கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களில் சூரிய – சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார இயக்கங்கள் உண்டு.
பூமி தனது சஞ்சாச விதிகளின்படி குறிப்பிட்ட கிரகங்களை முந்திச் செல்கையில் குறிப்பிட்ட அக்கிரகங்களுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுதலான தோற்ற நிலையே வக்கிரம் எனப்படும்.
இத்தகைய நிலையில் கிரகங்கள்  தாங்கள் நிலைகொண்டுள்ள பாகைக்கு முன்னதாக இருப்பதுபோன்ற நிலைக்கு அதிசாரம் என்றும் பின்னதாக இருப்பது போன்ற நிலைக்கு வக்கிரம் என்றும் பெயர்.    வக்கிர அதிசார நிலையை அடையும் கிரகம் பொதுவாக அதன் சுபாவ தன்மைகளை இழந்ததாக கருதப்பட வேண்டும். எனவே ஜனன ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்ரமடைந்திருக்கக்கூடாது. அப்படி ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த சுப கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் கெடு பலன்களை அதிகம் தரும்.
பாவ கிரகங்கள் இதற்கு எதிர்மறை. ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த பாவ கிரகம் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் நல்ல பலன்களையே தர முற்படும்
.
கீழே உதாரண ஜாதகம்

உச்சனுடன் கூடும் நீசன் நீச பங்கமடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. 6 ஆமதிபதி சனி  உச்சமடைந்த 12 ஆமதிபதி சூரியனுடன் 8 ஆமிடத்தில் கூடியது ஒருவகையில் விபரீத ராஜ யோகமே. 6 ஆமதிபதி சனி அஸ்தங்கமடைந்ததும் பெரிய பாதகமில்லை. உண்மையில் ஜீவனகாரகன் இப்படி சூரியனுடனும் வித்யகாரகனான லக்னாதிபதி புதனுடன் கூடியதால் ஜாதகருக்கு அரசுப்பள்ளி ஆசிரியராக பணி வாய்த்தது.  
ஆனால் தன காரகன் குரு வக்ர நிலையில் லக்னத்தில் அமைந்துள்ளார். பாதகாதிபதி லக்னத்தில் அமைவது பாதகாதிபதியின் காரகங்கள் சார்ந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜோதிட விதி. தன ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து வக்ரமாகிவிட்டது. உச்சமடைந்து வக்கிரமான கிரகம் நீச பலனையே தரவேண்டும். எனவே இந்த ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது.
ஜாதகர் சனி திசையில் ஏறக்குறைய 22 லட்சத்திற்கும் அதிகமான அளவில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.
கீழ மற்றொரு பெண்மணியின் ஜாதகம்

ஜாதகிக்கு புத்திர பாக்யத்தை தரவேண்டிய குரு ஆறில் மறைவு.
நீசமடைந்து வக்கிரமடைந்த கிரகம் உச்சபலனை தரும் என்ற விதிப்படி குரு 6 ஆமிடத்தில் வலு குறையவில்லை. மேலும் குரு அமைந்த பாவாதிபதி சனி உச்சமடைந்துவிட்டதால் குருவும் உச்சமாக உள்ளதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  இந்த ஜாதகத்தில் குரு 6 ல் மறைந்த தோஷம் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் அமைய தடைகளை மட்டுமே ஏற்படுத்தவேண்டும்.
பொதுவாக உச்சமடைந்த கிரகங்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும். எனவே குரு சனி வீட்டில் 6 ல் அமைந்து வலுவடைந்ததால்  சனியின் இயல்புப்படி தாமதமாக புத்திர பாக்கியம் அமையும்.
ஜாதகியின் ராசிக்கு 1௦ ஆமிடத்தில் குருவும் ராசியிலேயே சனியும் உச்சமடைந்த காலத்தில் ஜாதகியின் 29 ஆவது வயதில் பெண் குழந்தை பிறந்தது.  
மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்
அன்பன்,

பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான இடைவெளி

வாழ்வில் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் — வெற்றியாளர்கள் தங்களின் பலத்திற்கு ஏற்ற சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; தோல்வியாளர்களோ தங்களின் பலமறியாமல் தவறான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தங்களையே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலும் படிக்க »
Advanced Atrology

Option Buying vs Option Selling: ஜோதிட ரீதியான ரகசியம்

வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் பங்குச்சந்தை, இன்று அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தைச் சுருக்கும் எளிய ஸ்மார்ட்போன் செயலிகளும், டிஜிட்டல் கட்டமைப்புகளும் பங்கு வர்த்தகத்தைச் சாமானியர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு

மேலும் படிக்க »
இல்லறம்

திருமணம் பொருளாதார ஒப்பந்தமா? உணர்வுகளின் சங்கமமா?

இன்றைய அவசர உலகில் திருமண உறவுகள் பெரும்பாலும் திறமையையும், சம்பாத்தியத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. தகுதியும் வருமானமுமே ஒரு சிறந்த துணைவருக்கான அளவுகோல் என்ற மனநிலை பரவலாகிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாகப் பல

மேலும் படிக்க »
கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English