சப்தாம்ச ஆச்சரியங்கள்!!!

ஜோதிடத்தில் ராசி ஒரு விஷயத்தை பொதுவான கண்ணோட்டத்தில் கூறும். அவ்விஷயத்தின் காரக கிரகம்,   காரக பாவாதிபதியின் பலம் மற்றும் பலகீனத்தை நவாம்சம் எடுத்துக்காட்டும்.  ஆனால் அவ்விஷயம் தொடர்பான வர்க்கச் சக்கரமே அதன் காரக கிரக, பாவாதிபதிகளின் செயல்பாட்டை தெளிவாக தெரிவிக்கும். குறிப்பாக தசா-புக்திகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தை ஆராய தொடர்புடைய வர்க்கச் சக்கரமே மிகச் சிறந்ததாகும். உதாரணமாக குழந்தைப்பேறை ஆராய்கையில் 

ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டா?

குழந்தை சிறப்பானதா? குறைபாடுடையதா?

குறைபாடு எனில் எந்த வகைக் குறைபாடு?

சுகப் பிரசவமா? அல்லது அறுவை சிகிச்சையா ?

குழந்தை ஆணா, பெண்ணா அல்லது மூன்றாம் பாலினமா?

பிரசவத்தில் ஒரு குழந்தையா?, இரட்டை பிறவிகளா? அல்லது அபூர்வமாக பிறக்கும் மூன்று குழந்தைகளா?

இயற்கையாக குழந்தை பிறக்குமா? அல்லது செயற்கை முறை குழந்தையா?

செயற்கை முறை குழந்தை எனில் தங்களது உயிரணு மூலமா? அல்லது கொடையாளரின் உயிரணு மூலமா ? 

ஜாதகப்படி தத்து எடுக்கும் அமைப்பு உள்ளதா ? மற்றும் தத்து கொடுக்கும் அமைப்பு உள்ளதா?

தத்து எடுப்பதெனில் சிறந்தது ஆணா அல்லது பெண்ணா?

போன்ற வினாக்கள் எழுவது இயற்கை. இது போன்ற பல கேள்விகளுக்கு ராசிச் சக்கரம் பொதுவான கொடுப்பினை என்ன என்பதை மட்டுமே கூறும். ஆனால் மேற்கண்ட கேள்விகளுக்கு சப்தாம்சம் தெளிவான பலன்களை தெரிவிப்பதோடு, தசா-புக்தி அடிப்படையில் அதன் காலத்தையும் துல்லியமாக கூறும் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். 

இன்றைய பதிவில் பல சப்தாம்ச ஆச்சரியங்களில், நான் பார்த்து வியந்த சிலவற்றை  ஒரு உதாரண ஜாதகம் மூலம் காண்போம்.

1975 ல் பிறந்த பெண்மணி இவர். ஜாதகத்தில் சனியும் சந்திரனும் ஒரே பாகையில் உள்ளனர். சந்திரன் ஒரு பெண்ணுக்கு கற்பப்பையை குறிக்கும்   காரக கிரகமாகும்.   சந்திரனின் வீட்டில் கற்பப்பையை  குறிக்கும் 8 ஆமதிபதி சனி அமர்ந்து, தனது  மூன்றாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார். இது கற்பப்பை வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆட்சி பெற்ற குரு சந்திரனையும், சனியையும் பார்க்கிறார். இதனால் பாதிப்பின் தீவிரத்தை, குரு பெருமளவு குறைத்து விடுகிறார். புத்திர பாவமான 5 ல், அதன் அதிபதி சுக்கிரன் மூலத்திரிகோண வலுப் பெற்றிருந்தாலும், அவர் ராகுவால் பாதிக்கப்படுகிறார். சுக்கிரன் சுரப்பி காரகனும் கூட என்பதால் ஒரு பெண்மையின் இயக்கத்திற்கு தேவையான மாதவிடாய் சுரப்பிகள் உள்ளிட்ட சுரப்பிகள் சீராக வேலை செய்வதை உறுதி செய்யும் கிரகமாகும். இங்கு சுக்கிரன் ராகுவால் தீண்டப்படுவதோடு உடன் மாந்தியும் உள்ளது குழந்தைப்பேறை பாதிக்கும் அமைப்பாகும். சனிக்கும், சந்திரனுக்கும் கிடைத்த குருவின் பார்வை சுக்கிரனுக்கு இல்லை. இவருக்கு புத்திர தோஷம் உள்ளது. அது தாய் வழி வந்த பாரம்பரிய பாதிப்பு என்பதை சனி-சந்திர தொடர்பு சுட்டிக்காட்டுகிறது. ராகு சுக்கிரனை கடந்துள்ள நிலையில் அவர் சந்திரனைத்தான் முதலில் தொடவுள்ளார். இது ராகுவால் ஜாதகிக்கு கற்பப்பை பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிவிக்கிறது. கிருமி காரகர் ராகு தசாவில் ஜாதகி வயதுக்கு வந்த பிறகு ஜாதகிக்கு கற்பப்பை கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான நிலைக்குச் சென்று மீண்டுள்ளார்.  

திருமண வாழ்வு மற்றும் கிரக வலுவை குறிக்கும் நவாம்ச நிலையை தற்போது ஆராய்வோம். நவாம்ச லக்னத்தில் 11 ல் நீசம் பெற்ற குரு 7ல் நிற்கும் சனியை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகியின் 26 ஆவது வயதில், குரு சாரம் விசாகம்-2 ல் நிற்கும் ராகுவின் தசாவில் சனி புக்தியில் திருமணம் நடந்தது. குடும்ப காரகர் குரு பலகீனமாக இருந்தாலும், தசாநாதன் ராகுவோடு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அவர் குடும்பத்தை அமைத்துத் தந்துவிட்டார். திருமணத்திற்கு ஆராய வேண்டிய நவாம்சத்தில் ராகு,  முதலாவது காமத்திரிகோணமான  ரிஷபத்தில், குரு பார்வை பெறுவதால் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார். எனினும் குரு சாரம் ஏறிய ராகு புத்திரத்தை  தருவாரா என்பதை அதற்கான சப்தாம்ச சக்கரம்  மூலம்தான்  அறிய வேண்டும். 

நவாம்சத்தில் அயல் தேச வாழ்வை குறிக்கும் மீனமே லக்னமாகி, அதன் அதிபதி குரு தொடர்பு பெற்று  அந்நிய தொடர்புகளை குறிக்கும்  ராகு, உச்சமாகி தசா நடத்துவதால் குடும்பம் அமைந்ததும் ஜாதகியை வெளிநாட்டு வாசத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இந்தியாவில் பிறந்த ஜாதகி,  திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா சென்றார். நவாம்சத்தில் செவ்வாய்க்கு வீடு கொடுத்த சூரியன், 7 க்கு 1௦ ல் மிதுனத்தில் அமைந்ததால், கணவர் மிதுன ராசி குறிக்கும் அமெரிக்கா சென்றார். 

கிரகங்களின் பலம், பலவீனத்தை காட்டும் நவாம்சத்தில் குரு நீசம் பெற்றிருந்தாலும் தசாநாதர் ராகு தொடர்பால் அவர் திருமணத்தை நடந்தி வைத்துவிட்டார். மண வாழ்வு சுமுகமாக செல்கிறது. நிழல் கிரகங்கள் உயிர் காரகங்களைத்தான் பொதுவாக பாதிக்கும் என்ற அடிப்படையில் ராசியில் ஏற்பட்ட ராகு-குரு நட்சத்திரத் தொடர்பு, ராகு-சுக்கிர இணைவு குடும்பம், பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. சப்தாம்சத்தை கவனித்தால், இவை புத்திர பாக்கியத்தைத்தான் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. காரணம் , சப்தாம்சத்தில் லக்னத்திற்கு 5 ல் குரு லக்ன பாதகாதிபதியான சூரியனோடும் வக்கிரம் பெற்ற 5 ஆமதிபதி சனியோடும் அமைத்துள்ளார். 5 ல் சனி தத்துப்புத்திரத்தை குறிப்பார். சூரியன் சனி சேர்க்கையே புத்திரத்தடையை குறிக்கும். கால புருஷ 5 ஆமதிபதி சூரியன், குறைபாட்டை குறிக்கும் சனியோடு இணைவு பெறுவது உயிரணுக் குறைபாட்டை ஏற்படுத்தும். சூரியன் பாதகாதிபதியும் ஆவதால் பாதிப்பு இங்கு அதிகரிக்கிறது. 2001 திருமணமான ஜாதகிக்கு 2009 வரை குழந்தையில்லை. இதனால் செயற்கை முயற்சிகளும் சாதகமாக அமையாத நிலையில் தம்பதியர் தத்து எடுக்கும் முடிவிற்கு வந்தனர். 

தத்துப்புத்திரம் அமைய வழிவகுக்கும் பாவங்கள்.

5 மற்றும் 8 ஆகிய பாவங்களின் தொடர்பே தத்துப் புத்திரம் அமைய காரணமாகும். இதன் அடிப்படையில், 5 ல் நிற்கும் குரு சாரம் பெற்ற ராகு தசாவில், ராசியில் குரு பார்வை பெற்று, சப்தாம்சத்தில் துலாம் லக்னத்திற்கு 8 ல்,  தனது மூலத்திரிகோண வீட்டில், உச்சம் பெற்று நிற்கும்  சந்திரனின் புக்தியில் ஜாதகிக்கு இரட்டை பெண் குழந்தைகள் தத்துக் கிடைத்தனர்.  

ஆண், பெண் குழந்தைகள் அமைய ஆண்-பெண் ராசிகள்.

தசா கிரகம் ராகு, குரு, சந்திரன் ஆகிய மூவரும் பெண் ராசியில் இருப்பதால் பெண் குழந்தைகள் கிடைத்தனர். (ஆண் ராசியில் அமைந்திருப்பின் ஆண் குழந்தைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

இரட்டை பெண் குழந்தைகள் கிடைக்க என்ன காரணம்?

தசாநாதன் ராகுவின் நட்சத்திராதிபதி  குரு, இரட்டை ராசியான தனது ஆட்சி வீடு மீனத்தில் இரட்டைக்கிரகமான புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் இரட்டை குழந்தைகள் கிடைத்தனர். ஜாதகி தத்துப்பெற்றபோது புதனின் அந்தரம் நடந்துள்ளது. இரட்டை குழந்தைகளை தருவதில் மிதுனம், மீனம் ஆகிய ராசிகளும், புதன்-குரு தொடர்பு ஏதாவது ஒரு விதத்தில் அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையின் நிறம்.

இந்த ஜாதகிக்கு கிடைத்த இரட்டை பெண் குழந்தைகளும் ஒரு வெள்ளைக்கார தம்பதிக்கு பிறந்த  வெண்மை நிற குழந்தைகளாகும். வெண்மை நிறத்திற்கு சந்திரனும், சிவப்பு நிறத்திற்கு செவ்வாயும், கருமை நிறத்திற்கு சனியும், ராகுவும் காரணங்களாகின்றன. இதர கலவை வர்ணங்களுக்கு பல கிரக தொடர்புகளே காரணங்களாகின்றன. முக்கியமாக குழந்தைப்பேறின் காலத்தில் வரும் கிரகங்கள் தசா-புக்தி-அந்தரங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  குடும்ப பொருளாதார சூழலின் காரணமாக தங்களது ஒரு வயதே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளை வெள்ளைக்கார அமெரிக்கத் தம்பதியர் தத்துக்கொடுத்தபோது, ஜாதகிக்கு வெண்மை நிறத்திற்குரிய, சப்தாம்சத்தில் உச்சம் பெற்ற  சந்திரனின் புக்திதான் நடந்துள்ளது. வசீகரமான முக அமைப்பை சுபக்கிரகங்களும், கடுமையான முக அமைப்பை பாவக்கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 

இயல்பாக குழந்தை அமையும் காலம்.

திருமணமான பிறகு  வரும் குரு தொடர்பு பெற்ற கிரக தசா-புக்திகளே குழந்தை பாக்கியம் அமைய சாதகமான காலங்களாகும். ஜாதக தோஷங்கள் தடை செய்யாவிட்டால் குரு தொடர்பு தசா-புத்திகள் நிச்சயம் குழந்தைப்பேறை தந்தே தீரும். 

ஆச்சரியத்தின் உச்சம் 

ஜாதகிக்கு ராசியில், 5 ஆம் பாவத்தில் இருந்த தசா-நடத்திய ராகு தசா முடிந்து,  1௦ ல் ஆட்சி பெற்று 5 ஆமிட ராகுவோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொள்ளும் குரு தசா 2011 பிற்பகுதியில் துவங்கியது. இந்திய பாரம்பரிய நிறத்தைவிட வெண்மையான குழந்தைகளை தத்துப்பெற்றாலும்,  குழந்தைகளின் மேல் ஒரு பெண்ணாக, சப்தாம்சத்தில் உச்சம் பெற்ற தாய்மை காரகர் சந்திரனால்,  தனது தாய்மை உணர்வை தடையின்றி குழந்தைகளுக்கு வழங்கினார் ஜாதகி. மேலும் தந்துக்கொடுத்த வெள்ளையின பெண்மணியை தனது சொந்தத் தங்கையாக பாவித்து வருகிறார். இதனால்  தாய்மை உணர்வை மனோ ரீதியாக முழுமையாக அனுபவிக்கும் ஜாதகியின் உண்மையான தாய்ப்பாசத்திற்கு மதிப்பளித்து, 5 ஆமிட தோஷத்தை ராகு தனது தசா முடிந்ததும் விலக்கிக்கொண்டு விடுகிறார். 

சப்தாம்சத்தில் 5 ல் அமைந்த குருவில் தசாவில், 5 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகிக்கு சொந்த மகள் பிறந்தாள். சூரியனை, சனி இணைவை மீறி குரு குழந்தைப்பேறை வழங்கியுள்ளார். காரணம். புத்திரப்பேற்றை தாமதப்படுத்தி தனது தோஷத்தை சூரியன்+சனி இணைவு வழங்கிவிட்டதால் தற்போது தடுக்க இயலவில்லை.  இப்போதும் பெண் ராசி  கிரக தசா-புக்திகளே செயல்பட்டுள்ளதால் ஜாதகிக்கு பெண் குழந்தை பிறந்தது. புக்தி நாதன் சனி என்பதாலும் அந்தர நாதர் புதன் என்பதாலும் குழந்தையின் நிறம், பெற்றோரின் நிறத்தை ஒட்டிய இந்திய நிறமே ஆகும். 

குழந்தைப்பேறு பெற மிக முக்கிய விதி.

குழந்தை பிறப்பு இன்று குழந்தை பாக்கியம் என்று அழைக்கப்படுகிறது. மாறிவரும் காலநிலை மற்றும் உணவு முறைகளால் குழந்தைப்பேறு பாதிப்பிற்கு உள்ளாவது ஒரு புறமிருக்க, உரிய காலத்தில் குழந்தை கிடைக்கும் தசா-புக்தி வாய்ப்புகளை தம்பதியர் தங்களது சொந்த சிற்றின்ப மகிழ்விற்காகவும் , சமுதாயத்தில் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று பொருளாதார சூழலை காரணம் காட்டி தள்ளிப்போடும் தம்பதியர்களும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது. தசா-புக்தி தரும் வாய்ப்பானது இறைவன் அளிக்கும் கொடையாகும். அதனை தவற விடுவோர், பேருந்தை தவற விட்டுவிட்டு தவிக்கும் பயணிகளுக்கு ஒப்பானவர்கள் என்பதை அறிய வேண்டும். 

பின் குறிப்பு: இப்பதிவில் காணப்படும் சிறுமியரின் புகைப்படம் மாதிரி வடிவம் மட்டுமே.

விரைவில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English