பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று ஒரு வெற்றிக் கனவாக நனவாகியிருக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் எந்தக் கிரகத்தின் அருள் இருந்தால், ‘பழையன கழிந்து புதியன புகும்’ என்ற இந்த வாகன யோகம் கைகூடும்? ஜோதிட ரீதியாகப் பார்ப்போம்.

சகல சௌபாக்கியங்களுக்கும் காரகனாக விளங்குபவர் சுக்கிர பகவான். ஒருவருக்குச் சொந்த வீடு மற்றும் வாகன யோகத்தைத் தீர்மானிப்பதில் நான்காம் இடமும் (சுக ஸ்தானம்) அதன் அதிபதியும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பல ஆண்டுகளாகப் பழைய வாகனங்களையே கதி என்று இருந்த ஒருவருக்கு, தடைகளைத் தகர்த்துப் புதிய வாகனத்தை அடையும் யோகத்தை எந்த தசாபுத்திகள் வழங்குகின்றன? கிரகங்களின் மாற்றத்தால் ஒருவரது வாகனக் கனவு எப்படி நனவாகிறது என்பதைப் பற்றிய அலசல் இது.

பழைய வண்டிகளின் பராமரிப்புச் செலவுகளும், பாதியில் நின்ற பயணங்களும் இனி ஒரு தொடர்கதையாகாது! காலச்சக்கரம் சுழல, கிரகங்களின் ஆசியால் புதிய வாகனத்தில் அமரும் உன்னதத் தருணம் கூடி வந்துள்ளது. ஜாதகக் கட்டத்தில் மறைந்திருந்த ‘வாகன யோகம்’ விழித்துக்கொண்ட கதையை இந்தப் பதிவில் காண்போம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்:

லக்னமும் லக்னாதிபதியும்: பழமை மற்றும் பழுது ஆகியவற்றின் காரக கிரகமான சனியின் மகர லக்னத்தில் பிறந்தவர் ஜாதகர். துலாத்தில் நிற்கும் லக்னாதிபதி சனி அங்கு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கமான செவ்வாயின் ‘சித்திரை’ நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி உச்சம் பெற்று வக்கிரமானதோடு, அஸ்தங்க கிரகத்தின் சாரம் பெற்றுள்ளதால் பலகீனமான அமைப்பில் உள்ளார். எனினும், வாகனத்தைக் குறிப்பிடும் 4-ஆம் இடத்திலிருந்து தனித்த புதன் லக்னாதிபதி சனியைப் பார்ப்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

வாகன காரகர்கள்: லக்ன யோகாதிபதியும் சொகுசு வாகன காரகருமான சுக்கிரன், கால புருஷனுக்கு வாகன ஸ்தானமான கடகத்தில், லக்னாதிபதி சனியின் ‘பூசம்’ நட்சத்திரத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. ஆனால், பொது வாகன காரகரான செவ்வாய் இங்கு 4-ஆம் அதிபதியாகி அஸ்தங்கம் பெற்றது வாகன வகையில் சிறப்பில்லை. அதுவும் வாகன ஸ்தானாதிபதி செவ்வாயை அஸ்தங்கப்படுத்தும் சூரியன் 8-ஆம் அதிபதி என்பதால், ஜாதகருக்குக் கிடைக்கும் வாகனங்கள் யாவும் நிறைவானதாக இல்லாமல் ஏதோ ஒரு குறையுடனேயே அமையும் நிலை உருவானது.

ஏன் பழைய வாகனங்கள்? வாகன பாவகமான மேஷமும், சுக்கிரனும் பலவீனச் சனியின் பார்வையில் இருப்பதாலும் செவ்வாய் அஸ்தங்கமானதும் ஜாதகருக்குப் பழைய அல்லது பழுதுகளுடன் கூடிய வாகனங்களையே விதி கொடுத்தது. எனினும், வாகன பாவகமான 4 ல் நிற்கும் தனித்த புதன் அந்த பாவகத்திற்கு மட்டும் சிறப்பை சேர்க்கிறார்.

மாற்றங்களின் காரகன்: 3-ஆம் இடம் என்பது 4-க்கு விரய ஸ்தானம். ஒருவரது ஜாதகத்தில் 4-ஆம் இடத்து கிரகம் 3-ஆம் இடத் தொடர்பு பெற்றால், அவர் தனது வாகனத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். இந்த ஜாதகத்தில் மீனத்தில் நிற்கும் மாற்றத்தின் காரகர் சந்திரன் வானக ஸ்தானமான 4 ல் நிற்கும் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்பதால் ஜாதகருக்கு அடிக்கடி வாகன மாற்றம் ஏற்படும்.

சதுர்த்தாம்சம் (D-4) ஆய்வு

ஒருவரின் வீடு, வாகனங்கள் மற்றும் மன மகிழ்ச்சியைத் துல்லியமாக அறிய ‘சதுர்த்தாம்சம்’ எனும் வர்க்கச் சக்கரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ராசிச் சக்கரத்தில் புதன் 4-ல் நின்றதால் அந்தப் பாவகத்திற்கு மட்டும் திக்பலத்தைத் தருகிறார். ஆனால், சதுர்த்தாம்சத்தில் 4-ல் உள்ள சுக்கிரன் லக்னத்திற்குத் திக்பலம் பெற்று நிற்பதோடு ‘வர்கோத்தமமும்’ பெறுவது, ஜாதகருக்குச் சொகுசு வாகனங்கள் மீதுள்ள தீவிர ஆர்வத்தையும் அதனால் அவர் அடையும் மன மகிழ்ச்சியையும் காட்டுகிறது. 10-ஆம் இடத்துப் புதன் சுக்கிரனைப் பார்ப்பது மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது. இருப்பினும், சுக்கிரனைப் போலவே சனியும் இங்கு வர்கோத்தமம் பெற்று சுக்கிரனைப் பார்ப்பது நன்மையல்ல. லக்னாதிபதி செவ்வாய் 8-ல் சூரியனுடன் மறைந்ததும் சிறப்பல்ல. மன நிலையைத் தீர்மானிக்கும் சந்திரன் இந்த வர்க்கத்தில் 4-ஆம் அதிபதியாகி கேதுவுடன் இணைந்து, துலாச் சனியின் பார்வையைப் பெறுவது ஜாதகர் நல்ல வாகனத்தைப் பெற நினைத்தாலும், வாழ்க்கைச் சூழலால் பழைய அல்லது குறைகளுடன் கூடிய வாகனங்களையே அனுபவித்துத் திருப்தியடையும் நிலையை இது குறிப்பிடுகிறது.

வாகன மாற்றங்களின் காலவரிசை:

  1. 1996 (கேது தசை – சனி புக்தி): ராசிச் சக்கரப்படி 12-ல் நிற்கும் கேது தசையில், மிக எளிய வாகனமான பழைய மிதிவண்டியை (Cycle) வாங்கினார். (கேது – சிறியவை; பலகீனச் சனி – பழைய மிதிவண்டி).
  2. 2004 (சுக்கிர தசை – செவ்வாய் புக்தி): அஸ்தங்கமான இயந்திர காரகர் செவ்வாய் மாற்றத்தின் காரகர் சந்திரனின் ரோஹிணியில் நிற்பதால் செவ்வாய் புக்தியில் ஜாதகர் தனது மிதி வண்டியை மாற்றி பழைய M80 இருசக்கர வாகனத்தை வாங்கினார்.
  3. அடுத்த மாற்றம்: சந்திரன் சாரம் பெற்ற செவ்வாய் புக்தியிலேயே சந்திர அந்தரத்தில் மீண்டும் வாகனத்தை மாற்றி ஒரு பழைய Hero Splendor ஐ ஜாதகர் வாங்கினார்.
  4. 2014 (சுக்கிர தசை – புதன் புக்தி): 4-ல் சனியின் பார்வையில் நிற்கும் புதன் புக்தியில் ஜாதகர் முதன்முதலாக நான்கு சக்கர வாகனமான Hyundai i20 ரக பழைய காரை வாங்கினார். புதன் நண்பரைக் குறிப்பதால், நண்பரிடமிருந்து வெள்ளை நிற (சந்திரனின் காரகம்) காரை வாங்கினார்.
  5. 2019 (சூரிய தசை – ராகு புக்தி): சுக்கிர தசையை அடுத்து வந்த சூரியனும் சந்திரனின் ரோஹிணியில் நிற்பதால் சூரியனின் தசையில் ஜாதகர் மீண்டும் தனது காரை மாற்றினார். புதனின் சாரத் தொடர்பால் (புதன் – கார்த்திகை நட்சத்திரம்) முன்பு வாங்கியது போலவே அதே Hyundai யில் அதே i20 ரகத்தில் அதே வெள்ளை நிறத்தில் வாங்கினார். ஒன்று போலவே மீண்டும் ஒன்று கிடைக்க தசாநாதருக்கு புதனின் தொடர்பு இருக்க வேண்டும் என்றபடி Brand, Model, Colour ஆகிய அனைத்திலும் முன்பிருந்தது போன்றே மற்றொன்று கிடைத்து. இதையும் ஜாதகர் தனது மிக நெருங்கிய மற்றொரு நண்பரிடமிருந்தே வாங்கினார் என்பது ஆச்சரியமான ஒன்று.

புதிய வாகன யோகம்:

5 முறை வாகன மாற்றங்களைச் செய்தும் பழையதையே வாங்கி ஓட்டிய ஜாதகர், ஒருவழியாக தனது நீண்ட காலக் கனவான Hyundai நிறுவனத்தின் Venue ரகத்தில் அவருக்குப் பிடித்த வெள்ளை நிற புதிய காரை 06.03.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 6 நிமிடத்திற்கு வாங்கினார். இம்முறை ஏன் புதிய வாகனம் என்றால் வாகன காரகர் செவ்வாயை அஸ்தங்கப்படுதியிருந்த சூரியனின் அம்சமான தந்தை இடைப்பட்ட காலத்தில் மரணித்திருந்தார். அதனால் செவ்வாய் தனது அஸ்தங்க தோஷத்திலிருந்து விடுபட்டதால் புதிய கார் கிடைத்தது. வாகனத்தை பொறுத்தவரை வெண்மையை குறிக்கும் சுக்கிரனும், சந்திரனுமே ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் சுக்கிரன், சந்திரனுக்குரிய வெண்மை நிறம் வாகனத்தை ஆள்கிறது. வெள்ளிக்கிழமையும் வாகனத்தை வாங்கிய 6 ஆம் தேதியும், நேரம் 6 மணியும் எண் கணிதப்படி சுக்கிரனுக்கு உயரியவை என்பதிலிருந்து கிரகங்கள் நம் வாழ்வில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது புரிகிறது.

“ஆசை ஜாதகரைத் தூண்டினாலும், கொடுப்பினை என்பது அவர் அதை எப்பொழுது அனுபவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.” கிரகங்களின் காலச்சக்கரம் சுழலும்போது, ஜாதகரின் கொடுப்பினை விழித்துக்கொண்டு அவருக்குப் புதிய வாகன பாக்கியத்தை வழங்கிவிட்டது.

மீண்டும் உங்களை விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

உன்னதங்களை தேடி எதார்த்தத்தைத் தொலைக்கும் அறிவு ஜீவிகள்!

இன்றைய கால மனிதர்கள் அதிக அறிவு, அதிக சம்பாத்தியம் என்று அனைத்திலும் அதீதத்தை நாடுவதன் காரணமாக, சின்னச் சின்ன விஷயங்களின் மகிழ்வை இழக்கிறார்கள். வாழ்க்கை என்பது பல சிறிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலையாக

மேலும் படிக்க »
கிரக அஸ்தங்கம்

தங்கச்சாமி, வெள்ளிச்சாமி, தாமிரச்சாமி!

தங்கம் சென்ற ஆண்டு யாரும் எதிர்பார்க்காத அளவு ஏற்றம் கண்டு சாமான்ய மக்கள் வாங்க இயலாத விலைக்குச் சென்றுவிட்டது. வெள்ளி 2025 ஆண்டு பிற்பகுதியில் திடீர் ஏற்றம் கண்டது. தங்கம் சுமார் எழுபது சதவீதம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

நானே ராஜா! நானே மந்திரி!

ஒருவர் தனது கனவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்குரிய சமூக அங்கீகாரமும் குடும்ப ஆதரவும் கிடைக்காத சூழலில் மிகுந்த மன அழுத்தத்தைத் பெறுகிறார். குறிப்பாக, வருமானம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மரபுவழித் தொழில்கள் மட்டுமே மதிப்போடிருந்த

மேலும் படிக்க »
Tarot

The Fool

தனது மகனுக்காக ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஒறு தாய் வந்தார். என்னைப் பற்றி கேள்விப்பட்டு வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார். இதற்கு முன் ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் மகனைப் பற்றி கூறியவை சரியாக இல்லை.

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English