மகனின் திருமணம்…

மகனின் திருமணம்…

 ஜாமக்கோள் ஜாலங்கள் – 11

பிரசன்னங்களில் பல வகைகள் உண்டென்றாலும் ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தனிச்சிறப்பு மிக்கது. பல்வேறு வகை பிரசன்னங்களில் (36 வகை பிரசன்ன முறைகள் உள்ளதாக கூறப்படுகிறது) தமிழ் நாட்டில் தோன்றிய ஒரே பிரசன்ன முறை ஜாமக்கோள் பிரசன்னமாகும். இதர வகைகள் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தோன்றியவை. இதர பிரசன்ன முறைகளில் இருந்து கணித முறைகளிலும் பலன் எடுக்கும் முறையிலும் முற்றிலும் மாறுபட்டது ஜாமக்கோள் பிரசன்னமாகும். இந்த ஜாமக்கோள் பிரசன்னத்தில் சொல்லமுடியாத விஷயங்களே இல்லை எனலாம். இதர பிரசன்ன வகைகளை விட துல்லியமான பலன்களை தனக்குள் பொதித்து வைத்திருக்கும் புதையல் இது. அவற்றைக் கண்டுபிடித்து அள்ளிக்கொள்வதே நமது வேலை. ஜோதிடம் ஒரு சாகரம் என்றால் இந்த ஜாமக்கோள் பிரசன்னக் கடலில் எவ்வளவு ஆழம் மூழ்கிறோமோ அந்த அளவு முத்தெடுக்கலாம். நான் பார்த்து பிரம்மிக்கும் ஜாமக்கோள் பிரசன்னத்தின் அதிசயங்களை தொடர்ந்து எழுதும்படி எனது மாணவர்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது  ஜாமக்கோள் பதிவு வரிசையில் 11 ஆவது பதிவாக இந்தப் பதிவு அமைகிறது.  

எனது மகனுக்கு 32 வயதாகிறது. எப்போது திருமணம் என்று கவலையுடன் ஒரு தாய் என்னை அணுகினார். அதன் விளைவே இப்பதிவு. இப்பதிவில் பாவாதிபதிகள் என அழைக்கப்பெறும் கிரகங்கள் அனைத்தும் உதயம் முதலாவதாகக்கொண்டு அழைக்கப்படுபவை என்பதை வாசகர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

உதயம் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்து ஆரூடம் 2.18 பாகையில் உத்திராடம்-2 ஆம் பாதத்தில் விழுந்துள்ளது. தாய் மகனுக்காக கேட்ட பிரசன்னம் இது என்பதை பிரசன்னம் உணர்த்துகிறது. கேள்வி கேட்ட தாயின் பெயர் ஜோதி ஆகும். உத்திராட நட்சத்திற்குரிய நாம எழுத்தான ‘ஜ’ வில் கேள்வி கேட்டவர் பெயர் அமைந்துள்ளது. சூரியனின் நட்சத்திரத்தில் ஆரூடம் அமைந்ததால் சூரியனின் பெயரான ஜோதி என்பது கேள்வியாளரின் பெயர் என்பதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கேள்வியாளர் ஒரு சுப விஷயமாக கேட்டுள்ளதை உதயத்தை குரு பார்ப்பதிலிருந்து உணரலாம். ஆரூடம் 5 ல் அமைந்து குரு உதயத்திற்கு 7ல் இருந்து பார்ப்பதால் மகனின் திருமண விஷயம் என்பதை பிரசன்னம் தெளிவாக கூறுகிறது. இனி மகனுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம் வாருங்கள்.  

தந்தையை குறிக்கும் உதயத்திற்கு 9 ஆமதிபதி சுக்கிரன் உதயத்திற்கு 4 ல் தனுசுவில் கவிப்போடு சேர்ந்துள்ளது. தந்தையின் காரக கிரகம் சூரியன் உதயத்திற்கு விரையாதிபதியாகிறார். இதனால் மகனின் திருமணம் நடக்க தந்தையின் முயற்சியைவிட தாயின் முயற்சியே பலனளிக்கும் என்பது தெரிகிறது. கவிப்பு திருமணத்தை நடத்தி வைக்கும் அல்லது தடை ஏற்படுத்தும் நபரை குறிப்பிடும். உதயத்திற்கு 4 ல் கவிப்பு தாயாரின் முயற்சியாலேயே திருமணம் நடக்க இயலும் என்பதை காட்டுகிறது. உதயதிற்கு 2 ல் உதயத்தின் 5, 6 ஆமதிபதி சனி உச்சமாகி உதயத்தை நோக்கி வருகிறது. மேலும் மேஷத்தில் செவ்வாய் அமைந்து துலாத்தில் சனி உச்சம் பெறுவது மரண ஜாமம் என்று அழைக்கப்பெறும். இதனால் குடும்ப பாவம் பாதிப்பை அடையும். 2 ஆமதிபதி கவிப்பில் அமைந்துள்ளது இதை உறுதி செய்கிறது. உள்வட்ட சனியும் உள்வட்ட குருவும் வக்கிர கதியில் இருப்பதால் மகன் திருமணதிற்கு இன்னும் சாதகமான காலம் வரவில்லை என்பதை இது காட்டுகிறது. 5 ல் நிற்கும் வக்கிர சனி 2 ல் அமைந்த உச்ச ஜாம சனியை 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும் உதயம் அடுத்து 2 ஆமிட ஜாம சனியை கடந்து கேதுவை தொடுவதும் மகனுக்கு இன்னும் திருமணதிற்கு கடும் தடைகள் ஏற்படும் என்பதையே புலப்படுத்துகிறது.

1௦ ல் திக்பலத்தில் அமைந்த ஜாம சூரியன் புத ஆதித்ய யோகம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இது சிறந்த அமைப்பே.  உள்வட்ட சூரியன் சந்திரனின் வீட்டில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும். சந்திரனின் காரக தொழிலில் புதனின் தன்மையும் கலந்திருக்கும். மகன் அலைந்து திரிந்து (12 ஆமதிபதி சூரியன் சந்திரன் தொடர்பு) வேலை செய்பவர் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. மகன் சந்திரனின் காரகமான உர விற்பனை  பிரதிநிதியாக வேலை பார்க்கிறார் என தாய் கூறினார்.  ஆனால் வேலையே மகனின் திருமணத்திற்கும் தடைபோடும் அமைப்பு என்பதை 2 ல் அமைந்த உச்ச சனி காட்டுகிறது. உதயம் முதலில் தொடுவது உச்ச சனியைத்தான். உச்ச சனியின் தடை, தாமதங்களை கடந்து அதற்கு அடுத்து கேதுவைத்தான் தொடவுள்ளது. அதுவும் தடையைத்தான் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் மகனின் திருமணம் நடக்க சாதகமான சூழல் தற்போது இல்லை என்பதையே காட்டுகிறது.

கேள்வியாளர் கேட்டது மகனின் திருமணத்தைப்பற்றி. பிற்பாடு மகனின் ஜாதகத்தை தேடி எடுத்து அனுப்பினார் இந்தப்பெண்மணி. மகன் மகர லக்னம், கன்னி ராசி. இதை ஜாமக்கோள் பிரசன்னத்தில்  உதய, ஆரூடம் சுட்டிக் காட்டிவிட்டது. இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் மகிமை. இக்கலையை எனக்கு புகட்டுவித்த எனது குருமார்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English