ஐப்பசியில் சூரிய நமஸ்காரம்

நாம் நன்கு ஆராய்ந்து  பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை  எனப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதை நன்கு அறியலாம். இன்றைய விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொள்கிறது. எலும்புகள் பலகீனமாகவும் அதனால் உடலமைப்பில் வலுவற்ற ஒரு தன்மையும் இருக்கும். இவற்றிற்கு காரணம் வைட்டமின் D யை கிரகிக்கும் தன்மை ஐப்பசி மாதத்தில் பிறந்தோற்கு மிகக்குறைவாக இருப்பதுதான். வைட்டமின் D யானது உடலின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கிக் கொள்ள நமது வேதம் ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்றதோடு மட்டுமின்றி சூரியனைப் போற்றிப் பாடும் ஆதித்ய ஹிருதயத்தையும் சூரிய நமஸ்காரம் எனும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது.
இந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்தான் நமது முன்னோர்களின் சாதுரியம் வெளிப்படுகிறது. நன்கு குனிந்து நிமிர்ந்து மூச்சை முறையாக இழுத்துவிட்டுச் செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தினை நாம் நன்கு கவனித்தோமானால் உடலின் அனைத்து பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக விழுமாறும் சூரியன் பதமாக இளம் வெயிலாக விழும் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியுமாறு இவ்வழிபாடு அமைந்திருப்பதை அறியலாம்.(குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீடித்தால் வெயில் கடுமையாகி பித்தம் ஏறும்). இதனால் உடலின் அணைத்து பகுதிகளும் சூரியக்கதிர்களிலிருந்து வைட்டமின் D ஐ ஈர்த்து நமக்கு தேவையான வைட்டமின் D கிடைக்கிறது.  
இதே போன்றுதான் ஒரு குறிப்பிட்ட கதியமைப்பில் உச்சரிக்கப்படும் ஆதித்ய ஹிருதயத்தால் நமது உடலின் உஷ்ணாதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்பொருட்டு நமக்குத் தேவையான வைட்டமின் D யை நமது உடலே உற்பத்தி செய்ய வழிவகை செய்திருக்கிறார்கள்.
   உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சியை மனதோடு ஒருமுகப் படுத்திச் செய்யும் போது நமக்கு உடலும் உள்ளமும் பலனடைகிறது. இன்றைய நவீன யுகத்தில் செய்யப்படும் எந்த உடற்பயிற்சிக்கும் இது மேலானது இந்த நமது பாரம்பரிய சூரிய நமஸ்காரம். இது நமது ஆயுள் முழுமைக்குமான ஆரோக்கிய வழிபாட்டு முறை.
  ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாவதால் இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலு குறைந்திருக்கும். எனினும் அனைவருமே சூரியன் சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும்  இந்த ஐப்பசி மாதத்திலிருந்து இந்தப் பயிற்சியை துவங்கலாம்.


மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன். 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English