தாத்தா-பாட்டி செல்லங்கள்!

ஒருவருக்கு பூர்வீக கர்மாவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை ராகுவும் கேதுவுமாகும். இவ்விரு கிரகங்களும் மனித வாழ்வை திசை மாற்றிவிடும் வல்லமை படைத்தவை. அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவை இவை. அதே சமயம் நல்ல ஒரு ஜாதகரது  கொடுப்பினைகளை தவறாது அளிப்பவை. ராகு-கேதுக்கள் சூரிய சந்திரர்களுக்கு கிரகண தோஷத்தை வழங்குபவை. எனவே சூரியனுக்கு ராகுவும் சந்திரனுக்கு கேதுவும் கடும் பகை கிரகங்களாகும். சூரிய சந்திரர்களோடு எந்த வகை தொடர்பில் இவை இருந்தாலும் அவற்றின் பொறுப்புகளை தட்டிப்பறித்து தங்கள் பாணியில் ஜாதகருக்கு வழங்குபவை. சூரிய சந்திரர்கள் குறிக்கும் ஒருவரது பெற்றோர்களை இவை பாதித்தாலும் தங்களது அம்சங்களான பேரக்குழந்தைகளை அரவணைப்பவை. ராகு கேதுக்கள் குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டியை குறிக்கும் கிரங்கள் என்பதுதான் இதற்குக் காரணம். ராகு-கேதுக்கள் இதர கிரகங்களின் தொடர்பற்று தனித்து அமைத்த ஜாதகத்தில் இவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஜாதகருக்கு மாற்றுச் சிந்தனையை, தொடர்பை வழங்குபவை. ஆனால் கிரக சேர்க்கையில் அமைந்த ராகு-கேதுக்கள், உடன் இணைந்த கிரக காரக உறவை பாதித்து, அந்த காரக உறவு மூலம் ஜாதகரை தொந்தரவு செய்பவை. அப்படியான ஒரு ஜாதக அமைப்பில் ஜாதகர் இவற்றின் சேர்க்கை பெற்ற கிரக காரக உறவால் பாதிக்கப்படுவார். ஆனால் அந்தக் காரக உறவு மாற்றுச் சிந்தனை கொண்டிருப்பின் ஜாதகருக்கு தீமை செய்யா நிலையையும் ஏற்படுத்தும். இப்பதிவில் ராகு-கேதுக்களின் இந்த சூட்சும நிலையப் பற்றியே ஆராயவுள்ளோம்.   

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்

மக நட்சத்திரத்தில் 2006 பிறந்த இச்சிறுமி, பிறக்கும்போதே கேது திசையில் பிறந்துள்ளார். தாத்தா-பாட்டியிடம் மிகுந்த அன்பைக்கொண்டிருந்த இச்சிறுமியை தாத்தா-பாட்டிதான் வளர்த்துள்ளனர். கேது நேர்மை உண்மை, நற்குணம் ஆகியவற்றிக்கான காரக கிரகமாகும். லக்னத்தை ஆக்கிரமித்துள்ள  கேது ஜாதகிக்கு தனது நற்குணங்களை போதிக்கிறார். தனித்த நிலையில் குரு வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கும் ராகுவும் குரு போன்றே சுபத்துவத்தை , பாசத்தை ஜாதகிக்கு வழங்குகிறார். இந்த ஜாதகத்தில் தாய்-தந்தையை குறிக்கும் சூரிய சந்திரர்கள் 6, 12 ல் மறைந்து சூரியனை நோக்கி ராகுவும் சந்திரனை நோக்கி கேதுவும் வருவதால், சூரிய-சந்திர காரக உறவுகளை கட்டுப்படுத்தி அவர்கள் வளர்க்க வேண்டிய இச்சிறுமியை தாங்களே வளர்க்கின்றனர். இந்தச் சிறுமிக்கு தாத்தா- பாட்டியிடம் கொண்டிருந்த ஈர்ப்பைவிட பெற்றோரிடம் உள்ள ஈர்ப்பு மிகக்குறைவு. 6 மாதங்களுக்கு முன் இச்சிறுமியின் தாத்தா மரணமடைந்தார். இதனால் தாத்தாவின் பாசம் கிடைக்கா சிறுமி பெரிதும் பாதிக்கப்பட்டார்.  அது முதல் ஜாதகிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாத்தா மரணமடைந்தது  முதல் பேய் பயமும், பாம்பு பயமும் உள்ளது. இரவில் விளக்கை போட்டுக்கொண்டுதான் உறங்குகிறார். பெற்றோர் உடன் இருந்தும்  அவர்களின் பாசத்தை ஜாதகியால் உணர முடியவில்லை. தாத்தா வயதில் உள்ள நபர்களை கண்டால் ஏக்கத்துடன் கண்ணீர் வடிக்கிறார். இந்த ஜாதகி ஜப்பானிய மொழியும், ஜெர்மன் மொழியும் விருப்பத்துடன் பயில்கிறார். கேது ஜப்பானிய மொழிக்கு காரக கிரகமாகும். ராகு-கேதுக்கள் இரண்டுமே சர்ப்ப கிரகங்களாகும். பேய், பிசாசு போன்ற கண்ணுக்குத்தெரியா மாய சக்திகளின் காரக கிரகங்களாகும். ராகுவின் காரக உறவை இழந்த ஏக்கத்தில் ஜாதகிக்கு பாம்புக் கனவு வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

1971 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம் இது. சூரியனோடு சனி தொடர்புகொண்ட ஆண்களுக்கு தந்தை விரோதியாகத் தெரிவார். இந்த ஜாதகத்தில் சனி+சூரியன் சேர்க்கை உள்ளது. சந்திரன் லக்னத்திற்கு  12 ல் மறைந்து ராகு-கேதுக்களுடன் கிரகண தோஷம் பெறுகிறது. லக்னத்தைவிட ராசியோடு அதிக கிரகங்கள் தொடர்புகொண்ட ஜாதகம் இது. இதனால் லக்னத்தைவிட ராசி முக்கிய வலுப்பெறுகிறது. இந்த ஜாதகர் தந்தையின் பணியின் பொருட்டு, பிறந்தது முதல் பெற்றோரை பிரிந்து தாத்தா பாட்டி வீட்டில்தான் வளர்ந்தார். சந்திரன் சுய சாரமான திருவோண நட்சத்திரத்தில் உள்ளார். எனவே பிறக்கும்போதே சந்திர தசை. பிறகு வந்த செவ்வாய் தசை. ராகு தசை ஆகியவை ஜாதகரை பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரித்து, தாத்தா-பாட்டியிடமே வளர வைத்துள்ளது. தற்போது சமுதாயத்தில் உயர்ந்த, பொறுப்பான நிலையில் ஜாதகர் உள்ளார். ஆனால் தற்போதும் பெற்றோரை அன்னியமாகத்தான் இவரால் பார்க்கமுடிகிறது. சிறிதும் பெற்றோர் பாசம் அறியா மனிதராக உள்ளார். காரணம் ராசியோடு தொடர்புகொண்ட சர்ப்ப கிரகங்கள், ஒளி கிரகங்களான சூரிய சந்திரர்களின் செயலை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டதுதான்.

மூன்றாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம் கீழே.

2012 ல் பிறந்த சிறுவன். குடும்ப பாவமான இரண்டாமிடத்தில் கேது உள்ளது. இச்சிறுவனது பாட்டி சிறுவனது குடும்பத்தோடு ஒன்றிணைந்து உள்ளார். கேதுவுக்கு 1௦ ஆமிடத்தை சூரியன் பார்ப்பதாலும், கேதுவோடு குரு இணைந்துள்ளதாலும் பாட்டி அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற தனது பணிப்பயன் அத்தனையும் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு செலவு செய்கிறார். இதனால் மகளின் (சிறுவனின் தாய்) குடும்பத்தோடு பாட்டி இணைந்துள்ளார். ஆனால் பாட்டனை குறிக்கும் ராகு லக்னத்திற்கு 8 ல் மறைந்துவிட்டதால் தாத்தா இச்சிறுவனது குடும்பத்தோடு ஒருங்கிணையவில்லை. தாத்தா தனித்து வாழ்கிறார். லக்னத்தையூம் அதன் எதிர்பாவத்தையும் விட்டு, ராகு மட்டும் தனித்து நிற்கிறது. இதனால் தாத்தா மட்டும் தனித்து வாழ்கிறார். ஆனால் ராகு-கேது அச்சை விட்டு லக்னம் மட்டும் தனித்து இருப்பதால் இச்சிறுவனுக்கும் அவனது எதிர்காலத்தில் இதே நிலைதான் ஏற்படும். அதாவது ஜாதகனின் மனைவி தனது குழந்தைகளின் குடும்பத்தோடு இணைத்து வாழ்வார். ஜாதகனுக்கு தாத்தாவின் தனிமை நிலைதான் ஏற்படும். தாத்தாவின் கர்மாவை அனுபவிக்கப் பிறந்த ஜாதகன் இச்சிறுவன். ஒரு உறவுக்கு ஒரு ஜாதகர் பாதிப்பை ஏற்படுத்தினால், அவ்வுறவு பாதிப்பை ஏற்படுத்திய ஜாதகரின் சந்ததிகளிடம் அதன் பதிலடியை தந்தே தீரும் என்பது இதன் உட்கருத்தாகும்.  

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English