பதில் சொன்னது டாரோட்… திருப்திப்படுத்தியது ஜாதகம்! – ஒரு ஜோதிட அனுபவம்

ஜோதிடக் கலையில் மனிதர்களின் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் விடையளிக்கப் பல அற்புதமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று, மேலை நாடுகளில் பெரிதும் கொண்டாடப்படும் டாரட் (Tarot) முறை. “எனக்கு வேலை மாறுமா? எடுக்கப்போகும் முடிவு சரியா?” என்பது போன்ற மிக எளிய, நேரடியான கேள்விகளுக்கு டாரட் அட்டைகள் மூலம் சில நிமிடங்களிலேயே மிகத் துல்லியமான பதிலைப் பெற்றுவிட முடியும். ஒருவரின் ஆழ்மன ஆற்றலையும் பிரபஞ்சத்தின் சமிக்ஞைகளையும் இணைத்து விடை சொல்லும் இந்த அற்புதமான கலை, ஏனோ நம் மக்களிடம் இன்னும் பரவலான அங்கீகாரத்தைப் பெறவில்லை.

விரிவான வாழ்க்கைச் சக்கரத்தையும், கர்ம வினைகளையும், தொழில் சார்ந்த தடைகளையும், எதிர்காலத்தின் ஆழமான ரகசியங்களையும் அலசி ஆராயத்தான் பாரம்பரிய ஜாதகப் பகுப்பாய்வு தேவை. ஆனால், நம்மவர்களின் மனநிலை எப்படிப்பட்டதென்றால், எவ்வளவுதான் துல்லியமாக மாற்று முறைகளில் பலன் சொன்னாலும், “ஜாதக கட்டத்தை விரித்து, கிரக நிலைகளைப் பார்த்துச் சொன்னால்தான்” அவர்களுக்கு ஒரு முழுமையான திருப்தியும் நிம்மதியும் கிடைக்கிறது.

சமீபத்தில் எனக்கு இப்படியொரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டது. நான் குடும்ப ஜோதிடராக ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கும் வட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சில நாட்களுக்கு முன் என்னைக் காண வந்தார். நான் அப்போது என் கையில் வைத்திருந்த டாரட் கட்டிலிருந்து ஓர் அட்டையை எடுத்துப் பார்த்துவிட்டு, “வேலை மாற்றம் செய்யலாமா? என்று கேட்க வந்துள்ளீர்கள்; ஆனால் தற்போது அதற்குச் சாதகமான காலம் இல்லை” என்றேன். வந்தவர், “நீங்கள் இப்படி அடிக்கடி அசத்துபவர்தான், அதனால்தான் எங்கள் குடும்பத்திற்கு ஜோதிட ஆலோசகராக உள்ளீர்கள். ஆனால், நான் கேள்வியே எழுப்பாமல், ஜாதகமோ பிரசன்னமோ பார்க்காமல், வெறும் அட்டைகளை வைத்துக்கொண்டு நான் வந்த நோக்கத்தை எப்படித் துல்லியமாகக் கூறினீர்கள்?” என்று வியந்தார். ஆனாலும், ஜோதிடத்தின் மீது ஓரளவிற்குப் பரிச்சயமும் நமது பாரம்பரியத்தின் மீது அதீத நம்பிக்கையும் கொண்ட அவரின் கண்கள், அந்தப் பதிலில் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது.

அவரின் மனநிறைவுக்காகவும், டாரட் காட்டிய அதே பதிலை நவகிரகங்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றன என்பதை விளக்குவதற்காகவும், மீண்டும் அவரின் ஜாதகத்தைக் கையில் எடுத்தேன். முன்னதாக நான் கூறிய கருத்திற்கு விளக்கம் தருவதாக என் பதில் அமைந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஜோதிட விதியொன்றை அவருக்கு நினைவூட்டினேன்: “மாற்றத்தின் காரக கிரகமான சந்திரன், உங்கள் ஜாதகத்தில் அதன் தீவிர பகை கிரகத்தின் மீது செல்கையில் மாற்றங்களைச் செய்யக் கூடாது”. மேலும், “இதில் சனி மற்றும் பணியிழப்பைக் குறிப்பிடும் 5-ஆவது பாவகம் தசா-புக்தி அடிப்படையில் தொடர்பு கொண்டால் வேலை மாறக் கூடாது” என்ற விதிகளையும் ஓரளவு ஜோதிட அறிவு இருந்த அவரிடம் கூறிவிட்டுப் பதிலுக்குச் சென்றேன். ஆனால், அவர் முதலில் டாரட்டிலும் பிறகு ஜாதகத்திலும் பதிலளிக்கக் கேட்டுக்கொண்டார்.

டாரட் என்ன சொல்லுகிறது?

இந்த டாரட் அட்டையில் ஒரு நபர் குதிரை மீது கம்புடன் அமர்ந்த நிலையில், உடன் 5 நபர்கள் தங்கள் கைகளில் கம்பு தாங்கிய நிலையில் பாதுகாப்புடன் செல்கிறார். மொத்தம் 6 நபர்கள், 6 கம்புகள். ஜோதிடத்தில் 6-ஆம் இடம் என்பது வேலையைக் குறிப்பிடும் பாவகம். படத்தில் 6 நபர்களும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்கின்றனர். எனவே வந்தவர் மாற்றத்தை விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. கையிலுள்ள கம்பு தடைகளைக் குறிப்பிடுகிறது. குனிந்த நிலையில் உள்ள குதிரை, இவருக்குச் சரியான வழிகாட்டலைக் காண்பிக்காது. இதனால் வேலையில் மாற்றங்களைச் செய்தால் கேள்வியாளர் பாதிப்படைவது உறுதி. 6 நபர்கர் உடன் வர குதிரை மீது அமர்ந்து, கையிலுள்ள கம்பில் மாலை சூடிய வீரன், வந்தவர் பணியிடத்தில் ஒரு குழுவாக இணைந்து பணிபுரிவதையும், அதில் அவர் முக்கியப் பொறுப்பில் இருப்பதையும் குறிப்பிடுகிறது. (வந்தவர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர்).

கோச்சார ஜாதக நிலை:

இப்போது இடது புறம் உள்ள கோச்சார ஜாதகத்தைக் கவனியுங்கள். அதில் கடக லக்ன குருவும், 6-ஆம் இடமான தனுசில் அமர்ந்த சந்திரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். பரிவர்த்தனைக்கு முன் 6-ஆம் இடச் சந்திரனுக்கு 12-ஆம் இடப் புதன், சுக்கிரன் மற்றும் 9-ஆம் இட மீனச் சனியின் பார்வை கிடைக்கிறது. வந்தவர் வெளிநாட்டில் IT துறையில் பணிபுரிவதை இது குறிப்பிடுகிறது. தற்போது பரிவர்த்தனை செயல்பட்டால், கடகத்திற்கு இடம் மாறிச் செல்லும் சந்திரனைக் கோச்சார கேது விரைவில் தொடவுள்ளதால், வேலையிலும் வருமானத்திலும் பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாகிறது. வேலை மாறாமல் அங்கேயே தொடர்ந்தால், கேது கடக லக்ன குருவைத் தொடுவதால் இவருக்குக் கடன் பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். வேலை பாதிப்பு என்பது 1 – 6 பாவக பரிவர்த்தனை குறிப்பிடும் பணியிட மாறுதல் செய்தால் மட்டுமே வரும் என்பது தெளிவாகிறது. எனவே பணி மாறுதல் நன்மை தராது.

ஜனன ஜாதக நிலை:

அடுத்து வலது பக்கமுள்ள இவரது ஜனன ஜாதகத்தை ஆராய்வோம். 8-ஆம் அதிபதியான சந்திரன் தனுசு லக்னத்தில் செல்வதால், இவருக்கு வெளிநாட்டு வேலையில் சில அவமானங்கள் ஏற்பட்டிருக்கும். ஜாதகர் அவற்றைப் பொறுத்துக்கொள்ள இயலாவிட்டால், அடுத்து கோச்சார சந்திரன் 2-ஆம் இடக் கேதுவை நோக்கிச் செல்லும் நிலையில், இவருக்கு வேலையை இழந்து வருமானம் தடைபடும் அமைப்பு உள்ளது. மேலும், ஜாதகர் 8-ல் நிற்கும் ராகு திசையில், 7 மற்றும் 10-ஆம் அதிபதியான புதனின் புக்தியில் இருப்பதால், சிறு அஜாக்கிரதையான நிலைப்பாடும் பாதகத்தை ஏற்படுத்திவிடும். காரணம், 10 ஆமதிபதியான புக்தி நாதர் புதன் இவருக்குப் பாதகாதிபதியும் ஆகி, அவர் 8 ஆமதிபதி சந்திரனின் ஹஸ்தத்தில் நின்று புக்தி நடத்துவதால் ஜாதகர் தற்போது வேலையில் இடம் மாறினால் புதிய பணியிடத்தில் பெருத்த அவமானங்களையும், அதனைமுன்னிட்டு வேலையை இழக்கும் நிலையம் உள்ளது புலனாகிறது.

தசா புத்திகள் மற்றும் கோச்சார நிலைகளை வைத்து, வேலை மாற்றத்தின்  பாதிப்புகளை நான் ஆழமாக விளக்கியபோதுதான் வந்திருந்த அன்பரின் முகத்தில்  முழுமையான நிம்மதியைக் காண முடிந்தது. டாரட் காட்டிய வழியும், பாரம்பரிய ஜாதகமும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பதிலளித்ததை அவர் ஆச்சரியப்பட்டுப்  பார்த்தார்.  

இக்கலையை எனக்கு அருளிய எனது குருநாதருக்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டேன்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

விருக்ஷ சாயா!

இயற்கையின் மடியில், பலவகையான நாட்டு மரங்களும், பலா, அன்னாசி போன்ற கனி மரங்களும், மரமல்லிகை போன்ற பூ மரங்களும் நறுமணம் வீச… ஒரு குயில் தோப்பில் வீடு அமைத்து வாழ வேண்டும் என்ற ஆசை

மேலும் படிக்க »
இந்தியா

ஜாதகம் காட்டிய அலுவலக ரகசியம்: கோட்சார செவ்வாய் செய்த மாயம்!

தற்போதைய தொழில்முறைச் சூழல் இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, தொழில்முறை நெருக்கடிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்கள் மற்றும் ஆர்டர்கள் இல்லாத சூழல் போன்ற காரணங்களால்,

மேலும் படிக்க »
இந்தியா

உத்தியோகச் சவால்களைத் தகர்க்கும் ஜாதக ரகசியங்கள்!

அனைவரின் வாழ்விலும் வேலைவாய்ப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கம். நிம்மதியான வேலை, கைநிறையச் சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் என ஒரு காலகட்டம் வசந்தமாக அமையும். ஆனால், அதே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English