புது மாப்பிள்ளை மோதிரம்

திருமண நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவை. பெற்றோர்களுக்கு உறவு, பொருளாதாரம் சார்ந்த பல வகை சிரமங்கள் இருந்தாலும் தங்கள் குடும்பத் திருமணம் சிறப்பாக நடந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருக்கும். திருமணத்தில் எதிர்பாரா நிகழ்வுகளும் உண்டு. நகைச்சுவைகளும் உண்டு. நல்ல உறவுகளை அருகில் வைத்துக்கொண்டால் அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள தகுந்த ஆலோசனைகளை கூறி நிகழ்வுகள் சிறப்படைய உதவிகரமாக இருப்பர். திருமண நிகழ்வில் பல்வேறுபட்ட சமுதாய மக்களுக்கேற்ற பல்வேறு வகை நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்றாலும் வளர்ந்து வரும் சமூகத்தில் பல நிகழ்வுகள் இன்று பொதுவானவைகளாகிவிட்டன. அப்படியான ஒரு பொது நிகழ்வு தம்பதிகளுக்கு மோதிரம் அணிவித்தல் . பெற்றோர் அணிவிக்கும் நகைகளை முந்தைய கால பணக்கார குடும்பங்களில் பொற்கொல்லரை வீட்டிற்கு அழைத்து அளவு எடுத்து ஆபரணங்கள் செய்யும் நடைமுறைகள் இருந்தன. இன்று அனைத்தும் Ready Made நகைகளாகிவிட்டன. இதில் மோதிர அளவு சிறிது என்பதற்காக சண்டைகள் நடந்ததும் உண்டு. ஒரு சுற்று அதிக அளவுகொண்ட மோதிரத்தை தற்காலிக ஏற்பாடாக நூல்கொண்டு சுற்றிவிடுவதும் உண்டு. இன்றைய பதிவில் அப்படி அளவு அதிகமான மோதிரம் பற்றிய ஒரு பிரசன்னத்தை காண்போம்.

எனது ஜோதிட நண்பர் ஒருவர் தங்கள் குடும்பத் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அணிவித்த மோதிரத்தை காணவில்லை என்றும் அதை பிரசன்னத்தில் கண்டுபிடித்து தருமாறும் கைபேசியில் வேண்டினார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருச்சிகத்தில் உதயம் அமைந்தது 8 ஆமிடம் குறிக்கும் மறைவு, இழப்புகளை குறிக்கிறது. உதயாதிபதி செவ்வாய் வெளிவட்டத்தில் 8 ஆமிடமான மிதுனத்திலும், உள்வட்டத்திலும் 12 ஆமிடமான துலாத்திலும் மறைந்துள்ளார். இது கேள்வியாளர் பொருளை தொலைத்ததை உறுதி செய்கிறது. விருச்சிகம் சந்து, பொந்துகளை குறிக்கும். 8 ல் அமைந்த ஜாம (வெளிவட்ட) செவ்வாய் திருவாதிரையிலும், உள்வட்டத்தில் சுவாதியிலும் அமைந்துள்ளார். ராகுவின் நட்சத்திரங்களான இவை இரண்டும் சந்து-பொந்துகள், ஓட்டை, குழாய் ஆகியவற்றையே குறிக்கும்.

மோதிரம் தொலைந்ததா? திருடப்பட்டதா?

உதயத்திற்கு 7 ஆமிடமும் 8 ஆமிடமும் தொடர்பில் இருந்தால் பொருள் திருடப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். 7, 8 தொடர்பு இல்லையேல் பொருள் தொலைந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு 7, 8 தொடர்பாகவில்லை. உதயாதி செவ்வாய் மட்டுமே 8 ல் நிற்கிறார். எனவே பொருள் தொலைந்துள்ளது. திருடப்படவில்லை.

தொலைந்த பொருள்.

ஆரூடம் 3 ல் அமைந்தது 3 ஆமிடம் குறிக்கும் கையில் அணியும் அணி என்பதை உறுதி செய்கிறது. எனவே மோதிரம் தொலைந்தது உண்மையே

பொருள் உள்ள இடம்.  

உதயத்திற்கு 4 ஆமிடமே பொருள் உள்ள இடத்தை காட்டும். 4 ல் சனி கழிவை குறிக்கும், அங்கு அமைந்த சந்திரன் நீரை குறிக்கும். கவிப்பும் மீனத்தில் அமைந்துள்ளதை கவனியுங்கள். கால புருஷனுக்கு 12 ஆமிடமான மீனமும் கழிவு நீர் நிலையை குறிக்கும்.

மேற்கண்ட ஆய்வுகள் அனைத்தும் மோதிரம் கழிவறையில் தொலைத்துவிட்டதை தெளிவாக குறிப்பிடுகிறது. 8 ஆமதிபதி புதன் உள்வட்டத்தில் உதயத்திற்கு 12 ல் மறைந்துவிட்டதாலும், ஜாம புதன் மீனத்தில் கவிப்புடன் இருப்பதாலும் பொருளை மீட்க முடியாது. பிரசன்னம் சுட்டிக்காட்டிய இந்த விபரங்களை என்னை தொடர்புகொண்ட நண்பரிடம் தெரிவித்த பிறகு நண்பர், மாப்பிள்ளை கழிவறைக்கு சென்று வந்த பிறகுதான் மோதிரத்தை காணவில்லை என்று கூறியதாக தெரிவித்தார். பிரசன்னம் சூழலை தெளிவாக்கியதால் திருமண வீட்டில் மனவருத்தம் மட்டுமே. திருடு போனதாக மனக்கசப்பில்லை.

இக்கலையை எனக்கு கற்றுக்கொடுத்த எனது குருவிற்கு நன்றிகள்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

செல்வம்!

இன்றைய காலத்தில் பணி அழுத்தம் காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிபோடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தாங்கள் விரும்பியபோது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English