கோணமும் எதிர்க்கோணமும்!

ஜாதகத்தில் ஒருவருக்கு ஒரு பாதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் பதிலீடாக ஒரு கொடுப்பினையும் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து ஜாதகங்களிலும் சாதக பாதக அம்சங்கள் உண்டு. பாதகம் இல்லாமல் சாதகமில்லை. எனவே ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தில் பாதகங்களை மட்டும் சுட்டிக்காட்டாமல் சாதகமான அம்சங்களையும் கண்டறிந்து அதில் ஜாதகரை ஈடுபடச்செய்ய வழிகாட்ட வேண்டும்.
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.

இந்த ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதி பாவியாகி புத்திர ஸ்தானமான 5 ல் அமைந்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு திருமணம் புத்திரப்பேறு ஆகியவை தாமதமாகும் (இவை இரண்டும் ஜாதகருக்கு தாமதமாகவே அமைந்தது). எனினும் லக்னாதிபதி லக்ன திரிகோணத்தில் அமைவது சிறப்பு. 
6 ஆமதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைவது சிறப்பல்ல. இதனால் ஜாதகருக்கு தாம்பத்யம் உள்ளிட்ட அனைத்து சுகங்களும், ஆரோக்யமும் பாதிக்கப்படும். ஆனால் புதன் 4 ஆமிடமான வித்யா ஸ்தானத்தில் அமைவதால் கல்வி சிறப்பாக இருக்கும்.
ஆய்வுக்கல்விக்குரிய பாவமான 11 ஆம் பாவத்தில் சந்திரன் நீசமடைவது ஆய்வுக்கல்விக்கு சாதகமான அமைப்பல்ல. எனினும் 11 ஆமிடம் நீச பங்கமாகி 11 ல் அமைந்த சந்திரன் மற்றும் சந்திரன் நின்ற வீட்டதிபதியின் (ராசியாதிபதி)  காரக வகையில் ஆய்வுக்கல்வி பயின்றால் அது பாதிப்பை தராது.. ஜாதகர் பல் மருத்துவத்தில் ஆய்வுக்கல்வி (PhD) பயின்றவர். 
சனி அஷ்டமாதிபதி சூரியனுடன் அமைவது சிறப்பல்ல எனினும்  அஸ்தங்கமாகாமல் (சூரியன்-3 பாகை, சனி-27 பாகை) சூரியனோடு அமைவது ஜாதகர் ஜீவன விஷயத்தில் உயர்ந்த நிலையை அடைய உதவும்.  குரு நீசம் பெறுவது சிறப்பல்ல. எனினும் நீசம் பெற்றாலும் குரு லக்னத்தில் அமைவது திக்பலமாகும்.
7 ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று பாதகத்தில் அமைவது சிறப்பல்ல. எனினும் பாதகாதிபதி செவ்வாயே ராசி அதிபதியாகி ராசியின் கேந்திரத்தில் அமைவதால் சந்திரன் நீச பங்கமடைவது சிறப்பு.
சனி – செவ்வாய் 2 ஆமிடத்தோடு தொடர்புகொள்வது சிறப்பல்ல எனினும் காதல் திருமணத்திற்கு இது மிகச்சிறப்பான அமைப்பாகும். (ஜாதகர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.) சனி–செவ்வாய் பரஸ்பர பார்வை பெறுவது சிறப்பல்ல. எனினும்   இவ்விரண்டின் காரகங்கள் கலந்த (செவ்வாயின் காரகம் முதன்மையாய் இருக்க வேண்டும்) தொழிலை (சனி-செவ்வாய் – சீருடையணிந்த எந்தப்பணியும்) செய்வது சிறப்பாகும். ஜாதகர் பல் மருத்துவர். 
சனி-சந்திர தொடர்பு பூனர்பூ தோஷத்தால் திருமணம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் அனைத்தும் தாமதமாக நடைபெறும். எனினும் தாமதமானாலும்  ஜீவன விஷயங்களில் ஜாதகர் சாதனை படைப்பார். 
லக்னம் பாவ கர்த்தாரியில் அமைந்திருப்பது தோஷமாகும். எனினும் ஜாதகரிடம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருக்கும்.
சனியை நோக்கி கேது வருவது தொழில் தடையாகும். எனினும் கேதுவின் காரக தொழிலை செய்தால் பாதிப்பு குறைவாகும். கேதுவின் காரகங்களில் மருத்துவமும் ஒன்றாகும். 
சுக்கிரன் சூரியனோடு இணைந்திருப்பது (சூரியன்-3 பாகை, சுக்கிரன்-13 பாகை) தோஷமாகும். எனினும் மனைவி அரசுவகை தொடர்புகளால் உயர்வடைவார். (மனைவி உயர் பதவி வகிக்கும் அரசு ஊழியர்)சுக்கிரனை நோக்கி கேது வருவது மனைவிக்கு தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எனினும் கேதுவின் காரக செயல்களில் மனைவி ஈடுபட்டால் பாதிப்பு குறைவாகும். (மனைவி மருந்துக்களோடு தொடர்புடைய துறையில் பணி செய்கிறார்).ராகு – கேதுக்களின் அச்சுக்கு வெளியே 7 ஆமதிபதி சந்திரன் பாதகத்தில் லக்னாதிபதி சனியின் அனுஷம்-2 ல் இருப்பது மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எனினும் சுக்கிரனையும் 7 ஆமிடத்தையும் குரு பார்வை செய்வதால் பிரிவு வேலை நிமித்தமாகவே இருக்கும் எனவே திருமண வாழ்வில் பிரிவு இருக்காது.
12 ஆமிடத்தில் ராகு அமைவது ஜாதகரது உழைப்பை பிறர் உறிஞ்சும் அமைப்பாகும். தாம்பத்யமும் தூக்கமும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். கடின சூழ்நிலைகளிலும் இரவிலும் பணிபுரியும் சூழல் இதனால் ஏற்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இதனால் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.   எனினும்   6 ஆமிடத்தில் கேது அமைவது எதிர்ப்புகளை முறியடிக்கும் அமைப்பாகும். வாழ்வில் எத்தனை கடின சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றிகரமான மனிதராகவே இவர் அறியப்படுவார்.
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகளை அறியாவிட்டால் நன்மைகளின் அருமை தெரியாது. வாழ்க்கையின் முக்கியமான புதிரே இதுதான். ஜாதகத்தில் உள்ள சாதக அம்சங்களை சுட்டிக்காட்டி ஜாதகரை நெறிப்படுத்துவது ஒரு ஜோதிடரின் தலையாய பணியாகும். 
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 08300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English