர்ட் விஷயத்தில் கேள்வியாளர் அடையும் சிரமங்களை குறிப்பிடுகிறது. உதயாதிபதி சனி உள்வட்டத்தில் வலுவாக இருக்கிறார். உதயமும் உதயாதிபதியை நோக்கியே நகர்கிறது என்பதும் சிறப்பே. ஆனால் ஜாமச்சனி பாஸ்போர்ட்டை குறிக்கும் நான்காம் பாவகம் மேஷத்தில் நீசம் பெற்று ராகுவோடு இணைவதால் பாதிப்பையும், உச்சமான எட்டாமதிபதி சூரியனோடு இணைவதால் அரசாங்க வகை கடும் பாதிப்புகளையும், புதனோடு இணைவதால் பாஸ்பார்ட் வகை பாதிப்புகளையும், சந்திரனோடு இணைவதால் வெளிநாடு வகை சிரமங்களையும் கேள்வியாளர் எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிப்பிடுகிறது. பாஸ்போர்ட்டை குறிக்கும் புதன் 4 ல் வக்கிரமாகியுள்ளதால் அவர் ராகுவால் பாதிக்கப்படமாட்டார். ஆனால் வக்கிரமானது பாஸ்போர்ட் விஷயங்களில் ஏற்படும் இழுபறிகளை குறிக்கும். 6, 9 க்குரிய புதன் 4 ல், 6 ஆமிட செவ்வாயோடு பரிவர்த்தனையாவது கேள்வியாளர் வேலை விஷயமாக வெளிநாடு செல்கையில் பாஸ்போர்ட்டால் பாதிப்பு வரும் என்பதை குறிப்பிடுகிறது. ஏனெனில் 4 மற்றும் புதன் பாஸ்போர்ட் என்றால், 6 என்பது வேலை, செவ்வாய் என்பது தடை என்பதை குறிக்கிறது. இங்கு பாஸ்போர்ட் 4, 6 பாவாதிபதிகளான புதனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் பகையே ஆனாலும் பரிவர்த்தனை பெறுவது என்பது வேலை விஷயத்தில் வெளிநாடு சென்றால் பாஸ்போர்ட் விஷயத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமே தவிர தடை ஏற்படுத்தாது.

ஜாம புதன் (வெளிவட்ட புதன்) ஆரூடத்தில் 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறது. ஆரூடம் உதயாதிபதி சனி சாரம் பெற்றுள்ளது ஆகியவை. நீர், கடல் தாண்டல், சம்பாத்தியம்  ஆகியவை தொடர்பான விஷயங்களின் தொடர்புகளை குறிப்பிடுகிறது. 11 ல் கவிப்பு அமைந்தது பாஸ்போர்ட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பையும் அது உதயத்தின் லாப பாவகம் என்பதால் பாதிப்பு கடும் விளைவுகளை தராது என்பதையும் இணைந்ததே கூறுகிறது. உதயத்தை பாக்கிய ஸ்தான குரு 5 ஆம் பார்வையாக பார்ப்பதும், 7 ஆமிடத்தை உள்வட்ட குரு பார்ப்பதும் மிகச் சிறப்பான அமைப்பு. இவை தொடர்புடைய பாதிப்புகளில் இருந்து கேள்வியாளர் மீண்டுவிடுவார் என்பதை குறிப்பிடுகிறது.

இந்த கேள்வியாளர் வளைகுடாவில் பணிபுரிகிறார். இவரது பாஸ்போர்ட்டில் நீர்த்துளிகள் விழுந்து பாதிக்கப்பட்டது. இவர் இந்தியா திரும்புகையில் தான் பணிபுரிந்த வளைகுடா தேசத்தில் பாஸ்போர்ட்டை சரிசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டார். இந்தியா வந்து மீண்டும் பணிக்கு வளைகுடா செல்ல உள்ள சூழலில் இந்தியாவிலேயே இதற்கு தீர்வு காண முயல்கிறார். ஆனால் கால தாமதமாகிறது.

பிரசன்னம் கேள்வியின் சூழலை துல்லியமாக சுட்டிக்காட்டுகிறது. பிரசன்னப்படி இதன் பொருட்டு வெளிநாடு செல்ல கேள்வியாளருக்கு தடை ஏற்படாது என்றாலும் சற்று தாமதமாகலாம். எனவே உரிய அலுவலகம் மூலம் பாஸ்போர்ட்டை சரிசெய்யும் முயற்சியை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.  

மீண்டும் விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English