காசு, பணம், துட்டு, Money,  Money!

சில நாட்களுக்கும் முன் நான் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் இணைந்து செயல்பட்ட நண்பர் ஒருவர். பல ஆண்டுகள் கழித்து எனைக் காண வந்தார். அவருக்கு ஜோதிடம், ஆன்மீகம் இவற்றில் நம்பிக்கை இல்லை. தந்தை வியாபாரம் செய்பவர். ஜாதகர் பணிபுரிந்தாலும், அரசு வேலைக்கும் அப்போது முயன்றுகொண்டிருந்தார். பங்கு வணிகம், கணினியில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல் என எப்போதும் ஏதாவதொரு விஷயத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர். வசதியானர் என்பதால் ஜோதிடம் அவருக்கு தேவைப்படவில்லை. ஒரு முறை மட்டும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு எப்படி இருக்கும் என்று கேட்டதாக நினைவு. அது கூட அவரது மகனுக்காக கேட்டதுதான். வேலையை விட்டு விலகிய பிறகு தந்தையுடன் குடும்ப வியாபாரத்தை கவனிப்பவர் என்று அறிந்து வைத்திருந்தேன்.  அப்படிப்பட்டவர் எனை காண வருகிறேன் என்றார். காரணத்தை சொல்லவில்லை. இப்படிப்பட்டவர் வருகிறார் என்றால் எதேனும் குடும்ப விசேஷமாக இருக்க வேண்டும். அல்லது வாழ்வில் சிரமங்கள் ஏதும் வந்திருக்க வேண்டும். வந்தவருக்கு ஜோதிட நம்பிக்கை இல்லை என்பது தெரிந்தாலும் அவர் எதற்காக வருகிறார் என ஒரு டாரட் அட்டை மூலம் அறிய முற்பட்டேன். இது போன்ற விஷயங்களுக்கு டாரட் அட்டை சரியான பதிலை கூறிவிடும்.

நண்பர் எதற்காக வருகிறார் என அறிய நான் எடுத்த டாரட் அட்டையில் 9 கம்புகளுடன் கூடிய ஒரு ஆண் இருந்தான் 8 கம்புகள் அந்த ஆணுக்கு பின்னாலும், ஒரு கம்பை அந்த ஆண் இறுகப் பற்றியிருக்கும் ஒரு படம். வருபவர் பலவித (8 வித) பாதிப்புகளை சந்தித்துவிட்டு தற்போது தான் எடுத்துக்கொண்டுள்ள பணியும் சிரமப்படுத்துமா? என்ற கவலையில் இருப்பது தெரிகிறது.

வந்த நண்பரை உபசரித்த பிறகு, “என்ன விஷயம்?” என்று கேட்டேன். பொதுவாக நண்பர் பிறரிடம் தனது எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் இயல்புடையவர் அல்லர் என்பதால் அப்படி கேட்டேன். “உங்களைப் போன்ற மனதில் பட்டதை சொல்லும் உண்மையான நண்பர்களை இன்றைய காலத்தில்  காண்பது அரிதாக இருக்கிறது. நல்ல சூழலில் நம்முடன் இருப்பவர்களையும், சிரம சூழலில் நம்மைவிட்டு விலகுபவர்களையும் பார்த்தாகிவிட்டது. உங்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றால் மனது இதமாக இருக்கும்” என்று என்னை  காண வந்ததாக கூறினார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆலோசனையும் தேவைபடாத நபரிடம் என்ன சொல்வது  என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும், அவரது பேச்சில் இருந்த வருத்தத்தை கவனித்து, இப்போது என்ன தொழில் செய்கிறீர்கள், எப்படி போகிறது? தந்தையுடன் இணைந்து செய்யும் வியாபாரம்,  குழந்தைக்கு திருமண ஏற்பாடுகள் என்று பொதுவான விஷயங்களை கேட்டேன். “வியாபாரம் எங்களது குடும்ப தேவைகளுக்கான அளவு பொருளாதாரத்தை மட்டுமே தருகிறது. வேலையிலும், வியாபாரத்திலும் நான் சம்பாதித்ததைவிட, பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வீடு, வாகன வசதிகளை பெருக்கிக் கொண்டேன். ஆனால் அதுதான் தற்போது தன்னை  சிரமப்படுத்துகிறது” என்று நண்பர் கூறினார்.

டாரட் அட்டையை நினைத்துக்கொண்டேன். நண்பரின் முதலீடுகள் சற்றே அதிகம். லட்சங்களில் பங்கு முதலீடு செய்பவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். தெளிவான புத்திசாலி, பொறுமையும் நிதானமும் கொண்டவர். சில லட்சங்களுக்காக மனது உடைபவர் அல்ல. ஆனால் அதுவே கோடிக்கணக்கில் என்றால் பாதிப்புதான். டாரட் அட்டையின் ஆணுக்கு பின்னாலுள்ள பச்சை நிறம், நண்பர் திட்டமிடுதலில் தேர்ந்தவர் என்பதையும், வளர்ச்சியை நோக்கிய நல்ல எண்ணத்தில் செயல்படுபவர் என்பதையும், குறிப்பாக பங்கு வணிகத்தையும் கூறும். ஆணுக்கு பின்னால்  உள்ள கம்புகள், அவர் அடைந்த 8 வித பாதிப்புகளை கூறுகிறது. கையில் பற்றியிருக்கும் கம்பும் நண்பர் ஏற்கனவே அடைந்த பாதிப்பின் வகையையே தற்போதும் உறுதியாக நம்பி செயல்படுவதை கூறுகிறது. பொறுமையும், நிதானமும் இல்லாவிட்டால் மேலும் ஒன்பதாவதாக ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இது குறிப்பிடுகிறது. தனக்கான வளமையை எதிர்நோக்கி அந்த ஆண் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்பதை கவனிக்க. இதுதான் நண்பரின் தற்போதைய நிலை.

மஞ்சள் நிறம் படத்திலுள்ள ஆண் தனது கவலைகளை மீறி வளமையை எதிர்பார்ப்பதை குறிப்பிடுகிறது. தலையில் கட்டப்பட்டுள்ள வெண்மை நிறம் நண்பர் தெளிவாக அனுமானிக்க  முடியாத பங்குகளில் முதலீடு செய்து அதனால் மன உழைச்சலில் உள்ளதை குறிப்பிடுகிறது. படத்திலுள்ள ஆண் உடுத்தியுள்ள பிரவுன் நிற ஆடை, நண்பர் தனது பொருளாதார எல்லையை மீறி பேராசையுடன் செயல்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது. அதனால் அபாயகரமான நிலையில் நண்பர் இருக்கிறார் என்பது புரிகிறது. அதாவது பெரும் பணம் பங்கு வணிகத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. அது இவரது தாங்கு திறனைவிட அதிகம். கம்பை ஆண் உறுதியாக பற்றியுள்ளது, தற்போதும் பங்கு வணிகத்திலிருந்து விலகாமல் உறுதியாக நண்பர் செயல்படுவதை குறிப்படுகிறது. 

“கவலைப்படாதீர்கள் 9 மாதங்கள் கழித்து உங்களது பொருளாதார சிக்கல்கள் நீங்கும். அதன் பிறகு உங்கள் தாங்கு திறனை விட அதிகம் Risk எடுக்காமல் செயல்படுங்கள் என்று கூறினேன். தற்போது பங்கு வணிகத்தில் மாட்டிக்கொண்டுள்ள தொகை 90 லட்சங்கள் இருக்குமா?” என்றேன். அவர் எண்பத்து சில்லறை லட்சங்கள் என்றார். கையிலுள்ள கம்புக்கான தொகை 1௦ லட்சத்தை அவர் கணக்கில் சேர்க்கவில்லை என்பது புரிகிறது. கையிலுள்ள தொகையை கவனமாக கையாளக் கூறி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

சோற்றுக் கூட்டணி தேறுமா?

நாம் உண்ணும் உணவு இறைவன் நமக்கு அளித்த கொடை என்று படைத்தவனுக்கு நன்றி கூறி உண்பது தமிழர்களின் பண்பாடு. “அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்” என்கிறது நமது வேதம். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு.

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

அதிர்ஷ்டம் தரும் லாட்டரி யோகம்.

மனித வாழ்க்கையில் கடின உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கதவைத் தட்டும் ‘அதிர்ஷ்டம்’ என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்ததாமே!” என்ற செய்தியைக்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

சுயதொழில் எனும் புதிய பயணம்: அடிமைத் தளையிலிருந்து ஆளுமைப் பாதைக்கு!

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தைத் தேடிப் பயணிக்கத் தொடங்குகிறான். வேறொருவரின் கனவுகளுக்காக உழைப்பதைக் காட்டிலும், தனது சொந்த உழைப்பும் திறமையும் நேரடிப் பலன் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது

Loading

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

🎓 படித்தவுடன் பணி தரும் ஜாதக அமைப்புகள்: ஓர் அலசல்! 💼

“கல்வி என்பது ஒரு விதை என்றால், வேலை என்பது அதன் அறுவடை.” ஒரு மனிதனின் வாழ்வில் இருபது ஆண்டுகால கல்வி உழைப்புக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த அங்கீகாரம், அவர் படித்து முடித்த கையோடு தகுதியான ஒரு

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

பழையன கழிந்து புதியன புகும்!

வாழ்க்கைப் பயணத்தில் பலமுறை ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களின் சாவியைப் பிடித்த கைகளுக்கு, இன்று புத்தம் புதிய வாகனத்தின் வாசம் நுகரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலக் காத்திருப்பும், பழைய வாகனங்கள் கொடுத்த அனுபவங்களும் இன்று

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

கோள்களின் நகர்வும் பொருளாதாரப் பாதுகாப்பும்

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், ‘பொருளாதாரப் பாதுகாப்பு’ என்பது வெறும் சேமிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளைப் பொறுத்தது. ஜோதிட ரீதியாக, ஒருவரது செல்வ நிலையைத் தீர்மானிப்பதில் தன

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English