வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர் தண்ணீர் குடித்தால் தொண்டை வழியாக நீர் இறங்குவது தெரிய வேண்டும் என்பது அனைவருக்குமான எதிர் பார்ப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறிவிடுகிறதா என்ன?. தலையில் சரக்கு இருக்காவிட்டாலும் தோற்றத்தில் சிவப்பு வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் பிரதானமாக இருக்கிறது. நிறம், குணம் இரண்டும் அருந்தும் தேநீரில் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் துணைவராக கிடைப்பது அபூர்வமே. இந்நிலையில் பல்வேறு கிரக அம்சங்களைக்கொண்டு ஒருவரின் நிறம், குணம், தொழில் ஆகியவற்றை அறியலாம். நான் பல பதிவுகள் அவற்றைப்பற்றி எழுதியுள்ளேன். ஆனால் ஒரு ஜாதகரின் நிறம் பற்றி எழுதியது மிகக் குறைவு. சமீபத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அங்கு பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் அவரது உறவுக்காரப் பெண்ணைக் கண்டேன். நிறத்தில் தண்ணீர் குடித்தால் மெய்யாலுமே நீர் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் போன்ற தோற்றத்தில் இருந்தாள். அப்பெண்ணின் ஜாதகத்தை கேட்டு வாங்கி ஆராய்ந்த போது கண்டறிந்த உண்மைகள் சுவாரஸ்யமாக இருந்தன. இன்றைய பதிவு ஒருவரது நிறம் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்வதே.  

தோற்றத்தில் ஒருவரின் நிறத்தை ஆராய லக்னம், ராசி மற்றும் லக்னாதிபதி, ராசியாதிபதி இவற்றோடு தொடர்புகொண்ட கிரகங்களை ஆராய்வது உதவும் என்றாலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கச் சக்கரம் இதற்கு தெளிவான பதிலை அளிக்கிறது. சதுர்த்தாம்சம் எனும் ஒரு ராசியை நான்காகப் பிரித்து ஆராயும் சக்கரம் பொதுவாக வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களை அறியவே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் நிறத்தை இவ்வர்க்கம் மூலம் அறியலாம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ராசிச் சக்கரப்படி துலாம் லக்னத்தில் சனி வக்கிரமாகியுள்ளார். லக்னாதிபதி சுக்கிரன் 7 ல் இருந்து லக்னத்தை பார்த்தாலும் அவர் மேஷத்தில் நிழல் கிரகமான கேதுவின் அஸ்வினியில் இருப்பதால் ஒளி குன்றித்தான் பார்க்கிறார். ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் லக்னத்திற்கு 6, 8 ல் மறைந்துள்ளனர். 8 ல் சுய சாரம் ரோஹிணியில் மறைந்த உச்ச சந்திரனை நோக்கி ராகு வருவதால் சந்திரனும் பயனற்றுவிட்டார். லக்னத்திற்கு தனுசு கேதுவின் நிழல் விழுகிறது. இதனால் ஜாதகர் கருப்பாக இருக்கிறார்.

சதுர்த்தாம்சத்தில் லக்னமும் நான்காமிடமும் ஒருவரின் நிறத்தை அறிய உதவும். துலாத்தில் லக்னம் வர்கோத்தமம் பெற்றுள்ளது. லக்னத்திற்கு 4 ல் வக்கிர சனி நின்று லக்னாதிபதி சுக்கிரனை நேர் பார்வையாகவும், லக்னத்தை 1௦ ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். இந்த வர்கத்திலும் வர்கோத்தமம் பெற்ற கேதுவின் நிழல் லக்னத்தின் மீது விழுகிறது. இது ஜாதகர் கருமையானவரே என்பதி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. ஜாதகர் மிகக் கருமையானவர்.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் கீழே.

மிதுன லக்ன ஜாதகத்தில் நிழல் கிரகமான கேதுவும் மாந்தியும் லக்னத்தை தாண்டிப் போயுள்ளன. லக்னத்தில் சிவப்பை குறிக்கும் செவ்வாய் அமைந்துள்ளார். லக்னத்தை ராகு பார்த்தாலும் லக்னத்திற்கு பின்னால்தான் அவரது பார்வை விழுகிறது. நான்காமிடமான கன்னியில் லக்னாதிபதி புதன் தனது மூலத் திரிகோண வீட்டில் உச்சம் பெற்றுள்ளார். லக்னாதிபதி புதன் கருமை நிறத்தைக் குறிப்பவர். இதனால் ஜாதகி கருமையா? என்றால் அல்ல. லக்னாதிபதி புதனுக்கு ஒளி கிரகங்களான சூரியன், சந்திரனுடன் தொடர்புடன் பிரகாசம், கண்ணியம், மதிப்பு ஆகிய  தோற்றத்தை வழங்கும் குருவும் இணைந்துள்ளார். இதனால் ஜாதகி நல்ல வளமையான பிரகாசமான நிறத்தில் இருப்பார்.

சதுர்த்தாம்சத்தில் மிதுன லக்னம் வர்கோத்தமம் பெற்று, லக்னாதிபதி புதன் மீனத்தில் நீசம் பெற்றாலும், உடலுக்கு நிறத்தை அடையாளம் காட்டும் நான்காமிடத்தில் குருவுடன் பரிவர்த்தனையாகிறார். மேலும் புதனுக்கு செவ்வாய் தொடர்பும் ஏற்படுகிறது. இதனால் ஜாதகி நல்ல பிரகாசமான சிவந்த நிறத்தை அடைகிறார். தனுசில் ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் ராகுவுடன் இணைந்ததால் ஒளி குன்றி லக்னத்தை பார்ப்பதால் நல்ல நிறத்தில் ஜாதகி இருக்க வாய்ப்பில்லை எனும் சந்தேகம் எழலாம். ஆனால் நிறத்தை தீர்மானிப்பதில் 4 ஆமிடமே முக்கிய பங்கு வகிப்பதால் இந்த ஜாதகி சிவந்த நிறத்துடன் உள்ளார். லக்னத்துடன் ஆன்மீக கிரகம் கேதுவும், லக்னாதிபதி புதனுடன் ஆன்மீகம், பிரகாசம் ஆகியவற்றை குறிக்கும் குருவும், சிவப்பு நிறத்திற்குரிய செவ்வாயும் தொடர்புகொண்டதால் ஜாதகியை பார்த்தால் மகாலக்ஷ்மியே நேரில் வந்தது போல இருப்பார். அப்படி ஒரு பாந்தமான முகம்.

மூன்றாவதாக மற்ருமொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

கால புருஷ நான்காமிடமான கடகமே லக்னமாக அமைந்துள்ளது. லக்னத்தில் ஒளி கிரகமான சூரியனுடம் சந்திரனுக்கு அடுத்த பிரகாசமான கிரகமான சுக்கிரனும் அமைந்துள்ளார். லக்னத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை. லனாதிபதி சந்திரன் 1௦ ஆமிடமான மேஷத்தில் அமைந்து அவரை நான்காமிடத்திலிருந்து சிவப்பு நிறத்திற்குரிய செவ்வாயும், பிரகாசத்திற்குரிய குருவும் பார்க்கிறார்கள். லகனத்திற்கோ, லக்னாதிபதிக்கோ இதர கிரக பார்வை இல்லை. எனினும் சந்திரனுக்கு ராகுவின் நிழல் விழுகிறது. லக்னமும், நான்காமிடமும் சிறப்பாக அமைந்துள்ளன.

சதுர்த்தாம்சத்தில் மேஷ லக்னத்திலேயே இரு ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் அமைந்துள்ளனர். அதில் பிரதான ஒளி கிரகம் சூரியன் உச்சம். சந்திரனும் சுக்கிரனும் வர்கோத்தமம் பெற்று அமைந்துள்ளார்கள். லக்னத்திற்கு நான்கில் வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன் அங்கு திக்பலமும் பெறுகிறார். 1௦ ல் திக்பலம் பெற்று குருவுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தையும், லக்னத்திலமைந்த நான்காமதிபதி  சந்திரனையும், நான்கில் திக்பலம் பெற்ற சுக்கிரனையும் பார்க்கிறார். இதனால் தனது நாற்பதுகளில் இருக்கும் இந்த ஜாதகி தனது இளமை குன்றாமல் இன்னும் பேரழகியாகத் திகழ்கிறார். லனத்தில் கௌரவ காரகர் சூரியன் இருப்பதால் தனக்கு கௌரவத்தையும், மதிப்பையும் வழங்கும் அழகை தக்கவைக்க தனிக்கவனம் செலுத்துகிறார். லக்னத்தை கேது பார்ப்பதால் தனது அழகை பராமரிக்க சிறிது செயற்கை அழகு சாதன ரசாயனங்களையும் பயன்படுத்துகிறார்.

நான்காமிடத்தில் திக்பலம் பெரும் கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனுமாவர். இவிருவரில் ஒருவர் நான்கில் அமைந்து கருமை கிரகங்களான சனி, ராகு-கேது, புதன் பார்வை இல்லாமலிருந்தால் ஜாதகர் நல்ல நிறமுடையவராக இருப்பார் எனலாம். கால புருஷனின் 4 ஆமதிபதி சந்திரன் நான்கிற்கு லாப ஸ்தானமான ரிஷபத்தில் உச்சம் பெற்று மேற்சொன்ன கருமையை வழங்கும் கிரகங்கள் தொடர்பு ஏற்படாமலிருப்பின் அவர்களும் சிவந்த நிறமுடையவராக இருப்பர். மேலும் கால புருஷனுக்கு நான்கின் லாபாதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 4 ல் திக்பலமோ, உச்சமோ பெற்று மேற்சொன்ன கருமை கிரகங்கள் தொடர்பற்று அமைய ஒருவர் சிவந்த நிரமுடையவராக இருப்பார். 

கீழே நான்காவதகாக பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் ஜாதகம்.

மகர லக்னத்தை சந்திரனும் செவ்வாயும் மட்டுமே பார்க்கிறார்கள். லக்னம் கருமை கிரகங்களான சனி, ராகு-கேது, புதனால் பார்க்கப்படவில்லை. ஆனால் லக்னாதிபதி சனியே கருமை கிரகம்தான். அவருக்கு உச்ச புதன் தொடர்பு கிடைத்தது நிறத்தில் மெருகை வேண்டுமானால் கூட்டலாம் ஆனால் நிறம் கருமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சனி புதனைவிட்டு 14 பாகைகள் விலகியும், பிரதானமான ஒளி கிரகமான சூரியனுக்கு 2 பாகை நெருக்கத்திலும் அமைந்துள்ளார். இதனால் ஜாதகி பிரகாசமான வர்ணம் உடையவராக இருக்க வேண்டும். நான்காமிடத்தை சிவப்பிற்குரிய  அதனதிபதி  செவ்வாயும், தனது மூலத் திரிகோண வீட்டிலிருந்து பிரகாசத்திற்குரிய சுக்கிரனும் பார்ப்பதால் ஜாதகி சிவந்த வர்ணமுடையவராகவே இருப்பார் எனலாம்.

சதுர்தாம்சத்தில் மகர லக்னம் வர்கோத்தமம் பெற்றுள்ளது. செவ்வாயும், சுக்கிரனும் 4 ல் அமைந்து ஒளி கிரகமான சந்திரனின் பார்வையை பெறுகிறார்கள். நான்காமிடதிற்கோ, லக்னத்திற்கோ கருமை நிற கிரகங்களின் தொடர்பு இல்லை. வெண்மைப் பிரகாசத்தை குறிப்பிடும் சுக்கிரன் நான்காமிடத்தில் அதனதிபதி செவ்வாயுடன் இணைந்து திக்பலம் பெற்று,  தன் வீடு துலாத்தில்  அமைந்த கால புருஷ நான்காமதிபதி சந்திரனின் பார்வையை பெறுவதால், ஜாதகி சிவந்த மேனியும், பளீர் வெண்மையும் உடையவராக இருப்பார். அப்படித்தான் இருக்கிறார். இப்பெண்ணை பார்த்தபோது இவள் தண்ணீர் குடித்தால் நீர் இருந்குவது தொண்டையில் தெரியுமோ? என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. அந்த ஆர்வத்தால்தான் இந்த மாணவியின் ஜாதகத்தை ஆய்வுக்காக கேட்டு வாங்கினேன். நண்பர் வீட்டில் இப்பெண்ணை பார்த்தபோது மனதிற்குள் ஓடிய பாட்டுத்தான் பதிவின் தலைப்பாக அமைந்துள்ளது.

“வெள்ளாவி வைச்சுத்தான் வெளுந்தாங்களா?”

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »
இந்தியா

Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English