கணவரை தெறிக்கவிடும் மனைவிகள்!

குடும்ப வாழ்வில் புகும் அனைத்து பெண்களும் தயக்கத்துடன் பொதுவாக எதிர்கொள்ளும் ஒரு  விஷயம் உண்டென்றால், அது கணவர் வீட்டு உறவுகளை, தான் எதிர்கொள்வது எப்படி என்பதுதான். ஒரு குடும்பப் பெண் திருமணம் முடிந்த பின்  கணவனை முதலில் புரிந்து கொள்ள முயல்கிறாள். பிறகே கணவனின் உறவுகளை புரிந்து கொள்ள முயல்கிறாள். கணவனுக்கு முன்னுரிமை என்பது அவன் தன்னோடு வாழ்வின் இறுதி வரை இணைந்து பயணிப்பவன் என்பதால்தான். உறவுகளை கையாள்வதில் சிரமங்கள் ஏற்படும் சூழலில்  இன்றைய குடும்பங்கள் தனித்து இயங்கத்  தயாராகிவிட்டன. ஏனெனில் பண்டைய கால பொருளாதார பாதிப்புகள் இன்று இல்லை. மேலும் இன்று அனைவரும் தங்களது தனிப்பட்ட உறவுகளில் இதர குடும்ப அங்கத்தினர்  தேவையின்றி தலையிடுவதை விரும்புவதில்லை. அப்படி தலையிடும் சூழலில் அத்தகைய உறவுகளை விட்டு விலக தயங்காதவர்களாகவும் அனைவரும் மாறி வருகின்றனர். பெண்கள் நிலை இப்படி என்றால் அன்றும் இன்றும் ஆண்களுக்கு தங்கள் மனைவியை அணுகுவதில் உள்ள ஒரே பிரச்சனை, எத்தனை வயதானாலும் மனைவியை முழுவதுமாக புரிந்துகொள்ள இயலவில்லை என்பதுதான். அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிடும் தங்களது  மகளை கண்டிக்க இயலாமலும், தங்களது மருமகனின் புலம்பலை எதிர்கொள்ள முடியாமலும், தவித்த ஒரு பெண்ணின் பெற்றோர் என்னை அணுகியதன் விளைவே இன்றைய பதிவு. 

1991 ல் பிறந்து 2018 ல் மணம்புரிந்த ஒரு பெண்ணின் ஜாதகம் இது.  ராசியிலும் நவாம்சத்திலும் ராகு-கேதுக்கள் 1-7 ல் நின்று களத்திர பாவத்தை பாதிக்கின்றன. ராசியில் 7 ஆமதிபதி புதனும், களத்திர காரகர் செவ்வாயும் அஸ்தங்கமாகியுள்ளனர். நவாம்சத்தில் 7 ஆம் பாவம் பாதிக்கப்பட்டு அதன் அதிபதி சுக்கிரன் 12 ல் மறைந்துள்ளார். நவாம்ச செவ்வாய் நீசம். இப்படி களத்திர பாவாதிபதியும், களத்திர காரகரும் பலகீனமாகிவிட்டதால் இப்பெண் தனது கணவரை மதிப்பதில்லை. பெண்ணுக்கு சந்நியாச கிரகமான கேதுவின்  தசை நடக்கிறது. மேலும் கேதுவின் பாவாதிபதி அஸ்தங்கமானதால் குடும்ப வாழ்வில் இப்பெண்ணிற்கு ஈடுபாடு குறைவு. லக்னாதிபதி குரு, கேதுவின் சாரத்தில் (மகம்-3) நிற்பது இதை மேலும் தெளிவாக்குகிறது. இப்பெண் கணவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளார். 

ராசியில் 4ல்  திக்பலத்தில் அமைந்தாலும், நவாம்சத்தில் சந்திரன் லக்னத்தை தொடர்பு கொள்வதாலும், லக்னாதிபதி 9 ல் நின்று, லக்னாதிபதி நின்ற வீட்டோன் சூரியன் திக்பலம் பெற்றதாலும் ஜாதகிக்கு பெற்றோர் வீடே சொர்க்கபுரி. ஆனால் சூரியன் கணவரை குறிக்கும் செவ்வாயையும், 7 ஆம் அதிபதியையும் அஸ்தங்கப்படுதுவதாலும், தாயாரை குறிக்கும் 8 ஆமதிபதி சந்திரன் சுக ஸ்தானத்தில் திக்பலம் பெற்றதால், தாய் வீட்டு சுகத்தால் தனது குடும்ப வாழ்வு பாதிக்கப்படுவதை உணராதவராக ஜாதகி உள்ளார். இதனால் ஜாதகி தனது குடும்ப வாழ்வை இழக்கும் சூழல் உள்ளது. ஜாதகியின் ஜாதக அமைப்பை எடுத்துக்கூறி, மனநல மற்றும் இல்லறவியல் நிபுணர் ஆலோசணை பெறுமாறு ஜாதகியின் பெற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டது. 

மற்றொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

ராசியில் களத்திர பாவாதிபதி குரு 8 ல் பலகீனமாகி மறைந்து விட்டார். களத்திர காரகர் செவ்வாய் புதனுடன் கிரக யுத்தத்தில் தோற்று சூரியனிடம் அஸ்தங்கமும்  அடைந்துள்ளார். இதனால் களத்திர காரகர் செவ்வாயை, லக்னாதிபதி புதன் கண்டுகொள்வதில்லை. அதே சமயம், வெற்றி பெற்ற லக்னாதிபதி புதன் தனது நட்பு வீட்டில் வலுவடைகிறார். ஜாதகத்தில் உச்ச சந்திரனின் நிலையால் சுக்கிரன் வலுவடைகிறார். சுக்கிரன் களத்திர காரகர் செவ்வாய்க்கு 12 ல் இருப்பதாலும், செவ்வாய் கிரக யுத்தத்தில் லக்னாதிபதி புதனிடம் தோல்வியுற்றுள்ளதாலும்  ஜாதகி கணவரை கட்டுப்படுத்துகிறார். கணவர் ஜாதகியை மீறி எதுவும் செய்ய இயலா நிலை. 2 ஆமிடத்தை, கேதுவோடு இணைந்த சனி 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும், குடும்ப காரகர் குரு பலகீனமானதாலும் ஜாதகி தனது குடும்ப வாழ்விற்கு தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.  

இந்த ஜாதகிக்கு 11 ஆமிட ராகு தசாவில் 2 ஆமிட சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது. குடும்ப பாவத்தில் சுக்கிரன் 12 ஆமிட சந்திரனோடு பரிவர்த்தனை ஆகியுள்ளதால், ஜாதகிக்கு குடும்பம் அமைந்ததும் சுக்கிரன் 12 ஆம் இடத்திற்கு சென்று விடுகிறார்.  இதன் விளைவு, ஜாதகி திருமணம் ஆனதும் கணவர் வீட்டில் இருந்த நாட்களைவிட தனது தாய் வீட்டில் இருக்கும் நாட்களே அதிகம் என்றானது. தாயை குறிக்கும் சந்திரன் பரிவர்த்தனைக்குப் பிறகு  குடும்ப பாவத்தில் ஆட்சி பெறுவதால், தனது குடும்பத்தில் தாய்க்கு முக்கியத்துவம் தருகிறார். தாயை பிரிய மனமின்றி, கணவரை தனது குடும்பத்தோடு வந்து இணைந்துகொள்ள உத்தரவிடுகிறார். கணவர் மனைவியை ஆளுமை செய்ய இயலாமல் தவிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி குரு, களத்திர பாவாதிபதி  புதன் மற்றும் களத்திர காரகர் செவ்வாயோடு ரிஷபத்தில் இணைந்துள்ள நிலையில், அதன் அதிபதி சுக்கிரனோடு லக்ன தொடர்பில் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. 

இத்தகைய ஜாதக அமைப்புகள் தசா-புக்திகளில் வலுவாக செயல்படும் என்றாலும், திருமண பொருத்தத்தில் கவனமாக ஆராய்ந்து ஜாதகங்களை இணைப்பது ஓரளவிற்கு பாதிப்புகளை தவிர்க்க உதவும். மேலும் ஜாதகத்தில் இத்தகைய செயல்பாடுகள் உள்ளதை சுட்டிக் காட்டி தொடர்புடையவர்களின் ஒப்புதலுடன் திருமணம் செய்விப்பது மண வாழ்க்கையில் வருத்தங்களை பொறுத்துக் கொள்ள உதவும். இல்லையேல் இவை பிரிவினைக்கு இட்டுச்செல்லும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Loading

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?”

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கூட்டு நில முதலீடு: கோடீஸ்வர யோகமா? கூட்டு கவலையா?

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பார்கள். ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் நண்பர்களுடன் “கூட்டாக இணைந்து” வாங்கும் நிலம், சில நேரங்களில் ‘கோடி நன்மைக்கு’ப் பதிலாக ‘கோடி கவலைகளை’த் தந்துவிடுகிறது. ஆசை ஆசையாய்,

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

கர்ம ஸ்தானமும் கௌரவ வேட்கையும்: ‘இரட்டை முக’ கணக்குப்பிள்ளைகளின் ஜாதக ரகசியம்!

“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி, எப்படியாவது உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழியா?

“தந்தை எவ்வழியோ பிள்ளை அவ்வழி” என்ற பழமொழி எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாக் குடும்பங்களிலும் நிஜமாகிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும் இப்பூமியில் ஜனிக்கும்போதே தனக்கான தனித்துவமான கர்மவினையோடும், தனித்துவமான கிரக அமைப்புகளோடும் தான் பிறக்கிறது. பெற்றோர்களின் ஆசைகள்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மஹாலக்ஷ்மி

“இல்லறம்” என்பது இரு சக்கரங்கள் கொண்ட ஒரு தேர்ப் பயணம். அந்தப் பயணம் எப்போதும் சீரான பாதையில் மட்டுமே அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் கரடுமுரடான பாதைகளும், எதிர்பாராத சரிவுகளும் வருவது இயற்கையின் நியதி. ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெளிநாட்டில் வேலை, ஊரில் கடன்… வளைகுடா போர் பதற்றத்தில் உங்கள் எதிர்காலம் என்ன?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மூதுரைக்கு ஏற்ப, தன் சொந்த மண்ணையும், உற்றார் உறவினர்களையும் பிரிந்து, பாலைவன தேசங்களில் தங்கள் வியர்வையைச் சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, தமிழகத்தின்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English