ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல்

இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால், பல நிறுவனங்கள் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது; குறிப்பாக ஆட்குறைப்பு (Layoffs) செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அவை தள்ளப்படுகின்றன.

நிறுவனங்களின் சூட்சுமமும், திறமையாளர்களின் மதிப்பும்

ஆனால், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. எவ்வளவு பெரிய சரிவு வந்தாலும், திறமை, அனுபவம் மற்றும் நேர்மை மிக்க சில பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவே ஒவ்வொரு நிறுவனமும் விரும்பும். நிறுவனம் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டால் தவிர, இத்தகைய வைரங்களை அவர்கள் எளிதில் இழக்க மாட்டார்கள்.

குறைந்த ப்ராஜெக்ட்களை வைத்துக்கொண்டு நிறுவனத்தை நிலைநிறுத்த, இந்தச் சில முக்கியத் தூண்களே அவர்களுக்குப் போதுமானது. நாளை நிலைமை சீராகி புதிய ஆர்டர்கள் குவியும்போது, வேறு பல புதிய பணியாளர்களை அவர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அனுபவம் வாய்ந்த பழைய ஆட்களை இழந்தால், மீண்டும் அதே போன்ற திறமையாளர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு என்பதை நிறுவனங்கள் நன்கு அறியும்.

குழப்பத்துடன் வந்த வாடிக்கையாளர்

இப்படிப்பட்ட ஒரு சவாலான சூழலில்தான், ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர் என்னைத் தொடர்புகொண்டார். ப்ராஜெக்ட்கள் குறைவால் நிறுவனம் தன்னை எங்கே பணியிலிருந்து நீக்கிவிடுமோ என்ற அச்சத்தில், “அவர்கள் நம்மை வெளியேற்றுவதற்கு முன், நாமே கௌரவமாக ராஜினாமா செய்துவிடலாம்” என்ற இறுதி முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

இது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு என்பதால், தனது குடும்ப நண்பரிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார். எந்தவொரு பெரிய முடிவை எடுக்கும் முன்பும் என்னுடைய ஆலோசனையை நாடும் அந்த நண்பர், உடனடியாக இந்தப் பணியாளரை என்னிடம் அழைத்து வந்தார்.

காத்திருந்த ஆச்சரியம்!

“வேலையை விட்டுவிடலாமா?” என்ற பெரும் குழப்பத்தோடு வந்த அவருக்கு, ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து நான் கூறிய பலன்கள் அவர் சற்றும் எதிர்பாராதவை! அவர் நினைத்தது ஒன்றாகவும், அங்கு கிரகங்கள் அவருக்காக எழுதி வைத்திருந்த கணக்கு வேறொன்றாகவும் இருந்தது.

அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த ஜோதிடப் பலன் என்ன? தற்போதைய சூழ்நிலையில் அவரது ஜாதக ரீதியான கிரக நிலைகள் என்ன சொல்கின்றன? வாருங்கள், விரிவாகக் காண்போம்…

ஜாதகமும் கிரக நிலைகளும் கூறுவது என்ன?

  • லக்னமும் ராசியும்: இவருக்குக் கடக லக்னம், கடக ராசி. பொதுவாக லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தவர்களுக்கு முடிவுகளில் உறுதியான நிலைப்பாடு இருக்கும். ஆனால், இங்கு லக்ன சந்திரனை முதலில் தொடும் கேது அந்த உறுதியைக் குலைத்துப் பார்ப்பார்.
  • கோட்சாரக் குழப்பம்: ஜனன ஜாதகத்தைப் போலவே கோட்சாரத்திலும் சிம்மத்திலேயே நிற்கும் கேது, ஜாதகர் உறுதியான முடிவெடுப்பதைத் தவிடுபொடியாக்கி அவரைக் குழப்பவாதியாக மாற்றிவிடுவார்.
  • பத்தாம் இடத்துச் சனி: 10-ஆம் இடத்தில் சனி வக்ரமடைந்துள்ளதால், தனது நீச நிலையில் இருந்து அவர் விடுபடுகிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சனியின் வக்ரம் வேலை விஷயங்களில் ஜாதகரைத் தன்னிச்சையாக முடிவெடுக்க வைக்கும்.
  • வேலையும் துறையும்: லக்னப் புள்ளி குருவின் புனர்பூச நட்சத்திரத்திலும், லக்ன சந்திரன் சனியின் பூசத்திலும் நிற்கின்றன. 6 ஆமதிபதி குரு நவீன மின்னணு-மென்பொருள்களை குறிக்கும் ராகுவின் சுவாதியில் நின்று 10-ஆம் இடத்துச் சனியைப் பார்ப்பதால் ஜாதகருக்கு ராகு தொடர்புடைய துறையில் வேலை அமையும்.
  • தொழில்நுட்பத் துறைக்கான காரணம்: தரவுகளைக் குறிக்கும் புதனும், வருமானம் வரும் வகையைக் குறிக்கும் 2-ஆம் அதிபதி சூரியனும், தகவல் தொடர்பைக் குறிக்கும் 3-ஆம் இடத்தில் நிற்கும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்று 10-ஆம் இடத்துச் சனியைப் பார்க்கிறார்கள். இந்த அமைப்பால்தான் ஜாதகர் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணிபுரிகிறார். சனி வக்ரமானதால் ஆழ்ந்த தொழில் அறிவும், Electronics-ஐக் குறிக்கும் சுக்கிரன் 5 ஆமிடத்தில் வக்ரமானதால் அது சார்ந்த நுட்பமான அறிவும் இவரிடம் அதிகம். இவையே ஜாதகர் இத்துறையில் திறம்படப் பணிபுரியக் காரணம்.

(குறிப்பு: கால மாற்றம் திறமைகளைத் தேவைப்படாமல் செய்துவிடும் ஆற்றல் மிக்கது. தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பல தொழில்நுட்ப அறிவுகளைத் தேவைப்படாமல் செய்வதை நாம் அறிவோம்).

ராஜினாமா எண்ணம் வரக் காரணம் என்ன?

சில மாதங்களாகப் புதிய Project கிடைக்காமல் இருப்பதாலும், சில பணியாளர்கள் வேலையை விட்டுச் செல்வதைக் காண்பதாலும் தானும் விலகிவிட எண்ணுகிறார். கோட்சாரத்தில் ராசியிலேயே நிற்கும் ஜென்ம குரு, ஜாதகருக்கு வேலை தொடர்பாகப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். மதிப்பு, மரியாதையை குறிக்கும் 9-ஆம் பாவாதிபதியாகவும் குரு அமைந்து ராசியில் நிற்பதால், “தனது மதிப்பு போய்விடுமோ, நிறுவனமே நம்மை விலக்கிவிடுமோ” என்ற அச்சத்தில் அதற்கு முன்னர் தானாகவே ராஜினாமா செய்துவிட எண்ணுகிறார்.

மேலும், தற்போது ஜாதகர் 4-ல் நிற்கும் நீச சூரிய திசையில், வேலை பாவகமான 6-க்கு விரைய ஸ்தானமான 5-ல் நிற்கும் சுக்கிர புக்தியில் இருக்கிறார். கௌரவ காரகரான சூரியன் நீசமாகி திசை நடத்துவதால் தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள வேலையை விடும் எண்ணம் அவருக்கு மேலோங்கியது.

வேலையை விட்டால் என்ன நடக்கும்?

9-ஆம் அதிபதியான குருவே வேலைக்கான 6-ஆம் இடத்திற்கும் அதிபதி என்பதாலும், கடகம் குருவின் உச்ச வீடு என்பதாலும் ஜாதகர் பதற்றப்படும் அளவுக்கு வேலையில் பாதிப்பு வராது. ஒருவேளை அவசரப்பட்டு வேலையை விட்டால், ராசியில் சஞ்சரிக்கும் கோட்சார குரு அடுத்து 2-ஆம் இடத்துக் கேதுவை நோக்கி நகர்வதால், ஆரோக்கியப் பாதிப்புகளுக்காகக் கடன் வாங்கிச் சமாளிக்கும் நெருக்கடி ஏற்படும். கோட்சார கேது ஜனன ராசி மீது வரும் காலம், பணியில் பொறுமையாக இருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான காலமே. பொறுமையை இழந்தால் பணியிழப்பு தவிர்க்க முடியாதது. ஜனன சந்திரன் மீது கோட்சார கேது வருவது ஆரோக்கியத்தை உலுக்கிவிட்டுச் செல்லும் அமைப்பு.

திருப்பத்தைத் தந்த செவ்வாய்!

கோட்சார சந்திரன் 2-ஆம் இடத்துக் கேதுவைக் கடந்து கன்னியில் நிற்கிறார். இதனால் கசப்பான கடுமையான நிலைகளை ஜாதகர் கடந்து வந்துள்ளது புரிகிறது. தற்போது தகவல் தொடர்பைக் குறிக்கும் 3-ஆம் இடத்துச் செவ்வாய் மீது கோட்சார சந்திரன் சென்றுகொண்டிருக்கிறார். செவ்வாய் 5-க்கும், 10-க்கும் உரியவர் (லக்ன யோகாதிபதி) என்பதால் வேலையில் ஒரு நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.

அது நல்ல தகவலா? செவ்வாய் கோட்சாரத்தில் ஜனன, கோட்சார ராகுவை கடந்து, மீனத்தில் மீனத்தில் தற்போது நிற்கும் கோட்சார சனியை கடந்து, மேஷத்தில் ஜனன கால வக்ர சனியைத் தற்போதுதான் கடந்து ரிஷபத்திற்கு வந்துள்ளார். 10 ஆமதிபதியான செவ்வாய் கோட்சாரத்தில் சுபர்களை கடந்து வரவில்லை என்பதாலும், தனது கடுமையான பகைவர்களான ராகு, சனியை கடந்து வந்துள்ளதாலும் கடந்த சில மாதங்களாகவே வேலையில் கசப்பும் எரிச்சலுமான நிலையை ஜாதகர் சந்தித்துள்ளார். ஆனால், லக்ன யோகாதிபதியான செவ்வாய் தற்போது லாப ஸ்தானத்தில் (11-ல்) நிற்பதால் உறுதியாக வேலையில் ஒரு நல்ல தகவல் காத்துக்கொண்டிருக்கிறது!

ஆச்சரியமான திருப்பம்!

தகவல் ஸ்தானம் மூன்றில் நிற்கும் ஜனன செவ்வாய் தற்போது கோட்சாரத்தில் லாபத்தில் நிற்பதால் “வேலையில் ஒரு நல்ல தகவல் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. எனவே அவசரப்பட்டு ராஜினாமா கடிதம் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் Project Supervisor-இடம் பேசிவிட்டு முடிவெடுக்கலாம்” என்று கூறினேன். (Supervisor-ஐக் குறிக்கும் கிரகம் செவ்வாய் என்பதே அதற்குக் காரணம்).

Supervisor-உடன் பேசிவிட்டு கண்ணீர் மல்க என்னைத் தொடர்புகொண்டார் ஜாதகர். “தற்போதுதான் நமது நிறுவனத்திற்கு ஒரு Project கிடைத்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலையில் நீங்கள் மிக முக்கிய நபர். எனவே எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு விலக வேண்டாம்” என்று Supervisor கூறியதாக தெரிவித்தார். மேலும் “எனக்குத் தெரியாத அலுவலக உள்விவரங்கள் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்டார்.

அதற்கு நான் சிரித்துக்கொண்டே, “ஜோதிடம் கற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டேன்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கைநிறையச் சம்பளம், காணாமல் போன தூக்கம்: ஜாதகக் கட்டங்கள் உணர்த்தும் கார்ப்பரேட் உண்மைகள்!

குளிரூட்டப்பட்ட அறைகள், கைநிறையச் சம்பளம், ‘கார்ப்பரேட்’ உலகின் கம்பீரமான பதவி என பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) வேலை பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான வாழ்க்கையாகத்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English