ஆறாம் பாவம்

பளிங்கு போன்றதொரு நேர் சாலை.அதில் குழிகளும் மேடுகளும் கூட இல்லை.  அது ஒருவழிச்சாலையும் கூட. எதிரில் எந்த ஒரு நபரோ அல்லது வாகனமோ வராது.  உங்களிடம் இருப்பது நவீன வசதிகளுடன் கூடிய அற்புதமான BMW கார். அதுவும் சமீபத்திய மாடல். உங்கள் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள்.
மேகத்தில்  பறப்பது போன்று இருக்காதா?.
இன்றைய சராசரி இளைஞர்களின் கனவு இத்தகைய காரை வாங்கி அனுபவிக்குமளவு ஒரு அதிகாரம்மிக்க சௌகரியமான சம்பாத்யத்தில் ஒரு பணி.
ஆனால் உண்மையில் அத்தகைய ஒரு பயணம் சுகமாக இருக்க வாய்ப்பே இல்லை. சில நூறு கிலோ மீட்டர்கள் பயணத்திற்குப்  பிறகு பயணம் அலுப்புத்தட்டிவிடும்.என்பதே நிதர்சனம்.
மற்றொரு சாலை.
இது மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருவழிச்சாலை. உங்களிடம் இருப்பது பழைய அம்பாசிடர் கார். பல ஊசிக்கொண்டை வலைவுகளைக்கொண்ட மலைப்பாதை.
உங்கள் பயணத்தை இப்போது கற்பனை செய்து பாருங்கள்.
திடீரென்று திருப்பத்தில் அச்சுறுத்திய சக வாகன ஓட்டியின் பிறப்பை வசைபாடிய பிறகு இந்தப்பயணம் உங்களுக்கு அடுத்து என்ன எதிர்படும் என்ற ஒரு சுவாரஸ்யத்தை தருவது நிச்சயம்.
இத்தகைய பாதையில் பயணித்து முடித்த பிறகு நீங்கள் பண்பட்ட சிறந்த அனுபங்கள் கொண்ட மனிதராய் மாறியிருப்பீர்கள்.
மனித வாழ்வு இயந்திரத்தனமாகி வாழ்க்கை அலுப்புத்தட்டிவிடக்கூடாது என்பதற்காகவே வாழ்வில் எதிர்படும் சிரமங்கள்.
ஒருமனிதனின் வாழ்வில் இப்படிப்பட்ட எத்தகைய சிரமங்கள் எதிர்படும் என்பதை குறிப்பிடுவதே ஜாதகத்தில் ஆறாம் பாவம்.
ஆறாம் பாவம் கடன், (குணப்படுத்தக்கூடிய) வியாதிகள், எதிரிகள் போன்றவற்றைக் குறிப்பிடும் பாவமாகும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 

மேஷ லக்னத்தில் ஆறாம் பாவாதிபதி புதன் வக்கிர கதியில் அமைந்துள்ளார். ஜாதகர் தனது வாழ்வில் ஆறாம் அதிபதியின் காரகத்துவத்தின் காரணமாக சிரமப்படுவார் என்பதை இது குறிக்கிறது.மகர ராசிக்கு ஆறாம் பாவாதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைந்துள்ளதன் மூலம் இதை உறுதி செய்துகொள்ளலாம்.
ஆறாம் பாவத்தின் பிரதான காரகங்கள் என்றால் அது கடன், வியாதி எதிரி எனில் இம்மூன்றில் எந்த வகையில் ஜாதகர் சிரமப்படுவார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?.
முதலாவதாக கடன்.
லக்னத்திற்கு 2 ஆமிடமான தனஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளதும் ராசிக்கு விரயத்தில் குரு உள்ளதும் ஜாதகருக்கு விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஜாதகன் இன்னும் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் ஒரு மாணவன். எனவே கடன் என்பது ஜாதகருக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இரண்டாவதாக எதிரி.
லக்னத்திற்கு ஆறாம் பாவத்தில் கடும் பாவிகளான சனி, ராகு, கேதுக்கள் அமைந்தால் எதிர்ப்பில்லாத வாழ்வு என்பது ஜோதிட விதி மட்டுமல்ல அனுபவ உண்மையும் கூட. லக்னத்தில் ஒரு உச்ச கிரகம் அதுவும் பஞ்சமாதிபதியான ராஜ கிரகம் சூரியனாக இருந்தால் எதிரி உதிரியாகிவிடுவான் என்பதும் ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். எனவே எதிரி வகையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.மூன்றாவதாக வியாதி.
லக்னத்திற்கு ஆறாம்பாவத்தை பிணிக்கு (வியாதிக்கு) காரகத்துவம் பெற்ற பாதகாதிபதி சனி பார்க்கிறார். ராசிக்கு ஆறாம் பாவத்தை குரு பார்த்து வளப்படுத்துகிறார்.எனவே ஜாதகர் வியாதியால் பாதிக்கப்படுவார் என்பதை தெளிவாக அனுமானிக்கலாம்.
சரி. ஆனால் எப்போது வியாதி வரும்.
வாழ்வின் அனைத்து சம்பவங்களும் திசா புக்திகளின் அடிப்படையில்தான் நடக்கும்.
ஜாதகருக்கு 10.02.2014 முதல் ராகு திசை நடக்கிறது.
ஆறாம் பாவத்தில் கடும் பாவியான ராகு இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் ராகு-கேதுக்கள் தாங்கள் இருக்கும் பாவாதிபதியின் செயலையே பிரதானமாக பிரதிபலிப்பர் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் சுபாவ அடிப்படையில் ராகு பிணிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி போன்று செயல்படுவார் என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (கேது செவ்வாயை போன்று செயல்படுவார்).
ராகு திசை 18 ஆண்டுகள் எனில் ராகு தான் இருக்கும் பாவாதிபதி புதன் இரண்டு பாவங்களுக்கு (3 & 6) அதிபதி என்பதால் தனது 18 அண்டு பலனை 9 ஆண்டுகள் கொண்ட இரு பகுதிகளாக பிரித்து வழங்கும்.
இதில் ஆறாம் பாவம் கடன், வியாதி, எதிரி எனில் 3 ஆம் பாவமானது வெற்றி, வீரம், துணிவைக் குறிக்கும் உப ஜெய ஸ்தானமாகும்.
சரி.இரு பகுதி பலனில் எந்த பகுதிக்கான பலன் முதலில் நடக்கும் எது இரண்டாவது நடக்கும் என எப்படி காண்பது?
கோள்சாரத்தை கவனியுங்கள்.
ஜனன காலத்தில் பாதிப்பை அளிக்கும்படி அமையும் வருட கிரகம் கோள்சாரத்தில் அதே பாவத்தில் நிற்கும்போது உறுதியாக பாதிப்பை தரும்.  
இந்த விதியின் அடிப்படையல் ராகு ஜனன ஜாதகத்தில் தான் நின்ற கன்னி ராசியிலேயே தற்போது நிற்கிறது என்பதிலிருந்து பாதிப்பு தற்போது ஏற்படும் என அறியலாம்.   
ஜாதகர்  சென்ற மாதம் அக்டோபர் இறுதி வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மிகக் கடுமையான பாதிப்பு. ஜீவ மரண போராட்டத்திற்குப் பிறகு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தேறினார்.

ஜாதகர் பாதிக்கப்பட்ட காலத்தின் கோள்சாரம் கீழே.

ஜனனத்தில் ராகு நின்ற அதே ஆறாம் பாவத்தில் ராகுவுடன் ஆறாமதிபதி புதன் உச்சமடைந்துள்ளார்.
ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் நீசமாகியுள்ளார். 
சூரியன் நீசமானதால் சூரியனின் பாவத்தில் நின்ற லக்னாதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி குருவும் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பார்வை பெற்று வலுவிழந்துவிட்டனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் வியாதி தாக்கும்.
அதே போன்றுதான் பாதிப்பை தரக்கூடிய கிரகங்கள் ஜாதகரைத் தாங்கிப்பிடிக்கும் கிரகங்கள் வலுவிழந்ததும் தனது பாதிப்பை வழங்குகின்றன.
ராகு விஷத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் விஷ ஜூரமான டெங்குவால் பாதிப்பு. (மருத்துவ ஜோதிட முறையில் இதுபற்றி விரிவாக எழுதினால் பதிவு மிக நீளும்.எனவே இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.)
மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,


அன்பன்,

பழனியப்பன்.

அலைபேசி: 7871244501.  

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

உன்னதங்களை தேடி எதார்த்தத்தைத் தொலைக்கும் அறிவு ஜீவிகள்!

இன்றைய கால மனிதர்கள் அதிக அறிவு, அதிக சம்பாத்தியம் என்று அனைத்திலும் அதீதத்தை நாடுவதன் காரணமாக, சின்னச் சின்ன விஷயங்களின் மகிழ்வை இழக்கிறார்கள். வாழ்க்கை என்பது பல சிறிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலையாக

மேலும் படிக்க »
கிரக அஸ்தங்கம்

தங்கச்சாமி, வெள்ளிச்சாமி, தாமிரச்சாமி!

தங்கம் சென்ற ஆண்டு யாரும் எதிர்பார்க்காத அளவு ஏற்றம் கண்டு சாமான்ய மக்கள் வாங்க இயலாத விலைக்குச் சென்றுவிட்டது. வெள்ளி 2025 ஆண்டு பிற்பகுதியில் திடீர் ஏற்றம் கண்டது. தங்கம் சுமார் எழுபது சதவீதம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

நானே ராஜா! நானே மந்திரி!

ஒருவர் தனது கனவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குரிய சமூக அங்கீகாரமும் குடும்ப ஆதரவும் கிடைக்காத சூழலில் மிகுந்த மன அழுத்தத்தைத் பெறுகிறார். குறிப்பாக, வருமானம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மரபுவழித் தொழில்கள் மட்டுமே மதிப்போடிருந்த

மேலும் படிக்க »
Tarot

The Fool

தனது மகனுக்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஒறு தாய் வந்தார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார். இதற்கு முன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் மகனைப் பற்றி கூறியவை சரியாக இல்லை.

மேலும் படிக்க »
இந்தியா

H1B கனவுகள்.

உலகில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பை கொண்டிருக்கின்றன. சீனா அபூர்வ வகை  கனிமங்களைக்கொண்டு (Rare Earth Minerals)  உலகை ஆட்டுவிக்க நினைக்கிறது. தைவான் சீனாவின் அபூர்வ வகை கனிமங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்னணுச்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English