
நமது எண்ணங்களின் தொகுப்பே நமது மன நலம். மனமே ஒட்டுமொத்த உடலையும் ஆளுகிறது. மன நலமே உடல் நலம். உலகையே வெல்லும் வீரர்களால் கூட தனது மனதை வெல்ல முடிவதில்லை. வைராக்கியமும், கட்டுக்கோப்பும் கொண்ட மனம் எதையும் சாதிக்கும். கடந்த பதிவில் நமது எண்ணங்களுக்கும் நமது மனதை செம்மைப்படுத்தும் ஹார்மோன்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்திருந்தோம். கடந்த பதிவை படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இங்கு தொடர்வது பயனுள்ளது. ஒளி என்று ஒன்று இருந்தால் இருள் என்று ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயற்கையின் விதி. நமது சூரியனே கிரகண காலத்தில் ஒளி இழக்கிறது. ஒளியின் கர்மாவே அதன் இருள். இயற்கையின் விதிகளுக்கு ஹார்மோன்களும் விதி விலக்கல்ல. எப்படி நமது உடலில் நம் மனதை செம்மைப்படுத்தும் ஹார்மோன்கள் இருக்கின்றனவோ அதுபோலவே நமது மனதை பாழ்படுத்தும் ஹார்மோன்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக மகிழ்ச்சி ஹார்மோன் என Dopamine ஐ குறிப்பிட்டால் அதற்கு எதிரியாக செயல்படும் ஹார்மோன் Cortisol ஆகும். இதை மன அழுத்த ஹார்மோன் (Stress Hormone) என்றே அழைக்கிறார்கள். கடந்த பதிவை படித்த வாசகர் ஒருவர் மகிழ்ச்சி ஹார்மோன் பற்றி எழுதியிருந்த விஷயங்களை பாராட்டிவிட்டு இதன் எதிர் ஹார்மோனால் பாதிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தை அனுப்பி அதை ஜோதிட ரீதியாக ஆய்வு செய்து பதிவிட்டால் அது பலருக்கும் பயனுள்ளதால் இருக்கும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பதிவு வருகிறது.
எப்படி நமது மகிழ்வான தருணங்களில் Dopamine ஹார்மோன் தூண்டப்படுகிறதோ அது போலவே நாம் அதிக மன அழுத்தங்களில் இருக்கும்போது இந்த Cortisol ஹார்மோன் தூண்டப்படுகிறது. மன அழுத்தங்கள் நமது மூளையையும் இதயத்தையும் பாதிக்கிறது. ஏனெனில் நமது உடலில் மன அழுத்தங்கள் பதிவாகும் உறுப்புகள் இவைதாம். மனம் வாட இதயமும் வாடும். வாழ்வின் ஓட்டத்திற்கு ஏற்ப நம்மை உந்தித் தள்ளும் மன அழுத்தங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம் தேவை. கல்வியின் மீதான கவலை தேர்ச்சியை நோக்கி நம்மை உந்தித்தள்ளுவது போல அதற்கான முயற்சிகளை நோக்கி நம்மை கொண்டு செலுத்தும் நியாயமான கவலைகள் நன்மை தரும். நியாயமான கவலைகளும் அதனால் ஏற்படும் சரியான அளவு Cortisol ஹார்மோனும் நமக்கு அவசியம் தேவை. மிக குறைவாக Cortisol உடலில் சுரக்கையில் எதற்கும் கவலையற்ற பொறுப்பற்ற தன்மை நமக்கு ஏற்பட்டு விடும். சரியான அளவைவிட அதிக Cortisol சுரப்பு மன ரீதியாக பாதிப்புகளையும் உடல் ரீதியான பாதிப்புகளையும் இணைந்தே நமக்கு தருகிறது. ஜோதிடத்தில் மனோ காரகர் சந்திரனாவார். மனம் பாதிக்கப்பட்டால் சந்திரன் குறிக்கும் மனம், உடல் இரத்த ஓட்டம், இதய இயக்கம், பெண்களாயின் கர்ப்பப்பை ஆகிய பல உறுப்புகள் பாதிக்கப்படும். ஜோதிடத்தில் சூரிய-சந்திரர்களுக்கு கடும் பகை கிரகங்களான ராகு-கேதுக்களை Cortisol ஹார்மோனின் காரக கிரகங்களாக எடுத்துக்கொள்ளலாம். Cortisol ஹார்மோன் போதுமான அளவைவிட குறைவாக சுரப்பதற்கு கேதுவும், சரியான அளவைவிட அதிகமாக சுரப்பதற்கு ராகுவும் காரணமாவர்.
கீழே ஒரு பெண்மணியின் ஜாதகம்.

எண்பதுகளின் இறுதியில் பிறந்தவர் ஜாதகி. மீன லக்ன ஜாதகத்தில் 2, 9 அதிபதி செவ்வாய் லக்னத்தில் புதன் சாரத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். ஜீவன ஸ்தானமான 10 ல் சனியுடன் புதன் இணைந்துள்ளது இதை உறுதி செய்கிறது.

தசாம்சத்தில் ஜீவன காரகர் சனி 2 ஆமதிபதி சந்திரனுடன் மீனத்தில் அமைந்துள்ளதாலும், லக்னாதிபதி புதன் 9 ல் 10 ஆமிட சனியோடு பரிவர்த்தனை ஆகும் குருவோடு இணைந்ததால் ஜாதகிக்கு வெளிநாட்டு சம்பாத்தியம் வருகிறது. தன ஸ்தானமான 2 ல் சுக்கிரன் ராகு சேர்க்கை கணினித்துறை மூலம் வெளிநாட்டு வருமானம் வருவதை உறுதி செய்கிறது. ஜாதகிக்கு குரு தசை நடப்பில் உள்ளது என்பதால் இவ்வகை வருமானங்களை அனுபவித்துக்கொண்டுள்ளார்.
சம்பவங்கள் நடந்த காலத்தில் ஜாதகிக்கு குரு தசையில் சுக்கிர புக்தி நடப்பில் இருந்தது. ராசிச் சக்கரப்படி சுக்கிரன் இந்த ஜாதகத்தில் 8 ஆமதிபதியாவார். அவர் 6 ஆமதிபதி சூரியனோடு இணைந்து கால புருஷனுக்கு 8 ல் விருட்சிகத்தில் நிற்கிறார். 8 ஆமிடம் என்பது பெண்களைப் பொருத்தவரை கர்ப்பப்பையையும் குறிக்கும் பாவமும் கூட. மனோ காரகர் சந்திரன் ராகுவுடன் இணைந்து கடகத்திற்கு 8 ல் கும்பத்தில் லக்னத்திற்கு 12 ல் மறைந்துவிட்டார். இதனால் சந்திரனின் காரகங்கள் பாதிக்கப்படும். மனோ காரகர் சந்திரனே பெண்களுக்கு கர்ப்பப்பையையும் குறிப்பவராகிறார். இதனால் மனம் பாதிக்க கர்ப்பப்பையும் பாதிக்கப்படும். ஏற்கனவே கர்ப்பப் பையை குறிக்கும் பாவாதிபதி சுக்கிரன் 6 ஆமதிபதி சூரியனுடன் இணைந்து சந்திரனின் நீச ராசியில் நிற்பதால் சுக்கிரன் தசா-புக்திகளில் ஜாதகியின் மனம் பாதிக்கப்படும். அதன் விழைவாக கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்.
எப்படி Cortisol ஹார்மோனால் பாதிப்பு ஏற்படுகிறது.
மன உழைச்சல்தான் cortisol ஹார்மோன் சுரப்பை சீரற்றதாக்குகிறது எனும் நிலையில் மன உழைச்சலுக்கான காரணங்களைத்தான் முதலில் ஆராய வேண்டியுள்ளது. மன உழைச்சலுக்கான காரணங்கள் பல்வேறு வகையானவை. சந்திரனோடு தொடர்பாகும் கிரகங்களை வைத்தும், தசா-புக்தி மற்றும் கோட்சார நிலைகளையும் பார்த்தால் ஒருவரது மன உழைச்சலுக்கான காரணத்தை அறிய இயலும். ராசிப்படி ராகுவோடு இணைந்த சந்திரன் லக்னத்திற்கு 12 ல் நிற்பது 12 ஆமிடம் குறிக்கும் தூக்கமின்மையை குறிக்கிறது. 10 ல் இருந்து சனியின் மூன்றாவது பார்வையை 12 ஆமிட சந்திரன்-ராகு சேர்க்கைக்கு கிடைப்பது வேலையின் காரணமாக ஜாதகியின் தூக்கம் பாதிக்கப்படுவது புரிகிறது. பணிபுரியும் பெண் என்பதால் பணியால்தான் பாதிப்பு வருகிறதா? என்பதை தசாம்சதைவிட திரேக்காணத்தில் ஆராய்ந்து தெரியலாம். இதற்கு பரவிருத்தி முறையில் கணிக்கப்படும் திரேக்காணம் உதவும்.

தசாம்சத்தில் குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்று தர்ம-கர்மாதிபதி யோகத்தில் உள்ளனர். ஆனால் திரேக்காணத்தில் சனி மேஷத்தில் நீசம் பெற்று பலகீனமாகியுள்ளார். மேஷ சனி கும்ப செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றாலும் லக்னத்திற்கு 12 ல் தான் அமைவார். லக்னாதிபதி குரு தனது உச்ச வீட்டில் நின்றாலும் வக்கிரமாவதால் வலுவிழக்கிறார். லக்னாதிபதி குருவிற்கு வீடு கொடுத்த .சந்திரன் லக்னத்திற்கு 8 ல் மறைந்து நீச சனியின் பார்வையை பெற்ற நிலையில் தனது நீச வீட்டை நெருகுகிறார். அதே சமயம் 9 ஆமிட ராகு சந்திரனை நோக்கி வருகிறார். இதனால் பணியிடத்தில் ஜாதகிக்கு வரும் பாதிப்புகளால் ஜாதகியின் மன நலம் பாதிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
Dopamine vs Cortisol
Dopamine உற்பத்திக்கு சூரியன், சந்திரன், மேஷ ராசி ஆகியவை பாதிக்கபடாமல் இருப்பது மிக அவசியம். மருத்துவ ஜோதிடத்தில் வியாதியை அதிக மற்றும் குறைந்த பாகை பெற்ற கிரகங்களே வழங்கும். மேற்கண்ட ஜாதகத்தில் ராசிப்படி சூரியன் அதிக பாகை பெற்ற கிரகமாகி அவர் இதர கிரகங்களைவிட குறைந்த பாகை பெற்ற கிரகமான சுக்கிரனுடன் இணைந்து விருட்சிகத்தில் நிற்கிறார். விருச்சிகம் பெண்களுக்கு கர்ப்பப்பையை குறிக்கும் ராசியாகும். இந்த ஜாதகிக்கு சூரியன்-சுக்கிரன் தொடர்புடைய தசா புக்திகளில் வியாதி ஏற்படும். ஏற்கனவே சந்திரன் ராகுவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜாதகிக்கு லக்னாதிபதி குரு சுக்கிரனது ரிஷபத்தில் லக்னத்திற்கு 3 ல் மறைந்து சூரியன் மற்றும் சுக்கிரனது நேர் பார்வையை பெறுகிறார். குரு 6 ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-3 ல் நிற்கிறார். இந்த ஜாதகிக்கு ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற சூரியன் சாரத்தில் நிற்கும் குருவின் தசையில் குறைந்த பாகை பெற்ற சுக்கிரனின் புக்தியில் உடலில் அதிக அளவு Cortisol சுரப்பு ஏற்பட்டு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட்டன. சத்தான உணவுப் பழக்கம் ஜாதகிக்கு உள்ள நிலையில் மன உழைச்சலே ஜாதகியின் கர்ப்பப்பை கட்டிகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மனதை பாதிக்கும் Cortisol சுரப்பு அதிகமாவதால் இயல்பாகவே மகிழ்ச்சி ஹார்மோனான Dopamine ஹார்மோன் சுரப்பு குறைத்துவிடுகிறது. இத்தகையவர்களுக்கு முக்கியமாக மருந்தைவிட மனநல சிகிச்சையே பயன்தரும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501